மநு -வை மாய்ப்போம்

மநு -வை மாய்ப்போம் "Don't Blame Society ,,, We are Society " 't Blame Society , We are Society!!!

மாணவர்களின் உடல் நலன் மீது அவ்வளவு அக்கறை இருக்கும் அரசாங்கம் , போதைப் பொருள் கலாச்சாரப்  பயன்பாட்டை கண்டுபிடிப்பதற்கு ம...
13/09/2023

மாணவர்களின் உடல் நலன் மீது அவ்வளவு அக்கறை இருக்கும் அரசாங்கம் , போதைப் பொருள் கலாச்சாரப் பயன்பாட்டை கண்டுபிடிப்பதற்கு மருத்துவத் துறை நிபுணர்களை பயன்படுத்த வேண்டுமே தவிர ஆசிரியர்களை அல்ல ...

ஒருவேளை ஆசிரியர்களால் கண்டறியப்படும் சூழலில் அந்த மாணவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகலாம் . அதே ஆசிரியர் மற்ற மாணவர்கள் முன்னே இதனை வெளிப்படுத்தும் பொழுது மிகுந்த காயத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை ...

#தோஹி

இப்போ எல்லாம் யார் ஜாதி பார்க்கிற ??? சாதி ஒழிப்பு இப்போ பேச வேண்டிய தேவை என்ன ???முற்போக்கு முற்போக்குனு கத்துறீங்களே ச...
06/04/2022

இப்போ எல்லாம் யார் ஜாதி பார்க்கிற ???
சாதி ஒழிப்பு இப்போ பேச வேண்டிய தேவை என்ன ???
முற்போக்கு முற்போக்குனு கத்துறீங்களே சாதியை ஒழித்துடிங்களா ???
பட்டியல் வெளியேற்றம் மட்டுமே முழுமையான சுதந்திரம் ???
நாங்களும் ஆண்ட ஜாதி தான் ??? என்ற பல கேள்விகள் மத்தியில் ...,,,
களத்துல ஜாதி ஒழிப்பை உரக்கப் பேசும் தோழர்களாக நீங்கள் இருப்பதில் தவறில்லை.அதே நேரம் , அண்ணல் அம்பேத்கர் அவர்களின்
"சாதியை அழித்தொழிக்கும் வழி" புத்தகத்தை நீங்கள் கடந்து வந்துட்டீங்களா ? -னு உரிமையோட ஒரு கேள்வியை தோழனாக முன் வைக்கின்றேன் ...
" SC/ST மக்களை இந்துக்களாக அடையாளப் படுத்த கூடாது "என்ற தோழர் முனைவர் . தொல்.திருமாவளவன் அவர்களின் கருத்து - காலத்தின் தேவை என்பதை கருத்தியலாக ஏற்க . இந்த புத்தகத்தின் வாசிப்பு அவசியம் .
1936-ம் ஆண்டு அண்ணல் அவர்களின் கருத்திற்கு இடையூறாக இருந்த சமூகம் , 86 ஆண்டுகள் பின்பு இன்று #திருமா அவர்களின் கருத்தே , பார்ப்பனியத்தின் அடித்தளத்தை அசைக்கும் நகர்வு ...

#தோஹி
|

04/04/2022

It's an important Parliamentary speech of Leader Thol.Thirumavalavan M.P.
Friends please share it and let it reach as many as possible. We have translated his speech and subtitle the video.

Thol.Thirumavalavan

//Salutations to the respected Leader of this house. I am thankful for the opportunity given to me to speak on this Ammendment Bill on SC/ST Act,1950 and (U.P.) Act, 1967

SC/STs are the people who do not have religion or caste and they are the sons of this soil. They do not have a religion nor caste but to prove that Hindus are majoritarian, we are providing them Hindu certificates and list them as Hindus.This is a great injustice we impose on them.

