SDPI பாலவாக்கம் Imran

SDPI பாலவாக்கம்

Imran 1. "SDPI - Social Democratic Party of India
2. Social Service

கோவையில் சிறுமி கடத்தப்பட்டு கொடூர கொலை: தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல்! - SDPI கட்சி கடும் கண...
24/05/2026

கோவையில் சிறுமி கடத்தப்பட்டு கொடூர கொலை: தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல்! - SDPI கட்சி கடும் கண்டனம்

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. மனிதநேயமுள்ள எவராலும் சகித்துக்கொள்ள முடியாத இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகச் சட்டங்கள் எவ்வளவுதான் கடுமையாக்கப்பட்டாலும், குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதில் ஏற்படும் காலதாமதமும், சட்டச் சலுகைகளும் குற்றப்பின்னணி கொண்டவர்களுக்குப் பெருந்துணிச்சலை ஏற்படுத்தி, இதுபோன்ற கொடூரங்கள் தொடர்கதை ஆகக் காரணமாகின்றன. வெறும் சட்டப் புத்தகங்களால் மட்டும் குற்றங்களைத் தடுத்துவிட முடியாது; சமரசமற்ற கடும் நடவடிக்கையும், காலதாமதமற்ற விரைவான புலனாய்வும், உறுதியான அதிரடித் தண்டனையுமே இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

அண்டை வீட்டைச் சேர்ந்த, தெரிந்த நபர்களே இந்தக் கொடூரத்தை அரங்கேற்றியிருப்பது, நம் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு எவ்வளவு பெரிய பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்பதை உணர்த்துகிறது. பெண்களுக்கும், பிஞ்சுப் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற ஒரு மாநிலமாகத் தமிழகம் மாறிவருவது மிகுந்த அச்சத்தையும் வேதனையையும் அளிக்கிறது.

எனவே, தமிழக அரசும், காவல்துறையும், நீதித்துறையும் இணைந்து இவ்விவகாரத்தில் உடனடியாகவும் உறுதியாகவும் தலையிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வழக்கை விரைவு நீதிமன்றம் மூலம் விசாரிப்பதோடு, எவ்விதச் சலுகையும் இன்றி, மற்றவர்களுக்குப் பாடமாய் அமையும் வகையில் மிகக் கடுமையான தண்டனை விரைவாகப் பெற்றுத்தரப்பட வேண்டும்.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள குடியிருப்புப் பகுதிகள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். வெற்று வார்த்தைகளால் ஆறுதல் கூறுவதை நிறுத்திவிட்டு, இனி ஒரு பெண் குழந்தைக்குக்கூட இத்தகைய கொடூரம் நிகழக் கூடாது என்கிற அடிப்படையில் தமிழக அரசும், நீதித்துறையும் போர்க்கால அடிப்படையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை எஸ்டிபிஐ கட்சி துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அமைச்சர்களுக்கு முக்கியத் துறைகளை வழங்கிடுக! – தமிழக முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கைஇதுதொடர்பாக எஸ்டிபிஐ க...
23/05/2026

