13/05/2026
#காங்கேயம் அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ.,வை ராஜினாமா செய்ய கோரி இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் தீர்மானம்
காங்கேயத்தில் அ.தி.மு.க., இ,பி.எஸ்., அணியின் ஆலோசனை கூட்டம் நேற்று இரவு இரவு நடந்தது. இதில், வேலுமணி அணிக்கு சென் றுள்ள காங்கேயம் தொகுதி எம். எல்.ஏ., நடராஜ் தன்னுடைய பத வியை ராஜினாமா செய்ய கோரி தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் கட் சியில் பிளவு ஏற்பட்டு வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் தலை மையில் போட்டி அ.தி.மு.க.,வினர் செயல்பட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., நடராஜ் போட்டி அணியில் உள்ளார். அவரின் இந்த நடவடிக்கை அ.தி.மு.க.,வின ரிடையே கொந்தளிப்பை ஏற்படுத் தியுள்ளது.
இந்நிலையில் நேற்று காங்கேயத்தில் நடந்த, ஒன்றிய நிர்வாகிகள் கூட் பழனி டத்திற்கு அவைத்தலைவர் சாமி தலைமை வகித்தார். தகவல் தொழில்நுட்ப அணி தியாகமூர்த்தி வரவேற்றார்.
மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் அப்பு பழனிசாமி, படியூர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அ.தி.மு.க., தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்று விட்டு பணத்திற்காகவும், பதவிக்காகவும் த.வெ.க.,வை ஆத ரித்தும், பொதுச்செயலாளர் இ.பி. எஸ்.,க்கு எதிராகவும் செயல்படும் எம்.எல்.ஏ., காங்கேயம் நடராஜ் தனது பதவியை ராஜினாமா செய்து தேர்தலை எதிர்கொள்ள விட்டு வேண்டும்.
கட்சிக்கு துரோகம் செய்பவர்கள், பதவியை ராஜினாமா செய்துவிட்டு எங்கும் செல்லலாம். என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.