SFI Northchennai

SFI Northchennai This is the official fb page of STUDENTS FEDERATION OF INDIA, NORTHCHENNAI DISTRICT COMMITTEE, Tamilnadu

இன்று 2.7.2024 இந்திய மாணவர் சங்கத்தின் வடசென்னை மாவட்டம் சார்பாக ஆர்.கே நகர் கல்லூரி, அம்பேத்கர் கல்லூரி, திருவொற்றியூர...
02/07/2024

இன்று 2.7.2024 இந்திய மாணவர் சங்கத்தின் வடசென்னை மாவட்டம் சார்பாக ஆர்.கே நகர் கல்லூரி, அம்பேத்கர் கல்லூரி, திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா பள்ளி, திருவொற்றியூர் பகுதி குழு, ஆர் கே நகர் பகுதி குழு, மற்றும் பெரம்பூர் பகுதி குழு சார்பாக தோழர் *அபிமன்யுவிற்கு* அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.





சென்னை ராயபுரத்தில் மான்ஸ்போர்ட் பள்ளியில் வகுப்பறைக்குள் தமிழில் பேசியதால்  ஐந்தாம் வகுப்பு  படிக்கின்ற மாணவன் மணீஸ்வரன...
28/01/2024

சென்னை ராயபுரத்தில் மான்ஸ்போர்ட் பள்ளியில் வகுப்பறைக்குள் தமிழில் பேசியதால் ஐந்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவன் மணீஸ்வரனின் காதை பிடித்து திருகி, நகத்தால் கீறி அறுவை சிகிச்சை ஏற்படுத்தும் அளவிற்கு காயத்தை ஏற்படுத்திய பள்ளி ஆசிரியையும், மான்ட்போர்ட் பள்ளி நிர்வாகத்தையும், தொடர்ச்சியாக மாணவர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை கண்டுகொள்ளாத தமிழக பள்ளி கல்வி துறையையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் இந்திய மாணவர் சங்கம் வடசென்னை மாவட்ட குழு சார்பாக நடைபெற்றது. மேலும் காவல்துறை தரப்பில் இந்திய தண்டனைச் சட்டத்தில் மட்டும் போடபட்டுள்ள வழக்ககனை குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்திலும் இணைத்து பதியப்பட வேண்டும், மாணவருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட வேண்டும், ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பட வேண்டும் , தனியார் மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மீது கண்காணிப்பு குழுக்கள் அமைக்கபட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் காவ்யா செயலாளர் நிதிஷ்குமார் மாவட்ட செயற்குழு தோழர்கள் ஐஸ்வர்யா, அகல்யா, அலீம் , மாநில குழு உறுப்பினர் தோழர் குணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கண்டிக்கின்றோம்..‌‌.
24/01/2024

கண்டிக்கின்றோம்..‌‌.

பாசிச பா.ஜ.க விடம் இருந்து நாட்டை பாதுகாக்க.ராஜ் பவன் நோக்கி மாணவர்கள் பேரணி.அன்புடையீர் வணக்கம்   அனைவருக்கும் சமமான அற...
23/01/2024

பாசிச பா.ஜ.க விடம் இருந்து நாட்டை பாதுகாக்க.
ராஜ் பவன் நோக்கி மாணவர்கள் பேரணி.

அன்புடையீர் வணக்கம்
அனைவருக்கும் சமமான அறிவியல் பூர்வமான இலவச கல்வி கிடைக்க வேண்டும் எனவும். சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம் என்ற உயர்ந்த லட்சத்திற்காக இந்திய மாணவர் சங்கம் கடந்த 53 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறது. நவீன தாராளமய கொள்கை அமலாக்கத்திற்கு பின்னால் நாடு முழுவதும் புற்றீசல்கள் போல் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டதற்கு பின்னால் கல்வியில் சமநிலை என்பது மலைக்கும் மடுவுக்குமான அளவில் பெரிதாகிவிட்டது, தற்போதைய (அ) ஒப்பந்தம் கல்வி வியாபாரத்தை மேலும் வலுவாக்கியுள்ளது.

2014ல் பிஜேபி ஆட்சிக்கு வந்ததற்குப் பின்னால் கல்வியின் மீதான தாக்குதல் அதித்திலும் அதிகமாகிவிட்டது கல்வியின் மீதான தாக்குதலை இரண்டு வகைகளில் ஒன்றிய அரசு நடத்துகிறது ஒன்று நிர்வாக ரீதியான தாக்குதல் மற்றொன்று புதிய திட்டங்களில் தீமையை எதிர்த்து போராடும் மாணவர்கள் மீதான வன்முறை தாக்குதல்.

