26/05/2026
விஜயகாந்த் இருக்கும் பொழுதே அவருடைய கட்சியை இரண்டு முறை உடைத்து
முதல் முறை 5 எம்எல்ஏக்கள் இரண்டாவது முறை மூன்று எம்எல்ஏக்கள் அதன் பின்பு போட்டியிட்ட வேட்பாளர்களையே கட்சி மாற சொல்லி காசு கொடுத்து வாங்கிய
இரண்டு திராவிட கட்சிகளும் இன்றைக்கு அந்த கர்மா அவர்களுக்கே நடக்கும் பொழுது
குதிரை பேரம் யானை பேரம்
என்றெல்லாம் குதிக்கிறதுகள்
பாமக மதிமுக தேமுதிக உட்பட இவர்கள் உடைக்காத கட்சியே கிடையாது
ஏன் இவர்களுடைய சீரும் பான்பையினுடைய கட்சிகளை சுக்கு சுக்காக உடைத்த ஆட்கள் தான் இவர்கள்
இரண்டு பங்காளிகளும் சேர்ந்து கொண்டு தங்களுக்கு எதிராக ஒரு மாற்று சக்தி வந்து விடவே கூடாது என தெளிவாக இருந்தது
இன்றைக்கு அது கைமீறிப் போன உடனே
என்னென்ன அரசியலமைப்புச் சட்ட விதிகள் எல்லாம் பேசுகிறதுகள் பாருங்கள்
எம்ஜிஆர் காலத்தில் இருந்து இது நடந்து கொண்டுதான் இருக்கிறது
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மூன்றாக நான்காக உடைக்கப்படும்
இரண்டு கட்சிகளும் பேசி வைத்துக்கொண்டு இதைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்கள்
அந்த வினை தன்வினை இப்பொழுது தன்னையே சுடுகிறது
இந்த வரலாறு பூக்கோளம்
எல்லாம் திரும்பவும் பேசப்பட வேண்டும்
அவ்வளவு தூரம் கூட போக வேண்டாம்
இந்த தேர்தலிலேயே பாமக இரண்டாக உடைத்தது யார்
ஒருவேளை ஒன்று பற்ற பாமக இருந்திருந்தால் இன்றைக்கு பாமக ஒரு பத்து சீட்டுகளுக்கு மேலாக கூட ஜெயித்திருக்கும்
அதை தடுப்போம் என பார்த்துக்கொண்டது யார்
அதைவிட கூட்டணிக் கட்சிகள் எல்லாம் சொந்த சின்னத்தில் நிற்கக்கூடாது தனி சின்னத்தில் நிற்கக்கூடாது இந்த கட்சியினுடைய சின்னத்திலே தான் இருக்க வேண்டும் என தொடர்ந்து செய்து வருவது யார்
இதையெல்லாம் செய்துவிட்டு
அவன் பொருளை எடுத்து அவனையே போடுவது என சினிமா தனமாக
இப்பொழுது இன்னொரு கும்பல் வந்து அதையே செய்கின்ற பொழுது
எப்படி எல்லாம் பேசுகிறது பாருங்கள்
காவல் தடைச்சட்டமாம் மானமாம் ரோஷமாம் வெட்கமாம்
அதெல்லாம் இந்த இரண்டு திராவிட கட்சிகளுக்கும் முதலிலே இருக்கிறதா
இல்லையே அப்புறம்
இதுவே நம்பிக்கையை கூறும் தீர்மானத்திலே வெளிநடப்பு செய்து விட்டதால் இந்தக் கட்சி உடைந்தது போல அந்தக் கட்சியும் உடையவில்லை
நம்பிக்கை கோரும் தீர்மானத்திலே
அந்தக் கட்சி உக்காந்து ஓட்டு போட்டு இருந்தால் அந்தக் கட்சியின் இரண்டாக உடைந்திருக்கும்
ஆக
இரண்டு திராவிட கட்சிகளும் கொஞ்சம் கொஞ்சமாக அழிவது
தமிழகத்திற்கு நல்லது தமிழக மக்களுக்கு நல்லது
தமிழுக்கு நல்லது
இந்திய திரு நாட்டுக்கு நல்லது
ஏன் உலகத்திற்கே நல்லது
சுபஸ்ய சீக்கிரம் என்பார்கள் நல்லது சீக்கிரமாக நடக்கட்டும்
இவர்களுடைய கதறலை பார்க்க மிகவும் ஆனந்தமாக இருக்கிறது