கொழுமங்குழி பஞ்சாயத்து

கொழுமங்குழி பஞ்சாயத்து கொழுமங்குளி பஞ்சாயத்து

03/06/2025

அரசு மானியத்தில் வெங்காய சேமிப்பு பட்டறை 20*50 அளவில் அமைப்பதற்கு விருப்பமுள்ள கொழுமங்குழி, சிறுகிணர், கிராம விவசாயிகள் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் கீழ்கண்ட ஆவணங்களுடன் அணுகி பெற்றுக்கொள்ளலாம்.

1) சிட்டா
2)அடங்கல்
3)நிலவரைபடம்
4) கூட்டு வரைபடம்
5)ஆதார் அட்டை நகல்
6)ரேசன் கார்டு நகல்
7)வங்கி புத்தக நகல்
8)போட்டோ-3
9)Rs.100 Stamp paper -1 nos
10) Legal green sheet -2nos

15/02/2025

வேளாண்மைத்துறையின் சார்பாக நமது கொழுமங்குழி பஞ்சாயத்து அலுவலகத்தில் ( தம்புரெட்டிபாளையம் ) விவசாயிகள் பதிவு (Farmer Registry) முகாம் நடைபெற்று வருகிறது. எனவே அனைத்து விவசாயிகளும் தங்களது சிட்டா. ஆதார் அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் பதிவு செய்யப்பட்ட செல்போன் கொண்டு பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

27/12/2024

இன்று திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், கொழுமங்குழி கிராமத்தில் அண்ணா நகரில் பகுதியில் தாட்கோ திட்டத்தின் கீழ் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் அமைக்கும் பணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரியா அவர்களும் தூய்மை பணியாளர்கள்,3வது வார்டு உறுப்பினர் யோகிஸ்வரன் அவர்களும் இணைந்து பணியினை பூமி பூஜை செய்து பணியினை துவங்கி வைத்தோம், பூமி பூஜை விழாவில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்...

இறந்தவருக்கு ஈமைச் சடங்கு மானியம் வழங்க கையொப்பமிடமருக்கும்கிராம ஊராட்சி  உறுப்பினர்கள் யாருன்னாநம்ம கிராம ஊராட்சி உறுப்...
20/12/2023

இறந்தவருக்கு ஈமைச் சடங்கு மானியம் வழங்க கையொப்பமிடமருக்கும்

கிராம ஊராட்சி உறுப்பினர்கள் யாருன்னா

நம்ம கிராம ஊராட்சி உறுப்பினர்கள் தான்...

கயல்விழி செல்வராஜ் Mkstalin DMKforIndia M. K. Stalin DrYogi Vanathi Srinivasan K.Annamalai DMK Alangulam Wing

கண்டன அறிக்கைஅனைவருக்கும் வணக்கம்.பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நான்  கொழுமங்குழி ஊராட்சியில் 06.01.2020-ம் நாள் ஊராட்சி ம...
10/11/2023

கண்டன அறிக்கை
அனைவருக்கும் வணக்கம்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நான் கொழுமங்குழி ஊராட்சியில் 06.01.2020-ம் நாள் ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்று கொண்டேன். பதவி ஏற்றது முதல் ஊராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் என்னால் இயன்ற அளவிற்கு வரக்கூடிய அரசு நிதிகளில் பகிர்ந்து அளித்து அனைத்து பணிகளையும் நல்ல முறையில் செய்துள்ளேன். அதேபோன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழும் ஊராட்சி பங்களிப்பு நிதியின் மூலமும் 24.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. நேற்று (9.11.2023) ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் நாங்கள் ஏற்கனவே அதிகாலையில் திறப்பதாக திட்டமிட்டபடி நேற்று காலையில் அலுவலக திறப்பு விழா 4:00 மணி முதல் 6:00 மணிக்குள் சிறப்பாக முடிவற்றது.
அதன் பின்பு நேற்றைய தினமே மாலை 4:30 மணி அளவில் மாண்புமிகு செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களும், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் அவர்களும் நான் திறந்து வைத்த அதே ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை மீண்டும் திறந்து வைத்தார்கள்.

இதில் நான் புரிந்து கொள்வது என்னவென்றால் நான் ஒரு பட்டியல் இன பெண் ஊராட்சி மன்ற தலைவர் என்பதால் என்னிடம் எந்தவிதமான தகவலும் கூறப்படாமல் என்னை விழாவிற்கு அழைக்காமலும் இவர்களாகவே எங்களது ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறப்பதற்கு 1994 கிராம ஊராட்சி சட்ட விதிகளில் இடம் உள்ளதா?. இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இதேபோன்று ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பில் இருந்திருந்தால் அவர்களையும் இதே மாதிரி புறக்கணித்துவிட்டு திறப்பு விழா செய்திருப்பார்களா?. மேற்கண்ட அமைச்சர்கள் இருக்கும் கட்சியின் தலைவர் அவர்களும் இவர்களும் தொடர்ந்து சமூக நீதியை பற்றி பேசிக்கொண்டு வருகிறார்கள் இவர்களுடைய சமூக நீதி இதுதானா?
ஏற்கனவே நான் திறந்து வைத்த ஊராட்சி அலுவலக கட்டிடத்தை ஏன் இவர்கள் மீண்டும் திறந்து வைக்கிறார்கள். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நான் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்தது தவறா? அல்லது பட்டியல் சமயத்தைச் சேர்ந்த நான் அலுவலகத்தை திறக்கக் கூடாதா? அல்லது அமைச்சர்களுக்கு தவறான தகவலை கொடுத்து மீண்டும் அவர்களை திறக்க வைத்தார்களா? அல்லது இந்தப் பகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் அவர்களுக்கு நான் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவர் என்பது அவருக்கு தெரியாதா?

