MNM YouthWing Kanchipuram

MNM YouthWing Kanchipuram Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MNM YouthWing Kanchipuram, Political organisation, Kanchipuram.

கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த  முன்னிட்டு இன்று  காந்தி ரோடு அமைந்துள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு காஞ்சிபுரம் வட...
15/07/2023

கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த முன்னிட்டு இன்று காந்தி ரோடு அமைந்துள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு காஞ்சிபுரம் வடமேற்கு மாவட்டம் சார்பில் திரு எஸ் கே பி கோபிநாத் திரு.த. கண்ணன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது இதில் திரு சரவணன் நகர செயலாளர் திரு ஜனார்த்தனன் நகர பொருளாளர் திரு பாலகிருஷ்ணன் வார்டு செயலாளர் திரு தியாகராஜன் வார்டு செயலாளர் திரு தணிகைவேல் வார்டு செயலாளர் திரு பாலாஜி வார்டு செயலாளர் திரு ரகுநாதன் நற்பணி இயக்கம் திரு வெங்கட்ராமன் நற்பணி இயக்கம் திரு சுரேஷ் போட்டோ ஸ்டுடியோ நற்பணி இயக்கம் திரு குமார் மெக்கானிக் ஆகியோர் கலந்து கொண்டனர்

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவ சிலைக்கு காஞ்சிபுரம் வடமேற்கு மாவட்டம் சார்ப...
06/12/2022

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவ சிலைக்கு காஞ்சிபுரம் வடமேற்கு மாவட்டம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது

தலைமை ; கண்ணன்

Happy National Youth day  Arise awake and not stop till your goal is reached- Swamy Vivekananda
12/01/2022

Happy National Youth day
Arise awake and not stop till your goal is reached- Swamy Vivekananda

07/09/2021
காலத்திற்கு ஒவ்வாத ’சட்ட மேலவையை’ மீண்டும் கொண்டுவரும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்! பெருந்தனக்காரர்களும், ஜமீன்தார்களும்...
06/08/2021

காலத்திற்கு ஒவ்வாத ’சட்ட மேலவையை’ மீண்டும் கொண்டுவரும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்!

பெருந்தனக்காரர்களும், ஜமீன்தார்களும் பிரிட்டிஷாருக்கு ஆலோசனை சொல்ல உருவாக்கப்பட்ட கவுரவ அமைப்பே ‘சட்ட மேலவை’யின் மூலவடிவம். விடுதலைக்குப் பின் ஜனநாயகம் மலர்ந்து மக்கள் பிரதிநிதிகளின் சட்டமன்றம் உருவான பிறகு இந்த அவையின் செல்வாக்கு மங்கத் தொடங்கியது. இன்று இந்தியாவில் சில மாநிலங்களில் மட்டுமே மேலவை இருக்கிறது.

ஒரு காலத்தில் மூதறிஞர் ராஜாஜி, பேரறிஞர் அண்ணா, சொல்லின் செல்வர் ம.பொ.சி, கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என்று பல ஆளுமைகள் மேலவையில் இடம்பெற்றிருந்தனர். செறிவான பல விவாதங்கள் நிகழ்ந்தன. ஆனால் அரசியல் தலையீடுகளால் இந்த அவை தன் மாண்பை இழந்தது. கட்சிகள் தங்களுக்கு வேண்டியவர்களைத் திருப்தி செய்வதற்காக மேலவைப் பதவிகளைப் பயன்படுத்திக்கொண்டன. திவால் நோட்டீஸ் கொடுத்த ஒருவரை மேலவை உறுப்பினராக நியமனம் செய்ததால், சர்ச்சை வெடித்தது. அப்போதைய முதல்வராக இருந்த எம்ஜிஆர் மேலவையைக் கலைத்தார்.