புதிய கல்விக் கொள்கையை புகுத்துவத்துவது, நீட் தேர்வு க்யூட் தேர்வு என எதற்கெடுத்தாலும் நாடு முழுவதும் ஒரே தேர்வு வைப்பது, தரமற்ற அந்நிய பல்கலைக்கழகங்களுக்கு சகல வசிதிகளுடன் நமது நாட்டில் அனுமதி வழங்குவது, இல்லாத ஜியோ பல்கலைக்கழகத்திற்கு 500 கோடி நிதி வழங்கவிட்டு அரசு கல்வி நிறுவனங்களில் நிதியை வெட்டி சுருக்குவது, ஆராய்ச்சி மாணவர்கள் சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகையை நிறுத்துவது, நாட்டை காட்டி கொடுத்த சாவர்க்கரை தேசிய தலைவராக கட்டமைப்பும் விதமாகவும் அறிவியலுக்கு எதிராகவும் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது, மத்திய அரசின் கல்வி விரோத கொள்கைகளை ஏற்க மறுக்கும் மாநிலங்களில் ஆளுநர்களை கொண்டு உயர்கல்வி நிறுவனங்களை முடக்குவது, யுஜிசி தலைவர் முதல் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் வரை ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ ஆட்களை தலைமை பொறுப்பிற்கு கொண்டு வருவது என கல்வியில் அனைத்து மட்டத்திலும் நிர்வாக ரீதியான தாக்குதல்களை தொடுக்கும் அதே வேளையில் உரிமைகளுக்காக போராடுகின்ற மாணவர்களின் மீதான தாக்குதல் இன்னும் கொடுமையானதாக மாறி உள்ளது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய ஜாமியா மிலியா மாணவர்களை ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் கொலை வெறியோடு தாக்கியதோடு போராடிய மாணவர்களை துப்பாக்கியால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த இளைஞனன் சுட்டான் உரிமைக்காக போராடிய அந்த மாணவர் குண்டடி பட்டு விழுந்த பொழுது போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து குஜராத் பைல்ஸ் ஆவண திரைப்படத்தை திரையிட்ட மெட்ராஸ் பல்கலைக்கழக எஸ் எஃப் ஐ தோழர்கள் மீதான தாக்குதல் என பிஜேபி அரசு ஆட்சிக்கு வந்த ஒன்பது ஆண்டுகளில் கல்வி வளாகங்களில் மாணவர்கள் மீது எண்ணற்ற கொலை வெறி தாக்குதல்களை நடத்தி உள்ளது, மேலும் பொது அனுமதிக்கு குந்தகம் விளைவித்தல் தொடங்கி குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் என மாணவர்கள் மீது பல்வேறு வழக்குகளை போட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராடிய எஸ்.எஃப்.ஐ தோழர்களை சிறையில் அடைதனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.மேற்கண்ட அனைத்து கொடுமைகளையும் ஒன்றிய பிஜேபி அரசு மதவெறியையும் மதவெறி பிடித்த ஆர்.எஸ்.எஸ் குண்டர்களையும் துணைக்கு வைத்துக் கொண்டு செய்தது என்பதுதான் 76 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் துரதிஷ்டமாகும்

எனவே தான் இந்திய மாணவர் சங்கம் குலக்கல்வி திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட திட்டமான புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ லட்சியத்தை அழித்தொழிக்கும் நீட் தேர்வுக்கு எதிராகவும்

வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்திய நாட்டினை மதவெறிக்காடாக மாற்ற நினைக்கும் பிஜேபி அரசுக்கு எதிராகவும் கல்வியை பாதுகாப்போம் இந்தியாவை பாதுகாப்போம் என்ற கோஷத்தை முன் வைத்து சென்னை ராஜ் பவன் நோக்கி மாபெரும் மாணவர் பேரணியை ஏனய தோழமை மாணவர் அமைப்புகளோடு இணைந்து நடத்த இருக்கிறது. பாசிச பா.ஜ.கவிடம் இருந்து நாட்டை பாதுகாக்கும் மாணவர்கள் பேரணிக்கு தங்களின் பேராதரவை தர வேண்டும் என்வும், கல்வியை பாதுகாக்கும் பேரணியில் பங்கேற்கவும் அன்புடன் அழைப்பு விடுக்கிறது இந்திய மாணவர் சங்கம்



.