இது தானுங்க உங்கள் சமூக நீதியா?
இதுதான் உங்கள் பெண்ணுரிமையா?
இதுதான் உண்மையான சமூக நீதியா?

உண்மையான சமூக நீதி வெல்லட்டும்.
பாரதம் ஒளிரட்டும் உண்மையான கிராம ராஜ்ஜியம் மலரட்டும்.

என்றும் ஊராட்சி வளர்ச்சி பணியில்
பிரியா செந்தில்குமார்
தலைவர்
கொழுமங்குழி ஊராட்சி
K.Annamalai M. K. Stalin Mkstalin Vanathi Srinivasan DMKforIndia Yogi Kundadam கயல்விழி செல்வராஜ்

04/08/2023
அனைவரும் வரும் திங்கட்கிழமை மே 1 அன்று தம்புரெட்டிப்பாளையம் துணை சுகாதார நிலையம் அருகில் நடைபெறும் கிராமசபை கூட்டத்திற்க...
27/04/2023

அனைவரும் வரும் திங்கட்கிழமை மே 1 அன்று தம்புரெட்டிப்பாளையம் துணை சுகாதார நிலையம் அருகில் நடைபெறும் கிராமசபை கூட்டத்திற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

தலைவர்
துணைத் தலைவர்
வார்டு உறுப்பினர்கள்
கொழுமங்குழி கிராம ஊராட்சி

27/04/2023

கொழுமங்குழி கிராமத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்துதல் கனிமம் மற்றும் சுரங்கம் நிதி திட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் அனுமதி வழங்கப்பட்டது அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அன்று காலை பணி துவங்கப்பட்டது. பொதுமக்களின் குடிநீர் தேவையை தீர்க்கும் வகையில் இந்த ஆழ்துளை கிணறு அமைந்துள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

கொழுமங்குழி கிராம ஊராட்சியில் கொழுமங்குழியில் அமைந்துள்ள கிராம சாவடியை 2006-2007 ம் ஆண்டு அப்போது இருந்த ஊராட்சி மன்ற தல...
26/04/2023

கொழுமங்குழி கிராம ஊராட்சியில் கொழுமங்குழியில் அமைந்துள்ள கிராம சாவடியை 2006-2007 ம் ஆண்டு அப்போது இருந்த ஊராட்சி மன்ற தலைவர் அவர்களால் தீர்மானம் இயற்றப்பட்டு கிராம சாவடியை நூலகம் என்று மாற்றப்பட்டு அதற்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணிகளும் உபகரணங்களும் மின் இணைப்பும் ரூ.2,00,000 மதிப்பீட்டில் செலவு செய்யப்பட்டுள்ளது என்று அப்போதைய வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் அலுவலக பதிவேடுகளில் பதிவு செய்துள்ளார்.

தற்சமயம் ஆட்சியில் உள்ள தமிழக அரசு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2 என்ற திட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தின் கீழ் மீண்டும் ஏற்கனவே உள்ள நூலக கட்டிடங்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அந்தக் கட்டிடத்தில் இயங்கி வந்த கிராம நிர்வாக அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ளுமாறு ஊராட்சி மன்ற தலைவர் என்ற முறையில் அரசு வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டியுள்ளதால் ஊராட்சித் தலைவர் அவர்களால் தாராபுரம் வட்டாட்சியர் அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது, குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர், அவர்களும் ஒரு கடிதம் அனுப்பி நூலகம் செயல்பட வேண்டி உள்ளதால் தங்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ளுமாறு மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தற்போது இருக்கும் கொழுமங்குழி ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் யாரும் பொறுப்பில்லை.

2006-2007 ம் ஆண்டு இருந்த தலைவரே இதற்கு முழு காரணம் என்பதனை இதன் மூலம் பொது மக்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம். அப்போது இருந்த தலைவர் அவர்களால் செய்யப்பட்டது என்பதற்காக அனைத்து ஆவணங்களும் இதில் பகிர்ந்து உள்ளோம் என்பதனை ஊராட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைவரும் வரும் வாரீர்..
28/09/2022

அனைவரும் வரும் வாரீர்..

கொழுமங்குழி ஊராட்சியில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய உறுதி திட்டத்தில் கீழ் 13.57 லட்சமும், ஊராட்சி பொது நிதியில் ...
09/12/2021

கொழுமங்குழி ஊராட்சியில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய உறுதி திட்டத்தில் கீழ் 13.57 லட்சமும், ஊராட்சி பொது நிதியில் 11.21 லட்சமும், மொத்தம் ரூ.24.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்ட இன்று பூமிபூஜை நடைபெற்றது . இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
30/11/2021

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

Address

Thamburettipalayam, Kolumanguzhi
Dharapuram
638703

Website

Alerts

Be the first to know and let us send you an email when கொழுமங்குழி பஞ்சாயத்து posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share