நம்ம தமிழ்நாடு Our Tamilnadu

  • Home
  • India
  • Erode
  • நம்ம தமிழ்நாடு Our Tamilnadu

நம்ம தமிழ்நாடு Our Tamilnadu நம்ம தமிழ்நாடு

தற்கால இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மண்டலம் வரலாற்றுக் காலத்துக்கு முன்பு முதல் மக்கள் வாழும் உறைவிடமாக தொடர்ந்து இருந்துவந்துள்ளது. தமிழ்நாட்டின் வரலாறும் தமிழ் மக்களின் நாகரீகமும் உலகின் மிகப் பழமையானவையாகும். முந்தைய பழங்கற்காலம் முதல் தற்காலம் வரையிலான தமிழ்நாட்டின் வரலாறு முழுவதிலும், இந்தப் பகுதியானது பல்வேறு புறக் கலாச்சாரங்களுடன் ஒருங்கிணைந்து இருந்து வந்துள்ளது. வரலாற்றில் ஒப்பீட்டளவில் குற

ுகிய காலப் பகுதிகளைத் தவிர்த்து, பிற காலகட்டங்களில் தமிழ்நாடு பகுதி புற ஆக்கிரமிப்புகள் எதுவுமின்றி சுதந்திரமாக இருந்து வந்துள்ளது.

சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ பேரரசுகளே நான்கு பண்டைய பூர்வீக தமிழ் பேரரசுகளாக இருந்தன. இவர்கள் தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பகுதியை ஆட்சி செய்தனர், இதனால் உலகில் அழியாமல் வழக்கத்திலிருந்த சில பழமையான இலக்கியங்களின் வளர்ச்சி சாத்தியமானது. இவர்கள் ரோமப் பேரரசுடன் அதிகப்படியான கடல்வழி வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இப்பகுதியின் தலைமைக்காக இந்த மூன்று வம்சத்தைச் சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் தொடர்ச்சியாக போரிட்டுக் கொண்டனர். மூன்று பேரரசுகளும் பாரம்பரியமாக ஆட்சி செய்துவந்த இந்தப் பகுதியை மூன்றாம் நூற்றாண்டில் நுழைந்த களப்பிரர்கள் விரட்டியதால் இப்பகுதியின் பாரம்பரிய ஆட்சி வடிவம் மாறியது. பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் மீட்டெழுந்து களப்பிரர் ஆதிக்கத்தை முறியடித்து தங்களின் பாரம்பரிய பேரரசுகளை மீண்டும் நிலைநாட்டினர். வீழ்ந்திருந்த சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்களையும் பாண்டியர்களையும் தோற்கடித்து, தங்களது பெரும் சக்தியாக எழுச்சியடைந்து கிட்டத்தட்ட தெற்கு தீபகற்பப் பகுதி முழுவதும் தங்கள் பேரரசை விரிவுபடுத்தினர். வங்காள விரிகுடா பகுதியில் சோழப் பேரரசு சுமார் 3,600,000 கி.மீ2 அளவிற்குப் பரவி இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில் இருந்த ஸ்ரீ விஜயா பேரரசு பகுதியையும் சோழரின் கடற்படை கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது.

வடமேற்கு பகுதியிலிருந்து வந்த இசுலாமிய படைகளின் ஊடுருவல் காரணமாக இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. பதினான்காம் நூற்றாண்டில் பண்டைய மூன்று பேரரசுகளின் வீழ்ச்சி காரணமாக, தமிழ்நாடு விஜயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மாறியது. விஜயநகரப் பேரரசின் கீழ் தெலுங்கு பேசும் நாயக்கர் ஆட்சியாளர்கள் தமிழ்ப் பகுதியை ஆட்சி செய்தனர். மராத்தியர்களின் குறுகிய கால வருகை தமிழ்ப் பகுதியில் ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் வருகைக்கு வழிவகுத்தது. பதினேழாம் நூற்றாண்டின் போது இவ்வாறு வணிகம் செய்ய வந்தவர்கள் இறுதியில் இந்தப் பகுதியின் பூர்வீக ஆட்சியாளர்களை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தனர். தென்னிந்தியாவின் பல பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாகாணம் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இப்பகுதி பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால் நேரடியாக ஆட்சி செய்யப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு மொழியியல் எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டது.

https://youtu.be/Y55CT7N7cro
26/01/2023

https://youtu.be/Y55CT7N7cro

Vande Mataram Album Song | "Kalaimamani" Dharapuram Kalarani | Selvakumar | Kingsly Vincent | KGP Pictures | K.A. GANAPRIYAPresenting you ' ' ...

