Sinthanai Selvan

Sinthanai Selvan General Secretary - Viduthalai Chiruthaigal Katchi (VCK) | Ex-MLA of Kattumannarkoil

அன்பு இளவல் தமிழ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!இன்று பிறந்தநாள் காணும் என்னுடைய மனம் நிறைந்த அன்பு இளவல், வழக...
17/08/2026

அன்பு இளவல் தமிழ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

இன்று பிறந்தநாள் காணும் என்னுடைய மனம் நிறைந்த அன்பு இளவல், வழக்கறிஞர் தமிழ் அவர்களுக்கு என் இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் எல்லா வளமும் நலமும் பெற்று நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், நிறைவுடனும் நீண்ட நெடுங்காலம் வாழ்வாங்கு வாழ வேண்டுமென மனம் நிறைந்து வாழ்த்தி மகிழ்கிறேன்.

நெருக்கடியான பல தருணங்களில் என்னோடு இருந்து, ஒரு தாயைப் போலவும், உற்ற நண்பனைப் போலவும் என்னை ஆற்றுப்படுத்திய அவரது அன்பையும், அக்கறையையும், துணைநின்ற தருணங்களையும் இன்று நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

அந்த அன்பும் நட்பும் என்றும் தொடர வேண்டும். அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிட்ட வேண்டும்;

வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் மகிழ்ச்சியும் மனநிறைவும் பெருக வேண்டுமெனவும் , உடல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும், நிறைவான வாழ்வு வாழ நெஞ்சார வாழ்த்தி மகிழ்கிறேன்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், தமிழ்…! 🎂🌹

- சிந்தனை செல்வன்

உடன்பிறப்பு என்ற சொல்லால் உலக தமிழர்களை பிணைத்த சமத்துவ பெரியார் முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு எம் வீர வணக்கம். பதினாறாம் ...
07/08/2026

உடன்பிறப்பு என்ற சொல்லால் உலக தமிழர்களை பிணைத்த சமத்துவ பெரியார் முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு எம் வீர வணக்கம்.

பதினாறாம் நூற்றாண்டில் பிரவகித்த உழைக்கும் மக்களின் விடுதலை தாகம் மன்னராட்சிகளுக்கு முடிவுரை எழுதியது. அதன் பிறகு உலகெங்கும் மக்களாட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய அரசுகள் உருவாயின.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பது தேசிய அரசுகளின் அடித்தளம். இவற்றில் சுதந்திரமும், சமத்துவமும், சட்டத்தின் வழி பெறக்கூடியன. ஆனால் சகோதரத்துவம் என்பது அந்த தேசிய இனத்தின் ஆன்மாவாக தன்னியல்பாய் அமைய வேண்டிய ஒன்று.

சாதி எனும் சமூக அநீதியால் தமிழ் சமூகம் தனது சகோதரத்துவம் எனும் உயிர்தன்மையை இழந்து கிடந்த போது அதை மீட்டெடுக்க கலைஞர் பயன்படுத்திய ஒரு சொல் ஆயுதம்தான் ….

உடன்பிறப்பே என்ற உன்னத சொல்.

அரசமைப்பு சாசனத்தின் பண்பாட்டு மொழி பெயர்ப்பு…!
அது தமிழுக்கும் தமிழருக்கும் உயிர்சொல்…!

சமூகநீதியின் வழி சகோதரத்துவத்தை உயிர்ப்பிக்கும் பயணத்தில் கலைஞர்
நம் கலங்கரை விளக்கம்.

சாதி ஒழிப்புக்களத்தில் ….
உடன்பிறப்பாய் ஒன்றிணைவோம் ♥️

சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னால், எஸ்சி, எஸ்டி மேம்படுத்தும் செயல்திட்டங்களுக்கு ஒப்ப...
04/08/2026

சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னால், எஸ்சி, எஸ்டி மேம்படுத்தும் செயல்திட்டங்களுக்கு ஒப்புதல் பெரும் வகையில் அதற்கான மாநில கவுன்சிலை இன்று (04.08.26) தமிழக அரசு கூட்டியுள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனதார வரவேற்கிறோம்.

