MDMK

MDMK The Marumalarchi Dravida Munnetra Kazhagam is a political party operating in the Indian states of Tamil Nadu and Pondicherry. It was founded in 1994 by Mr.

Vaiko.

29வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், தமிழக வாழ்வாதாரங்களுக்காகவும், தமிழக மக்களின் நல...
05/05/2022

29வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், தமிழக வாழ்வாதாரங்களுக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும், சமரசமின்றி உழைக்கும்.



https://mdmk.org.in/?p=2114&feed_id=382&_unique_id=6273c5b20d96d

திராவிடர் கழகம் நடத்தும்இந்திப் பெயர் அழிப்புப் போராட்டம் வெற்றி பெறட்டும்!வைகோ வாழ்த்து“எப்பக்கம் புகுந்து வரும் இந்திஎ...
29/04/2022

திராவிடர் கழகம் நடத்தும்
இந்திப் பெயர் அழிப்புப் போராட்டம் வெற்றி பெறட்டும்!

வைகோ வாழ்த்து

“எப்பக்கம் புகுந்து வரும் இந்தி
எத்தனைப் பட்டாளம் கூட்டி வரும் இந்தி”

என்னும் உணர்வு, கழக இளைஞர் அணிப் பட்டாளத்தைத் திரட்டிக் கொண்டு, எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில், இந்திப் பெயர் அழிப்பு அறப்போரில் நாளை களம் காண்கின்றார், தமிழர் தலைவர் மானமிகு அண்ணன் ஆசிரியர் கி.வீரமணி!

கொளுத்துகின்ற வெயிலையும், உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாது, மோடி அரசின் தமிழர் விரோதச் செயல்பாடுகளைக் கண்டித்து மாபெரும் விழிப்பு உணர்வுப் பிரச்சாரத்தை நடத்தி முடித்த சூட்டோடு, வாய்மைப் போருக்கு இளையவராக, அண்ணன் கி.வீரமணி அவர்கள் தார்ச் சட்டி, தூரிகை ஏந்தி, நம்மீது திணிக்கப்பட்டுள்ள இந்திப் பெயர்களை அழிக்க இதோ வீதிக்கு வந்து விட்டார்.

இந்திக்கு ஆதரவாக அமித் ஷாக்கள் கொக்கரிக்கும் காலம் இது! இந்தியையும் - சமஸ்கிருதத்தையும் ‘ஒரே மொழி; ஒரே நாடு’ என்று முழங்கிக் கொண்டே நாடு முழுக்க முரட்டுத்தனமாகத் திணித்து வரும் மோடி அரசின் காலம் இது!

பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் தொடர் வண்டி நிலையங்களில் இந்தி எழுத்துகளை தார் பூசி அழித்ததால்தான், முதலாவது இடத்தில் தமிழ்ப் பெயர் இடம்பெற முடிந்தது!

1985 ஆம் ஆண்டில், இதே போல எழும்பூர் தொடர்வண்டி நிலையத்திற்கு, இந்திப் பெயர் அழிக்க திராவிடர் கழகத் தோழர்களேடு ஆசிரியர் அண்ணன் கி.வீரமணி அவர்கள் எழுச்சி நடைபோட்டு அணி வகுத்ததும், வீரமணி வென்றிடுக! வெற்றி மணி ஒலித்திடுக! என்று முரசொலித்து, தார்ச் சட்டியையும், தூரிகையையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆசிரியர் வீரமணி அவர்களிடம் அளித்து, உரிமைப் போரைத் துவக்கி வைத்தது என் நெஞ்சில் நிழலாடுகின்றது!

சரித்திரம் திரும்புகின்றது! (History repeats itself) என்ற சொற்றொடருக்கு ஏற்ப, மீண்டும் அதே இடத்தில் அறப்போர் தொடர்கின்றது.

