Namma Sitteri-சித்தேரி

Namma Sitteri-சித்தேரி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Namma Sitteri-சித்தேரி, Landmark & historical place, Sitteri, Harur-Pappireddipatti, Dharmapuri.

கொ*த்தடிமையா இருக்கிறது பெருமையா  பேசிட்டு இருக்கான் 😂இதை வெளிய சொல்றதுக்கு நீங்க அசிங்கப்படணும் டா.சுய அறிவு இல்லாத தற்...
31/05/2026

கொ*த்தடிமையா இருக்கிறது பெருமையா பேசிட்டு இருக்கான் 😂

இதை வெளிய சொல்றதுக்கு நீங்க அசிங்கப்படணும் டா.

சுய அறிவு இல்லாத தற்குறி கொ*த்தடிமை 😂

பனையூர் பாபு To ஆளூர் ஷாநவாஸ் - என்ன ப்ரோ யோசன...சட்டு புட்டுன்னு அறிக்கைய விட்டு கழண்டு வாங்க...😉
25/05/2026

பனையூர் பாபு To ஆளூர் ஷாநவாஸ்

- என்ன ப்ரோ யோசன...சட்டு புட்டுன்னு அறிக்கைய விட்டு கழண்டு வாங்க...😉

25/05/2026

அய்யய்ய முகநூல் பக்கமே போக முடியல தந்தையும் மகனும் ஒரே ஒப்பாரிதான்..

திமுகவுக்கு சொம்படித்த போது அவர்களிடம் இதைக் கேட்டிருக்கலாம்.திமுக விரட்டப்பட்ட பின்புதான் கொத்தடிமைகள் உயிர்த்து எழுகிற...
24/05/2026

திமுகவுக்கு சொம்படித்த போது அவர்களிடம் இதைக் கேட்டிருக்கலாம்.

திமுக விரட்டப்பட்ட பின்புதான் கொத்தடிமைகள் உயிர்த்து எழுகிறார்கள்.

அதுக்கு தலைவரா சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நியமிக்க வேண்டும் தலைவரே
24/05/2026

அதுக்கு தலைவரா சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நியமிக்க வேண்டும் தலைவரே

24/05/2026

இப்பவும் உங்களின் உண்மையான எதிரியை நீங்க அடையாளம் காணவில்லை. உங்கள் உண்மையான எதிரி உங்க ஆணவ பேச்சு திமிர் எல்லா இடத்திலும் லஞ்சம் ஊழல் அடித்த கொள்ளையோ கொள்ளை. சிறை சென்று வந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பதவி தியாகி பட்டம் சாமானிய மக்களின் பிரச்சனைகளை பற்றி கவலையில்லாமல் பண்ணையார் மிட்டா மிராசு போல நடந்து கொண்டது. இது தான் உண்மையான எதிரி சும்மா பம்மாத்துக்கு இன்ஸ்டா முகநூல் என்று பேசி பயனில்லை.

13/05/2026

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு

இடைத்தேர்தல் உறுதி

~நாட்டுல என்ன நடக்குதுன்னு.. தெரிஞ்சுக்கணும்னா.. உங்களுக்கு எதிரா.. இருக்கிற நியூஸ் சேனல் பார்த்திருந்தாலே.. இந்நேரம் ஸ்...
10/05/2026

~நாட்டுல என்ன நடக்குதுன்னு.. தெரிஞ்சுக்கணும்னா.. உங்களுக்கு எதிரா.. இருக்கிற நியூஸ் சேனல் பார்த்திருந்தாலே.. இந்நேரம் ஸ்டாலின் ஜெயிச்சிருப்பார்.. அடுத்தவன் பார்த்துப்பான்.. நம்ம.. தேன் கிண்ணம் பாத்துட்டு உட்கார்ந்துட்டு இருந்தா..இப்படித்தான் நடக்கும்..! 😮‍💨

முதலில் என் மனமார்ந்த வாழ்த்துகள் எங்கள் அன்பு தளபதி விஜய் அவர்களே! ❤️உங்க எல்லா பிரச்சாரத்துலயும் சொன்னீங்க, ‘குறி வச்ச...
10/05/2026

முதலில் என் மனமார்ந்த வாழ்த்துகள் எங்கள் அன்பு தளபதி விஜய் அவர்களே! ❤️

உங்க எல்லா பிரச்சாரத்துலயும் சொன்னீங்க, ‘குறி வச்சா தவற மாட்டேன். தவறும் னா குறியே வைக்க மாட்டேன்’ என்று. சொன்னத செஞ்சுட்டீங்க. அர்ச்சுணன் மாதிரி கரெக்ட்டா குறி வச்சு அடிச்சிட்டீங்க. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

“I’m not a king maker but I am the king” என்று நீங்க சொன்னதை இன்று சாதிச்சு காட்டிட்டீங்க. Yes, now YOU ARE THE KING.

