மக்கா பள்ளிவாசல் கம்பம் INTJ

  • Home
  • India
  • Kambam
  • மக்கா பள்ளிவாசல் கம்பம் INTJ

மக்கா பள்ளிவாசல் கம்பம் INTJ நன்மையை விதைப்போம் நன்மையை மட்டுமே செய்வோம்..

மனித நேயத்தை விதைப்போம் மனித நேய பணிகளை மட்டும் செய்வோம்.
💚🖤

ஏக இறைவனின் திருப்பெயரால். கம்பம் மக்கா பள்ளிவாசல் சார்பில். உதயம் நகரில் இயங்கி வரும் மஸ்ஜிதுர் ரஹ்மானியா மக்தப் மதரஸா ...
02/06/2026

ஏக இறைவனின் திருப்பெயரால்.

கம்பம் மக்கா பள்ளிவாசல் சார்பில்.

உதயம் நகரில் இயங்கி வரும் மஸ்ஜிதுர் ரஹ்மானியா மக்தப் மதரஸா மற்றும் டியூசன் சென்டர்.

கோடை விடுமுறை முடித்து.

இன்ஷா அல்லாஹ்: 08.06.2026 திங்கள் கிழமை முதல் மீண்டும் திறக்க படுகிறது..

புதிய மாணவ மாணவிகள் அட்மிஷன் அன்று நடைபெறும்.

கம்பம் மக்கா பள்ளிவாசல்
மதரஸத்துஸ் ஸாலிஹீன்
மஸ்ஜிதுர் ரஹ்மானியா மக்தப் மதரஸா மற்றும் டியூசன் சென்டர்.
உதயம் நகர் கம்பம் தேனி மாவட்டம்..

கம்பம் மக்கா பள்ளிவாசலில் இயங்கி வரும் பெண்களுக்கான மதரஸத்துஸ் ஸாலிஹீன் அரபி ஆலிமா பட்ட படிப்பு மதரஸா கோடை விடுமுறை முடி...
02/06/2026

கம்பம் மக்கா பள்ளிவாசலில் இயங்கி வரும் பெண்களுக்கான மதரஸத்துஸ் ஸாலிஹீன் அரபி ஆலிமா பட்ட படிப்பு மதரஸா கோடை விடுமுறை முடித்து..

இன்ஷா அல்லாஹ் 08.06.2026 திங்கள் கிழமை முதல் துவங்க உள்ளது.

3 ஆண்டுகள் பட்ட படிப்பில் குடும்ப பெண்களுக்கு

காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும்..

கல்லூரி பள்ளி மாணவிகளுக்கு மாலை 5 மணி முதல் 7.30 மணி வரையும் நடைபெற்று வருகிறது.

புதிய மாணவிகள் அட்மிஷன் 04.06.2026 வியாழன் கிழமை முதல் துவங்குகிறது.

ஏற்கனவே பயிலும் மாணவ மாணவிகளுக்கு எப்போதும் போல் பாடத்திட்டம் நடைபெறும் புதிய மாணவிகளுக்கு பாடத்திட்டம் துவங்கி நடத்தப்படும் இன்ஷா அல்லாஹ்.

கம்பம் மக்கா பள்ளிவாசல்
மதரஸத்துஸ் ஸாலிஹீன் அரபி ஆலிமா பட்ட படிப்பு மதரஸா
60 அடி ரோடு எத்திம்கானா எதிரில்
கம்பம் மெட்டு சாலை
கம்பம் தேனி மாவட்டம்.

கம்பம் மக்கா பள்ளிவாசலில் இயங்கி வரும் மதரஸத்துஸ் ஸாலிஹீன் அரபி பெண்கள் ஆலிமா பட்ட படிப்பு மதரஸா. மற்றும் மதரஸத்துஸ் ஸால...
02/06/2026

கம்பம் மக்கா பள்ளிவாசலில் இயங்கி வரும் மதரஸத்துஸ் ஸாலிஹீன் அரபி பெண்கள் ஆலிமா பட்ட படிப்பு மதரஸா.

மற்றும் மதரஸத்துஸ் ஸாலிஹீன் அரபி மக்தப் மதரஸா

கோடைக்கால விடுமுறை முடித்து இன்ஷா அல்லாஹ்.

08.06.2026 திங்கள் கிழமை முதல் மீண்டும் ஆரம்பம் ஆகிறது.

அன்று ஆலிமா பட்ட படிப்பு புதிய மாணவிகள் சேர்க்கை நடைபெறும்.

மக்தப் மதரஸா புதிய மாணவ மாணவிகள் சேர்க்கை நடைபெறும்.

மார்க்க கல்வி கற்று நன்மையை பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.