கேரளம், ஆந்திரம், கார்நாடகம், மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள் என நாடு முழுக்க இந்தி எதிர்ப்புக் கனல் மோடி அரசின் முரட்டுத்தனமான நடவடிக்கையை கனன்று எரிகின்ற வேளையில், திராவிடர் கழகம் நடத்தும் இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் இந்தியா முழுவதும் பற்றிப் பரவும் என்பதில் துளி அளவும் ஐயம் இல்லை!

“ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள் -நீ; தேடிவந்த கோழையுள்ள நாடு இது அல்லவே!” என்ற பாவலர் பாலசுந்தரம் அவர்களின் பாடல் வரிகளுக்கு செயல் வடிவம் அளிக்கும் வகையில் திராவிடர் கழகம் நடத்திடும் இந்தி எதிர்ப்புப் போருக்கு மறுமலர்ச்சி திமுக வாழ்த்து உரைக்கின்றது.

இந்தித் திணிப்புக்கு நிரந்தரத் தீர்வு காண, அரசு அமைப்புச் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழிகள் ஆக்கிட இந்தப் போராட்டம் பெரிதும் பயன்படும் என்ற உணர்வோடு, ஆசிரியர் அண்ணன் கி.வீரமணி அவர்களையும், அவருடன் களம் காணும் மொழிப்போர் மறவர்களையும் மறுமலர்ச்சி திமுகழகத்தின் சார்பில் மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறேன்; பாராட்டுகிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை - 8
29.04.2022

https://mdmk.org.in/?p=2112&feed_id=376&_unique_id=626b8ea242a2e

ஒழுங்கு நடவடிக்கை - தலைமைக் கழக அறிவிப்புமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கின்ற வகையி...
29/04/2022

ஒழுங்கு நடவடிக்கை - தலைமைக் கழக அறிவிப்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்ற, புலவர் சே. செவந்தியப்பன் (சிவகங்கை மாவட்டச் செயலாளர்), டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் (திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்), ஆர்.எம். சண்முகசுந்தரம் (விருதுநகர் மாவட்டச் செயலாளர்) ஆகியோர், கழக சட்டதிட்ட விதிகளின்படி, மாவட்டச் செயலாளர் பொறுப்பு உட்பட. கழகத்தில் வகித்து வருகின்ற அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகின்றார்கள்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை மேற்கொள்ளும். அந்தக் குழு அளிக்கின்ற அறிக்கையின்படி, இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

வைகோ
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை - 8
29.04.2022

https://mdmk.org.in/?p=2110&feed_id=370&_unique_id=626b7409ebe10

தலைமைக் கழக அறிவிப்புஅரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் நியமனம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசனைக் ...
20/04/2022

தலைமைக் கழக அறிவிப்பு

அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் நியமனம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக திரு பட்டுத்துறை நா.மாரிச்சாமி (முகவரி: பட்டுத்துறை (அஞ்சல்) மூலனூர் (வழி) திருப்பூர் மாவட்டம் அலைபேசி: 94865 - 19666) அவர்கள் நியமிக்கப்படுகிறார்.

சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் நியமனம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினராக திரு சி.எஸ்.சிமியோன் ராஜ் (முகவரி: மாப்பிள்ளை நாயக்கன்பட்டி & (அஞ்சல்), தஞ்சாவூர் (வட்டம்), தஞ்சாவூர் மாவட்டம் அலைபேசி: 98430 - 71184) அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள்.

வைகோ
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை - 8
20.04.2022

https://mdmk.org.in/?p=2108&feed_id=364&_unique_id=625f9b7051b67

தலைமைக் கழக அறிவிப்புமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் ...
20/04/2022

தலைமைக் கழக அறிவிப்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

1. க.இளவழகன், தென்சென்னை மேற்கு மாவட்ட அவைத் தலைவர்
(முகவரி: 15, பிளவர்ஸ் ரோடு, அரும்பாக்கம், சென்னை - 600 106; அலைபேசி: 98411 - 09995)

2. வழக்கறிஞர் கே.வி.மோகனசுந்தரம், கடலூர் தெற்கு மாவட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர்
(முகவரி: 101, மன்னார்குடி தெரு, சிதம்பரம் (அஞ்சல்) - 608 001 கடலூர் மாவட்டம்; அலைபேசி: 99425 - 99823)

