Summaadu

Summaadu "Summaadu" is a Registered Public Charitable Trust, based in Chennai, working towards the overall welfare of society.

இயற்கையால் உருவாக்கப்பட்ட மக்கள் சமூகம் சாதி, மதம், மொழி, இனம், பணம், பதவி, ஆகியவற்றின் பேரில் மிகுந்த ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகிறது. இந்த ஏற்ற தாழ்வுகள் இல்லாத சமுதாயம் ஏற்படவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்கும் போது உருவானது தான் இந்த சும்மாடு. ஏற்றத்தாழ்வில்லா சமுதாயம் ஏற்பட வேண்டும் என்றால் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் ஓரே முறைக் கல்

வி அளிப்பதால் மட்டுமே முடியும். இந்த சமமான வாய்ப்பு ஆளுகின்ற அரசாங்கத்தால் மட்டுமே சட்டங்கள் போட்டு திட்டங்கள் மூலமாக வழங்க முடியும்.
எனவே இந்த ஓரே முறைக் கல்வித் திட்டத்தை கொண்டு வரவும், சுற்றுச் சூழலை மாசு படுத்தி கொண்டிருக்கும் சீமைக்கருவேலமரம், பார்த்தீனியச் செடி, ஆகாயத்தாமரை, போன்ற உயிர்க்கொல்லி தாவரங்களை அழித்து நல்ல பலன் தரும் தாவரங்களை பயிர் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி அரசை வலியுறுத்தியும், சமூகத்தில் இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உதவவேண்டும் என்ற எண்ணம் அணைவருக்கும் வரவேண்டும்
மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காகவும் தேசிய தலைவர்களின் வாழ்க்கை சம்பவங்களையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லவும், கவிதைகள், கட்டுரைகள், கதைகள், புத்தகங்களாகவும், பாடல்கள், குறும்படங்கள், விளம்பரப் படங்கள் மூலமாகவும் தயார் செய்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும். அதேபோன்று மக்களை அவ்வப்போது ஒன்றுதிரட்டி அறிஞர்கள், கல்வியாளர்கள் போன்றவர்களை உரை நிகழ்த்தச் செய்தும், இன்றைய நவீன உலகில் மக்களோடு இரன்டற கலந்துவிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் விழிப்புனர்வு ஏற்படுத்தி மக்களின் வாழ்வில் ஏற்றமும் மாற்றமும் பெற உருவாக்கப்பட்டது தான் இந்த சும்மாடு.
மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த மாபெறும் தலைவர் பாரத இரத்னா திரு.எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கையை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக “எம்.ஜி.ஆர் நடிப்பும் அரசியலும்” என்ற புத்தகத்தை சும்மாடு அமைப்பு பெருமையுடன் வெளியிட்டுள்ளது.
கண் பார்வையில்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு “சையிட் சேவர்ஸ்” என்ற அமைப்பு உதவுகின்றது, இந்த அமைப்பிற்கு சும்மாடு ஓரு குழந்தைக்கான உதவித் தொகையை வழங்கியுள்ளது. புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஓரு குழந்தைக்கு உதவித் தொகை வழங்கியுள்ளது. ஆதீஸ்வரர் ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த 50 குழந்தைகளுக்கு அன்னதானமும் ஆடைகளும் வழங்கப்பட்டது. சீமைக் கருவேல மரத்தின் நச்சுத் தன்மையையும் இந்தத் தாவரத்தால் ஏற்படும் இயற்கை சீற்றங்களையும் விளக்கி, இந்த மரங்களை அகற்றி அந்த இடத்திற்கு ஏற்ற பலன்தரும் மரங்களை நட்டு பள்ளி மாணவர்களுக்கும், கிராம மக்களுக்கும் விழிப்புனர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மக்களுக்கு பயனுள்ள பல அரசு நல திட்டங்களை மக்களின் கவனத்திற்கு நேரடியாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் கொண்டு சேர்க்கிறோம். இவையாவும் எங்கள் சும்மாடு செயல்பாட்டின் ஒரு துளி மட்டுமே.

Address

944, M. I. G 1st Main Road, TNHB Velachery
Chennai
600042

Alerts

Be the first to know and let us send you an email when Summaadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Summaadu:

Share

Category