Wimவிமன் இந்தியா மூவ்மெண்ட் தாராபுரம் தொகுதி

  • Home
  • India
  • Dharapuram
  • Wimவிமன் இந்தியா மூவ்மெண்ட் தாராபுரம் தொகுதி

Wimவிமன் இந்தியா மூவ்மெண்ட் தாராபுரம் தொகுதி விமன் இந்தியா மூவ்மெண்ட் தாராபுரம் தொகுதி

19/04/2026



#வெல்வோம்இருநூறு



#திராவிடமுன்னேற்றக்கழகத்தின்
#மதச்சார்பற்றமுற்போக்குகூட்டணியின்
#தாராபுரம்

பசியிலிருந்து விடுதலை ! பயத்திலிருந்து விடுதலை !💚❤️ 🫂 🖤❤️ (17/04/2026)அன்று  மாலை  #திராவிடமுன்னேற்றக்கழகத்தின் தலைமையில...
18/04/2026

பசியிலிருந்து விடுதலை !
பயத்திலிருந்து விடுதலை !

💚❤️ 🫂 🖤❤️

(17/04/2026)அன்று மாலை #திராவிடமுன்னேற்றக்கழகத்தின் தலைமையிலான #மதச்சார்பற்றமுற்போக்குகூட்டணியின் #தாராபுரம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் டாக்டர். இந்திராணி MBBS,DCH. அவர்களுக்கு SDPI கட்சியின் சார்பாக வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி 5,6,12,14 ஆகிய வார்டுகளில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்டின் தொகுதி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.



#வெல்வோம்இருநூறு






03/04/2026
03/04/2026

இன்று(03-04-2026) நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதி தலைமை தேர்தல் பணிமனை திறப்பு விழாவில்
தாராபுரம் SDPI கட்சியின் மாவட்ட தொகுதி நகர கிளை நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்


்சி_திருப்பூர்_தெற்கு_மாவட்டம்




ாராபுரம்
ொளத்துப்பாளையம்_பேரூர்

03/04/2026
09/03/2026

*SDPI கட்சி* மகளிர் அணி *(விமன் இந்தியா மூவ்மென்ட்)* *கோவை மத்திய மாவட்டம்* சார்பாக

🌹*மௌனம் கலைப்போம்! போராடுவோம்!🌹 🌹பெண்களுக்கான நீதியை வென்றெடுப்போம்!*🌹 என்ற முழக்கத்துடன்

*8/03/2026 மகளிர் தினத்தை முன்னிட்டு*
*SDPI* கட்சி மகளிர் அணியின் *(விமன் இந்தியா மூவ்மென்ட்)* *கோவை மத்திய மாவட்டம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது*

*“பெண்களின் திறன், துணிவு, சேவை – சமூக வளர்ச்சியின் அடித்தளம் என்று பாராட்டும் விதமாக மகளிர் தினத்தை போற்றப்பட்டது*...

திருப்பூர் தெற்கு மாவட்டம் மௌனம் கலைப்போம்! போராடுவோம்! பெண்களுக்கான நீதியை வென்றெடுப்போம் என்ற முழக்கத்தோடு SDPI  கட்சி...
09/03/2026

திருப்பூர் தெற்கு மாவட்டம்

மௌனம் கலைப்போம்!
போராடுவோம்!
பெண்களுக்கான நீதியை வென்றெடுப்போம்
என்ற முழக்கத்தோடு

SDPI கட்சியின் மகளிர் அணியின் சார்பாக
8/03/2026 இன்று
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு

தாராபுரம் தொகுதியின் சார்பாக
தாராபுரம் தொகுதி தலைவர் சபீனா அவர்கள் தலைமையில் முதியோர் இல்லத்திற்கு சென்று அவர்களுடன் கலந்து உரையாடிவிட்டு சிற்றுண்டி அவர்களுக்கு பரிமாறப்பட்டது

இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உமைபா அவர்களும்

தொகுதி துணை தலைவர் நதீரா அவர்களும் தொகுதி நிர்வாகிகளும்

சகோதரிகளும் கலந்து கொண்டனர்

பசியிலிருந்து விடுதலை💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️பயத்தில் இருந்து விடுதலை 💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️ஈரான் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய ...
03/03/2026

பசியிலிருந்து விடுதலை
💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️
பயத்தில் இருந்து விடுதலை
💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️
ஈரான் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கண்டித்து கட்சி #தாராபுரம் தொகுதி சார்பாக இன்று (02/03/2026) மாலை 7.30 மணியளவில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில்