3. கோவை பெ. செல்வராஜ், கோவை மாநகர் மாவட்டத் துணைச் செயலாளர்
(முகவரி: 2-ஏ, வரதராஜூலு நகர், 2-ஆவது வீதி, கே.ஆர். புரம், கணபதி (அஞ்சல்), கோவை - 641 006
அலைபேசி: 98433 - 28331)

4. மதுரை எஸ்.மகபூப்ஜான், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி இணைப் பொதுச்செயலாளர்
(முகவரி: 10, மேலப் பொன்னகரம் நான்காவது தெரு, மதுரை - 625 016; அலைபேசி: 94433 - 75558)

5. வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன், தேர்தல் பணி துணைச் செயலாளர்
முகவரி: 5/112, அகரபெருந்தோட்டம், பெருந்தோட்டம் (அஞ்சல்), சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் - 609 106; அலைபேசி: 94455 - 25001)

வைகோ
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை - 8
20.04.2022

https://mdmk.org.in/?p=2106&feed_id=358&_unique_id=625f7dfdf0e20

தமிழக மீனவர்களின் உரிமையைக் காக்கத் தவறிய ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்தும், ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையை நிலை நாட்ட வலிய...
18/04/2022

தமிழக மீனவர்களின் உரிமையைக் காக்கத் தவறிய ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்தும், ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையை நிலை நாட்ட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம்

வைகோ அறிவிப்பு

தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டியதாக கைது செய்து, இலங்கை சிறையில் அடைத்து கொடுமைப் படுத்துவதும், நடுக்கடலில் நமது எல்லைக்குள் நுழைந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சிங்களக் கடற் படையினர் கொடூரத் தாக்குதல் நடத்துவதும், இலங்கை கடற் தொழிற் சட்டத்தின் கீழ் நமது மீனவர்களைக் கைது செய்து, அந்நாட்டு சட்டப்படி வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறுத்துவதும், பல லட்சக்கணக்கான ரூபாய் தண்டம் விதிப்பதும், மீனவர்களின் படகுகள் மற்றும் மீன் பிடி கருவிகளை பறிமுதல் செய்வதும் நாள்தோறும் ஏடுகளில் செய்தி ஆகிவிட்டன.

இலங்கை அரசின் அத்துமீறலைக் கண்டும் காணாமல் ஒன்றிய பா.ஜ.க அரசு வேடிக்கைப் பார்க்கிறது.

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவிப்பதற்கு துணை போன இந்திய அரசு, பன்னாட்டு நீதிமன்ற குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசாங்கத்திற்கு உதவிக் கரம் நீட்டி வருகிறது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி இலங்கை மக்கள் மீள முடியாத துயரத்தில் தவிக்கிறார்கள்.

கோத்தபய ராஜபக்சே அரசை எதிர்த்து சிங்கள மக்களே கொதித்து எழுந்து தெருக்களில் போராடி வருகின்றனர்.

இதனால் இந்தியாவிடம் நிதி உள்ளிட்ட எல்லா உதவிகளையும் இலங்கை அரசு கேட்டுப் பெற்று வருகிறது.

இந்தியா பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளது. மேலும் நிதி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

ஆனால் ஈழத்தமிழர்களின் வாழ்வுரியைப் பறித்து, காணிகளை கைப்பற்றி ஆக்கிரமிப்பு செய்து, இராணுவக் கட்டுப்பாட்டு பகுதியாகவே வடக்கு, கிழக்குப் பகுதிகளை இன்னமும் சிங்கள இனவாத அரசு கொடுமைக்கு உள்ளாக்கி வருகிறது.