27/11/2022
Mathur :Kanyakumari :
03/11/2022

Mathur :
Kanyakumari :

18 ஏக்கர் ஓட்டேரி ஏரியை புதுப்பித்து உயிர் கொண்டுத்த பெண் வனத்துறை அதிகாரி!வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஓட்டேரி ஏரி...
23/10/2022

18 ஏக்கர் ஓட்டேரி ஏரியை புதுப்பித்து உயிர் கொண்டுத்த பெண் வனத்துறை அதிகாரி!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஓட்டேரி ஏரி முழுவதுமாக வற்றிப் போய் வறண்டிருந்ததைக் கண்டு அதனை சீரமைக்க திட்டமிட்ட இளம் ஐஎஃப்எஸ் அதிகாரி சுதா ராமன் தன் கடின உழைப்பால் ஏரியை புதுப்பித்துள்ளார்.

ஏரி குளம் போன்ற நீர்நிலைகளில் எப்போதும் பறவைகளின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். எத்தனையோ பறவைகள் இடம்பெயர்ந்து வந்து நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட இடம்தான் ஓட்டேரி ஏரி.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் ஓட்டேரி ஏரியில் குளிர்காலங்களில் பல்வேறு இடங்களில் இருந்தும் பறவைகள் வருவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டேரி ஏரியில் நீர் முழுவதுமாக வற்றி வறண்டு போயிருந்தது. பாலைவனம் போல் காட்சியளித்தது.

இந்த ஏரியை சீரமைக்கும் பணியை கையிலெடுத்து ஓராண்டு கடின உழைப்பால் புதுப்பித்துள்ளார் இளம் வன அதிகாரியான சுதா ராமன். இவரது முயற்சியின் பலனாக வேறு இடங்களுக்குப் பறந்து சென்ற பறவைகள் மீண்டும் இங்கு தஞ்சமடையத் தொடங்கின.

சுதா ராமன் பயோ மெடிக்கல் பொறியாளர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தாவரங்கள் போன்றவற்றில் ஆர்வம் இருந்ததால் ஐடி துறையில் இருந்து வெளியேறியுள்ளார். இந்திய வனப் பணி (IFS) துறையில் சேர்ந்தார்.

வண்டலூரில் உள்ள ஓட்டேரி ஏரி வற்றிப்போனதைக் கண்ட சுதா இதனை சீரமைக்கத் தீர்மானித்தார்.

ஏரி புதுப்பிக்கப்பட்ட பின்னர் அதன் கொள்ளளவு அதிகரித்தது. ஏரியில் இருக்கும் நீர் வற்றிவிடாமல் தடுக்க அணைகள் கட்டப்பட்டன. மழை நீர் சேகரிப்பு அமைப்பு கட்டப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் உயிரியல் பூங்காவில் நிலத்தடி நீர் அதிகரித்தது. அங்குள்ள விலங்குகளுக்கும் பற்றாக்குறை இல்லாமல் நீர் விநியோகம் கிடைத்தது.
சுதா, ஏரி புதுப்பிக்கும் பணிகள் மட்டுமல்லாது ஐஎஃப்எஸ் அதிகாரி பயிற்சியின்போது Plantation Made Easy என்கிற செயலியையும் உருவாக்கியுள்ளார். இந்தச் செயலி பயிரிடுவதற்கு சரியான மர வகைகளைத் தேர்வு செய்ய உதவுகிறது.

இந்த செயலியை உருவாக்கியதற்காக நிர்வாகத்தில் புதுமை படைப்பதற்கான கலாம் விருது (Dr Kalam Innovation in Governance Award) சுதாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையின் அங்கீகாரமும் இந்த செயலிக்குக் கிடைத்துள்ளது.
மேலும், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வலைதளத்தை நவீனப்படுத்தும் முயற்சியையும் இவர் மேற்கொண்டுள்ளார். இங்குள்ள விலங்குகளை நேரலையில் பார்க்கும் வசதி, ஆன்லைன் டிக்கெட் வசதி போன்றவற்றை அறிமுகப்படுத்தும் பணியில் இவர் பங்களித்துள்ளார்.

அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் நிச்சயம் பலனளிக்கும் என்பது சுதாவின் அசைக்கமுடியாத நம்பிக்கை. இது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் குறுகிய காலத்தில் பல்வேறு பல்வேறு நலத்திட்டங்களில் பங்களித்துள்ளார்.

Sandeep Camera Rental Sankar
04/07/2022

Sandeep Camera Rental Sankar

05/06/2021

சென்னிமலை ஆண்டவர் Tv

சென்னிமலை ஆண்டவர் திருக்கோயில் பற்றிய தகவல்கள் மற்றும் ஆன்மீக தகவல்கள் பற்றி அறிந்து கொள்ள
Pls Subscribe

https://youtube.com/channel/UCAWGmFMK3yhaEw80LQFtuCw

Address

Erode
638012

Telephone

+919965361777

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம தமிழ்நாடு Our Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to நம்ம தமிழ்நாடு Our Tamilnadu:

Share