திமுக ஆட்சிக்கு வரும் சமயத்திலெல்லாம் மேலவையைக் கொண்டுவரும் முயற்சியில் தீர்மானங்களை நிறைவேற்றுவதும் அடுத்துவரும் அதிமுக அந்த முயற்சியை முறியடிப்பதும் தொடர் நிகழ்வு. வரவிருக்கும் நிதிநிலை அறிக்கை சட்டமன்ற தொடரில் மீண்டும் மேலவை கொண்டுவருவதற்கான தீர்மானத்தை திமுக அரசு கொண்டு வரவிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் சட்டமன்றம் இருக்கிறது. தமிழக அரசுக்கு வழிகாட்ட பல்வேறு ஆலோசனைக் குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ‘சட்ட மேலவை’ என்பது தேவையில்லாத ஒன்று.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அதே சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்ட இதர வசதிகள் இந்த மேலவை உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுவதோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் அமைச்சராகும் வாய்ப்பும் உருவாகும். புதுச்சேரியில் நியமன சட்டமன்ற உறுப்பினர்களைப் புகுத்தி ஜனநாயகத்தின் மாண்பைக் குலைத்தது போன்ற முயற்சிகளைத் தமிழகத்தில் எக்காலத்திலும் எந்த வடிவிலும் அனுமதிக்கக் கூடாது.

ஒரு பக்கம் முந்தைய அதிமுக அரசு கஜானாவைக் காலி செய்து வைத்திருப்பதால் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்று சொல்லிக்கொண்டு, மறுபக்கம் காலாவதியாகிப்போன சட்ட மேலவையை மீண்டும் அறிமுகப்படுத்த முயற்சி செய்வது ஏற்புடையதல்ல. கொரானா பெருந்தொற்றினால் வருவாய் இழப்பு ஏற்பட்டு மாநிலம் தத்தளிக்கும் சூழலில் இந்த கவுரவப் பதவிகள் தேவையற்றவை.

நம் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் கோவை மக்களுடனான சந்திப்பு #கோவை_மக்களுடன்_கமல்
02/08/2021

நம் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் கோவை மக்களுடனான சந்திப்பு

#கோவை_மக்களுடன்_கமல்

 #6வித்தியாசங்கள்_கண்டுபிடிக்கவும்வித்தியாசம் 1: அன்று கருப்பு.. இன்று வெள்ளை..!! மீதி வித்தியாசங்கள் ?
28/07/2021

#6வித்தியாசங்கள்_கண்டுபிடிக்கவும்
வித்தியாசம் 1:
அன்று கருப்பு.. இன்று வெள்ளை..!!
மீதி வித்தியாசங்கள் ?

*மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவரின்* கட்டளை ஏற்று மதிப்பிற்குரிய *துணை தலைவர் ஐயா AG மௌரியா சார்* அவர்களின் வழி காட்டுத...
26/07/2021

*மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவரின்* கட்டளை ஏற்று மதிப்பிற்குரிய *துணை தலைவர் ஐயா AG மௌரியா சார்* அவர்களின் வழி காட்டுதலின் *மண்டல செயலாளர் காஞ்சி பசுமை நாயகன் SKPB கோபிநாத் சார்* அவர்களின் வழியில் காஞ்சிபுரம் வடமேற்கு மாவட்டம் உட்பட்ட காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் *த.கண்ணன் காஞ்சிபுரம் வடமேற்கு மாவட்ட செயலாளர்* தலைமையில் பன்னீர் செல்வம் தீனதயாளன்முன்னிலையில் *கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது*.

நமது கட்சியை கிராமம் வரை கொண்டு சேர்த்தல் வருகிற உள்ளாட்சி தேர்தலுக்கு களம் கானும் நோக்கத்தில் மற்றும் நமது கட்சி கொடி ஏற்றுதல் குறித்தும் கலந்தாய்வு நடந்தது.

இதில் தாட்டி தோப்பு சரவணன் தியாகராஜன் பாலா கோ.சரவணன் வெங்கட்ராமன் சுரேஷ் சுரேஷ் ஸ்டுடியோ ஜனார்த்தனன் புந்தோட்டம் மணிகண்டன் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர் கட்சி வலு படுத்தல், உள்ளாட்சிதேர்தல் குறித்து கலந்தாய்வு நடந்தது. மற்றும் தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் மதிய உணவு பிரியாணி விருந்து அளிக்க பட்டது

"தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டியதும் தமிழ் வளர்ச்சிக்கென அதிக அளவில் நிதி ஒதுக்கி தீவிரமாகப் பணியாற்ற...
20/07/2021

"தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டியதும் தமிழ் வளர்ச்சிக்கென அதிக அளவில் நிதி ஒதுக்கி தீவிரமாகப் பணியாற்ற வேண்டியதும் நம்முடைய வரலாற்றுக் கடமை." தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் அறிக்கை.

Address

Kanchipuram

Alerts

Be the first to know and let us send you an email when MNM YouthWing Kanchipuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to MNM YouthWing Kanchipuram:

Share