பொருளாதார நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ள ஈழத்தமிழர்கள் குழந்தைகளுக்கு பால் பவுடர் கூட வாங்க வழியில்லாமல், ஆபத்தான படகுப் பயணம் செய்து தமிழ்நாட்டிற்கு ஏதிலிகளாக வரத் தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், இந்திய அரசு ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற்று, கைப்பற்றிய படகுகள் மற்றும் மீன்பிடி கருவிகளை ஒப்படைக்க வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மறுமலர்ச்சி திமுக சார்பில் ஏப்ரல்-22 ஆம் நாள் மாலை 4 மணி அளவில், இராமே°வரத்தில், தலைமைக் கழகச் செயலாளர் துரைவைகோ அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளர் பேட்ரிக் அவர்கள் ஒருங்கிணப்பில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கழகத் துணைப்பொதுச் செயலாளர் ஆடுதுறை முருகன், சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு.பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை,புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை மாவட்டச் செயலாளர்கள், கழக முன்னோடிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை - 8
18.04.2022

https://mdmk.org.in/?p=2103&feed_id=353&_unique_id=625d102967d78

ஈஸ்டர் வாழ்த்து - வைகோஇருளைக் கிழித்து ஒளி எழுதல் போல, ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று, சிலுவையில் அறையப்பட்டு, மனிதகுலத்த...
14/04/2022

ஈஸ்டர் வாழ்த்து - வைகோ

இருளைக் கிழித்து ஒளி எழுதல் போல, ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று, சிலுவையில் அறையப்பட்டு, மனிதகுலத்தின் அவலத்தைப் போக்க, இரத்தம் சிந்திய கிறிஸ்து இயேசுநாதர், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்த உன்னதத்தை, ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள் கொண்டாடுகின்றனர்.

மூப்பர்களாலும், வேத பாலகர்களாலும் பழி தூற்றப்பட்ட இயேசு, தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்து சபையில் நிறுத்தப்பட்டார். சதிகாரர்களின் காட்டுக் கூச்சலால் வேறு வழி இன்றி, இயேசுவை சிலுவையில் அறையுமாறு ஒப்புக் கொடுத்தான்.

இயேசுவின் தலையில் முள்முடி சூட்டி, முகத்தில் காரித்துப்பி, கன்னத்தில் அறைந்து, வாரினால் அடித்துச் சித்திரவதை செய்தனர். கபாலஸ்தலம் எனும் கொல்கொதாவில், சிலுவையில் அறையப்பட்ட இரண்டு கள்வர்களுக்கு நடுவே, அவரும் சிலுவையில் அறையப்பட்டார்.

‘தேவாலயத்தை இடித்து மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே இரட்சித்துக் கொள்’ என்று நிந்தித்தனர்.

சிலுவையிலே ஆவியை நீத்த இயேசுநாதர், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததையே, இன்று உலகம் கொண்டாடுகிறது.

கொடுந்துயரில் தவிப்பவர்களுக்கும், மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், அநீதியின் பாரத்தால் நசுக்குண்டவர்களுக்கும், விடியலும் நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை அவர்களது மனங்களில் ஈஸ்டர் வழங்குகிறது.

இயேசு உயிர்த்தெழுந்தார், துக்கத்தில் இருந்து உலகம் மீண்டது. தமிழகத்தில் அற்புதமான ஆட்சி அன்புச் சகோதரர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ளது. கூட்டாட்சித் தத்துவம் வெற்றிபெறவும், மாநில சுயாட்சி மலரவும், சனாதன இந்துத்துவா சக்திகளின் முயற்சிகளை முறியடிக்கவும் இந்தப் புனித வெள்ளிக்கிழமையன்று சபதம் ஏற்போம்.

மரண பயங்கரத்துக்கு ஆளாகி, துயர இருளிலும், கண்ணீரிலும், துடிதுடித்து வாடும் ஈழத்தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்கும்; விடியல் உதிக்கும். கொடியவன் ராஜபக்சே கூட்டம் அனைத்துலக நீதிமன்றத்தில் தண்டிக்கப்படும் எனும் நம்பிக்கையோடு, ஈழத்தமிழரின் துன்பத்தைப் போக்கவும், சுதந்திர தமிழ் ஈழ தேசத்தை மலர்விக்கவும், இந்த ஈஸ்டர் திருநாளில், தமிழ்க்குலம் உறுதி எடுக்கட்டும்.

