மக்கள் அதிகாரக் கழகம்

மக்கள் அதிகாரக் கழகம் மக்கள் அதிகாரக் கழகம்
(1)

04/06/2026
04/06/2026
03/06/2026
தமிழ்நாட்டில் த.வெ.க.ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | துண்டறிக்கைஜூன் 2026பரப்புரை இயக்கம்தமிழ்நாடு-புதுச்சேரி மு...
03/06/2026

தமிழ்நாட்டில் த.வெ.க.ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | துண்டறிக்கை

ஜூன் 2026
பரப்புரை இயக்கம்

தமிழ்நாடு-புதுச்சேரி முழுவதும்
கருத்தரங்கங்கள்
விளக்கக் கூட்டங்கள்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

தமிழ்நாட்டில் மீண்டும்
ஒரு திரைக்கவர்ச்சி நாயகன் ஆட்சி.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில்,
அவர்களைவிட கேடான வழிமுறைகளில்
அரங்கேறியுள்ளது விஜய் ஆட்சி.

அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்
எதிர்கட்சிகள்.
குழப்பத்தில் மூழ்கியிருக்கின்றனர்
ஜனநாயக சக்திகள்.
மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்
பாசிச சக்திகள்!
இது யாருக்கான ஆட்சி…
அது புரியாத நிலைமையிலும்
மாற்றம் வந்துவிட்டதாக
மகிழ்கின்றனர் மக்கள்…

பா.ஜ.க. “கொள்கை எதிரி”
தி.மு.க. “அரசியல் எதிரி”
இது, விஜய் கட்சியின் முழக்கம்!

இந்தப் போலி ஜனநாயகத்தில்
கொள்கையாவது வெங்காயமாவது
என்கிற உண்மையை
உணர்ந்தவர்களுக்கு
‘கொள்கை எதிரி’ என்று ஒன்றில்லை
என்ற உண்மையும் விளங்கிவிடுகிறது.

எஞ்சி நிற்பது
“அரசியல் எதிரி” மட்டுமே!

அதைத்தான்
தேர்தலிலேயே வீழ்த்தியாகிவிட்டதே,
மீண்டும் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

இது, ‘உத்தர காண்டம்’,
விஜய்யின் ஆட்சி.
ரீல்ஸ்-களில் ‘நல்லாட்சி’;
நிஜத்தில்,
பார்ப்பனிய எதிர்ப்பை மழுங்கடித்து
பாசிசத்திற்கு பாதையை
செப்பனிடும் ஆட்சி!

“ரீல்ஸ்”களை ஓட்டி
காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்,
முதல்வர் விஜய்.
பத்திரிகையாளர் சந்திப்பு இல்லை.
“இப்படியெல்லாம் நடக்குமா”
திகைப்பில் பத்திரிகையாளர்கள்!
திகைப்பதற்கு ஏதுமில்லை,
இவர் தமிழ்நாட்டின் மோடி!

இது, மெய்நிகராட்சி!
அப்படியெனில்
மெய்யான ஆட்சி எது?
அதுதான், மன்னராட்சி!

குதிரை ஏற்றத்தில் சாகசம் செய்தனர்
அக்கால மன்னர்கள்.
குதிரை பேரத்தில் சாகசம் செய்கிறார்
இக்கால மன்னர், விஜய்.

ஆற்காடு நவாப்பை வீழ்த்தி
சாம்ராஜ்யத்தை நிறுவினான் வெள்ளைக்காரன்.
“இனி எமக்குத்தான் கப்பம் கட்ட வேண்டும்”

தி.மு.க.வை வீழ்த்தி
ஆட்சியைக் கைப்பற்றினார் விஜய்.
“இனி, எங்களுக்குத்தான் கமிசன் கொடுக்க வேண்டும்”

இதோ, உத்தரவுகள்…
ஐயாயிரம் கல்குவாரிகளில் சோதனை,
எட்டாயிரம் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி.

கையில் கமிசனுடன்
காத்திருக்கிறது ஒரு கூட்டம்.
கட்டண உயர்வுக்காக…
தனியார் பேருந்து உரிமையாளர்கள்,
தனியார் கல்வி வியாபாரிகள்,
பதவி உயர்வுக்காக… அதிகாரிகள்…
வரிசை நீள்கிறது!

பல்கலைக் கழகங்களுக்கு
துணைவேந்தராக முதல்வரே இருப்பது மறுபரிசீலனை;
இந்து சமய அறநிலையத் துறைக்கு
அமைச்சராக பார்ப்பனர்…
போராடிப் பெற்ற உரிமைகளே
பறிக்கப்படும் போது,
பெற வேண்டிய உரிமைகளை பற்றி
பேசுவது யார்?

ஆணவப் படுகொலை தடுப்புச் சிறப்புச் சட்டம்,
ஆர்.எஸ்.எஸ். சங்கிக் கும்பலுக்குத் தடை,
எட்டு மணிநேர வேலை,
சங்கம் வைக்கும் உரிமை,
பணிநிரந்தரம்,
பழைய ஓய்வூதியம்,
விவசாயப் பொருட்களுக்கு
குறைந்தபட்ச ஆதார விலை…
தொடர்கிறது பெறவேண்டிய உரிமைகள்
காத்துக்கிடக்கிறது கோரிக்கைகள்!

போலீசுக்கு முழு சுதந்திரமாம்
குற்றங்களைத் தடுப்பதற்கான வழிமுறையாம்
லாக்-அப்பில் படுகொலைகள் நடந்த காலம் போய்
தமிழ்நாட்டையே லாக்-அப் ஆக்கும்
போலீசு ஆட்சிக்கான திட்டமல்லவா?

சங்கிகளுக்கு குதூகலம்!
பொது இடங்களில்
ஆடு-கோழி பலியிட்டு
வணங்குவதற்கு தடையாம்,
உயர்நீதிமன்றத்தின் குடுமி
ஆடத் தொடங்கிவிட்டது.
“திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்”
என்று கொக்கரித்தது சங்கிக் கூட்டம்.
தமிழ்நாட்டையே திருப்பரங்குன்றமாக்க
வழி அமைக்கிறது த.வெ.க. ஆட்சி!

விழித்துக் கொண்டு
போராட வாருங்கள் என்றால்,
“சற்றுப் பொறுங்கள்,
ஆறு மாதங்கள் பார்ப்போம்”
என்பது நியாயமா?
ஆட்சியில் பங்கேற்றதற்காக
ஆட்சியைப் பாதுகாப்பது பொருத்தமா?
ஆர்.எஸ்.எஸ்.யின் குழந்தை
என்று சொல்லிவிட்டு
பாசிசத்திற்கு பால் வார்ப்பதா?

சிந்திப்போம்…
பிழைப்புவாதிகளின் கையில் அதிகாரம்,
பிரிவினைவாதிகளுக்கு கொண்டாட்டம்!

த.வெ.க. வழியில் பா.ஜ.க. ஆட்சியா?
பா.ஜ.க. இல்லாத மக்களாட்சியா?

இரண்டில் ஒன்றைத் தீர்மானிப்போம்!
வாருங்கள்! கை கோருங்கள்!

Address

Cuddalore

Alerts

Be the first to know and let us send you an email when மக்கள் அதிகாரக் கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to மக்கள் அதிகாரக் கழகம்:

Share