17/12/2024
கைத்தொழிலான நெசவு தொழில் செய்யும் வீடுகளுக்கு இண்டஸ்ட்ரின்
நிலவரி விதிப்பதை நகராட்சி நிர்வாகம் ரத்து செய்ய சிபிஎம் வலியுறுத்தல்.
தருமபுரி டிச-17,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமார், மாவட்ட செயலாளர் இரா. சிசுபாலன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே. விசுவநாதன்,சிஐடியு மாநில செயலாளர் சி. நாகராசன் மாவட்ட செயலாளர் பி. ஜீவா ஆகியோர் தருமபுரி அன்ன சாகரம் நெசவு தொழிலாளர்களை சந்தித்து தொழில் குறித்து கேட்டறிந்தார். அப்போது தொழில் செய்வதில் ஏற்படும் சிக்கல் நகராட்சி வரி விதிப்பால் ஏற்படும் இன்னல்கள் குறித்து தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் அன்னசாகரம், எட்டிமரத்துப்பட்டி, இலளிகம், எரங்காட்டுக்கொட்டாய், உங்கரானஅள்ளி, முக்கல்நாயக்கன்பட்டி, காந்தி நகர், மாட்லாம்பட்டி, ஓட்டப்பட்டி, பாரதிபுரம், ஐருகு, சோம்பட்டி, சாமிசெட்டிப்பட்டி, பாளையம்புதூர், கம்பைநல்லூர் காரிமங்கலம், பாலக்கோடு, புலிகரை, ஐயம்பட்டி, இண்டூர், கடகத்தூர், பொம்மிடி, ஓடசல்பட்டி, மொரப்பூர், ஜாலியூர், வடகம்பட்டி, பெரிய வடகம்பட்டி, தொப்பூர் வெல்லக்கல், மற்றும் பல்வேறு கிராமங்களில்1500 குடும்பத்தினர்கள் பல ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக நெசவு தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு நெசவு தொழில் செய்ய அரசே விசைத்தறிகள் வாங்க மாணிய விலையில் தந்தனர். மாணிய வட்டி வழங்கியுள்ளது.
மற்றும் தமிழக அரசானது சிறு விசைத்தறியாளர்களுக்கு 1000 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கி வருகிறது. இதனால் இவர்கள் இந்த தொழிலை செய்து வருகின்றனர்.
அரசு வழங்கும் மானியங்கள் காரணமாகவே விசைத்தறி தொழில் நடைபெறுகிறது. இதனால் சுமார் 2000 பேர்களுக்கு சுய வேலை வாய்ப்பு கிடைக்கின்றது.
நூல் விலை ஏற்றம் காரணமாகவும், வியாபார மந்தம் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளாலும் மற்றும் நவீன உயர்ரக விசைத்தறி இவைகளாலும் இத்தொழில் செய்து வருபவர்கள் இந்த தொழிலை நடத்த முடியாமல் பல்வேறு கூலி வேலைக்கு செல்கின்றனர்.
இவர்களுக்கு வேறு தொழில்கள் தெரியாத காரணத்தினால் குறைந்த வருமானம் கூலி கிடைத்தால் போதும் என்று இந்த தொழில் அழிந்து விடாமல் இருக்கவும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
தற்போது தருமபுரி நகராட்சி நிர்வாகமானது கைத்தொழிலாக செய்து வரும் விசைத்தறிகளுக்கு இண்டஸ்ட்ரியல் வரியாக அடிக்கு 12 வீதம் விதிக்கப்படும் என்று எந்த அறிவிப்பும் இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக வரி விதித்து வருகின்றனர்.
சரத்து 265-ன்படி சட்டமன்றத்தால் சட்டம் இயற்றினால் தான் வரி விதிக்கும் அதிகாரம் ஏற்படும். ஆனால் நகராட்சியினரே வரி விதிக்கும் அதிகாரத்தினை கையெடுத்துக்கொண்டு கைத்தொழில் செய்பவர்கள் மீது அதி வரியாக இண்டஸ்ட்ரியல் வரி விதிப்பது சட்டப்படி செல்லத்தக்கதல்ல ஷரத்து 19 (1) (எப்) தொழில் செய்யும் பணிசுமையை பாதிக்கும் செயலாகும்.
மற்றும் வரி விதிப்பது பற்றியும் எவ்வித முன்னறிவிப்போ. அறிக்கையோ தராமல் தாங்களே இஸ்டம் போல் நடப்பது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.மற்றும் தினக் கூலிக்கு நெசவு செய்யும் தொழிலில் உள்ளவர்களுக்கு இண்டஸ்ரியல் வரி விதிப்பது என்பது சட்டத்திற்கு புறம்பான செயலாகும்.எனவே நகராட்சி நிர்வாகம் நெசவு தொழில் செய்பவர்களுக்கு வரிவிதிப்பை தடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்டக்குழு மாவட்ட நிர்வாகத்தையும் தமிழ்நாடு அரசையும் கேட்டுக்கொண்டுள்ளது.