அன்பையும் கருணையையும் போற்றும் கிறிஸ்தவப் பெருமக்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை - 8
14.04.2022

https://mdmk.org.in/?p=2101&feed_id=347&_unique_id=6257bbf21b3a8

கெயில் குழாய் எதிர்ப்புப் போராட்டம்;விவசாயி கணேசன் தற்கொலைவைகோ அறிக்கைகெயில் நிறுவனம், வேளாண் விளைநிலங்களின் வழியாக, எரி...
13/04/2022

கெயில் குழாய் எதிர்ப்புப் போராட்டம்;
விவசாயி கணேசன் தற்கொலை

வைகோ அறிக்கை

கெயில் நிறுவனம், வேளாண் விளைநிலங்களின் வழியாக, எரிகாற்றுக் குழாய் பதிப்பதற்கு, தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களின் விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நெடுஞ்சாலை ஓரமாகப் பதிக்கின்ற வகையில், மாற்று வழிகளில் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் எனக் கோரி வருகின்றார்கள். எனவே, முந்தைய அண்ணா தி.மு.க. அரசு இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்தது. தற்போதைய தி.மு.க. அரசும் அதே நிலைப்பாட்டைத்தான் மேற்கொண்டு இருக்கின்றது.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டம், காரியபள்ளி கிராமத்தில், கெயில் நிறுவனம் குழாய் பதிக்க முனைந்துள்ளது. அதை எதிர்த்து அந்தப் பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 65 சென்ட் நிலம் வைத்து இருக்கின்ற ஏழை விவசாயி கணேசன் என்பவர், தனது நிலம் முழுமையாகப் பறிபோவதைத் தாங்க முடியாமல், போராட்டம் நடந்து கொண்டு இருக்கின்ற இடத்திற்கு அருகிலேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி, கடும் அதிர்ச்சி அளிக்கின்றது. அவரது உடலை வைத்து, இண்டூர் பேருந்து நிலையத்தின் முன்பு, விவசாயிகள் போராடி வருகின்றார்கள்.

எனவே, விவசாயிகள் நலனைப் பாதுகாப்பதில் தொடர்ந்து அக்கறையுடன், விவசாயிகளுடன் இணைந்து நின்று செயல்பட்டு வருகின்ற தமிழக அரசு, இந்தப் பிரச்சினையில், விரைவில் ஒரு முடிவு ஏற்பட வழி வகுத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

விவசாயி கணேசன் குடும்பத்திற்கு, ஒரு கோடி ரூபாய் இழப்பு ஈடு வழங்கிட வேண்டும்; அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும்.

கணேசனை இழந்து வேதனையில் தவிக்கும் குடும்பத்தினர், உற்றார் உறவினர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
"தாயகம்"
சென்னை - 8
13.04.2022

கெயில் குழாய் எதிர்ப்புப் போராட்டம்; விவசாயி கணேசன் தற்கொலை

சித்திரைத் திருநாள் வாழ்த்துசித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாக தமிழ் மக்கள் கொண்டாடி வரு...
13/04/2022

சித்திரைத் திருநாள் வாழ்த்து

சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஐப்பசி, கார்த்திகையில் மேகங்கள் பொழியும் மழையை எதிர்கொண்டு, தமிழர்கள் கொண்டாடும் ஆண்டின் முதல் நாளான தைத் திங்களில் பொங்கல் திருவிழா கண்டு அறுவடை நடத்தி, ஆவினங்களுக்கும், நிலத்துக்கும் நன்றி செலுத்தி மாசி, பங்குனியில் வசந்தத்தையும் இளவேனிலையும் வரவேற்று மகிழ்ந்து, சித்திரைத் திங்களில் கடற்கரை மணல் வெளியில், ஆற்றுப் படுகைகளில் தமிழர்கள் விழா எடுத்து வந்துள்ளனர்.

