09/08/2014
விழுப்புரம்
First Published : 09 August 2014 05:39 AM IST
விழுப்புரம் மாவட்டத்தில் 2014-15ஆம் கல்வி ஆண்டுக்கு ஆன்லைன் மூலம் கல்வி உதவித் தொகை வழங்குவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (பொ) எஸ்.நிர்மலா தலைமை வகித்தார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கண்காணிப்பாளர் ஆ.ஆதிசக்தி சிவகுமரிமன்னன் நன்றி கூறினார்.
இத் திட்டம் தொடர்பான தகவல்கள் தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டன.