CPIM Kovilpatti

CPIM Kovilpatti Comrades of Kovilpatti

28/05/2026

கேரளாவில் தோழர் பினராய் விஜயன் மீதான அமலாக்கத்துறை சோதனை டெல்லியில் சிபிஎம் பொதுச் செயலாளர் தோழர் எம்.ஏ பேபி மீது தாக்குதல் நடத்தி கைது ஆகிய சம்பவங்களை கண்டித்து கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 #கேரளம் முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான தோழர் பினராய் விஜயன்...
28/05/2026

#கேரளம் முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான தோழர் பினராய் விஜயன் அவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டதைக் கண்டித்தும், இந்த சம்பவத்தை கண்டித்து டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் சிபிஎம் பொதுச் செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி அவர்களை தாக்கி கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரம் மற்றும் ஒன்றிய குழுக்கள் கட்சி சார்பில் #கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் சீனிவாசன் அவர்கள் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், நகர குழு உறுப்பினர் தினேஷ்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், நகர குழு உறுப்பினர்கள் அந்தோணி செல்வம், கதிர்வேல், ஜானகி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கணேசன், விஜயராஜ், முத்துராஜ் மற்றும் கிளை செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

CPIM Tamilnadu CPIM Thoothukudi
Pinarayi Vijayan Theekkathir

 #கோவில்பட்டி கழுகுமலை அருகே கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சஞ்சய்‌ கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில்  சம்பந்தப்பட்...
26/05/2026

#கோவில்பட்டி கழுகுமலை அருகே கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சஞ்சய்‌ கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விரைவாக வழங்க கோரியும், வழக்கு முடியும் வரை குற்றவாளிகள் பிணையில் வெளியில் வராமல் இருப்பதற்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க கோரியும், சஞ்சய் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, நிதி வழங்க கோரியும் நேற்று கழுகுமலை காந்தி மைதானத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கயத்தார் ஒன்றியக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கயத்தார் ஒன்றிய செயலாளர் சாலமன் ராஜ் தலைமை வைத்தார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தினேஷ் குமார் மற்றும் கரடிகுளம் பகுதியைச் சார்ந்த ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



21/05/2026

பெட்ரோல், டீசல்,சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கோவில்பட்டியில் இடதுசாரி கட்சிகள் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்...🚩

CPIM Thoothukudi



பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கோவில்பட்டியில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!ஒன்றிய மோடி அரசின் ப...
20/05/2026

பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கோவில்பட்டியில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

ஒன்றிய மோடி அரசின் பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)
ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் #கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். நகர குழு உறுப்பினர் அந்தோணி செல்வம்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் பாபு, நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகி சண்முக பெருமாள் ஆகியோர். உரையாற்றினார். இறுதியாக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அர்ஜுனன் கண்டன உரையாற்றி நிறைவு செய்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் மாவட்ட குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி,மணி மற்றும் நகர,ஒன்றிய, தாலுகா குழுவின் நிர்வாகிகள்,தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.



20/05/2026
நாளை ஒரு போராட்டம் தோழர்!
19/05/2026

நாளை ஒரு போராட்டம் தோழர்!

அனைவரும் பங்கேற்பீர்!CPIM Thoothukudi CPIM Tamilnadu
18/05/2026

அனைவரும் பங்கேற்பீர்!

CPIM Thoothukudi
CPIM Tamilnadu

 #கோவில்பட்டி இனாம் மணியாச்சி கிராமத்தில் கண்மாய் கரை பகுதியில் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி வட்டார...
12/05/2026

#கோவில்பட்டி இனாம் மணியாச்சி கிராமத்தில் கண்மாய் கரை பகுதியில் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக புதிதாக சாலை அமைப்பதற்காக 4 இன்ச் ஜல்லி கொட்டப்பட்டு வேலை துவங்கப்பட்டது. ஆனால் இன்றுவரை சாலை அமைக்கப்படாமல் உள்ளது. மேலும் ஜல்லியானது பாதையின் நடுவே இருக்கிறது. இதனால், அந்த பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லவும் இருசக்கர,நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு மிகுந்த இடையூறு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் அந்தப் பாதை வழியாக வாகனங்களில் செல்வோர் விபத்து ஏற்பட்டு கீழே விழும் நிலை உள்ளது. எனவே விரைந்து செயல்பட்டு இனாம் மணியாச்சி கண்மாய் கரை பகுதியில் உடனடியாக சாலையை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், இனாமணியாச்சி கிளைச் செயலாளர் அழகுசுப்பு ஆகியோர் உடன் இருந்தனர்.

தோழர் பினராய் விஜயன் வாடகை வீட்டில் குடியேறினார்.கேரளாவில் 10 ஆண்டுகள் முதல்வராக இருந்த சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உ...
12/05/2026

தோழர் பினராய் விஜயன் வாடகை வீட்டில் குடியேறினார்.

கேரளாவில் 10 ஆண்டுகள் முதல்வராக இருந்த சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பினராய் விஜயன் அரசு பங்களாவை காலி செய்து விட்டு திருவனந்தபுரத்தில் ஒரு வாடகை வீட்டில் குடியேறியிருக்கிறார்.

கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அதிகாரத்திற்கு வருவது தங்களுக்கு சொத்து சேர்ப்பதற்கு அல்ல மாறாக மக்களுக்கு பணியாற்றுவதற்குதான்.

Pinarayi Vijayan

Address

Kovilpatti
628501

Website

Alerts

Be the first to know and let us send you an email when CPIM Kovilpatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share