இளைய வயதினருக்கு இச்சித்திரை மாதம் தான் வசந்த விழா காலம் என இலக்கியம் கூறுகிறது. “சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன என்றும், இதுவே இந்திர விழா எடுக்கும் பருவம்” என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வர்ணிக்கின்றார்.

வெப்பம் மிகுந்துள்ள இக்காலத்தில், குளிர்ந்த நீரையும், பழங்களையும் வழங்கி கோடையின் தகிப்பைப் போக்குதல் தமிழர்களின் வழக்கமாகும். தமிழர்களின் பொற்காலமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி ஆருயிர்ச் சகோதரர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் புது யுகமாக இந்தக் காலம் அமைந்துவிட்டது.

துன்ப இருளில் கலங்கித் தவிக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு விடியலைக் காணவும், சுதந்திரத் தமிழ் ஈழத்தை மலரச் செய்யவும், உலகெங்கும் உள்ள தமிழர்கள் தன்மான உணர்வுடன் உரிமைச் சங்கநாதம் எழுப்புகின்றனர்.

ஏப்ரல் 14 ஆம் நாள்தான் இந்திய அரசியல் சட்டத்தை யாத்துத் தந்த மாமேதை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள். ஆதலால், அப்பெருமகனார் கனவுகண்ட சமூக நீதி மலர உறுதிகொள்வோம்.

ஒளி மயமான எதிர்காலம் தமிழ் குலத்துக்குக் கட்டியம் கூறும் இவ்வேளையில், சுதந்திரத் தமிழ் ஈழம் மலரவும், தாய்த் தமிழகத்தில் மது அரக்கனின் கொடுமை நீங்கவும், தமிழக மீனவர்களின் அல்லல்களை அகற்றவும், விவசாயிகளின் துயர் துடைக்கவும் இச்சித்திரைத் தலைநாளில் சூளுரை மேற்கொள்வோம்.

வைகோ,
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை - 8
13.04.2022

https://mdmk.org.in/?p=2097&feed_id=335&_unique_id=62565ae715776

தமிழ்நாட்டின் தனித்துவமான கல்விக் கொள்கை வடிவமைப்புக் குழு!முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டுஒன்றிய பா.ஜ.க. அரசு, ...
06/04/2022

தமிழ்நாட்டின் தனித்துவமான கல்விக் கொள்கை வடிவமைப்புக் குழு!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு

ஒன்றிய பா.ஜ.க. அரசு, தேசிய கல்விக் கொள்கை -2020ஐ செயல்படுத்த எல்லா வகையிலும் முனைந்திருப்பதை தொடக்கத்திலிருந்தே தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. ஏனெனில், அக்கல்விக் கொள்கை, மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சமூக நீதியை குழிதோண்டி புதைத்திருக்கிறது.

தேசிய கல்விக் கொள்கை -2020 முழுவதும் இந்துத்துவ மயமாக்கல் இழையோடுகிறது.

கல்வியை தங்கு தடையற்ற தனியார் மயமாக்கவும், வணிக மயம் ஆக்கவும் வழி வகுக்கிறது.

ஒரே நாடு; ஒரே கல்வி முறை என்பது ஒற்றை இந்து ராஷ்டிர திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பாதை என்பதையும் தேசிய கல்விக் கொள்கை -2020 உணர்த்துகிறது.

சமஸ்கிருதம், இந்தி மொழித் திணிப்புக்கும் வகை செய்கிறது.

மேலும் நவீன குலக்கல்வித் திட்டத்தைப் புகுத்துவதற்கான செயல்திட்டங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ளன.

இத்தகைய அபத்தங்களும், ஆபத்துகளும் விரவிக் கிடக்கும் தேசியக் கல்விக் கொள்கையால், திராவிட இயக்கத்தின் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலான ஆட்சியில் தமிழ்நாடு பெற்றிருக்கும் முன்னேற்றம் குன்றி விடும்.

