Tmmk kumari trust

Tmmk kumari trust KUMARI TRUST AMBULANCE SERVICE
8300100800,8300100900

குமரி டிரஸ்ட்ன் மக்கள் பணிகளுக்கு மேலும் ஒரு அங்கீகாரம்.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மர்ஹூம் ஜனாப்.முஹம்மது இஸ்மாயில் சா...
11/06/2025

குமரி டிரஸ்ட்ன் மக்கள் பணிகளுக்கு மேலும் ஒரு அங்கீகாரம்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மர்ஹூம் ஜனாப்.முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் நினைவாக அனைத்து சமுதாய மக்களும் பயன்படும் வகையில்குமரி டிரஸ்ட்க்கு அவசர ஊர்தி அர்ப்பணிப்பு.

அவசர ஊர்தி மர்ஹும் முஹம்மது இஸ்மாயில் சாகிப் அவர்களின் சகோதரரின் மருமக்கள் சகோ. இக்பால் M.அலி(கனடா)
சகோ.அஷ்ரப் நூர்தீன் ஆகியோரின் சொந்த செலவில் வழங்கும் நிகழ்வு
இன்று 11/06/2025 புதன்கிழமை காலை நாகர்கோவிலில் வைத்து நடைபெற்றது.

அவசர ஊர்தியின் சாவியை மர்ஹும் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் சகோதரர் ஜனாப்.செய்யது முஹம்மது கான் அவர்கள் குமரி டிரஸ்ட் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.

இந்த நிகழ்வில் குமரி டிரஸ்ட் நிர்வாகிகள் அன்வர் சதாத்,ஜாஹிர் ஹுசைன்,நூர் முஹம்மத்(திருவை)
மருத்துவ அணி ஷபீக்,திருவை மெடிக்கல் டிரஸ்ட் செயலாளர் முஜீப்,SHADE சாரிட்டபிள் தலைவர் அசார் அஹ்மத்,M.G.M.மலுக்கு முஹம்மத்,முஹம்மது ஷலீம் professor மற்றும்
குமரி டிரஸ்ட்- ன் திருவை ஷபீக்,பீர்முஹம்மத்,அபுதாஹிர்,கோட்டார் ஷாகுல்,செய்யது கான்,மாலிக்கீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

குமரி மாவட்டத்தில் அவசர சேவையிலும், மருத்துவ சேவையிலும் தன்னிகரில்லா பணிகளை தனதாக்கி மக்கள் சேவை செய்து வரும் குமரி டிரஸ்ட் பணிகளை மேலும் வலுப்பெற செய்யும் விதமாக மர்ஹூம் இஸ்மாயில் சாஹிப் அவர்களின் நினைவில் அவர்கள் குடும்பம் அவசர ஊர்தி வாங்கித்தந்து எங்கள் சேவைகளை மேலும் வலுவடைய செய்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

இன்ஷா அல்லாஹ் உங்களிடமிருந்து பெறப்பட்ட அமானிதம் சிறப்பாக மக்கள் சேவையில் ஜொலிக்கும். இறைவழியில் அவசர ஊர்தியை தானமாக தந்த அவர்களின் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் பேரருளும்,பெரும் கிருபையும் செய்வானாக..!

இந்த அவசர ஊர்தி தக்கலை பகுதியில் அவசர சேவைக்காக அனைத்து சமுதாய மக்களும் பயன்படும் வகையில் செயல்படும்.குறிப்பாக ஜனாஸாக்களை இலவசமாக எடுத்து நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் எங்களின்,உங்களின் நற்செயல்களை ஏற்றுக்கொள்வானாக..!

என்றும் சமுதாய சேவையில்,
குமரி டிரஸ்ட்,
கன்னியாகுமரி மாவட்டம்.

குமரி டிரஸ்ட்க்கு விருது..!அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்..!தியாகத் திருநாளை முன்னிட்டு திருவிதாங்கோடு ஜீலானிய்யா நண்பர்கள் ...
10/06/2025

குமரி டிரஸ்ட்க்கு விருது..!

அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்..!

தியாகத் திருநாளை முன்னிட்டு திருவிதாங்கோடு ஜீலானிய்யா நண்பர்கள் வெல்ஃபேர் டிரஸ்ட் நடத்திய விழாவில் குமரி டிரஸ்ட் சார்பில் செய்து வரும் மருத்துவ மற்றும் இதர உதவிகளையும்,நற்பணிகளையும் ஊக்குவிக்கும் முகமாக ரூ.1,60,000( ஒரு லட்சத்து அறுபதாயிரம்) மதிப்புள்ள வெண்டிலேட்டர் மிஷின் தக்கலை ICU ஆம்புலன்ஸ்க்கு வழங்கப்பட்டது.

