SFI Dindigul District

SFI Dindigul District இந்திய மாணவர் சங்கம்,
திண்டுக்கல் மாவட்டம்.

27/05/2026
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் (496) பெற்ற இடைக்கோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள...
23/05/2026

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் (496) பெற்ற இடைக்கோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அனு மித்ரா, பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெயஶ்ரீ ஆகியோரை , நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம்.

இந்நிகழ்வில், SFI மாவட்டத் தலைவர் J.தீபக்ராஜ், செயலாளர் M.E.நிரூபன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதரன், குணசீலன், முத்து மாணிக்கம், DYFI மாவட்டத் தலைவர் V.P.ரஞ்சித் சேகுவேரா, செயலாளர் K.முகேஷ், நிர்வாகிகள் சுரேஷ், ரமேஷ், விஜயகுமார், செல்வா, சிவா ஆகியோர் கலந்துகொண்டனர்.

20/05/2026

கொலை கருவி தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி இடதுசாரி இளைஞர்-மாணவர் அமைப்புகள் சார்பில் திண்டுக்கல்லில் நடைபெற்ற போராட்டம்... ❤️‍🔥✊🏽

நீட் குளறுபடிகளை கண்டித்தும், நீட் தேர்வு ரத்து செய்திட கோரியும், NTA அமைப்பை கலைத்திட வலியுறுத்தியும் SFI-DYFI-AISF-AIY...
20/05/2026

நீட் குளறுபடிகளை கண்டித்தும், நீட் தேர்வு ரத்து செய்திட கோரியும், NTA அமைப்பை கலைத்திட வலியுறுத்தியும் SFI-DYFI-AISF-AIYF அமைப்புகள் சார்பில் நேற்று (19.05.2026) மாலை திண்டுக்கல் நாகல் நகரில் போராட்டம் நடைபெற்றது.

SFI மாவட்ட தலைவர் J.தீபக்ராஜ் தலைமையேற்றார், DYFI மாநகர செயலாளர் M.பிரேம்குமார் வரவேற்புரையாற்றினார். AISF மாவட்ட செயலாளர் விஷ்வபாலன், SFI மாவட்ட செயலாளர் M.E.நிரூபன், DYFI மாவட்ட தலைவர் V.P.ரஞ்சித் சேகுவேரா, மாவட்ட செயலாளர் K.முகேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். AISF மாவட்ட துணை தலைவர் யுவான் நன்றி கூறினார்.

நீட் தேர்வை ரத்து செய்!மோசகர NTA-வை கலைத்திடு!மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை பாதுகாக்க இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்பு...
19/05/2026

நீட் தேர்வை ரத்து செய்!
மோசகர NTA-வை கலைத்திடு!

மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை பாதுகாக்க இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகளின் மாநிலம் தழுவிய போராட்டம்...

திண்டுக்கல்லில் இன்று...
19 மே 2026 மாலை 4 மணிக்கு - நாகல் நகர்

18/05/2026

தமிழ்நாட்டின் மாணவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகள் மீது உரிய கவனம் செலுத்திட சார்பில் முதல்வர் அவர்களிடம் மனு அளித்தனர்.

அரசு கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் இல்லாமல் விண்ணப்பம் செய்ய,   உதவி மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.தமிழ்நாடு முழுவதுமுள்ள அ...
17/05/2026

அரசு கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் இல்லாமல் விண்ணப்பம் செய்ய, உதவி மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து அரசு கல்லூரிகளில் சேர்ந்து உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் அரசு நிர்ணயித்த விண்ணப்ப கட்டணத்தை மட்டுமே பெற்றுக்கொண்டு இந்திய மாணவர் சங்கத்தின் மாணவர் சேர்க்கை உதவி மையம் சார்பில் விண்ணப்பங்கள் செய்து தரப்படும்!

18.05.2026 முதல் திண்டுக்கல்லில் உள்ள SFI மாவட்டக் குழு அலுவலகத்தில் இந்த உதவி மையம் செயல்படும்...

மாணவர்களே, பயனடையுங்கள்! பகிர்ந்து உதவுங்கள்!!

17/05/2026

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டக் களத்தில் திண்டுக்கல் ❤️‍🔥

மருத்துவக் கல்வி உரிமைக்கான போராட்டங்களை தொடர்வோம்!

ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை பறிக்கும் NEET தேர்வை ரத்து செய்!குளறுபடிகளால் குழைந்து நிற்கும் தேசிய தேர்வ...
16/05/2026

ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை பறிக்கும் NEET தேர்வை ரத்து செய்!

குளறுபடிகளால் குழைந்து நிற்கும் தேசிய தேர்வு முகமை (NTA) அமைப்பை கலைத்திடு!

இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகளின் மாநிலம் தழுவிய போராட்டம்

மே 19, 2026 மாலை 4 மணிக்கு - திண்டுக்கல் நாகல்நகரில்

2026   தேர்வு வினாத்தாள் கசிவை  கண்டித்தும்,   அமைப்பை கலைத்திட கோரியும்   திண்டுக்கல் மாவட்டக் குழு சார்பில் திண்டுக்கல...
15/05/2026

2026 தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்தும், அமைப்பை கலைத்திட கோரியும் திண்டுக்கல் மாவட்டக் குழு சார்பில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Address

LGB Compound
Dindigul

Alerts

Be the first to know and let us send you an email when SFI Dindigul District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SFI Dindigul District:

Share