இக்கூட்டம் மாண்புமிகு தமிழகம் முதல்வர் அவர்களின் தலைமையில் இன்று முற்பகலில் நடைபெறவுள்ளது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முன் வைக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று மாநில கவுன்சிலை கூட்டி ஆய்வுசெய்ய முன்வந்துள்ள தமிழக அரசுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கட்கும் , உரிய முன் முயற்சிகளை மேற்கொண்ட மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் அவர்கட்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழக அரசின் அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் , சேவைகளும் , நிர்வாகப்பணிகளும் அரசின் நாற்பத்து மூன்று (43) செயலாக்கத்துறைகள் (Administrative departments) மூலமே நடைபெற்று வருகின்றன. இத்துறைகள் மூலம் செயற்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களிலும் SC/ST மக்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப நிதி ஒதுக்கப்பட்டு அவர்களது மேம்பாட்டிற்கு அது செலவிடப்பட வேண்டும் என்பதுதான் சிறப்பு உட்கூறு திட்டம் எனப்படுகிறது.

இத்திட்டத்தை நடைமுறை படுத்திட ஒன்றிய அரசால் சட்டம் ஏதும் கொண்டு வரப்படாததால் கடந்த அய்ம்பது ஆண்டுகளாக இந்திய மாநிலங்களில் இத்திட்டம் முறைப்படி நடைமுறைபடுத்தப்படவில்லை.

இந்நிலையில் இந்த சிறப்பு உட்கூறு திட்டத்தை சட்டப்பூர்வமாக உறுதிபடுத்துவதற்காக தமிழகத்தில் கொண்டுவரப்பெற்ற வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த திட்டமே Sc/ST Development action plan act - 2024 ஆகும். இதன்படி அனைத்து செயலாக்கத்துறைகளும் தத்தமது துறைகளில் SC/ST மேம்படுத்தும் செயல் திட்டங்களை உருவாக்கி இச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாநில கவுன்சிலின் ஒப்புதலை கட்டாயம் பெறவேண்டும். இவ்வொப்புதலை பெற்றப்பிறகே சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.

சமூகநீதிப்பயணத்தில் மைல்கல் எனப்போற்றப்பட வேண்டிய இச்சட்டத்தை தெளிந்த மனதுடனும் திறந்த மனதுடனும் முழுமையாக நடைமுறை படுத்திட முன்வர வேண்டும் என தமிழக முதல்வரை நம்பிக்கையுடன் வேண்டுகிறேன்.

இச்சட்டத்தின் படி ஒவ்வொரு செயலாக்கத்துறைகளும் தமது துறைவழி நடைமுறை படுத்தப்படும் திட்டங்களில் வரையறுக்கப்பட்ட வளர்ச்சி குறியீடுகளை (Development index) விளிம்பு நிலைச்சமூகங்களான SC/ST மக்கள் அடைந்திருக்கின்றனரா என ஆய்வு செய்து மைய நீரோட்ட சமூகங்களின் வளர்ச்சிக்கும் SC/ST மக்களின் வளர்ச்சிக்கும் இடையே உள்ள இடைவெளிகளை கண்டறிய வேண்டும்.

அந்த இடை வெளிகளை இட்டு நிரப்பி சமச்சீரான வளர்ச்சியை எட்டிட உரிய செயல் திட்டங்களை ஒவ்வொரு துறையும் உருவாக்க வேண்டும். அதற்கு இச்சட்டத்தின் படி அமைக்கப்பட்ட மாவட்ட கவுன்சிலின் பரிந்துரைகளை பெறுவது , இம்மக்களுக்காக பணியாற்றிவரும் தொண்டு நிறுவனங்கள் , சேவை அமைப்புகள் ஆகியவற்றின் செயற்பாட்டாளர்களையும் , உரிய நிபுணர்களையும் கலந்தாலோசிப்பது ஆகிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். துறை தமது SC/ST மேம்படுத்தும் செயல் உருவாக்கியப்பின் இச்சட்டத்தின்படி வடிவமைக்கப்பட்டுள்ள படிவம் 1 மற்றும் படிவம் 2 ன் வழி சமர்ப்பித்து சமூக நீதித்துறையின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதன் பிறகே இந்த முன் மொழிவுகள் அதாவது 43 செயலாக்கத்துறைகளின் மேம்படுத்தும் செயல் திட்டங்கள் ( Sc/St development action plan) மாநில கவுன்சிலின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட வேண்டும்.

