05/03/2025
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் கைதை கண்டித்து தென்காசி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கடையநல்லூரில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக
அமலாக்கத்துறையால் எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஸி கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதில் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு
மாவட்ட தலைவர் திவான் ஒலி தலைமை தாங்கினார் மாவட்ட துணைத்தலைவர் முஹம்மது நைனார்,மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் ஷேக் முகம்மது ஒலி, மாவட்ட செயலாளர்கள் சீனா, சேனா, சர்தார், நூர்முஹம்மது, அப்துல் பாசித், மாவட்ட பொருளாளர் முத்துமுகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது மஹ்மூத் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாபர் அலி உஸ்மானி, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் யாசர்கான், விமன் இந்தியா மூவ்மென்ட் மகளிரணி மாவட்ட தலைவி பரக்கத் நிஷா ஆகியோர் கலந்து கொண்டு , கண்டன உரை ஆற்றினார்
இந்த கூட்டத்தில் அஸ்கர் அலி, கடையநல்லூர் தொகுதி துணைத்தலைவர் நைனா முஹம்மது கனி, துணைச்செயலாளர் சாஜித் அலி,எஸ்டிடியூ தொழிற்சங்க மாவட்ட தலைவர் அசன் கனி, மாவட்ட செயலாளர் அப்துல் கரீம், மகளிரணி மாவட்ட தலைவர் பரக்கத் நிஷா, மாவட்ட செயலாளர் சுலைகாள், வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் முஹம்மது கனி, மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி, வழக்கறிஞர் அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சர்தார் அரபாத், வேளாண் அணி மாவட்ட பொறுப்பாளர் முஹம்மது காசிம், மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர் செய்யதுஇப்ராஹிம், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் ஷேக்முஹம்மது, கடையநல்லூர் நகர தலைவர் வழ. லுக்மான் ஹக்கீம் மற்றும் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன கோசனங்களை எழுப்பினர்