Vanakkam Kovilpatti

Vanakkam Kovilpatti Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vanakkam Kovilpatti, Social service, muthanandhapuram 1st Street, Kovilpatti.

வணக்கம் கோவில்பட்டி

நமது கோவில்பட்டி ஊரின் பெருமைகள், செய்திகள் மற்றும் தகவல்களுக்கு நமது பக்கத்தினை பின்தொடருங்கள்.

மந்தித்தோப்பு சாலையை புதுப்பிக்க கோரி போராட்டம்
04/06/2026

மந்தித்தோப்பு சாலையை புதுப்பிக்க கோரி போராட்டம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் -2026ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை - அறிவிப்பு . மொழித்திறனும் ஆர்வமும் இருந்தால் இங்கே...
01/06/2026

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் -2026ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை - அறிவிப்பு .
மொழித்திறனும் ஆர்வமும் இருந்தால் இங்கே வாய்ப்புகள் கொட்டி கிடைக்கின்றது,,, பயன்படுத்தாமல்,,, பயன்படுத்த தெரியாமல்,,, மொழிப்பாடம் படித்தால் வேலை வாய்ப்பு குறைவு என்று சொல்லிக் கொள்பவர்களே இங்கு அதிகம்,,,,

மொழிப்பாடம் படிக்க விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்,, 👏👏

கழுகுமலை அருள்மிகு ஸ்ரீ கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் இன்று வைகாசி விசாகம் திருவிழாவை மேலும் சிறப்பிக்க  வருகை தரும் செ...
30/05/2026

கழுகுமலை அருள்மிகு ஸ்ரீ கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் இன்று வைகாசி விசாகம் திருவிழாவை மேலும் சிறப்பிக்க வருகை தரும் செல்வி மோகிதா ராமர் அவர்களின் பக்தி இன்னிசை கச்சேரிமாலை 6 மணி முதல் நடைபெறுகிறது

⚜️ ஓம் முருகா சரணம்⚜️

வைகாசி விசாகத் திருவிழா
29/05/2026

வைகாசி விசாகத் திருவிழா

அருள்மிகு ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோயில், கோவில்பட்டி ✨(அருள்தரும் ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் உடனுறை)​🌺 வைகாசி விசாகத் பெ...
29/05/2026

அருள்மிகு ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோயில், கோவில்பட்டி ✨
(அருள்தரும் ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் உடனுறை)
​🌺 வைகாசி விசாகத் பெருவிழா - அழைப்பிதழ் 🌺
​அன்புடையீர்,
நமது கோவில்பட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.
​இந்நிகழ்வில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் திரளாகக் கலந்து கொண்டு அம்பாள் மற்றும் சுவாமியின் அருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
​நிகழ்ச்சி நிரல்:
​🌅 காலை 10.00 மணி:
பஞ்சமூர்த்திகளுக்கு (விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர்) சிறப்பு அபிஷேகம்.
​🌌 இரவு 8.00 மணி:
பஞ்சமூர்த்திகளுக்கு மகா தீபாராதனை மற்றும் அதனைத் தொடர்ந்து கோலாகலமான திருவீதி உலா.
​🙏 அனைவரும் வருக! இறையருள் பெறுக! 🙏

29/05/2026

*தமிழக அரசு ஊழியர்களுக்கான மே மாத சம்பளம் குறித்த முக்கிய அறிவிப்பு.* அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மே மாதத்திற...
28/05/2026

*தமிழக அரசு ஊழியர்களுக்கான மே மாத சம்பளம் குறித்த முக்கிய அறிவிப்பு.*

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான ஊதியம் வரும் 29 மே, 2026 அன்று வெள்ளிக்கிழமை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

*இந்த மாத ஊதியமானது பின்வரும் கூடுதல் பலன்களுடன் வழங்கப்படும்.*
1. அரசு அறிவித்தவாறு உயர்த்தப்பட்ட 2% கூடுதல் அகவிலைப்படியுடன் (DA) இந்த மாத சம்பளம் கணக்கிடப்பட்டுள்ளது.
2. மேலும், கடந்த நான்கு மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையும் (DA Arrears) இதனுடன் இணைத்து வழங்கப்படும்.