எனவேதான் தேசியக் கல்விக் கொள்கை-2020ஐ நாம் கடுமையாக எதிர்க்கிறோம். எந்த வடிவத்திலும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆர்.எஸ்.எஸ். கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதில் திமுக அரசு உறுதியாக இருப்பது நம்பிக்கை தருகிறது.

கடந்த 2021-22 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், மாநிலத்துக்கான தனித்துவமான கல்விக் கொள்கையை வகுக்க கல்வியாளர்கள், வல்லுநர்கள் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க, டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் அவர்கள் தலைமையில் குழு அமைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரகடனம் செய்திருப்பதை வரவேற்கிறேன்.

இக்குழுவில் புகழ்பெற்ற கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்துறை அறிஞர்களைத் தேர்வு செய்து உறுப்பினர்களாக நியமித்திருக்கும் முதல்வரைப் பாராட்டுகிறேன்.

தமிழக அரசு அமைத்துள்ள, புதிய கல்விக் கொள்கை வடிவமைப்புக் குழு, தமிழ்நாட்டின் மரபுகள், கல்வி உரிமை, சமூக நீதி, மொழி, பண்பாடு மற்றும் கலை, இலக்கியம் ஆகியவற்றின் தனித்துவமான அடையாளத்தை நிலைநாட்டும் வகையிலும், காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனைப் பெறும் வகையிலும் சிறந்ததோர் கல்விக் கொள்கையை உருவாக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

கல்வி பொதுப்பட்டியலின் கீழ் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு என கல்விக் கொள்கையை வடிவமைக்கும் உரிமையும் நமக்கு உண்டு என்பதை பறைசாற்றி உள்ள திராவிட மாடல் ஆட்சிக்கு மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
06.04.2022

https://mdmk.org.in/?p=2094&feed_id=329&_unique_id=624d486d329d7

சுங்கக் கட்டணம் உயர்வு!ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு வைகோ கண்டனம்ஒன்றிய பா.ஜ.க. அரசின் நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச் சாவடிக...
31/03/2022

சுங்கக் கட்டணம் உயர்வு!

ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு வைகோ கண்டனம்

ஒன்றிய பா.ஜ.க. அரசின் நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச் சாவடிகளில் திடீர் கட்டண உயர்வை அறிவித்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு வாகனம் சுங்கச் சாவடியை கடந்து எவ்வளவு தொலைவு பயணம் செய்கிறது என்ற வரையறை இல்லாமல், ஒரு சுங்கச்சாவடியைக் கடந்தாலே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வணிகம் சார்ந்த மற்றும் வணிகம் சாராத பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு தேவையில்லாமல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலை நீண்டகாலமாகவே நிலவி வருகிறது.

இதனால் பல்வேறு மாவட்டங்களில் லட்சக்கணக்கான வாகன உரிமையாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. சொந்த வேலைக்காக வெளியில் சென்று வரும் வாகனங்களுக்குக் கூட கட்டணம் வசூலிக்கப்படுவதால், உள்ளூர் குடியிருப்பு வாசிகளுக்கும் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கும் தொடர்ச்சியாக மோதல் நிலவுகிறது.

60 கிலோ மீட்டருக்குக் குறைவான இடைவெளியில் செயல்படும் சுங்கச் சாவடிகளை, சட்டங்களுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரியிருந்ததது.

இந்நிலையில், ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து சுங்கச் சாவடிகளின் கட்டணம் உயரும் என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வைத் தொடர்ந்து சுங்கக் கட்டணமும் உயர்த்தப்படுவதால் சரக்கு ஊர்திகள் வாடகை கட்டணத்தை உயர்த்தும். அதனால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாவார்கள்.

மக்கள் நலனுக்கு எதிராக உயர்த்தப்பட்டுள்ள சுங்கக் கட்டண உயர்வை ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
31.03.2022

https://mdmk.org.in/?p=2091&feed_id=323&_unique_id=624549fad285a

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கை வயதை உயர்த்தியது ஏன்?வைகோ கேள்வி அமைச்சர் விளக்கம்கீழ்காணும் கேள்விக...
31/03/2022

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கை வயதை உயர்த்தியது ஏன்?