இந்திய மாணவர் சங்கத்தின் 54 வது அமைப்பு தினம் 30:12:2023  மாலை (2-5) மணி வரை சென்னை மாவட்ட குழுக்கள் சார்பாக அம்பேத்கர் ...
28/12/2023

இந்திய மாணவர் சங்கத்தின் 54 வது அமைப்பு தினம் 30:12:2023 மாலை (2-5) மணி வரை சென்னை மாவட்ட குழுக்கள் சார்பாக அம்பேத்கர் மணி மண்டபத்தில் கொண்டாடப்பட இருக்கிறது.




வெண்மணி நினைவு தின கருத்தரங்கம் ♥️🚩
23/12/2023

வெண்மணி நினைவு தின கருத்தரங்கம் ♥️🚩

பெண்கல்வியை பாதுகாத்திட...பாலியல் வன்கொடுமைக்கு எதிராக...நீட், கியூட், தேசியக் கல்வி கொள்கைக்கு எதிராக ...மாணவிகள் சிறப்...
25/09/2023

பெண்கல்வியை பாதுகாத்திட...
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக...
நீட், கியூட், தேசியக் கல்வி கொள்கைக்கு எதிராக ...

மாணவிகள் சிறப்பு மாநில மாநாடு

தென்முனை குமரியில்

1 அக்டோபர் 2023

பெண்கல்வியை பாதுகாத்திட... பாலியல் வன்கொடுமைக்கு எதிராக... நீட், கியூட், தேசியக் கல்வி கொள்கைக்கு எதிராக... மாணவிகள் சிற...
22/09/2023

பெண்கல்வியை பாதுகாத்திட...
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக...
நீட், கியூட், தேசியக் கல்வி கொள்கைக்கு எதிராக...

மாணவிகள் சிறப்பு மாநில மாநாடு

தென்முனை குமரியில்

1 அக்டோபர் 2023

*AZADI RALLY*இந்திய மாணவர் சங்கம் மத்திய குழு அறைகூவலின் படி விடுதலை பேரணி வடசென்னை மாவட்ட குழு சார்பாக நடைபெற்றது. தண்ட...
16/08/2023

*AZADI RALLY*

இந்திய மாணவர் சங்கம் மத்திய குழு அறைகூவலின் படி விடுதலை பேரணி வடசென்னை மாவட்ட குழு சார்பாக நடைபெற்றது. தண்டையார்பேட்டை பட்டேல் நகர் பள்ளியில் தொடங்கி நேதாஜி சிலை வரை நடைபெற்ற இப்பேரணி நடைபெற்றது. கல்வி நிலையங்களில் சாதிய ஊடுருவலை தடுக்க, போராடி பெற்ற விடுதலையை பேணிகாக்க முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவதற்காக வந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத்தலைவர் அரவிந்தசாமியை தடுத்து நிறுத...
24/04/2023

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவதற்காக வந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத்தலைவர் அரவிந்தசாமியை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ள காவல்துறையை கண்டிக்கிறோம். உடனடியாக அவரை விடுதலை செய்து பட்டம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

இன்று தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் படித்த மாணவராக பட்டம் பெற வந்திருந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கோ.அரவிந்தசாமியை எந்தவொரு காரணமுமின்றி அடாவடித்தனமாக தஞ்சை மாவட்ட காவல் துறை கைது செய்துள்ளது.

காலை 8 மணிமுதல் போன் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு காவல் வாகனத்திலேயே வைத்திருக்கிறது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பாதுகாப்பு என்ற பெயரில் பல்கலைக்கழகத்தின் மாணவரையே கைது செய்திருப்பது மாணவர்களின் மீதான அடக்குமுறையே ஆகும்.
தஞ்சை காவல்துறையின் இந்த அராஜகப் போக்கை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக தமிழ் பல்கலைக்கழகத்தின் மாணவரும் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவருமான தோழர் கோ.அரவிந்தசாமியை விடுதலை செய்து பட்டம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். தமிழக அரசு இத்தகைய அராஜக போக்கில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

க.நிருபன் சக்கரவர்த்தி
மாநிலச் செயலாளர்.

Address

No. 6, Kachaleeswarar Koil, Parrys, Chennai/
Chennai
600001

Telephone

8807572067

Website

Alerts

Be the first to know and let us send you an email when SFI Northchennai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share