16/09/2021
ஓசூர் எலைட் ரோட்டரி சங்கம் மற்றும் அறம் இலக்கிய அமைப்பு இணைந்து இன்று(15.09.21) காலை ஓசூர் சமத்துவபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பாரதியார் நூற்றாண்டு விழா,அண்ணா பிறந்த நாள் விழா,ஆசிரியர் தினவிழா என முப்பெரும் விழா நடைப்பெற்றது
இந்த விழாவிற்கு ஓசூர் எலைட் ரோட்டரி சங்கத்தின் தலைவர் திரு அறம்கிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கினார்
மேலும் பாவலர் கருமலை தமிழாழன் தலைமயில் “பாரதி போற்றுதும் “என்ற தலைப்பில் கவியரங்கம் மற்றும் போச்சரங்கம் நடைப்பெற்றது
இவற்றில் இப்பள்ளியை சேர்ந்த இருபதற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு பாரதியார் பற்றி மிகச்சிறப்பாக கவிதை வாசித்தார்கள்,வீரமாகவும் உற்சாகமாகவும் பேசினார்கள்
இவர்களுக்கு அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் நினைவுபரிசு வழங்கப்பட்டது
ரோட்டரியன் திரு ராகவன் ,மாவட்ட கவர்னர் நியமனம் அவர்கள் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்
மேலும் பள்ளி நூலகத்திற்கு இரண்டாயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பெற்றன இவற்றை பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு கோபாலப்பா அவர்கள் பெற்றுக்கொண்டார்
மேலும் ஆசிரியர்களை கௌரவபடுத்தும் விதமாக முப்பது ஆசிரியர்களுக்கு சான்றிதலும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது
இவற்றை எலைட் ரோட்டரி சங்க உறுப்பின்களும் மற்றும் ஓசூர் ஏஞ்சல் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சேர்ந்து வழங்கினர்
இதனை தொடர்ந்து ரோட்டரியன் செபஸ்டின் அவர்கள் அனைவருக்கும் விளையாட்டு துறை சார்ந்த தகவல்களையும் மற்றும் விபத்து ஏற்படும் போது எப்படி முதல் உதவி செய்வது என்று செய்முறை விளக்கத்துடன் விளக்கமாக உறையான்றினார்
இந்த விழாவில் ஓசூர் எலைட் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் இராசு,பாலசுந்தரம்,வேணுகோபால்,ராஜேஷ்ராவ்,பாலகிருஷ்ணன்,கோபிநாத்,மணிகண்டன்,வேடி,ஆகியார் கலந்து கொண்டனர்.கவிஞர் அ க இராசு அவர்கள் விழாவை தொகுத்து வழங்கினார்
திரு பாலசுந்திரம் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறானார்
#அறம்கிருஷ்ணன்
தலைவர் ஓசூர் எலைட் ரோட்டரி சங்கம்