To show that Hindus are the majoritarian of this country we or our government are listing them as Hindus, but we don't even bother the least to empower them economically or to uplift them through Education and Employment. 75 years of our independence has proved that we are not even least bothered to protect them from the atrocities and disgrace inflicted on them in the name of casteism since ages.

Hence, First and Foremost the government should make a proclamation that they are non- Hindus. As per the wishes of Revolutionary Ambedkar and Pandit Ayodhi dasar, I am obliged to place this request to the Government that they should be regarded as Non- Hindus or else they should be referred as "Purva Buddhists" by bringing amendment to the constitution. I wish to place my request to the government that this division of population who constitute almost 25% of Indian population as a whole should be named as "Purva Buddhist".

Scheduled tribes of India undergo many difficulties to obtain their caste certificate in India. We have Irular Community, Kurumans and Kurumbar community in Tamil Nadu and people in such tribal communities are still struggling to obtain the caste certificates to get their due in education and employment. The Supreme court has given certain guidelines while issuing community certificates to Scheduled Tribes. But those guidelines are not being followed and the community is facing a lot of impediments and is going through a lot of struggle in getting the community certificate and because of that they are denied Education, Employment and even the residential land rights like patta.

These tribal people are residing near the shores of Water bodies and have been using those places as their residence since generations. But citing the area as water catchment areas as per Supreme Court judgement, they were even denied land deeds for residential place. So, to protect and upgrade their livelihood of the tribal people We should bring legislation to help them to avail caste certificates easily.//

|

  Anbumani Ramadoss வன்னிய சமூகத்திற்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்...
31/03/2022



Anbumani Ramadoss

வன்னிய சமூகத்திற்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கும் நிலையில் , பாமக கட்சியின் அன்புமணி ராமதாஸ் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் பதிவுசெய்த ஒற்றை கருத்து , அவரின் சாதி வன்மத்தை எடுத்துரைக்கிறது .

வடதமிழ்நாட்டில் ஆண்ட சாதி என்று மார்தட்டி சுற்றித்திரியும் சத்ரிய குல வன்னிய சொந்தங்கள் , பொதுவெளியில் சமூக மாற்றத்திற்கு அடிப்படையான இட ஒதுக்கீட்டு முறையை பிச்சை , இலவசம் , சலுகை போன்ற பல சொற்களால் வன்மம் தீர்த்து வரும் நிலையில் , உள் இட ஒதுக்கீடு பெற்று அகமகிழ்ந்த தருணம் இன்று காலாவதி ஆக்கப்பட்டது .

சரியான புள்ளி விபரங்கள் இல்லை என்பதனால் ,உள் இட ஒதுக்கீடு அரசாணை செல்லாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு ,
பட்டியல் படுத்தப்பட்ட சமூகத்திற்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில் , சமூக கட்டமைப்பில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள அருந்ததியர் சமூகத்திற்கு 3% உள் இட ஒதுக்கீடு கடந்த 2009ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அது மட்டும் சாத்தியமா ??? என்று வன்மத்தை கக்கியுள்ள மரியாதைக்குரிய அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு சில விளக்கங்கள்.

அருந்ததியர் , சக்கிலியர் , மாதாரி , மாதிகா தோட்டி , ஆதி ஆந்திரா என்னும் 6 பட்டியல் சமூக சாதிகளுக்கு வழங்கப்பட்டது . மொத்தமுள்ள பட்டியல் சமூக சாதிகள் 76 , உள் இட ஒதுக்கீடு போக 15% இட ஒதுக்கீட்டினை மீதமுள்ள 70 பட்டியல் சமூகங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன .

அருந்ததிய சமூகத்திற்கான உள் இட ஒதுக்கீடு குறித்து ஜனவரி 23 , 2008 ஆம் ஆண்டு சட்டசபையில் கலந்தாலோசித்து முடிவு செய்ய இந்த அரசு கருதி உள்ளது என்று அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி பதிவு செய்தார் . பின்பு மார்ச் 12 , 2008 அன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசுவாமி நீங்கலாக அனைத்து கட்சியினரும் அருந்ததியினர் சமூக உள் இட ஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவித்தனர் . அன்றைய கலைஞர் அவர்களின் உரையில் , 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி , அருந்ததியர் மற்றும் சக்கிலியர் மக்கள் மட்டுமே 15,48,792 பேர் உள்ளனர் , இது மொத்தம் உள்ள ஆதிதிராவிட மக்கள் தொகையில் 13.06% ஆகும் , எனவே அம்மக்களுக்கு 2.35% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று ஒரு உத்தேச முடிவு எடுக்கப்பட்டது . அதற்கு ஆட்சேபம் தெரிவித்த அருந்ததிய சமூக இயக்கங்கள் , ஆய்வு செய்வதற்காக ஆணையம் கோரியது . அதன் விளைவாக ,
நீதியரசர் ஜனார்த்தனம் ஆணையம் - 2008ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது . இந்த ஆணையமானது அருந்ததியர் இன மக்களின் சமூக நிலை , பொருளாதார நிலை , கல்வி நிலை போன்றவற்றை ஆராய்ந்து அதற்கேற்ப தரவுகளை சமர்ப்பித்து , அம்மக்களுக்கான உள் இட ஒதுக்கீடு பெறுவதற்காக பரிந்துரை செய்தது .

மேலும் ,
‌தோழர் ம.மதிவண்ணன் அவர்கள் " அருந்ததியர்ளாகிய நாங்கள்..." என்ற அறிக்கையை தயார் செய்து , நீதியரசர் ஜனார்த்தனம் ஆணையத்திடம் வலியுறுத்தல் அறிக்கையாக சமர்ப்பித்தார் .
‌ அந்த அறிக்கையானது புத்தகமாகவும் வெளியிடப்பட்டது .
‌‌ வெளியீடு : கருப்புப் பிரதிகள் , விலை : ரூபாய் : 25 .

இந்த அறிக்கையில் , தோழர் மணிவண்ணன் அவர்கள்
மருத்துவம் , பல் மருத்துவம் , பொறியியல் மற்றும் சட்டக்கல்லூரிகளில் கல்வி பயின்று வரும் பட்டியல் சமூக மாணவர்களில் , அருந்ததிய சமூக மாணவர்களின் விகிதாச்சாரம் என்ன? என்பதை மிகத் தெளிவாக பதிவு செய்துள்ளார் .
சட்டமன்றத்திலும் , நாடாளுமன்றத்திலும் அருந்ததிய சமூக மக்களின் பிரதிநிதித்துவம் என்ன என்பதை தோலுரித்துக் காட்டியுள்ளார் .
இந்த அறிக்கையில் இவர்கள் கோரிய இட ஒதுக்கீடு 5.4 % ஆகும் .

எனவே , அருந்ததிய சமூகத்திற்கான உள் இட ஒதுக்கீடு என்பது சாதி அரசியல் பலத்தைக் கொண்டு மிரட்டி பெறப்பட்ட உரிமை அல்ல .
அருந்ததி களுக்கான உள் இட ஒதுக்கீட்டிற்கான அடிப்படைக் கூறு என்பது அரசியல் அதிகாரம் அற்ற நிலையே .
வன்னியர் சமூகத்தின் அரசியல் அதிகாரம் என்னவென்பது கடந்த 40 ஆண்டுகளாக அரசியலில் அனைவருக்கும் தெரியும் . 2021 சட்டசபையில் எத்தனை வன்னிய சாதியை சார்ந்த உறுப்பினர்கள் உள்ளனர் என்பது அன்புமணி அவர்களுக்கு நன்கு புரியும் என்று நம்புகின்றேன் .
12.03.2008 அன்று நடந்த கூட்டத்தில் , அருந்ததிய சமூகத்திற்கான உள் இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்த கட்சிகளில் பாட்டாளி மக்கள் கட்சியும் உண்டு .