மேலும் 2004 ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டது முதல் இன்று வரை செய்து வரும் சமுதாயப் பணிகளைப் பாராட்டி 'சிறந்த சேவைக்கான விருதும்' வழங்கி கவுரவித்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்..!

இந்த நிகழ்வில் குமரி டிரஸ்ட் நிர்வாகிகள் சகோ.அன்வர் சதாத்,சகோ.ஜாஹிர் ஹுசைன்,சகோ.முஹம்மது ரிபாய், திருவை ஷபீக்,திருவிதாங்கோடு ஜமாத் தலைவர் சகோ.அன்வர் ஹுசைன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

குமரி டிரஸ்ட்ன் சமுதாயப் பணிகளை பாராட்டி கவுரவித்த திருவை ஜீலானிய்யா நண்பர்கள் வெல்ஃபேர் டிரஸ்ட் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்...!

ஜஷாக்கல்லாஹ் ஹைரன்.

இது போன்ற நிகழ்வுகள் இறைவன் நாடினால் எங்கள் பணிகளுக்கு மென்மேலும் ஊக்கத்தை தரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

எங்கள் பணிகள் இனியும் தொடர து ஆ செய்யுங்கள்..!

அன்புடன்,
குமரி டிரஸ்ட்,
கன்னியாகுமரி மாவட்டம்.

அவசர மருத்துவ உதவி 🚨EMERGENCY🚨இறைவனின் திருப்பெயரால்...அவசர  மருத்துவ உதவி நாடிஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கன்னியாகுமரி மா...
20/03/2025

அவசர மருத்துவ உதவி

🚨EMERGENCY🚨

இறைவனின் திருப்பெயரால்...

அவசர மருத்துவ உதவி நாடி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு ஜமாஅத்தை சார்ந்த தற்போது
கோட்டார் ரஹ்மத் கார்டனில் வசித்து வரும் த.மு.மு.க மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகியாக இருந்து சமூக பணிகளை செய்தவர்.
அவசரகால இரத்ததானம் செய்ததற்காக மாவட்ட ஆட்சியரிடம் விருது வாங்கிய அருமை சகோதரர் ஜகபர் சாதிக் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அருகிலுள்ள உள்ள சத்யம் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இவருக்கு கல்லீரலில் புற்று நோய் இருப்பதாகவும் உடனடியாக மேல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தினார். மருத்துவரின் பரிந்துரையின்படி இவர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ரிலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.
லிவர் மாற்று அறுவை சிகிச்சைக்கும் இன்னபிற மருத்துவ செலவுக்கும் சுமார் 50 லட்சம் வரை செலவாகும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். முதல்கட்ட சிகிச்சைக்காக இதுவரையிலும் கிட்டத்தட்ட 10 லட்ச ரூபாய் செலவாகி உள்ளது. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ரஹ்மத் கார்டன் ஜமாத்தார்கள் உதவியுடனும் கடன் வாங்கியும் சிகிச்சை நடைபெற்று வருகிறது.

லிவர் மாற்று அறுவை சிகிச்சைக்கும் அதைத்தொடர்ந்து மருத்துவ செலவிற்கும் சுமார் 50 லட்சம் வரை தேவைப்படுவதால் நம்மால் முடிந்த பொருளாதார உதவிகளை தாராளமாக செய்யுமாறும் நம்மை சார்ந்தவர்களுக்கு தெரியப்படுத்தி சகோதரரின் நோய் குணமடைய கருணை உள்ளத்தோடு துவா செய்யுமாறு அன்பாய் கேட்டு கொள்கிறேன்.

அன்பானவர்களே! உங்களின் சிறு தொகையும் அந்த ஏழ்மை குடும்பத்திற்கு உதவலாம்.
உங்களால் இயன்ற உதவிகளை செய்து இறைவனின் உதவியை பெறுங்கள்.

