04/08/2025
எத்தனை ஆண்டுகள்.?
எத்தனை போராட்டங்கள்.?
எத்தனை கண்ணீர் கதைகள்.?
எத்தனை வழக்குகள்.?
அனைத்திற்கும் பலன் கிடைத்தது இன்று..!!
மக்கள் சக்தியை மீறி பண பலம் என்றுமே வெற்றி பெறாது நியாயமான போராட்டங்கள் ஒரு போதும் தோற்காது என்பதை மீண்டும் ஒரு முறை காலம் நிரூபித்துள்ளது..
கடந்த வாரம் PRCC தார் கலவை ஆலையின் சுற்று சுவர் இடிந்து பல வீடுகளுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து தேவாலா மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்றும் 03/08/25 இன்று அபாயகரமான பாதுகாப்பு குறைபாடு மற்றும் விதிமீறல் உள்ளிட்ட பல காரணங்களை சுட்டிக்காட்டி தேவாலாவில் சட்ட விரோதமாக இயங்கி வந்த PRCC தார் கலவை ஆலையை அதிகாரிகள் சீல் வைத்து மூடினார்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்..
மக்களின் இந்த பல ஆண்டு கால வாழும் உரிமைக்கான போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ ராசா அவர்களுக்கும் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பொன் ஜெயசீலன் அவர்களுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு திராவிடமணி அவர்களுக்கும் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கும், அனைத்து சமூக நல அமைப்புகளுக்கும், அனைத்து வியாபார சங்கங்களுக்கும் வியாபாரிகளுக்கும், அனைத்து ஓட்டுநர் நண்பர்களுக்கும், அனைத்து சமூக நல ஆர்வலர்களுக்கும் தேவாலா மக்களின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.. 🤝🤝
இந்த மகிழ்ச்சியான நேரத்தில் அடுத்த தலைமுறை இந்த நச்சு ஆலையால் பாதிக்கப்பட கூடாது என்கிற ஒற்றை லட்சியத்தை இதயத்தில் தாங்கி சொந்தமாக ஆலைக்கு எதிராக பல வழக்குகளை தொடுத்து மக்களை ஒன்று திரட்டி பல போராட்டங்களை முன்னெடுத்து 2020ம் ஆண்டு PRCC ஆலைக்கு சீல் வைக்க காரணமாக இருந்து நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற போராட்ட நாயகன் திரு. [ முகமது அனீஷ். V ] அவர்களை இந்நேரத்தில் நினைவு கூறுகிறோம்..
நன்றி.. நன்றி.. நன்றி..
இவன்
தேவாலா PRCC ஆலை எதிர்ப்பு போராட்ட குழு