வன்னிய சமூக மக்களின் வாழ்வாதாரத்தை அடமானம் வைத்துப் பிழைக்கும் அரசியல்வாதி வரலாற்றை திருப்பி பார்த்து பேச தொடங்குங்கள் .

உங்களின் வன்மத்திற்கான விடை,இந்த விளக்கம் மட்டுமே ‌....

- தோழர் ஹிமானா

#தோஹி |

பார்ப்பனர் , பிராமணர் என்ற சொல்லாடல் மனித குலத்திற்கு எதிரானது என்பதை பகுத்தறிவாளர்கள் நாம் அறிவோம் ...பிறப்பின் அடிப்பட...
27/05/2021

பார்ப்பனர் , பிராமணர் என்ற சொல்லாடல்
மனித குலத்திற்கு எதிரானது என்பதை பகுத்தறிவாளர்கள் நாம் அறிவோம் ...

பிறப்பின் அடிப்படையில் பேதங்கள் கற்பிக்கப்பட்ட பொழுது , அதனை எதிர்த்து வாதிடாமல் ஆதிக்க வேத நிலையைக் கொண்டு தத்தம் வாழ்வியலை செழுமைப் படுத்திக் கொண்ட இனக்குழு தான்
" பார்ப்பன இனக்குழு " ...

அம்பேத்கர் ஒரு சிந்தனைவாதி , கல்வியாளர் , பொருளாதார அறிஞர் , சட்ட மேதை , களத்தில் ஆரியத்தை எதிர்த்து நின்று களமாடிய சமகால புரட்சியாளர் ...

வரலாற்றில் ஒரு கிளர்ச்சியை எதிர்த்து ஆரியமும் பார்ப்பனியமும் சண்டையிட்டதாக வரலாறு கிடையாது ,
காரணம் " சூழ்ச்சியே " அவர்களின் தாரக மந்திரம் ...

உங்களின் சிந்தனைக்கு சொந்தக்காரர்கள் பார்ப்பனர்கள்தான் என்ற விதையை விதைத்து , கிளர்ச்சி செய்து எதிர்த்து நின்ற இனக்குழுவை ,
தத்தம் வேத கொள்கையின் அடிமை சூத்திரனாக மாற்றுவதே ஆரியத்தின் பன்னெடுங்கால வரலாறு ...

அண்ணல் அவர்களின் அறிவை கொண்டாடுவதற்கும் , அவர்களின் செயல் திறனை பாராட்டுவதற்கும் , உங்களுக்கு #வார்த்தை_பஞ்சம் இருக்குமாயின் தயவுசெய்து பாராட்ட வேண்டாம் ...

டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களை பார்ப்பனரோடு ஒப்பிட்டு கருத்து பதிவு செய்வதென்பது ,
உவமை அல்ல ,
ஒவ்வாமையின் வெளிப்பாடு ...

- தோழர் ஹிமானா

#தோஹி |

ஆயுதம் என்பதன் பதம் ,முரணின்றி புரிதல் வேண்டும் ...  #தோஹி
23/05/2021

ஆயுதம் என்பதன் பதம் ,
முரணின்றி புரிதல் வேண்டும் ...

#தோஹி

மூன்றாம் பெரிய கட்சி 😎
21/05/2021

மூன்றாம் பெரிய கட்சி 😎

20/05/2021

தமிழக உயர்கல்வியில் பார்ப்பனிய விதைப்பு , 12 ஆண்டுகளாக கவணிக்கப்படாத வரலாற்று பிழை ...

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி .

18/05/2021

தாய் புலி 🔥❤️

17/05/2021

கரும்புலிகளுக்கான பாடல் - தோழர் இசைப்ரியா
| #

Address

Youth Autocracy
Kambam
625516

Telephone

9500605115

Website

Alerts

Be the first to know and let us send you an email when மநு -வை மாய்ப்போம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share