IMK.info

IMK.info this pages contains imk party news , information, and videos ,this pages maintained by IT WING team
(1)

அர்ஜுன் சம்பத் அறிக்கை!தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்து! மக்கள் தீர்ப்ப...
04/05/2026

அர்ஜுன் சம்பத் அறிக்கை!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்து!

மக்கள் தீர்ப்பே! மகேசன் தீர்ப்பு!! ஜனநாயகத்தின் எஜமானர்களாகிய தமிழக வாக்காளப் பெருங்குடி மக்கள் திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பை கொடுத்திருக்கிறார்கள்.

திராவிட மாடல் ஊழல் ஆட்சிக்கு, குடும்ப வாரிசு அரசியலுக்கு தக்க பாடம் புகட்ட திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பை கொடுத்திருக்கிறார்கள்.

இந்து மக்கள் கட்சி-தமிழகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

நல்லாட்சி தர வேண்டுகிறோம்

கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்களை தட்டிக் கேட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கு சரமாரி தாக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் ...
29/04/2026

கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்களை தட்டிக் கேட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கு சரமாரி தாக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்

#வன்மையாக_கண்டிக்கிறோம்

கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்து போராட்டம் நடத்தியதற்காக இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல்...

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்த இந்து மக்கள் கட்சியின் நெல்லை கோட்ட பொறுப்பாளர் திரு பால்ராஜ் அவர்கள் மீது ஆக்கிரமிப்பாளர் கார்த்திக் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து உருட்டு கம்பியால் தலையில் அடித்து கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திரு.பால்ராஜ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக காவல்துறை உண்மை நிலவரத்தை கண்டறிந்து ஆக்கிரமிப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்வதோடு அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுகிறோம். மேலும் தாக்குதலுக்கு உள்ளாகிய இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி திரு.பால்ராஜ் அவர்கள் மீது பொய்யாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டுகிறோம்.

குறிப்பு ; மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தமிழகம் முழுவதும் இது சம்பந்தமான அறவழிப் போராட்டங்களை இந்து மக்கள் கட்சி முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 #ஜனநாயக_கடமை வாக்கு செலுத்திய போது   #தமிழ் திரு  #அர்ஜுன்_சம்பத் அவர்கள்கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி தமிழக சட்டமன்ற தேர...
23/04/2026

#ஜனநாயக_கடமை வாக்கு செலுத்திய போது

#தமிழ் திரு #அர்ஜுன்_சம்பத் அவர்கள்

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026

பெருமை மிகு வாக்காளன்

தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பாக Arjun Sampath  அவர்களுக்கு வாழ்த்து மடல்இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் திரு. ...
20/04/2026

தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பாக Arjun Sampath அவர்களுக்கு வாழ்த்து மடல்

இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் திரு. அர்ஜுன் சம்பத் அவர்களுக்கு இனிய 61வது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 🎉🙏

தமிழக அரசியல் மற்றும் சமூக வாழ்வில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர் திரு. அர்ஜுன் சம்பத் அவர்கள். இந்துத் தர்மத்தின் குரலாக, அதன் உரிமைகள் மற்றும் பாரம்பரியங்களை காக்கும் போராளியாக, பல ஆண்டுகளாக தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று அவரின் 61வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் வழிகாட்டுதலை நினைவுகூரும் நாள் இது.

ஒரு சாதாரண மனிதராக தொடங்கி, தன்னம்பிக்கை மற்றும் உறுதியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த தலைவராக உயர்ந்தவர் நீங்கள்.

சமூகத்தில் இந்துக்கள் எதிர்கொள்ளும் சவால்கள், உரிமை பிரச்சினைகள், மற்றும் மத அடையாள பாதுகாப்பு போன்ற முக்கிய விஷயங்களில் எப்போதும் உங்கள் குரல் உறுதியுடன் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

பல தடைகள், விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் இருந்தாலும், உங்கள் நிலைப்பாட்டை ஒருபோதும் குலைக்காத உறுதி, உங்களை ஒரு உண்மையான தலைவராக உருவாக்கியுள்ளது.

“ இந்துக்களுக்காக வாழும் தலைவன்” என்ற அடையாளத்தை நீங்கள் உங்கள் செயல்களின் மூலம் நிரூபித்துள்ளீர்கள்.

அரசியல் என்பது அதிகாரத்திற்காக மட்டுமல்ல, அது ஒரு சேவை என்று நீங்கள் காட்டியிருக்கிறீர்கள்.

இந்து மக்கள் கட்சியை நிறுவி, அதன் மூலம் இந்துத் சமூகத்தின் உரிமைகளை காக்கும் இயக்கமாக மாற்றியுள்ளீர்கள். உங்கள் வழிகாட்டுதலின் கீழ், பல இளைஞர்கள் அரசியல் மற்றும் சமூக சேவையில் ஈடுபட ஊக்கமடைந்துள்ளனர்.

உங்கள் பேச்சுகள் எப்போதும் நேர்மையையும் தைரியத்தையும் வெளிப்படுத்துகின்றன. உண்மையை நேராகச் சொல்லும் உங்கள் தன்மை, பலருக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது.

எந்த சூழ்நிலையிலும் தளராமல், “இந்துத் சமூகத்தின் நலன் முதன்மை” என்ற நோக்கத்துடன் தொடர்ந்து செயல்படும் உங்கள் மனப்பாங்கு, உங்கள் தலைமைத்துவத்தின் மிகப்பெரிய பலமாகும்.