வைகோ கேள்வி அமைச்சர் விளக்கம்

கீழ்காணும் கேள்விகளுக்கு, கல்வி அமைச்சர் விளக்கம் தருவாரா?

1. 2022 கல்வி ஆண்டிற்கான, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கைக்கான வயது வரம்பை, ஐந்தில் இருந்து 6ஆக உயர்த்தி இருக்கின்றீர்களா?

2. அவ்வாறு இருப்பின், தன்னிச்சையான இந்த நடவடிக்கைக்கான பின்புலக் காரணங்கள் என்ன?

3. எல்கேஜி வகுப்புகளை முடித்த இலட்சக்கணக்கான குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றார்களா?

4. அவ்வாறு இருப்பின், அரசு தன் நிலையை மாற்றிக்கொள்ளுமா? முந்தைய வழமை போல் சேர்க்கை நடைபெறுமா?

5. இல்லை என்றால், அதற்கான காரணம் என்ன?

கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி விளக்கம்

1 முதல் 3 கேள்விகளுக்கு விளக்கம்

ஆம். 2022/23 கல்வி ஆண்டில், 1.04.2022 முதல், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதலாம் வகுப்பு சேர்க்கைக்கான வயது வரம்பு, 6ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

2. 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையின்படி, 5+3+3+4 என்ற கற்பித்தல் முறை வகுக்கப்பட்டு இருக்கின்றது. அதன்படி, அங்கன்வாடி, பாலவாடிகா மற்றும் 3 ஆண்டுகள் முன்பள்ளிக் கல்வி ஆகியவை, 3 முதல் 6 வயது வரையிலும், 1,2 ஆம் வகுப்புகள் இரண்டு ஆண்டுகளும் என வகுக்கப்பட்டு இருக்கின்றது.

2009 ஆம் ஆண்டு, குழந்தைகளுக்கான கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி உரிமை வழங்கப்பட்டு இருக்கின்றது. கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. நாட்டில் பெரும்பாலான பள்ளிகள், மாநில அரசுகள், ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப் பகுதிகளின் அதிகாரத்தில் உள்ளன. எனவே, முதலாம் வகுப்பு சேர்க்கைக்கான வயது வரம்பை உயர்த்துவது குறித்து, மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப்பகுதி அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அவற்றுள் 14 அரசுகள், வயது வரம்பு 5 ஆக இருக்க வேண்டும் என்றும், 22 அரசுகள் வயது வரம்பு 6ஆக இருக்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்து உள்ளன.

இந்த ஒழுங்கு இன்மை, பதிவு செய்தல் பற்றிய தவறான அறிக்கைகளால் விளைகின்றது. இதனால், வெவ்வேறு மாநிலங்களில் நிகர சேர்க்கை விகிதம் பாதிக்கப்படுகின்றது. அதன்பின்னர், தேசிய அளவில் நடைபெறுகின்ற போட்டித் தேர்வுகளிலும், இந்த சிரமங்கள் எதிரொலிக்கின்றன.

2020 புதிய கல்விக்கொள்கை, 2009 குழந்தைகள் கல்வி உரிமைச்சட்ட விதிகளின் பார்வையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப்பகுதிகள், மார்ச் மற்றும் அக்டோபர் சேர்க்கை நாள்களில், முதலாம் வகுப்பில் சேருவதற்கான வயது வரம்பை, நாடு முழுமையும் ஒன்றுபோல, 6ஆக ஆக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேள்வி 4 க்கு விளக்கம்.

இந்தப் பிரச்சினை, நீதிமன்றத்தின் ஆய்வில் உள்ளது.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை - 8
31.03.2022

https://mdmk.org.in/?p=2089&feed_id=317&_unique_id=6245409b1833c

Address

8/143, Rukmani Lakshmipathi Road, Chennai
Egmore
600008

Alerts

Be the first to know and let us send you an email when MDMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to MDMK:

Share