தலைமை
🌹🌹🌹🌹
M. மன்சூர் அலி
கட்சி தாராபுரம் தொகுதி தலைவர்

வரவேற்புரை
🌹🌹🌹🌹🌹🌹
M. முஹம்மது இஸ்மாயில்
தாராபுரம் தொகுதி செயற்குழு உறுப்பினர்

கண்டன கோஷம்
🌹🌹🌹🌹🌹🌹🌹
A. மன்சூர் அலி
ஜமால் புதூர் கிளை துணைத் தலைவர்

கண்டன உரை
🌹🌹🌹🌹🌹🌹
U.முகம்மதுஇர்ஃபா ன் இர்ஃபானி இமாம்
தாராபுரம் தொகுதி செயலாளர்

கண்டன கோஷம்
🌹🌹🌹🌹🌹🌹🌹
A. முகம்மது சுஹைல்

நன்றி உரை
🌹🌹🌹🌹🌹
R. சிக்கந்தர் பாதுஷா
தாராபுரம் தொகுதி செயற்குழு உறுப்பினர்

சிறப்புஅழைப்பாளர்கள்

J.சையது அபுதாஹிர்
#திருப்பூர் தெற்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர்

H. முஹம்மது இலியாஸ்
#திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்

உமைபா
விமன் இந்தியா மூவ்மெண்ட் #திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்

M. சபீனா
விமன் இந்தியா மூவ்மெண்ட் #தாராபுரம் தொகுதி தலைவர்

மேலும் கட்சியின் தொகுதி நகர கிளை நிர்வாகிகள் செயல்வீரர்கள் விமன் இந்தியா மொமென்டின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

18/02/2026

"மாணவி லாவண்யா மரண விவகாரத்தில் பாஜகவின் மதவாத அரசியலை அம்பலப்படுத்தியுள்ளது சிபிஐ விசாரணை அறிக்கை" -நெல்லை முபாரக், SDPI

| |

18/02/2026

தமிழ்நாட்டின் தற்சார்பு பொருளாதார வளர்ச்சியைப் பறைசாற்றும் இடைக்கால பட்ஜெட்! - எஸ்டிபிஐ

இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தாக்கல் செய்துள்ள 2026-2027 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட், மாநிலத்தின் பொருளாதார இறையாண்மையையும் தற்சார்பு வளர்ச்சியையும் பறைசாற்றும் நிதிநிலை பிரகடனமாக அமைந்துள்ளது. ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய முறையான நிதிப் பகிர்வு, ஜிஎஸ்டி இழப்பீடு மற்றும் பேரிடர் நிவாரணத் தொகையில் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் போட்டு வரும் வஞ்சகமான சூழலிலும், தமிழக அரசு சற்றும் தளர்ந்துவிடாமல் தனது சொந்த வரி வருவாயையும் வளங்களையும் மட்டுமே நம்பி இந்த பட்ஜெட்டை மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளது பாராட்டுக்குரியது.

நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மாநிலத்தின் வளர்ச்சியைத் தொய்வின்றி முன்னெடுத்துச் செல்லும் இந்த அறிக்கை, ஒரு தன்னாட்சி மிக்க மாநிலத்தின் துணிச்சலான பொருளாதார மேலாண்மைக்குச் சான்றாகும்.

இந்த பட்ஜெட்டில் கல்வி மற்றும் இளைஞர் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெடுப்புகள் தமிழகத்தின் வருங்காலத்தின் மீது நம்பிக்கை அளிக்கின்றன. குறிப்பாக, கல்வித் துறைக்காக சுமார் ரூ. 48,534 கோடி ஒதுக்கியிருப்பது மிகப்பெரிய முதலீடாகும். காலை உணவுத் திட்டம் முதல் 'நான் முதல்வன்' திட்டம் வரை அனைத்தும் ஒன்றிய அரசின் போதிய பங்களிப்பு இல்லாமலேயே, மாநிலத்தின் தற்சார்பு வலிமையால் முன்னெடுக்கப்படுவது இந்த அரசின் நிர்வாகத் திறனை உறுதிப்படுத்துகிறது. இத்தகைய திட்டங்கள் சமூக மாற்றத்திற்கான வலுவான அடித்தளமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, வரலாற்றிலேயே முதன்முறையாக டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார், குறுவை மற்றும் சொர்ணவாரிப் பருவ நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்காக ரூ. 115 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதை எஸ்டிபிஐ கட்சி மனதார வரவேற்கிறது. இது டெல்டா பகுதிக்கு இணையாக மற்ற மாவட்ட விவசாயிகளையும் அரவணைத்துச் செல்லும் ஒரு சமத்துவமான அணுகுமுறையாகும். இத்திட்டம் பாசன நீர் வசதியுள்ள அனைத்துப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு நற்செய்தியாக அமைந்துள்ளது.

மேலும், 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கிய புதிய செமிகண்டக்டர் கொள்கை, 12 மாவட்டங்களில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பூங்காக்கள் போன்ற திட்டங்கள் தமிழகத்தை தொழில் மற்றும் சமூக மேம்பாட்டுப் பாதையில் அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்கின்றன. ஒன்றிய அரசின் நிதிப் புறக்கணிப்புகளைத் தாண்டி, தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்யும் இந்த இடைக்கால பட்ஜெட், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் ஒரு மக்களுக்கான வழிகாட்டி வரைபடமாகத் திகழ்கிறது.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Address

Periyakadaiveedhi
Dharapuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wimவிமன் இந்தியா மூவ்மெண்ட் தாராபுரம் தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share