முஸ்லிம் அமைச்சர்களுக்கு முக்கியத் துறைகளை வழங்கிடுக! – தமிழக முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தவெக தலைமையிலான தமிழக அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில், கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான் அவர்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திண்டிவனம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு அவர்களுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளதை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது.
அதேவேளையில், சமூக நீதியின் அடிப்படையில் இந்த அமைச்சரவை விரிவாக்கத்தை உற்றுநோக்கும்போது சில நியாயமான ஆதங்கங்களை முன்வைக்க வேண்டியது அவசியமாகிறது. அனைத்துச் சமூகங்களுக்கும் சமூகநீதி அடிப்படையில் அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விடக் கூடுதல் இடங்கள் இந்த தவெக அரசில் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் மிகக் குறைவாகவே உள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அனைத்து சமூகத்தின் பங்களிப்பையும் உரிய பிரதிநிதித்துவத்தையும் உறுதிபடுத்த வேண்டியது இந்த அரசின் கடமையாகும்.
எனவே, ஆளுங்கட்சியான தவெக-விலிருந்தும் வெற்றிபெற்றுள்ள கூடுதலான முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் இடங்களை ஒதுக்கீடு செய்திட வேண்டும். வார்த்தைக்கு வார்த்தை சமூகநீதியை காக்கும் அரசு என கூறும் இந்த அரசில் தமிழக அமைச்சரவையில் குறைந்தது ஐந்து முஸ்லிம் அமைச்சர்களாவது இடம்பெறுவதை மாண்புமிகு முதல்வர் அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், முஸ்லிம் பெயர் என்பதற்காக சிறுபான்மையினர் நலத்துறை என்ற வழக்கமான, சுருக்கப்பட்ட எல்லைகளுக்குள் மட்டும் முஸ்லிம் அமைச்சர்களை முடக்கிவிடக் கூடாது. அடையாள அரசியலுக்காக வெறும் பெயரளவு துறைகளை மட்டும் ஒதுக்காமல்; அண்டை மாநிலமான கேரளாவில் கூட்டணி கட்சியாக இருந்தாலும் முஸ்லிம் லீக் அமைச்சர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் கல்வி, தொழில், வருவாய் உள்ளிட்ட அரசின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் முக்கியத் துறைகளையும் முஸ்லிம் அமைச்சர்களுக்கு வழங்கிட முன்வர வேண்டும். அதிகாரப் பகிர்வும், சமத்துவமான துறை ஒதுக்கீடும் மட்டுமே உண்மையான சமூக நீதியை நிலைநாட்டும் என்பதால், பரந்துபட்ட பார்வையில் இக்கோரிக்கையைப் பரிசீலித்து, அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்திற்கான உரிய பங்கீட்டை முதல்வர் அவர்கள் உரிய பொறுப்புகளை வழங்கிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாளை தலைநகரம் டெல்லியில் SDPI கட்சியின் இளைஞர் அணி "young democrat" கொடி அறிமுகம் விழா தேசிய தலைவர் MK பைஜி தலைமையில் நட...
14/05/2026

நாளை தலைநகரம் டெல்லியில் SDPI கட்சியின் இளைஞர் அணி "young democrat" கொடி அறிமுகம் விழா தேசிய தலைவர் MK பைஜி தலைமையில் நடைபெற இருக்கிறது.

மிக விரைவில் தமிழ்நாட்டில் எழுச்சியுடன்!

  | "சட்டமன்றத்தில் காட்டிய கண்ணியம் சில மணிநேரங்களிலேயே மறைந்துவிட்டது.."-நெல்லை முபாரக், SDPI மாநிலத் தலைவர்  |
13/05/2026

| "சட்டமன்றத்தில் காட்டிய கண்ணியம் சில மணிநேரங்களிலேயே மறைந்துவிட்டது.."

-நெல்லை முபாரக், SDPI மாநிலத் தலைவர்

|

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற புதிய அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தின் போது, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ...
13/05/2026

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற புதிய அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தின் போது, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் (Chief Minister of Tamil Nadu) திரு.விஜய் அவர்கள் (TVK Vijay) நிதானமாகவும் முதிர்ச்சியுடனும் பதிலளித்தார். "பழைய திட்டங்கள் தொடரும்; ஆலோசனைகள் ஏற்கப்படும்" என்கிற அவரது நாகரிகமான அணுகுமுறை, தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பலரும் நம்பினர்.

ஆனால், சட்டமன்றத்தில் அவர் காட்டிய அந்த கண்ணியம் சில மணிநேரங்களிலேயே மறைந்துவிட்டது. வீடு திரும்பியவுடன் அவர் வெளியிட்ட அறிக்கையில், எதிர்க்கட்சியினரை "புளித்துப்போன வாதம்", "ஏகாம்பரம்" என ஏளனமான சொற்களால் கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டமன்ற விவாதங்களுக்கு அங்கேயே பதிலளித்து முற்றுப்புள்ளி வைக்காமல்,வீட்டுக்கு வந்து அறிக்கை வாயிலாகக் கோபத்தை வெளிப்படுத்துவது முதிர்ச்சியான நடவடிக்கை அல்ல. குறிப்பாக, கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவு குறித்த முதல்வரின் அறிக்கை நயநாகரிகமான ஒன்றல்ல.