மேலும் தொடர்புக்கு:📞

+919095204041
+918489768010

Bank account details :
Name :Z. Jehaber sathick ,
Account number : *272701000015711* ,
IOB
IFSC : IOBA0002727 ,
Elankadai Branch ,
Nagercoil

*G Pay number -* *8124007688*

பதிவு நாள் : 20/03/2025
பதிவு நேரம்: 12:30 pm

*சர்வதேச உரிமை கழகத்தின் 16ஆவது தேசிய மாநாடு நாகர்கோயில் அநாதை மடம் மைதானத்தில் திரு. தினேஷ் குமார் அவர்கள் தலைமையில் நட...
24/02/2025

*சர்வதேச உரிமை கழகத்தின் 16ஆவது தேசிய மாநாடு நாகர்கோயில் அநாதை மடம் மைதானத்தில் திரு. தினேஷ் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.*

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நிறுவன தலைவர் *Dr. S.சுரேஷ் கண்ணன்* அவர்கள் , *உயர் நீதிமன்ற நீதிபதிகள்* அவர்கள், உயர் சிந்தனையாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு விருதினை வழங்கினர்.
அவ்விருதுகளில் *சிறந்த 24 மணிநேர ஆம்புலன்ஸ் சேவை* மற்றும் *சமூக சேவைக்கான* விருத்தினை *குமரி டிரஸ்ட் குளச்சல்* சார்பாக பெற்று கொண்டத்தில் மகிழ்ச்சியடைக்கிறோம்.

விருதினை *Dr.J S ராஜ்குமார் ( Surgical Gastroenterologist Chairman & surgeon )* வழங்கினார்.

எங்களுக்கு உறுதுணையாக நின்ற மோசஸ் ஆனந்த் அவர்கள் சுரேஷ்குமார் அவர்கள், பச்சைமால் அவர்கள் ஜாக்சன் அவர்கள், அஹமது கபீர் அவர்கள், குமரி டிரஸ்ட் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஊர் பெரியோர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்

எல்லா புகழும் இறைவனுக்கே!

03/07/2020
கொரோனா வார்டில் தனிமைபடுத்தப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மதிய உணவு வழங்கிய  #கன்னியாகுமரி_மாவட்ட_தமுமுக...
23/04/2020

கொரோனா வார்டில் தனிமைபடுத்தப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மதிய உணவு வழங்கிய #கன்னியாகுமரி_மாவட்ட_தமுமுக

ஆசாரிப்பள்ளம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மதிய உணவு இன்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக தமுமுக மாவட்ட செயலாளர் அன்வர் சதாத் மற்றும் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ஷபீக், நகர மருத்துவ அணி செயலாளர் ஸியாத், சபான் மற்றும் ymj மாநில நிர்வாகி அப்துல் ரகுமான் ஆகியோர் நேரில் சென்று வழங்கினர்

பொருள்களை ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி நிர்வாகிகள் ARMO ரெனி மோள் மற்றும் மருத்துவமனை ஊழியர் அஸ்கர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்

-தமுமுக ஊடக பிரிவு

தமுமுக துணைப் பொதுச்செயலாளர் நெல்லை  #உஸ்மான்கான் வெளியிடும் செய்தி...33 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நக்கீரன் இதழிற...
20/04/2020

தமுமுக துணைப் பொதுச்செயலாளர் நெல்லை #உஸ்மான்கான் வெளியிடும் செய்தி...

33 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நக்கீரன் இதழிற்க்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக வாழ்த்துக்கள்!

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக, குரலற்றவர்களின் குரலாக எண்ணிலடங்கா எதிர்ப்புகளை எதிர் கொண்டு ஊடக பணியில் 32 ஆண்டுகளை நிறைவு செய்து 33 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நக்கீரன் இதழ் நிர்வாகத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

அச்சு ஊடகங்கள் பெரும் சவாலை சந்தித்து வரும் காலசூழலில் தொடர்ந்து சமரசமின்றி வெகுஜன ஊடகமாக தொடரட்டும்...

இ.உஸ்மான் கான்,
துணை பொதுசெயலாளர்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்.

அல்ஹம்துலில்லாஹ் குளச்சல் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக இதுவரை 465 குடும்பங்களுக்கு கொரானா நிவாரணமாக அத...
19/04/2020

அல்ஹம்துலில்லாஹ்

குளச்சல் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக இதுவரை 465 குடும்பங்களுக்கு கொரானா நிவாரணமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது

காணவில்லை கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவடி விளை பகுதியை சேர்ந்த (நைஸ் வீடு) பாபு உசைன் வயது 28 (மன நலம் பாதிக்கப்பட்...
14/04/2020

காணவில்லை

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவடி விளை பகுதியை சேர்ந்த (நைஸ் வீடு) பாபு உசைன் வயது 28 (மன நலம் பாதிக்கப்பட்டவர்) கடந்த 3 நாள்களாக காணவில்லை இவரை குறித்த தகவல் தெரிந்தவர்கள் கீழ் கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும்

குளச்சல் அஸ்ரப்
தமுமுக முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு
9842420254

ஷபீக்
மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர்
9095204041

பதிவு நாள் : 13/04/2020

Address

Jumma Palli Road Colachel
Colachel
629251

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tmmk kumari trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category