Dmdksocialmedia

Dmdksocialmedia This is the official page for our DMDK Social media team.
(1)

Desiya Murpokku Dravida Kazhagam is a regional political party formed by Tamil film actor Vijayakant in the Indian state of Tamil Nadu,

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி அறிக்கை - 29.08.202...
29/08/2026

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி அறிக்கை - 29.08.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர்  திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் மிலாடி நபி மற்றும் ஓணம் பண்டிகை வ...
26/08/2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் மிலாடி நபி மற்றும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் - 26.08.2026

புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் 74-வது பிறந்தநாளில் வாழ்த்துக்கள் தெரிவித்த        அனைவருக்கும் நன்றி - 26.08.2026
26/08/2026

புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் 74-வது பிறந்தநாளில் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி - 26.08.2026

புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு, விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளி...
25/08/2026

புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு, விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் தர்காக்களில் சிறப்பு பூஜைகள், பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கூடலூர் ஓவேலி லாரஸ்டனில் ஆட்கொல்லி புலி தாக்குதலில் அடுத்தடுத்து இருவர் பலி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு உ...
24/08/2026

கூடலூர் ஓவேலி லாரஸ்டனில் ஆட்கொல்லி புலி தாக்குதலில் அடுத்தடுத்து இருவர் பலி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை - 24.08.2026

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை "வறுமை ஒழி...
24/08/2026

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை "வறுமை ஒழிப்பு தினமாக" தேமுதிக கடைப்பிடித்து வருகிறது. வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (24.08.2026) புரட்சி அண்ணியார் கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள், ராமாபுரம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் வழங்குவதுபோல, மதிய உணவு மற்றும் நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் இந்த ஆண்டும் வழங்கப்பட்டது. மேலும் புதுடெல்லியில் உள்ள டெல்லி தமிழ் சங்கத்திற்கு ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவியாக 1 இலட்சம்* காசோலை வழங்கப்பட்டது. மேலும் விருத்தாசலத்தில் நாளை (25.08.2026) *சுயதொழில் இலவச தையல் பயிற்சி மையம், இலவச கணினி பயிற்சி மையம் திறப்பு, இஸ்திரி பெட்டி (அயன் இயந்திரம்), தையல் இயந்திரம், மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், வழங்கப்படவுள்ளது.

வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) இயன்றதை செய்வோம் இல்லாதவரக்கே என்ற கொள்கைப்படி பல்வேறு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கண் சிகிச்சை பரிசோதனை முகாம்* நாளை (25.08.2026) கலந்து கொண்டு பயன்பெறலாம். உடன் கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ்,MP., அவர்கள், கழக துணைச் செயலாளர்கள் திரு.எம்.ஆர்.பன்னீர்செல்வம் அவர்கள், கழக உயர்மட்டக் குழு உறுப்பினர், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி - 21.08.2026
21/08/2026

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி - 21.08.2026

எண்ணூர் முகத்துவாரத்தில் ரசாயனக் கழிவுகளால் மீன்கள் உயிரிழப்பு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை - 16.08....
16/08/2026

எண்ணூர் முகத்துவாரத்தில் ரசாயனக் கழிவுகளால் மீன்கள் உயிரிழப்பு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை - 16.08.2026

சென்னை எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவுகள் நீரில் கலந்ததன் காரணமாகவே மீன்கள் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வடசென்னை பகுதியில் 30-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றைச் சுற்றி 40-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ள நிலையில், இப்பகுதி மக்களில் பெரும்பாலானோர் மீன்பிடித் தொழிலையே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். ஆனால், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட மாசுபாடுகளால் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2023-ஆம் ஆண்டு எண்ணூர் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் ஏராளமான மீன்கள் உயிரிழந்ததுடன், மீனவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த சம்பவத்தின் தாக்கத்திலிருந்து மீனவர்கள் முழுமையாக மீளாத நிலையில், தற்போது மீண்டும் டன் கணக்கில் மீன்கள் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 15-ஆம் தேதி நள்ளிரவு முதல் எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் மீன்கள் அதிகளவில் உயிரிழக்கத் தொடங்கி, காலை நேரத்தில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தாழங்குப்பம் பகுதி மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
ஒருபுறம் இலங்கை கடற்படையினரின் தொடர் அச்சுறுத்தல் மற்றும் கைது நடவடிக்கைகளால் தமிழக மீனவர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளனர். மறுபுறம், தங்களது வாழ்வாதாரத்தை வழங்கும் கடல் மற்றும் நீர்நிலைகள் தொழிற்சாலைக் கழிவுகளால் மாசுபட்டு, மீன்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் இந்த சம்பவத்திற்கு முழுமையான பொறுப்பேற்று, நீரில் கலந்துள்ள ரசாயனக் கழிவுகளை உடனடியாக அகற்றி, பாதிக்கப்பட்ட நீர்நிலைகளை சுத்தப்படுத்த வேண்டும். மேலும், மீன்கள் உயிரிழந்ததற்கான உண்மையான காரணத்தை கண்டறிய நீர் மற்றும் மீன்களின் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தொழிற்சாலைகளின் கழிவுநீர் வெளியேற்றத்தை தமிழக அரசு கடுமையாகக் கண்காணிக்க வேண்டும். சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், கடல் மற்றும் நீர்நிலைகளின் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது தமிழக அரசின் முக்கியப் பொறுப்பாகும். எனவே, எண்ணூர் மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்த பிரச்சினைக்கு தமிழக அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.

கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவர் சுட்டுக்கொலை செய்ததை கண்டித்து அறிக்கை - 16.08.2026கர்நாடக மாநிலம் ஹானூர் அருகே உள...
16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவர் சுட்டுக்கொலை செய்ததை கண்டித்து அறிக்கை - 16.08.2026

கர்நாடக மாநிலம் ஹானூர் அருகே உள்ள மரிமங்கலம் பகுதியில், மான் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறி கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழர்களான அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் ஜெபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
வேட்டையில் ஈடுபட்டதாகவும், வனத்துறை அலுவலர்களைத் தாக்கியதாகவும் கூறப்படும் நிலையில், மூன்று பேரின் உயிரையும் பறிக்கும் அளவிற்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. மனித உயிர்களின் மதிப்பை சிறிதும் கருத்தில் கொள்ளாமல் நிகழ்த்தப்பட்டுள்ள இந்தக் கொடூரச் சம்பவத்தை தேமுதிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சட்டத்தை அமல்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள வனத்துறையினர், தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி உயிரைப் பறிக்கும் வகையில் செயல்பட்டிருந்தால், அதற்கு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடியாக கொலை வழக்குப் பதிவு செய்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். விசாரணையின் மூலம் உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் குடும்பங்களில் தகுதியான ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு–கர்நாடக எல்லைப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும், உரிமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது இரு மாநில அரசுகளின் கடமையாகும். எனவே, தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கர்நாடக அரசிடம் உரிய முறையில் வலியுறுத்தி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழர்களின் உயிரிழப்பை சாதாரணமாகக் கடந்து செல்லாமல், இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை கர்நாடக அரசு மேற்கொள்ள வேண்டும் என தேமுதிக சார்பில் வலியுறுத்துகிறோம்.

Address

125/7, Jawaharlal Nehru Salai, , Koyambedu
Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Dmdksocialmedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dmdksocialmedia:

Shortcuts

Share