சபையில் ஒரு முகத்தையும், அறிக்கையில் வேறொரு முகத்தையும் காட்டுவது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும். பேரறிஞர் அண்ணாவின் கனிவைப் பின்பற்றுவதாகக் கூறும் மாண்புமிகு முதல்வர் அவர்கள், தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்துப் பெருந்தன்மையுடன் செயல்பட வேண்டும். தமிழக மக்கள் எதிர்பார்ப்பது இது போன்ற 'அறிக்கைப் போர்களை' அல்ல; மாறாக ஆக்கப்பூர்வமான பணிகளையே என்பதை உணர்ந்து, முதல்வர் அவர்கள் தனது அரசியல் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

-முகம்மது முபாரக்,
தலைவர், SDPI கட்சி, தமிழ்நாடு.

08/05/2026

தவெகவினர் போராட்டம்

விஜய் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரி ஆளுநர் மாளிகை முன் தவெகவினர் போராட்டம்

ஆளுநருக்கு எதிராக பெரியண்ணா பட இயக்குநர் சுரேஷ் போராட்டம்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு, ஆட்சி அமைக்க ...
07/05/2026

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு, ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும். இதுவே ஜனநாயகத்தின் மாண்பு.

ஆனால், ​மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சிக்கு, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை மறுக்கும் ஆளுநரின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆளுநரின் இந்தத் தாமதம் தமிழக மக்களின் தீர்ப்பை அவமதிப்பதாகும்.

​எனவே, தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தாமல் தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். மேலும், இந்த ஜனநாயக விரோதச் செயலுக்குப் பின்னால் இருக்கும் ஆளுநரையும், அவருக்குத் துணை நிற்கும் ஒன்றிய பாஜக அரசையும், தவெக தலைவர் விஜய் அவர்கள் மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டும்.

-முகம்மது முபாரக்
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.

தமிழகத்தினுடைய முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் ஆகிய மதிப்புக்குரிய திரு.மு.க.ஸ்டாலின் அவர...
07/05/2026

தமிழகத்தினுடைய முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் ஆகிய மதிப்புக்குரிய திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்களுடன் மாநில நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சென்று சந்தித்தோம். திமுக திருவாரூர் மாவட்ட செயலாளர் அண்ணன் பூண்டி கலைவாணன் அவர்கள் உடன் இருந்தார்

07/05/2026

தேசிய அளவில் பாசிச எதிர்ப்பு அரசியலுக்கு முன்னுரிமை வழங்கி , உடனடி பலனை விட நீண்டகால நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தமிழக காங்கிரஸ் ஒரு வரலாற்று பிழைக்கு துவக்கம் குறித்திருப்பது சந்தர்ப்பவாதமே….

VMS முகம்மது முபாரக் MA.,
SDPI - தமிழ்நாடு

தேசிய அளவில் பாசிச எதிர்ப்பு அரசியலுக்கு முன்னுரிமை வழங்கி , உடனடி பலனை விட  நீண்டகால நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் க...
07/05/2026

தேசிய அளவில் பாசிச எதிர்ப்பு அரசியலுக்கு முன்னுரிமை வழங்கி , உடனடி பலனை விட நீண்டகால நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தமிழக காங்கிரஸ் ஒரு வரலாற்று பிழைக்கு துவக்கம் குறித்திருப்பது சந்தர்ப்பவாதமே….

VMS முகம்மது முபாரக் MA.,
மாநிலத் தலைவர்
SDPI - தமிழ்நாடு

  | கொளத்தூரில் நன்றி கூறிய மு.க.ஸ்டாலின்..கண்ணீர் விட்ட தொண்டர்கள்  |   |   |
06/05/2026

| கொளத்தூரில் நன்றி கூறிய மு.க.ஸ்டாலின்..கண்ணீர் விட்ட தொண்டர்கள்

| | |

Address

Sholinganallur
Chennai
600041

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI பாலவாக்கம் Imran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share