இன்றைய தலைமுறையில் பலர் வழிகாட்டலை தேடிக்கொண்டிருக்கின்றனர். அந்த வழிகாட்டியாக நீங்கள் திகழ்கிறீர்கள். உங்கள் வாழ்க்கைப் பயணம், கடின உழைப்பின் மதிப்பு, தன்னம்பிக்கை மற்றும் இலக்கை அடைய வேண்டிய உறுதி ஆகியவற்றை கற்றுக் கொடுக்கிறது.

உங்கள் சேவைகள் அரசியல் வரம்பைத் தாண்டி, சமூக மாற்றத்திற்கான ஒரு சக்தியாக மாறியுள்ளது.
நீங்கள் எடுத்துக்கொண்ட பாதை எளிதானது அல்ல. ஆனாலும், அதில் நீங்கள் காட்டிய உறுதி, உழைப்பு மற்றும் தியாகம், உங்களை மக்கள் மனதில் நிலைத்திருக்கும் தலைவராக மாற்றியுள்ளது.

உங்கள் வழியில் பலர் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். அது உங்கள் சாதனையின் மிகப்பெரிய சான்று.

இந்த இனிய நாளில், நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற்று, மேலும் பல சாதனைகள் செய்ய வேண்டும் என்று மனமார வேண்டுகிறோம்.

உங்கள் வழிகாட்டுதலில், இந்து மக்கள் கட்சி மேலும் பல உயரங்களை எட்டும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.

உங்கள் சேவை தொடர வேண்டும், உங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும், உங்கள் வழிகாட்டுதல் மேலும் பலருக்கு உத்வேகமாக இருக்க வேண்டும்.

இந்து மக்கள் கட்சியின் it wing சார்பில், இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 🙏

“ இந்துக்களுக்காக வாழும் தலைவர் என்றும் மக்களின் மனதில் நிலைத்திருப்பார்.”
“தர்மத்தை காக்கும் போராளி என்றும் வெற்றியடைவார்.”

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 🎂🎉

Hariharan Premkumar
மாநிலத் தலைவர்
தகவல் தொழில்நுட்ப பிரிவு
இந்து மக்கள் கட்சி தமிழகம்

திண்டிவனம் மற்றும் மைலம் பகுதியில்  இந்துக்களின் முதல்வர் தமிழ் திரு அர்ஜுன் சம்பத் அவர்களுடன் இந்து மக்கள் கட்சி நிர்வா...
20/04/2026

திண்டிவனம் மற்றும் மைலம் பகுதியில் இந்துக்களின் முதல்வர் தமிழ் திரு அர்ஜுன் சம்பத் அவர்களுடன் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு சி வி சண்முகம் அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த நிகழ்வு

*மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நேற்று கோவை கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரித்து சட்...
19/04/2026

*மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நேற்று கோவை கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரித்து சட்டமன்றத் தேர்தல் பரப்புரை ஆற்றினார்*

*முன்னதாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கோவை விமான நிலையத்தில் இந்துக்களின் முதல்வர் தமிழ்த்திரு அர்ஜூன் சம்பத் அவர்கள் வரவேற்பு அளித்தபோது எடுக்கப்பட்ட படம்*

இன்று  போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணி  வேட்பாளரான தேனி.V.T. நாராயணசாமி அவர்களை சந்தித்து இந்துக...
18/04/2026

இன்று போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான தேனி.V.T. நாராயணசாமி அவர்களை சந்தித்து இந்துக்களின்முதல்வர் தமிழ் திரு அர்ஜுன் சம்பத் அவர்களின் உத்தரவின் படி இந்து மக்கள் கட்சியினுடைய ஆதரவை அவருக்கு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி உடன் மாநிலச் செயலாளர் தா வசந்தகுமார் மற்றும் மாவட்ட நிர்வாகி வேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

18/04/2026

எம்மதமும் சம்மதம் என்பது இந்துக்களுக்கு மட்டும் தானா | அர்ஜுன் சம்பத் கேள்வி

18/04/2026

திமுக விற்கும் ஸ்டாலினிற்கும் | இந்துக்களின் முதல்வர் தமிழ் திரு அர்ஜுன் சம்பத் அவர்கள் கண்டனம்இந்துக்களின் முதல்வர் தமிழ் திரு அர்ஜுன் சம்பத் அவர்கள்

தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணி  சார்பில் திருப்பரங்குன்றத்தில் போட்டியிடும் ராஜன் செல்லப்பா அவர்களை இந்துக்களின் முதல்வர...
18/04/2026

தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணி சார்பில் திருப்பரங்குன்றத்தில் போட்டியிடும் ராஜன் செல்லப்பா அவர்களை இந்துக்களின் முதல்வர் இந்து மக்கள் கட்சியை நிறுவனத் தலைவர் தமிழ்த் திரு அர்ஜுன் சம்பத் அவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் மேலும் திரு ராஜா பட்டர் அவர்களை சந்தித்து கள நிலவரங்களை கேட்டறிந்தார்

17/04/2026

இந்துக்களுக்கு பிரச்சனை என்றால் ? | Arjun Sampath அங்கு இருப்பார்

Address

Indu Makkal Katchi 131, Kempattycolony Ukkadam Coimbatore
Coimbatore
641001

Alerts

Be the first to know and let us send you an email when IMK.info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to IMK.info:

Share