மேற்சொன்ன திட்டங்கள் அனைத்தையிம் மாநில மன்றம் கூர்ந்தாய்வு செய்து தேவைப்படும் திருத்தங்களுடன் தனது இறுதி ஒப்புதலை வழங்க வேண்டும் என்பதே சட்டப்பூர்வமான நடைமுறையாகும். இப்பணி மகத்தானது என்பதோடு கடினமானதும் கூட. தமிழக அரசு ஆண்டொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் கோடிக்கு மேல் நலத்திட்ட செலவினங்களுக்கு ஒதுக்கீடு செய்து வருகிறது. அதில் SC/ST Development action plan எனப்படும் மேம்படுத்தும் திட்டங்களுக்கு சுமார் இருபதாயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இவ்வளவு பெரும் நிதியில் உருவாக்கப்படும் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதெற்கென கூட்டப்படுவதே இம்மாநில கவுன்சிலாகும்.

மேற்சொன்ன பணிகள் ஆண்டு முழுமையும் கருதிப்பார்க்கப்பட வேண்டிய பணிகளாகும். எனவே இம்மாநில மன்றம் ஆண்டு முழுமைக்கும் செயல்பட்டால்தான் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த இறுதி கூட்டத்தில் முறையான ஒப்புதலை பெறவியலும்.

ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இறுதி தேர்வுக்காக ஆண்டு முழுவதும் பள்ளிக்கூடங்களில் வகுப்புகள் நடைபெறுவதைப்போல மாநில மன்றம் ஆண்டுக்கொருமுறை மாண்புமிகு முதல்வரின் தலைமையில் இறுதி ஒப்புதலுக்காக கூட்டப்பெற்றாலும் கவுன்சிலின் கவனமும் , பணியும் ஆண்டு முழுவதும் பல தளங்களில் தேவை என்பதை உணர்வது அவசியமாகும்.

எது எவ்வாறாயினும் தமிழக வரலாற்றில் முதன்முறையாக இப்படியொரு மாநில கவுன்சில் அமர்வை கூட்டியுள்ள தமிழக அரசுக்கு மீண்டும் எனது நன்றியை பதிவுசெய்கிறேன். மாநில மன்றத்தின் உறுப்பினர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்

01/08/2026

அன்பு இளவல் இசையரசு அவர்கள் தந்தை சார்லசு அவர்களின் படத்திறப்பு நிகழ்வில்..

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் SC /ST developmen...
22/07/2026

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் SC /ST development action plan act -2024 சட்டத்தின்படி அதன் மாநில கவுன்சிலை கூட்ட வேண்டும். அக்கவுன்சிலின் ஏற்பிசைவை பெற்ற பின்னரே நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவேண்டும் எனும் சட்டப்பூர்வ செயல் முறையை தமிழக அரசு நடைமுறை படுத்திட வேண்டும்.

தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் வேண்டுகோள்.
_________________________
பெறல்
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் ,
தலைமை செயலகம்
சென்னை.

அன்புடையீர் வணக்கம்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுத்திட்டத்திற்கான சட்டம் 2024 (SC/ST Development action plan Act ) கொண்டு வரப்பெற்று அதை நடைமுறை படுத்துவதற்கான விதிமுறைகளும் வகுக்கப்பட்டு அரசிதழிலும் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. SC/ST மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தை சட்டபூர்வ நடைமுறையாக மாற்றியுள்ள இச்சட்டம் தமிழ்நாட்டின் சமூக நீதிப்பயணத்தில் மிக மிக முக்கியமான மைல் கல்லாகும்.

இச்சட்டத்தின் படி தமிழக அரசு நிதி நிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன் இச்சட்டத்தால் நிறுவப்பட்டுள்ள மாநில மன்றத்தின் ( DAP - State council )ஒப்புதலை பெற வேண்டும்.