இந்த வெற்றி சாதாரணமாகக் கிடைத்ததல்ல. கடந்த சில ஆண்டுகளாக ஆளும் தரப்பு கொடுத்த டார்ச்சர்கள், போட்ட முட்டுக்கட்டைகள், வழியில் கட்டப்பட்ட தடைகள் என அத்தனையையும் தாண்டி, அதீத பொறுமையுடனும் நிதானத்துடனும் நீங்கள் நின்ற அந்த கம்பீரம் தான் உங்களை இன்று இந்த அரியணையில் அமர வைத்துள்ளது.

இத்தனை சோதனைகளைக் கடந்த உங்களுக்கு இந்த வெற்றி தார்மீக ரீதியாக முழு தகுதியானது! You truly and totally deserve this.

உங்களிடம் நான் வைக்கும் 15 அடிப்படை கோரிக்கைள் இதோ:

1. இலவசங்கள் முக்கியமல்ல - நீங்க தேர்தல் வாக்குறுதியில் சொன்ன இலவசங்களை உடனே நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதுக்குப் பதில் மக்கள் கௌரவமாக உழைத்துச் சம்பாதிக்கும் வழிகளை உருவாக்குங்க. தமக்குத் தேவையானவற்றைத் தாமே வாங்கிக்கொள்ளும் பொருளாதாரச் சூழலை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுங்க.

2 த.வெ.க (TVK) என்ற பெயரைச் சொல்லியோ, கட்சிக் கொடியைக் காட்டியோ எவன் தப்பு பண்ணினாலும், அது யாராக இருந்தாலும் சரி... தயவு தாட்சண்யமே பார்க்காதீங்க. உடனடியா நடவடிக்கை எடுங்க. Non-Bailable சட்டத்துல தூக்கி உள்ள போடுங்க. கட்சிக்காரன் தப்பு பண்ணினா தண்டனை இன்னும் அதிகமா இருக்கட்டும்.

3. மது ஒழிப்பு - முதல் வேலையாகத் தமிழ் நாட்டுல உள்ள அத்தனை டாஸ்மாக்குகளையும் இழுத்து மூடி மது இல்லாத தமிழகத்தை உருவாக்குங்க.

4. போதை இல்லா தமிழகம் - எல் சால்வடார் ஜனாதிபதி Nayib Bukele பாணியில், ஒரு மிகச்சிறந்த Narcotics தனிப்படையை உருவாக்கி, தமிழகத்தில் ஒரு மில்லி கிராம் போதைப்பொருள் கூட இல்லாதவாறு வேரறுக்க வேண்டும். விற்பவன் எவனா இருந்தாலும் சரி, அவனுக்கு மரண பயத்தை காட்டுங்க.

5. ரவுடிசம் ஒழிப்பு - தமிழ்நாட்டில் ரவுடிசம் என்ற பேச்சிற்கே இடமிருக்கக் கூடாது. சட்டம் ஒழுங்கு அத்தனை கடுமையா இருக்கனும்.

6. குழந்தைகள் பாதுகாப்பு - குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் 'Zero Tolerance' கொள்கை இருக்க வேண்டும். குற்றம் செய்தவன் உடனடியாக தூக்கிலிடப்படவேண்டும்.

7. பெண்கள் பாதுகாப்பு - பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை எக்காலத்திலும் சிறையை விட்டு வெளியே வர முடியாதபடி non bailable act’இல் மிகக் கடுமையாக தண்டியுங்க.

8. கல்வி மற்றும் மருத்துவம் - புர்க்கினா பாசோ நாட்டின் அதிபர் இப்ராகிம் ட்ரொரே பாணியில், நம்மிடம் உள்ள வளங்களைச் சரியாகப் பயன்படுத்தி உயர்தர அரசுப் பள்ளிகளையும், தரமான அரசு மருத்துவமனைகளையும் அமையுங்க. காசு உள்ளவனும் இல்லாதவனும் ஒரே தரத்தில் கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சையைப் பெறும் நிலையை உருவாக்குங்க.

9. நிர்வாகச் சீரமைப்பு - கடந்த ஆட்சியில் அரசுக்கு எதிரா பேசிக் கைதானவர்கள் மீதான பொய் வழக்குகளை ரத்து செய்து, உண்மையான குற்றவாளிகளைத் தூக்கி உள்ளே போடுங்க.

10. DMK அரசு வாங்கின கடனுக்கு ஒரு SIT அமைத்து விசாரணை நடத்துங்க. திமுக ஆட்சியில் இருந்த ஒவ்வொரு அதிகாரிங்க கிட்டயும் ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்குக் கேளுங்க. ஒரு ரூபாய் கம்மியானாலும், அது எவனா இருந்தாலும் புடிச்சு ஜெயில்ல போடுங்க.

11. டெண்டர் முறைகேடுகள்- முந்தைய ஆட்சியில் திமுக ஜால்ரா கும்பலுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட அரசு ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்களை ரத்து செய்து, தகுதியுள்ள உண்மையான நேர்மையான நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் கொடுங்க. அது தொடர்பான முறைகேடுகளை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க.

