All India Democratic Women's Association

All India Democratic Women's Association Official Page of All India Democratic Women's Association Tamilnadu State Committee

தவெக அரசு தேர்தல் வாக்குறுதியின்படி ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்கிடுகஇலவச சிலிண்டர் பெறுபவதற்கு  வருமான உச்சவரம்பை...
25/08/2026

தவெக அரசு தேர்தல் வாக்குறுதியின்படி ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்கிடுக

இலவச சிலிண்டர் பெறுபவதற்கு வருமான உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்திடுக.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்துள்ள ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்கிறது.

ஆனால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் வாக்குறுதியில் ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தற்போது ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என அறிவித்திருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.

எனவே தேர்தல் வாக்குறுதியின்படி ஆண்டுக்கு 6 சிலிண்டர்களையும் வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருமான உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.

தற்போது இத்திட்டத்திற்கு ஆண்டு குடும்ப வருமானம் ரூ.2.5 லட்சம் என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவான வரம்பாகும்.
குடும்பத்தின் ஒட்டுமொத்த வருமானம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதால், பெரும்பாலான ‌ குடும்பங்களும் இத்திட்டத்தின் பயனை அடைய முடியாத சூழல் உள்ளது.
எனவே, குடும்பங்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு வருமான உச்சவரம்பை குறைந்தபட்சம் ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.

பணமாக வழங்காமல் சிலிண்டராகவே வழங்க வேண்டும்

மிக முக்கியமாக, சிலிண்டருக்கான தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணமாக செலுத்தும் முறை கூடாது. நேரடியாக சமையல் எரிவாயு சிலிண்டர்களையே வழங்க வேண்டும்.
பணமாக வழங்கும்போது அந்தத் தொகை சில நேரங்களில் குடும்பத்தின் வேறு செலவுகளுக்கு பயன்படுத்தப்படலாம். குடும்பத்தின் உணவு உத்திரவாதத்திற்காக வழங்கப்படும் சமையல் எரிவாயு, பணமாக வழங்கப்பட்டால் அது பிற செலவுகளுக்கு பயன்படுத்தும் நிலையும் ஏற்படும். குறிப்பாக அந்தப் பணம் டாஸ்மாக் கடைகளுக்குச் செல்லும் அபாயமும் உள்ளது.
எனவே, குடும்பத்தின் உணவுப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, பணமாக வழங்குவதைக் கைவிட்டு நேரடியாக சிலிண்டராக வழங்கிட வேண்டும்.
என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஜி.பிரமிளா,
அ.ராதிகா Rathika Covai,
தலைவர்,
பொதுச்செயலாளர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,
தமிழ்நாடு.
.

20/08/2026
அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சரை சந்தித்து  நாடாளுமன்றம் சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்க...
12/08/2026

அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சரை சந்தித்து நாடாளுமன்றம் சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை எந்தவித நிபந்தனையும் இன்றி ஒன்றிய அரசு அமல்படுத்திட வேண்டும்.
என வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.

அனைத்து பெண்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று இன்று தமிழக சட்டமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு வரவேற்கிறது.

அனைத்து பெண்கள் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.

தமிழ்நாட்டில் பெண்ணுரிமைக்காக தொடர்ச்சியாக ஒன்றிணைந்து போராடுவோம் வெற்றி பெறுவோம்!

சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் அவசியம்!கே.என்.பாஷா ஆணையத்திடம் TNUEF – AIDWA வலியுறுத்தல்சாதி ஆணவக் கொலைகளைத் த...
10/08/2026

சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் அவசியம்!
கே.என்.பாஷா ஆணையத்திடம் TNUEF – AIDWA வலியுறுத்தல்

சாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான ஆணையத்தை, தலித் விடுதலைக்கான தேசிய மேடையின் (DSMM) அகில இந்திய துணைத் தலைவர் சுபாஷினி அலி Ex.MP, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் (AIDWA) அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, அகில இந்திய துணைத் தலைவர் கே.சாமுவேல்ராஜ், அகில இந்திய துணைச் செயலாளர் க.சுவாமிநாதன், , தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாதர் சங்க மாநில துணைச் செயலாளர் ம.சித்ரகலா, ததீஒமு மாநிலக்குழு உறுப்பினர் க.மாடசாமி, வழக்கறிஞர்கள் டி.ஆர்.உதயகுமார், பிரிதிகா ஆகியோர் ஆகியோர் இன்று (10.08.2026) காலை சென்னை எழும்பூரில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து, சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் மாதிரிச் சட்டம் தொடர்பான கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து, சாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான வலுவான சட்டம் மற்றும் நடைமுறைகளை உருவாக்குவதற்கு ஆணையம் உரிய பரிந்துரைகளை தமிழ்நாடு அரசிடம் முன்வைக்க வேண்டும் என்றும் அமைப்புகளின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அனைத்து பெண்கள் கூட்டமைப்பு தலைவர்கள் தமிழக முதலமைச்சரை சந்தித்து பேசினர்.நாடாளுமன்றம் சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 ச...
29/07/2026

அனைத்து பெண்கள் கூட்டமைப்பு தலைவர்கள் தமிழக முதலமைச்சரை சந்தித்து பேசினர்.

நாடாளுமன்றம் சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமுல்படுத்த சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரிக்கை விடுத்தனர்.

ஒன்றிய பிஜேபி அரசு பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை தொகுதி மறு வரையறை மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற காரணம் காட்டி மறுப்பதை ஏற்கக்கூடாது எனவும், சமூக நீதி சமத்துவத்திற்கான வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைகளை முன்னெடுத்த தமிழக சட்டமன்றத்தில், பெண்கள் இட ஒதுக்கீட்டை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அமுல்படுத்திட தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில தலைவர் ஜி பிரமிளா பொதுச் செயலாளர் அ.ராதிகா
இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கண்ணகி, மாநிலத் தலைவர் மஞ்சுளா, மற்றும் அனைத்து பெண்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் மனிதி செல்வி, பிலோமினா,, மேரி லில்லி, ஜாக்குலின், ரமணி, வசுமதி, ரேவதி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் தொகுதி மறுவரையறை, மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற நிபந்தனைகளை சேர்க்காமல் நடப்பு நாடாளுமன்ற ...
22/07/2026

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் தொகுதி மறுவரையறை, மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற நிபந்தனைகளை சேர்க்காமல் நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரிலேயே சட்டமாக்கி அமல்படுத்த கோரி இன்று அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் சின்னமலையில் இருந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து அராஜகமாக கைது செய்தனர்.

Address

6th Main Road
Chennai
600004

Alerts

Be the first to know and let us send you an email when All India Democratic Women's Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to All India Democratic Women's Association:

Shortcuts

Share