இப்படிக்கு.
நிர்வாகம்
கம்பம் மக்கா பள்ளிவாசல்..
60 அடி ரோடு எத்திம்கானா எதிரில்
கம்பம் மெட்டு சாலை
கம்பம் தேனி மாவட்டம்..

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்.."காயிதே மில்லத் பிறை விருது" சமூக களத்தில் களமாடும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை...
02/06/2026

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்..

"காயிதே மில்லத் பிறை விருது"

சமூக களத்தில் களமாடும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை தலைவர் முஹம்மது முனீர் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது..

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது ,

இதில் ஒவ்வொரு ஆளுமைகள் பெயரில் சமூகத்திற்கு உழைக்கும் கள போராளிகள் தேர்வு செய்ய பட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்ணிய படுத்தி வருகிறது.

அந்த அடிப்படையில் 2026 ம் ஆண்டுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சியில்.

"காயிதேமில்லத் பிறை விருது "

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை தலைவர் முஹம்மது முனீர் அவர்களுக்கு வழங்கப்படும் என,

பாராளுமன்ற உறுப்பினர் ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து களமாடும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்பி அவர்கள் அறிவித்து உள்ளார்..

தமிழுக்காக ,தமிழர்களுக்காக தனது வாழ்நாளில் குரல் கொடுத்து இஸ்லாமிய சமூகத்திற்கும் ,பிற சமூக மக்களுக்காக குரல் கொடுத்து, தனது அனைத்து செயல்பாடுகளும் சமூகத்திற்காக அமைத்து கொண்டவர், "கண்ணிய மிகு காயிதே மில்லத் அவர்கள் " இன்றும் அவர் வரலாறு அனைத்து சமூகத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய மகத்தான வரலாறு அப்படி வரலாற்றில் இடம் பிடித்த அவரின் பெயரில்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை தலைவருக்கு விருது வழங்குவது என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சி சரியான தேர்வு செய்து உள்ளது.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை தலைவர் முஹம்மது முனீர் அவர்கள் தனது இளம் வயதில் இருந்தே சமூகத்தின் மீது பற்று கொண்டு, மாணவர் இயக்கத்தில் பயணித்து, இன்று சமூகத்தில் அடையாளமாக உள்ள சமுதாய தலைவர்கள் எஸ் எம் பாக்கர் அவர்கள் ,பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ அவர்கள் என பல தலைவர்கள் உடன் மாணவ இயக்கத்தில் களமாடியவர்.

இந்த இஸ்லாமிய சமூகம் உரிமைகள் மறுக்கப்பட்டு நாதியற்ற சமூகமாக ஒடுக்கப்பட்ட போது இயக்கங்கள் கட்டி களமாடியவர்களில் முக்கியமானவர்.

சமுதாய தலைவர் எஸ் எம் பாக்கர் அவர்கள் உடன் துணை நின்று அனைத்து களங்களில் இருந்தவர் இந்த சமுகத்திற்கு இட ஒதுக்கீடு கிடைக்க ஆணி வேராக செயல்பட்டவர்.

இன்றும் அந்த இட ஒதுக்கீட்டை அதிகரித்து தர வேண்டும் என்று தொடர்ந்து களமாடி கொண்டு இருப்பவர்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பணிகளில் சமுதாய தலைவர் எஸ் எம் பாக்கர் அவர்கள் உடன் எப்படி தோள் உடன் தோள் நின்று பயணம் செய்தாரோ , அந்த பயணத்தில் அவர் மறைவுக்குப் பின்னர் தற்போது மாநில தலைவர் முஹம்மது சித்திக் அவர்கள் உடனும் மற்றும் நிர்வாகிகள் உடனும் தொய்வு இல்லாமல் களமாடி வருகிறார்.

இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை விசயத்தில் வக்ஃப் நிலத்தை மீட்கும் விசயத்தில் வக்ஃப் நிலங்கள் எப்படி பயன் படுத்த வேண்டும், என தனது அன்றாட பணிகளில் ஒவ்வொரு நிமிடமும் சமூக சிந்தனை உடன் பயணிக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் முஹம்மது சித்திக் அவர்கள் மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை தலைவர் முஹம்மது முனீர் மற்றும் நிர்வாகிகள் பணிகள் என்பது இன்றும் களத்தில் பேசும் பொருளாக இருந்து வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர்கள் கலைஞர் அவர்கள் ,ஜெயலலிதா அவர்கள் உடன் மிக இணக்கமாக களமாடியவர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்கள்,

அந்த இணக்கமான சூழ்நிலையில் அ அரசியல் களத்தில் எவ்வாறு சமூகத்திற்கு பயன் படுத்தி கொள்ள வேண்டும் என்று அனைத்து களத்திலும் சமூக மேம்பாட்டிற்கு களமாடியவர்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஒரு பக்கம் தாஃவா பணியில் சமூக பணியில் இரத்த தானம் மருத்துவ பணிகள் கல்வி ரீதியாக பணிகள் செய்தாலும் அரசியல் சார்ந்த அனைத்து களத்தில் முன்னெடுக்க கூடியவர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை தலைவர் முஹம்மது முனீர் அவர்கள்.

