SDPI கரூர்

SDPI கரூர் பசியிலிருந்து விடுதலை!
பயத்திலிருந்து விடுதலை!!
அழகிய அரசியல் செய்வோம்!
அதிகாரத்தை வென்றெடுப்போம்!!

06/03/2026

🌙மகளிர் தினத்தை முன்னிட்டு🌙

மகளிருக்கான
🌙✨ சமூக நல்லிணக்க இஃப்தார் ✨🌙

SDPI கட்சி மகளிர் அணி
கரூர் மாவட்டம் அழைக்கிறது!

📍 இடம்: பிக் பாஸ் மஹால், பள்ளப்பட்டி
📅 தேதி: 08.03.2026 (ஞாயிறு)
🕔 நேரம்: மாலை 05:00 மணி

சகோதர சகோதரிகளே!
ரம்ஜான் புனித நாட்களில்,
அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து
இஃப்தாரை கொண்டாடுவோம்! 💖

வாழ்த்து உரை |
சமூக நல்லிணக்க உரையாடல் |
சுவைமிக்க இஃப்தார் உணவு!


#மகளிரணி
#இஃப்தார்
#சமூக_நல்லிணக்கம்

26/02/2026
ஆழ்ந்த இரங்கல்..         #நல்லகண்ணு  ூர்
25/02/2026

ஆழ்ந்த இரங்கல்..

#நல்லகண்ணு ூர்

25/02/2026

முதுபெரும் தலைவர் இரா.நல்லகண்ணு அவர்கள் மறைவு! - எஸ்டிபிஐ கட்சி ஆழ்ந்த இரங்கல்.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும்,
தகைசால் தமிழரும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான, பொதுவுடைமை போராளி ஐயா இரா.நல்லகண்ணு அவர்களின் மறைவிற்கு, அரவை சட்டமன்ற தொகுதி SDPI கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்..


#நல்லகண்ணு ை

16/02/2026

SDPI கட்சியின் தேசிய தலைவர் எம்.கே. ஃபைஸி அவர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே. மிகப்பெரிய சட்டப் போராட்டத்தின் மூலம் இத்தகையதொரு தீர்ப்பு கட்சியின் வழக்கறிஞரணி முயற்சியால் கிடைக்கப் பெற்றுள்ளது. ஒன்றிய அரசு ஃபைஸி அவர்களின் மீதான பொய் வழக்கை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

-நெல்லை முபாரக்
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.

16/02/2026

மக்களின் துணிவே ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது!

அதிகாரத்தைக் கொண்டு நீதியை ஒருபோதும் உருவாக்கிவிட முடியாது; அதேபோல் அரசு நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் உண்மையை என்றென்றும் புதைத்துவிடவும் முடியாது. எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.ஃபைஸி அவர்களுக்குக் கிடைத்துள்ள பிணை என்பது, அரசியல் ஆதாயத்திற்காக மாற்றுக் கருத்துக்களை ஒடுக்க நினைக்கும் அத்தனை முயற்சிகளையும் விட, சளைக்காத சட்டப் போராட்டமும் ஜனநாயகத்தின் மீதான உறுதியும் மிக வலிமையானவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தருணம், நமது அரசியலமைப்புச் சட்டக் கோட்பாடுகளின் நீடித்த வலிமையையும், சட்டத்தின் ஆட்சியின் மீது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையையும் மிகத்தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதற்காக அரசு நிறுவனங்களை அச்சுறுத்தும் கருவிகளாகப் பயன்படுத்த நினைக்கும் அதிகார வர்க்கத்திற்கு, இந்த நிகழ்வு ஒரு முக்கியமான எச்சரிக்கையாகும். அடக்குமுறையை விடவும் நமது அரசியலமைப்புச் சட்டம் வலிமையானது என்பதையும், அதிகாரத்தின் பயமுறுத்தல்களை விடவும் மக்களின் துணிவு மேலானது என்பதையும் இது மீண்டும் உணர்த்துகிறது.

ஜனநாயக நிறுவனங்கள் மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கே உரியவை, அதை நசுக்குவதற்கு அல்ல. இந்தப் பாதையிலிருந்து விலகிச் செல்லும் எந்தவொரு நடவடிக்கையும், இறுதியில் நீதியின் ஆற்றலாலும் பொதுமக்களின் மனசாட்சி சக்தியாலும் சரி செய்யப்படும் என்பதில் ஐயமில்லை.

நீதியையும் ஜனநாயகத்தையும் நேசிக்கும் எமது தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் குடிமக்கள் அனைவரும் இந்த வெற்றியில் இருந்து புதிய உத்வேகத்தைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு குடிமகனின் கண்ணியம், சமத்துவம் மற்றும் உரிமைகளுக்கான கொள்கை ரீதியான போராட்டத்தில் நாம் அனைவரும் அச்சமின்றி, ஒற்றுமையுடன் உறுதியாக நிற்போம். அதிகாரம் நமது பாதையை மறிக்கலாம், ஆனால் உண்மை எப்போதும் தன் பயணத்தைத் தொடரும். மக்களின் துணிச்சலால் ஜனநாயகம் வெல்லும்!

-முகமது ஷஃபி,
தேசிய செயல் தலைவர், SDPI.

29/01/2026

அரசு நிர்வாகத்தால் கைவிடப்பட்டதா?!

#3வது_வார்டு
#கண்டுகொள்ளப்படாத_TMH_நகர்
#பள்ளப்பட்டி_நகராட்சி
#கரூர்

#தரமான_சாலை_அமைத்துக்கொடு
#கழிவுநீர்_சாக்கடை_கால்வாய்_அமைத்துக்_கொடு
#தெருவிளக்கு_அமைத்துக்_கொடு

23/01/2026

#நன்றி! #நன்றி! #நன்றி!

18வது வார்டு மக்களின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு, கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், இரண்டு இடங்களில் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து, இன்று (23.01.26) அதை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த, நகர்மன்ற தலைவி சகோதரி முனவர்ஜான் அவர்களுக்கும், நகராட்சி அலுவலர்களுக்கும், வார்டு மக்களின் சார்பாகவும், 18வதுவார்டு (SDPI) கவுன்சிலர் ஜமீலா பிர்தவ்ஸ் அவர்களின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

்ளப்பட்டி_நகரம்

23/01/2026

மாவட்ட நிர்வாகமே
நகராட்சி நிர்வாகமே
விரைந்து நடவடிக்கை எடு
பள்ளப்பட்டி நகராட்சி 6 வது வார்டில் மனு அளிக்கப்பட்டும் தீர்வு இல்லை

வீதிகளில் கழிவுநீர் தேக்கம்
கொசு தொல்லை
தொற்று நோய் அபாயம்

23.01.26 வெள்ளி

#6வது_வார்டு
#சாக்கடை_கால்வாய்_அமைத்துக்_கொடு
#சாலை_அமைத்துக்_கொடு
#பள்ளப்பட்டி_நகராட்சி
#மாவட்ட_ஆட்சியர்


SDPI கட்சியின் அகில இந்திய பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட புதிய  நிர்வாகிகள் அனைவருக்கும் கரூர் மாவட்ட SDPI கட்சியின்...
21/01/2026

SDPI கட்சியின் அகில இந்திய பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் கரூர் மாவட்ட SDPI கட்சியின் சார்பில் பணி சிறக்க வாழ்த்துகிறோம்...



Address

Karur
639101

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI கரூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share