சென்னை மண்டலம் தகவல் தொழில்நுட்ப அணி

  • Home
  • India
  • Chennai
  • சென்னை மண்டலம் தகவல் தொழில்நுட்ப அணி

சென்னை மண்டலம் தகவல் தொழில்நுட்ப அணி News/TmmkMedia

25/08/2026

"இஸ்லாமிய சமுதாயம் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னேற காரணமாக இருந்த திமுகவை கொச்சைப்படுத்துவதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது"

தவெக உறுப்பினர் முஸ்தஃபா பேச்சுக்கு பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா MLA பதிலடி

|

தமுமுகவின் 32ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிகள் https://www.facebook.com/share/p/1HzmynvwEk/
22/08/2026

தமுமுகவின் 32ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிகள் https://www.facebook.com/share/p/1HzmynvwEk/

தமுமுகவின் 32ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிகள்

#தமுமுக32

11/08/2026

"பல்வேறு சிறுபான்மையின அமைப்புகள் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி கல்விக்கண் திறந்து வைத்தன என்பது மறுக்க முடியாத உண்மை.."

-FCRA மசோதாவிற்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக பேரவையில் மமக எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா பேச்சு
https://www.facebook.com/share/v/1Jq78KpYbG/

சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் மமக பொதுச்செயலாளர் பங்கேற்புசென்னையில் ஆகஸ்டு 21 அன்று அரசமைப்புச் சட்டப் பாதுகா...
11/08/2026

சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் மமக பொதுச்செயலாளர் பங்கேற்பு

சென்னையில் ஆகஸ்டு 21 அன்று அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெறவுள்ள மாநாடு குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது,Ex,MLA கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வடக்கு மாவட்ட தலைவர் தாஹா நவின் ,தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் முகம்மது அலி ஜின்னா,மத்திய சென்னை தெற்கு மாவட்ட தலைவர் E.M.ரசூல்,வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ராயபுரம் அலி
ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.

பழனி நில மோசடி: “சிறையில் அன்வர்தீன் மரணம்: சந்தேகங்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!”மனிதநேய மக்கள் கட்சியின்...
08/08/2026

பழனி நில மோசடி: “சிறையில் அன்வர்தீன் மரணம்: சந்தேகங்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!”

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலம் வெறும் ரூ.2 கோடிக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் வழக்கறிஞர் அன்வர்தீன் இன்று அதிகாலை மதுரை மத்திய சிறையில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

இதற்கு முந்தைய நாளே இவ்வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கும் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரே வழக்கில் தொடர்புடைய இருவர் அடுத்தடுத்து உடல்நலக்குறைவுக்கு ஆளாகியிருப்பது குறித்து அரசு மக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.

பழனி கோயில் நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்திருந்தால், அதன் பின்னணியில் உள்ள அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஆவணங்களைத் தயாரித்தவர்கள், இடைத்தரகர்கள், அதிகாரிகள் என யார் யார் இதில் தொடர்புடையவர்கள் என்பதை முழுமையாக விசாரித்து வெளிக்கொண்டு வர வேண்டும்.

அதேநேரத்தில், குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பே ஒருவரை குற்றவாளியாகக் கருதுவதும், விசாரணை என்ற பெயரில் சட்ட நடைமுறைகளை மீறுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதற்காக விசாரணை நடைமுறைகள் கேள்விக்குள்ளாகக் கூடாது.

“உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது; குற்றமற்றவர்கள் யாராக இருந்தாலும் பலிகடாவாக முடியாது” என்ற நிலைப்பாட்டை அரசு உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

சிறையில் அன்வர்தீன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமளிக்காத வகையில் சுயாதீனமான, நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

உடற்கூறாய்வு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் சட்டப்படி மேற்கொள்ளப்படுவதுடன், மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்து அரசு தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும்.

ஒரு கைதியின் மரணம் என்பது வெறும் புள்ளிவிவரம் அல்ல; அது அரசின் காவலில் இருந்த ஒரு மனித உயிரின் மரணம்.

எனவே, இந்த மரணத்தை சாதாரண நெஞ்சுவலி சம்பவமாகக் கடந்து செல்லாமல், அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும்.

பழனி நில மோசடி வழக்கின் விசாரணை எந்தவொரு அரசியல் அல்லது அதிகார அழுத்தத்திற்கும் உட்படாமல் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

கோயில் நிலத்தை கொள்ளையடிப்பவர்களாக இருந்தாலும் சரி; அந்தக் கொள்ளையை மறைக்க முயற்சிப்பவர்களாக இருந்தாலும் சரி — யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

அதேபோல், விசாரணை என்ற பெயரில் சட்டத்தின் வரம்புகள் மீறப்பட்டிருந்தால் அதற்கும் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பழனி நில மோசடி வழக்கில் உண்மை வெளிவர வேண்டும்; மர்மங்கள் விலக வேண்டும்; குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்; நிரபராதிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இதுவே மக்களின் எதிர்பார்ப்பு. இதை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
08/08/2026



Sun News Tamil
Kalaignar Seithigal
News18 Tamil Nadu News7Tamil

பத்திரிகை அறிக்கைகுறுவை பருவ பயிர்க் காப்பீடு செய்ய காலநீட்டிப்பு வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்மனி...
31/07/2026

பத்திரிகை அறிக்கை

குறுவை பருவ பயிர்க் காப்பீடு செய்ய காலநீட்டிப்பு வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

எல் நினோ தாக்கத்தால் இந்த ஆண்டு பருவமழை மற்றும் நீர்வரத்தில் நிச்சயமற்ற சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக, நாகப்கபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்,, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.