இஸ்லாமிய இயக்கங்கள் இஸ்லாமிய அமைப்புகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பிரிந்து கிடந்த போது சமுதாய தலைவர் எஸ் எம் பாக்கர் அவர்கள் அனைவரையும் ஒற்றுமை படுத்த வேண்டும் என்று விரும்பிய போது அதை களத்தில் பறைசாற்றி அனைவரையும் ஒன்றாக அமர வைத்து இன்று வரை அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு மூலம் பயணித்து வருபவர்.

எல்லா இயக்கம் தலைவர்கள் அரசியல் கட்சிகள் தலைவர்கள் அனைத்து இயக்கங்கள் அரசியல் கட்சிகள் நிர்வாகிகள் அடிமட்ட தொண்டர்கள் வரை நட்பு பாராட்டி கொண்டு இருப்பவர் தான் முஹம்மது முனீர் அவர்கள்.

இன்றைக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் முஹம்மது சித்திக் அவர்கள் தலைமையில் சமூக பணிகளை முன் எடுத்து செல்லும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை தலைவர் முஹம்மது முனீர் அவர்களுக்கு..

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 2026 விருது வழங்கும் நிகழ்ச்சியில்

"காயிதேமில்லத் பிறை விருது "

வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது

எங்கள் மாநில துணை தலைவர் அவர்களுக்கு விருது வழங்கும்..

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம்...

இப்படிக்கு
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
மாநில ஊடக பிரிவு.

ிரிவு

29/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

இன்றைய ஜும்ஆ உரை

சகோதரர்,வாசிம் அக்ரம்..

தலைப்பு.. இறுதி நபியின் இறுதிப் பேருரை...

இடம் மக்கா பள்ளிவாசல் கம்பம்

கம்பம் மக்கா பள்ளிவாசலில் இந்த வார ஜும்ஆ இன்ஷா அல்லாஹ்..
28/05/2026

கம்பம் மக்கா பள்ளிவாசலில் இந்த வார ஜும்ஆ இன்ஷா அல்லாஹ்..

கம்பம் நகர இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மக்கா பள்ளிவாசல் மூலம் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. மாநில செயலாளர் பல்லாவ...
28/05/2026

கம்பம் நகர இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மக்கா பள்ளிவாசல் மூலம் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

மாநில செயலாளர் பல்லாவரம் ஜாகிர் உசேன் அவர்கள் உரையாற்றினார்.

ஆண்கள் பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

27/05/2026

இன்ஷா அல்லாஹ் நாளை கம்பம் மக்கா பள்ளிவாசல் சார்பில் நடைபெற உள்ள பெருநாள் திடல் தொழுகை குறித்த பணிகள் நடைபெற்று வருகின்றன..

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்.அனைவருக்கும் தியாக பெருநாள் வாழ்த்துக்கள்.உலகத்திற்கே தியாகத்தை பறைசாற்றி,மனித நேயத்தை வி...
27/05/2026

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்.

அனைவருக்கும் தியாக பெருநாள் வாழ்த்துக்கள்.

உலகத்திற்கே தியாகத்தை பறைசாற்றி,மனித நேயத்தை விதைத்து ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்து.

இறைவனுக்காக ஈமானை வலுப்படுத்தி எந்த களத்திலும் அறம் மாறாமல் இருக்கும் மார்க்கம் என்பதை உணர்த்தும் விதமாக கொண்டாடப்படும்.

ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாளாம் தியாக பெருநாள் வாழ்த்துக்களை

சகோதரர்கள் சகோதரிகள் மற்றும் அனைத்து சமூக மக்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம்.

வெறுப்பை விதைப்பவர்களை புறம் தள்ளி,சகோதரத்துவத்தை வலுப்படுத்துவோம் சமத்துவத்தை களத்தில் பறைசாற்றுவோம்..

இப்படிக்கு.
A.முஹம்மது சித்திக்
மாநில தலைவர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்..

ிரிவு

இன்ஷா அல்லாஹ் நாளை காலை சரியான நேரத்தில் தொழுகை நடைபெறும் இன்ஷா அல்லாஹ்..
27/05/2026

இன்ஷா அல்லாஹ் நாளை காலை சரியான நேரத்தில் தொழுகை நடைபெறும் இன்ஷா அல்லாஹ்..

Address

60ft Road And Behind Etheem Khana
Kambam
625516

Telephone

+919790120149

Website

Alerts

Be the first to know and let us send you an email when மக்கா பள்ளிவாசல் கம்பம் INTJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category