Bhuvanagiri Assembly Thondan.K.Nishanthan Ammk

Bhuvanagiri Assembly Thondan.K.Nishanthan Ammk Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bhuvanagiri Assembly Thondan.K.Nishanthan Ammk, Political Party, Sethiyathope, Chidambaram.

       #மக்களின்குரலாய்_TTV  ிவகங்கை
22/02/2024

#மக்களின்குரலாய்_TTV ிவகங்கை

19/02/2024
ராமநாதபுரம் ஒருங்கிணைத்த மாவட்ட கழகம் சார்பில் கழக செயல் வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் க...
03/02/2024

ராமநாதபுரம் ஒருங்கிணைத்த மாவட்ட கழகம் சார்பில் கழக செயல் வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்,

கழகப் பொதுச் செயலாளர், மக்கள் செல்வர், வருங்கால தமிழக முதல்வர் அண்ணன் திரு. #டிடிவி_தினகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


12/12/2023

ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவித்த நிவாரணத் தொகை முழுமையாக சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

புயல் கடந்து சென்றாலும் அதன் தாக்கம் இன்றளவும் குறையவில்லை என்பதற்கு தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, பள்ளிக்கரணை, நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வடியாமல் இருக்கும் மழைநீரே சிறந்த உதாரணம்.

புயல், வெள்ள பாதிப்பால் இழந்த வாழ்வாதாரத்தை மீட்க அரசு அறிவித்திருக்கும் 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை போதுமானதாக இருக்காது என பொதுமக்கள் வைத்துள்ள குற்றச்சாட்டு ஒரு புறமிருக்க நியாய விலைக்கடைகள் மூலமாக விநியோகிக்கப்படும் நிவாரணத் தொகை ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடு இன்றி முழுமையாக கிடைக்குமா? என்ற கேள்வியும் அச்சமும் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதே நேரத்தில், குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு மட்டுமல்லாமல், குடும்ப அட்டை இல்லாதவர்கள், குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்கள், வீடுகளின்றி சாலையோரங்களில் தங்கியிருக்கும் குடும்பத்தினருக்கும் வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடின்றி அரசு அறிவித்திருக்கும் நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்வதோடு, குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

07/12/2023

பொதுமக்கள் மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் போது கார் பந்தயம் அவசியமா | TTVDhinakaran | AMMK

06/12/2023

*மாவட்ட கழக அறிவிப்பு*

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாக சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம், நிர்வாகிகள் பட்டியல் சரிபார்ப்பு, பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் மண்டல பொறுப்பாளர், கழக துணைப் பொதுச் செயலாளர் , திரு எம்.ரெங்கசாமி அவர்கள் தலைமையில் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு அருகில் ( விருத்தாசலம் சாலை) JK திருமண மஹாலில் 08-12-2023 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர,பேருராட்சி கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் மாவட்ட,ஒன்றிய, நகர, பேரூராட்சி சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஊராட்சி,கிளை,வார்டு கழக செயலாளர்கள் மற்றும் கழகத்தின் உயிர் நாடியான தொண்டர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்‌.

ரா.மோகன் B,sc MC
மாவட்ட கழக செயலாளர், கடலூர் மேற்கு.

06/12/2023


ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தியவரும், இந்திய அரசியல் சாசனத்திற்கு எழுத்து வடிவம் தந்தவருமான பாரத ரத்னா டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் இன்று.

கல்வியாளராக, பொருளாதார நிபுணராக, சட்டமேதையாக, சமூகநீதிப் போராளியாக, புரட்சியின் சின்னமாக இந்திய தேசியத்தைக் கட்டியெழுப்பி மகத்தான ஆளுமையாகத் திகழ்ந்த அம்பேத்கர் அவர்களின் பங்களிப்பை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.

05/12/2023
04/12/2023

🔴 கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அவர்களின் முக்கிய அறிவிப்பு...

இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாளை சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்னை நோக்கி இன்றே புறப்பட இருப்பதை நான் அறிவேன்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையாலும், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையாலும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களின் பயணத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மாறாக, அவரவர் வசிக்கும் பகுதிகளில் அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்தி, துரோக கூட்டத்தை அகற்றி அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை அமைக்க உறுதியேற்குமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

#டிடிவிதினகரன்

Address

Sethiyathope
Chidambaram
608702

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhuvanagiri Assembly Thondan.K.Nishanthan Ammk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share