12. காவல்துறை மற்றும் உளவுத்துறை - போலீஸ் மற்றும் உளவுத்துறையை உங்கள் நேரடிப் கண்காணிப்பில் வைங்க. அவர்கள் எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் நடுநிலையோடு செயல்படுவதை உறுதி செய்யுங்க.

13. சைபர் கிரைம் அதிரடி - சைபர் கிரைம் புகார்களை அலட்சியப்படுத்தாமல், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையில் அந்தத் துறையைப் பலப்படுத்துங்க. சமூக ஊடகங்களில் முகத்தை மறைத்துக்கொண்டு அட்டூழியம் செய்யும் கும்பல் மொத்தமாக முடக்கப்பட வேண்டும்.

14. தூய்மையான தமிழகம் - சிங்கப்பூர் பாணியில் அதிரடிச் சட்டங்களைக் கொண்டு வந்து, பொது இடங்களில் குப்பை போடுபவர்கள் மீது பாரபட்சமில்லாமல் அபராதம் விதித்து தமிழ் நாட்டை சுத்தமாக்குங்க.

15. ஆன்மீகம் & பண்பாடு - பழமையான கோவில்களைப் புதுப்பித்து, சிதிலமடைந்த நம் அடையாளங்களை மீட்டெடுங்க. கோவில்களில் விஐபி கலாச்சாரத்தை ஒழித்து, சாமானிய மக்களுக்கும் எளிமையான தரிசனமும், தரமான அடிப்படை வசதிகளும் (குடிநீர், கழிப்பறை வசதிகள்) தடையின்றி கிடைக்க வழிவகை செய்யுங்க. அதேபோல் பல வருட பழமையான தேவாலயங்கள் மற்றும் மசூதிகளையும் பாதுகாப்பதில் நடவடிக்கை எடுங்க.

இது எல்லாமே நேற்று இரவு நான் எழுதியது. இன்று நீங்க முதலமைச்சரா பதவி ஏற்றதும் இதை பகிர காத்திருந்தேன். ஆனா நான் எழுதியதில் முக்கியமான மூனு விஷயங்களை ஆல்ரெடி நீங்க இன்னிக்கே உறுதி கொடுத்துட்டீங்க. நன்றி.

“இங்க ஒரே ஒரு Power Centre.. நான் மட்டும் தான் இங்க ஒரே Power Centre” அப்படீனு நீங்க சொன்னது தான் செம்ம மாஸ். கடைசி வரை அது அப்படியே தொடரட்டும்.

பல சவால்களும் சரித்திரங்களும் நிறைந்த ஐந்தாண்டுகளாக எதிர்வரும் 5 வருடங்கள் இருக்கப்போகிறது.

இதுவரை நீங்கள் காட்டிய அதே அசைக்க முடியாத தன்னம்பிக்கையுடனும், எதற்கும் அஞ்சாத துணிச்சலுடனும், மனவலிமையுடனும் இந்த பயணத்தை நீங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

நீங்க ஒரு மாற்றத்திற்காக வந்தவர். அந்த மாற்றம் வெறும் ஆட்சியில் மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

உங்களின் ஒவ்வொரு கையெழுத்தும் தமிழகத்தின் தலைவிதியைச் சிறப்பான வழியில் மாற்றட்டும்.

உங்கள் மேல் நம்பிக்கை வைத்து ஓட்டு போட்ட மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை, உங்கள் பொற்கால ஆட்சி மெய்ப்பிக்கட்டும்!

உங்கள் நல்ல கனவுகள் யாவும் நனவாகட்டும். அதற்கு அந்த முருகன் துணை நிற்கட்டும்.

வாழ்த்துகள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களே! 💐💐💐






07/05/2026

TVK ஆட்சி அமைத்தாலும் அவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்காத வகையில் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை அவர்களுக்கு ஆதரவு கொடுக்காமல் திமுக தடுக்கும். TVK ஆட்சி கவிழும். பிறகு இரண்டாவது பெரிய கட்சியாக திமுகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார். அந்த சமயத்தில் அதிமுக பாஜக பாமக வெளியில் இருந்து ஆதரிக்கும். உதயநிதி முதல்வர் திருமா துணை முதல்வர் என்று டீல் பேசி ஆட்சி அமைப்பார்கள். 1 வருடத்திற்குள் மொத்தமாக அடித்துக் கொள்வார்கள். ஆட்சி கவிழும். இடையே ஆளுநர் ஆட்சி மூலம் சிறிது காலம் பாஜக கள்ள ஆட்சி நடத்தும். மீண்டும் தேர்தல் வரும். TVK காங்கிரஸ் கூட்டணி 200 சீட் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.

இது என்னுடைய அனுமானம். TVK மீண்டும் வெற்றி பெறும் என்று சொல்லிவிட்டீர்கள் அதனால் நீங்கள் TVK ஆதரவாளர் என்று தற்குறித்தனமாக பேச கூடாது.

Address

Sitteri, Harur-Pappireddipatti
Dharmapuri

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namma Sitteri-சித்தேரி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share