இந்நிலையில், குறுவை பருவ பயிர்க் காப்பீட்டிற்கான பிரீமியம் செலுத்துவதற்கான காலக்கெடு இன்று நிறைவடைவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பல இடங்களில் விதைப்பு தாமதம், ஆவணங்கள் பெறுவதில் சிக்கல், இணையதள தொழில்நுட்பக் கோளாறுகள் உள்ளிட்ட காரணங்களால் ஏராளமான விவசாயிகள் இன்னும் பயிர்க் காப்பீடு செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

இயற்கை பேரிடர்கள், பருவநிலை மாற்றம், எல் நினோ தாக்கம் போன்றவற்றால் ஏற்படும் மகசூல் இழப்பிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் முக்கியமான பாதுகாப்பு கவசமே பயிர்க் காப்பீடு ஆகும். எனவே, எந்த விவசாயியும் இந்தத் திட்டத்தின் பயனை இழக்காத வகையில், குறுவை பருவ பயிர்க் காப்பீட்டிற்கான காலக்கெடுவை குறைந்தபட்சம் 15 நாட்கள் நீட்டித்து தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

மேலும், அனைத்து விவசாயிகளும் எளிதில் பயிர்க் காப்பீடு செய்யும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தவும், வேளாண்மை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதும், தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதும் அரசின் முக்கியமான பொறுப்பாகும். எனவே, இவ்விஷயத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று காலநீட்டிப்பு வழங்க வேண்டும்.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
31/07/2026


#நாகைசட்டமன்றஉறுப்பினர்
#ஜவாஹிருல்லாஎம்எல்ஏ
#டெல்டா
#விவசாயம்



News7Tamil
News18 Tamil Nadu

30/07/2026

இரண்டு உயிர்களுக்காக துடித்த இதயங்கள் மின்னல் வேகத்தில் பயணித்த தமுமுக ஆம்புலன்ஸ்..

திருப்பூர் லைப் கார்ட் மருத்துவமனையில் இன்று ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது பிறந்த ஒரு மணி நேரத்திலேயே இதயத்துடிப்பை கண்டிறிந்த மருத்துவர் உடனடியாக குழந்தைகளுக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைத்தார்

உடனடியாக கோவை kmch மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும் இரண்டு உயிர்களை பாதுகாக்கும் அவசர பயணம்...
உயிரைக் காப்பாற்றும் ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானது
இது அவசர ஆம்புலன்ஸ் பயணம் மட்டுமல்ல எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜாதி மதங்களை கடந்து மனிதத்தை உயிற்பிக்கும் மகத்தான பயணம்

இடையில் தடையேதுமில்லாமல் பாதையை சீர்செய்ய தமிழ்நாடு எமர்ஜென்சி எஸ்கார்ட் ஆம்புலன்ஸ்கள் முன்னும் பின்னும் அணிவகுத்து செல்ல
மின்னல் வேகத்தில் பயணித்த தமுமுக ஆம்பலன்ஸ் அரைமணி நேரத்தில்
கோவை kmch மருத்துவமனையை அடைந்தது இரண்டு குழந்தைகளும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்
இறைவன் அக்குழந்தைகளுக்கு பரிபூரண ஆரோக்கியத்தை தந்து நீண்ட ஆயுளோடு வாழச்செய்வானாக

பிற உயிர்களை பாதுகாக்கும் பணியாளர்களர்கள் அத்துனைபேர்களுக்கும்
தடையில்லாத பயணத்திற்காக
சாலைகளின் போக்குவரத்தை சரிசெய்து வழியை ஏற்படுத்தி தந்த காவல் துறையினருக்கும் தன்னுயிரை விட பச்சிளம் குழந்தைகளின் உயிர்காக்க விரைந்து சென்ற தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஜூபைர் அவர்களுக்கும்
ஒத்துழைப்பு நல்கிய பொதுமக்களுக்கும்
எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்..

தமிழநாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
திருப்பூர் வடக்கு மாவட்டம்..

சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்!மனிதநேய மக்கள்...
19/07/2026

சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

லடாக் மக்களின் அரசியல் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அரசியலமைப்புச் சட்ட உத்தரவாதங்களை வலியுறுத்தி 21 நாட்களாக அறவழியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் அவர்களை, அவருடைய விருப்பத்திற்கு மாறாக காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். மனிதநேய மக்கள் கட்சி இதனை வன்மையாகக் கண்டிக்கிறது.

மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க இயலாத ஒன்றிய பா.ஜ.க. அரசு, கருத்து வேறுபாடுகளைக் கலந்துரையாடலால் எதிர்கொள்வதற்குப் பதிலாக காவல்துறையின் பலத்தாலும் அதிகாரத்தின் ஆணவத்தாலும் ஒடுக்க முயல்வது மிகவும் ஆபத்தான அரசியல் போக்காகும். இது ஒரு தனிநபருக்கு எதிரான நடவடிக்கை மட்டுமல்ல; அறவழிப் போராட்டம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றின் மீதான தாக்குதலாகும்.

சோனம் வாங்சுக் தமது சொந்த நலனுக்காகப் போராடவில்லை. காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் இமயமலைப் பகுதியின் எதிர்காலம், லடாக் மக்களின் வாழ்வுரிமை, இயற்கை வளங்களின் பாதுகாப்பு மற்றும் நீட் என்ற பெயரில் வட்சக்கணக்கான மாணவர்களின் கனவுகளை தகர்க்கும் மோசடி உள்ளிட்ட அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்புகள் ஆகியவற்றிற்காகவே அவர் தன்னையே அர்ப்பணித்துள்ளார். அத்தகைய உயரிய நோக்கத்திற்காக உயிரைப் பணயம் வைத்து போராடும் ஒருவரிடம் அரசு காட்ட வேண்டியது மனிதநேயமும் உரையாடலும்தான்; காவல்துறை பலமல்ல.

மகாத்மா காந்தியின் சத்தியாகிரகத்தை உலகுக்கு எடுத்துக்காட்டாகப் பேசும் நமது நாட்டில், இன்று அதே அறவழிப் போராட்டத்தை காவல்துறையால் நசுக்க முயல்கின்றனர். இது வரலாற்றின் மிகப்பெரிய முரண்பாடாகும். சுதந்திரப் போராட்டத்தின் ஆன்மாவையே அவமதிக்கும் இந்த அணுகுமுறை, இந்திய ஜனநாயகத்தின் நம்பகத்தன்மையை உலக அரங்கில் கேள்விக்குறியாக்குகிறது.

நாட்டில் விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என யார் குரல் கொடுத்தாலும் அவர்களை அடக்குவதையே ஆட்சியின் இயல்பாக மாற்றிவிட்டது பா.ஜ.க. அரசு. ஜனநாயகத்தில் எதிர்ப்புக் குரலை எதிரியாகக் கருதும் மனநிலை, சர்வாதிகார ஆட்சிகளின் அடையாளமே தவிர மக்களாட்சியின் அடையாளமல்ல.

அதிகாரத்தின் பலத்தால் மக்களின் மனச்சாட்சியை ஒருபோதும் அடக்க முடியாது. சோனம் வாங்சுக்கை காவலில் வைக்கலாம்; ஆனால் அவர் எழுப்பியுள்ள நியாயமான கேள்விகளையும், லடாக் மக்களின் உரிமைக் குரலையும் சிறைபிடிக்க முடியாது.

எனவே, சோனம் வாங்சுக் உடனடியாக விடுதலை செய்யப்பட செய்ய வேண்டும். அவருடைய ஜனநாயக உரிமைகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும். அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

மக்களின் குரலைக் கேட்க மறுக்கும் ஆட்சிகள் வரலாற்றில் நிலைத்ததில்லை. அதிகாரத்தின் அகங்காரம் தற்காலிகமானது; ஜனநாயகத்தின் வெற்றியே நிரந்தரமானது.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
19/07/2026

#சோனம்_வாங்சுக்கை_விடுதலைசெய்
#சோனம்_வாங்சுக்குடன்_நிற்கிறோம்
#அறவழிப்போராட்டம்
#ஜனநாயகத்தை_காப்போம்
#லடாக்கின்_குரல் ் #நீட்_ஊழல் #கல்விநீதிக்காக #மாணவர்நீதி





கல்விப்போராளி சோனம் வாங்சுக் கின் போராட்டத்தை ஆதரிக்கிறோம்.. ஒன்றிய அரசே சோனம் வாங்சுக்கைவிடுதலைசெய்.. நீட் தேர்வு ஊழலுக...
19/07/2026

கல்விப்போராளி சோனம் வாங்சுக் கின் போராட்டத்தை ஆதரிக்கிறோம்..

ஒன்றிய அரசே
சோனம் வாங்சுக்கை
விடுதலைசெய்..

நீட் தேர்வு ஊழலுக்காக குற்றவாளி தர்மேந்திரப் பிரதானை கைது செய்..

#சோனம்_வாங்சுக்கை_விடுதலைசெய் #ஜனநாயகத்தை_காப்போம்

Address

No7, Vada Maracoir Street, Mannady
Chennai
600001

Alerts

Be the first to know and let us send you an email when சென்னை மண்டலம் தகவல் தொழில்நுட்ப அணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share