புதிய திட்டம் மற்றும் அமலாக்கம்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'விபி-ஜி ராம் ஜி' (VB-G RAM JI) என்ற புதிய ஊரக வேலைத் திட்ட...
26/05/2026

புதிய திட்டம் மற்றும் அமலாக்கம்:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'விபி-ஜி ராம் ஜி' (VB-G RAM JI) என்ற புதிய ஊரக வேலைத் திட்டம் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.

மகாத்மா காந்தி திட்டத்திற்கு மாற்று:

புகழ்பெற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு (MGNREGA - 100 நாள் வேலைத் திட்டம்) சட்டத்திற்கு மாற்றாக இப்புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது

நாட்கள் அதிகரிப்பு:

இந்த புதிய சட்டத்தின்படி, கிராமப்புற மக்களுக்கு வழங்கப்படும் வேலை நாட்களின் எண்ணிக்கை 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது

நிதிப் பகிர்வு மாதிரிகள் (Funding Pattern):

சட்டப்பேரவை உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்:

திட்டத்திற்கான நிதியில் மத்திய அரசு 60 சதவீதத்தையும் , மாநில/யூனியன் பிரதேச அரசுகள் 40 சதவீதத்தையும் ஏற்கும்.

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இமயமலைப் பகுதிகள்:

உத்தராகண்ட், இமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்களில், மத்திய அரசு 90 சதவீதத்தையும் , மாநில அரசுகள் 10 சதவீதத்தையும் ஏற்கும்.

தேர்வு நோக்குக் குறிப்புகள் (Exam Oriented Points)

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் (MGNREGA)

MGNREGA சட்டம்:

2005 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது.

முதல் அமலாக்கம்:

2006 பிப்ரவரி 2 முதல் ஆரம்பிக்கப்பட்டது; சில ஆதாரங்களில் முதல் செயல்படுத்தல் ஆந்திரப் பிரதேசத்தில் தொடங்கியதாக குறிப்பிடப்படுகிறது.

நாடு முழுவதும் விரிவாக்கம்:

2008 ஏப்ரல் 1 முதல் முழு இந்தியாவிலும் நடைமுறைக்கு வந்தது.

பெயர் மாற்றம் (Name Change):

இத்திட்டத்திற்கு 'மகாத்மா காந்தி' (Mahatma Gandhi) என்ற பெயர் உடனடியாகச் சேர்க்கப்படவில்லை. அதன் 4-ஆவது ஆண்டுத் தொடக்கத்தின் போது, 2009 அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) அன்றுதான் MGNREGA எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அரசியலமைப்புத் தொடர்பு (Polity Connection):

இச்சட்டம் இந்திய அரசியலமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகளில் (DPSP) உள்ள சரத்து 41 (Article 41 - வேலைக்கான உரிமை / Right to Work) மற்றும் சரத்து 43 (வாழ்வூதியம்/சரியான வேலைநிலை மற்றும் சமூகப் பொருளாதார வாழ்க்கைத் தரம்) ஆகியவற்றைச் சட்டப்பூர்வமாக நிறைவேற்றும் நோக்கில் கொண்டுவரப்பட்டது.

தமிழகத்தின் முக்கியப் பங்களிப்பு:

தமிழ்நாட்டில் இத்திட்டம் முதன்முதலில் 2006 பிப்ரவரி 2 அன்று கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், சிவகங்கை, திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

26/05/2026

கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தில் உள்ள முத்து காளியம்மன் கோவிலில் கொடை விழா ஆரம்பம்

Address

Muthanandhapuram 1st Street
Kovilpatti
628501

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vanakkam Kovilpatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category