இந்த கவுன்சில் மாண்புமிகு முதல்வரின் தலைமையில் கூட்டப்பெற வேண்டும். அதில்
அரசின் பல்வேறு செயலாக்கத்துறைகள் செயற்படுத்தும் நலத்திட்டங்களுக்காக (welfare expenditure)ஒதுக்கப்படும் நிதியொதுக்கங்களில் பட்டியல் வகுப்பார் மற்றும் பழங்குடி மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப உரிய விகிதாச்சாரப்படி அம்மக்களின் மேம்பாட்டிற்கென நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திட வேண்டும்.
இரண்டாவதாக ஒவ்வொரு துறையும் தமது துறையில் SC/ST மக்களுக்கான சிறப்பு திட்டங்களை உருவாக்குதல்( Development action plan), நடைமுறை படுத்துதல் மற்றும் கண்காணித்தல் உள்ளிட்டப்பணிகளை செய்வதற்கான institutional arrangements நிர்வாக கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திட வேண்டும்.

அவ்வாறு உருவாக்கப்பட்ட செயற்திட்டங்களில் இவ்வாண்டு நடைமுறை படுத்துவதற்கான Development action plan திட்டங்களை pre budget proposal- லாக முகமை துறைக்கு அதாவது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ( சமூக நீதித்துறை) சமர்ப்பிக்க வேண்டும். இதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள படிவம் 1 மற்றும 2 ன் வழி இது சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதலை பெற்றுள்ளனவா என்பதையும் இந்த கவுன்சில் கண்காணிக்க வேண்டும்.

அதாவது சட்டப்பேரவையின் நடப்பாண்டு கூட்டத்தொடரில் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன் முன்மொழியப்படவிருக்கும் அனைத்து நலத்திட்டங்களும் மேற்படி சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள மாநில கவுன்சிலின் ஏற்பிசைவை பெற வேண்டும் என்பதையும் அன்புடன் நினைவூட்டிட விரும்புகிறேன்.

இவை அனைத்தும் இச்சட்டத்தில் உள்ள அம்சங்களே என்பதையும் ஆகவே அவற்றை இமியளவும் பிசகாமல் கனிவுடன் நடைமுறை படுத்திட உடனே மாநில கவுன்சிலை கூட்டிட வேண்டுமென மாண்புமிகு தமிழக முதல்வரை நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இது தொடர்பில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் அவர்களும் , நானும் ஜூன் முதல் வாரத்தில் அரசு தலைமைச்செயலாளரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள

சிந்தனை செல்வன்
பொதுச்செயலாளர்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி

பின் இணைப்பு:

1. இது தொடர்பில் கடந்த 09.06.2026 அன்று தலைமைச் செயலாளரிடம் சமர்ப்பித்த மனுவின் நகல்.

2. 2024 SC /ST DAP Act and rules

இன்று பிறந்தநாள் பொன்விழா காணும் அன்பு இளவல் மன்னையின் மானுடம் தோழர் மணவாளன் அவர்கட்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்து...
22/07/2026

இன்று பிறந்தநாள் பொன்விழா காணும் அன்பு இளவல் மன்னையின் மானுடம் தோழர் மணவாளன் அவர்கட்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா வளமும் நலமும் பெற்று அவர் வாழ்வாங்கு வாழ வேண்டுமென நெஞ்சார வாழ்த்தி மகிழ்கிறேன்.

என் மனம் நிறைந்த அன்பு இளவல் இசையரசு அவர்களின் தந்தை திரு.சார்லஸ் நேற்றிரவு உடல்நலமின்றி மரணமடைந்த தகவலறிந்து அதிர்ச்சிய...
21/07/2026

என் மனம் நிறைந்த அன்பு இளவல் இசையரசு அவர்களின் தந்தை திரு.சார்லஸ் நேற்றிரவு உடல்நலமின்றி மரணமடைந்த தகவலறிந்து அதிர்ச்சியும் ஆற்றொணா துயருமடைந்தேன். கொம்மேடு கிராமம் சென்று ஆசிரியர் திரு தபேலா சார்லஸ் அவர்கட்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன்.

என் உடன் தம்பி மண்டல துணைச்செயலாளர் தனஞ்செயன் , மாவட்ட துணைச்செயலாளர் ராஜாராமன் , காரை நாகசாமி, பிரவீன்குமார் மற்றும் வெளிச்சம் நித்தியவான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sinthanai Selvan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category