சுற்றுச்சூழல் அணி - தமிழக வாழ்வுரிமைக் கட்சி

  • Home
  • India
  • Chennai
  • சுற்றுச்சூழல் அணி - தமிழக வாழ்வுரிமைக் கட்சி

சுற்றுச்சூழல் அணி -  தமிழக வாழ்வுரிமைக் கட்சி இந்த மண்ணையும் மலையையும் காற்றையும் நீரையும் மிகச் சுத்தமாக அடுத்த தலைமுறைக்கு கையளிக்கும் பணி

03/09/2026

புவி வெப்பமடைதல் மற்றும் எல் நினோ ஆகியவற்றின் தாக்கம் தற்பொழுது இந்த பூமி பந்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது, அதிக அளவில் பனிப்பாறைகள் உடைந்து ஏற்கனவே நேபாளம் நாட்டில் மிகப்பெரிய உயிர்ச்சேதமும், பொருட்சேதமும், சூழலியல் பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது,
தற்போது பெருமளவில் பணிப்பாறைகள் உடைந்து பெருவெள்ளங்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது,
உலக நாடுகளும் உலகத்தின் ஆளுமைகளும் மிக கவனமாக கையாள வேண்டிய தருணம் தற்பொழுது
Velmurugan.T

உலக புலிகள் தினம் ஜீலை 29        Velmurugan.T
29/07/2026

உலக புலிகள் தினம் ஜீலை 29
Velmurugan.T

எல் - நினோ பாதிப்புகள் தொடங்கியுள்ளது
26/06/2026

எல் - நினோ பாதிப்புகள் தொடங்கியுள்ளது

26/06/2026

கர்நாடகாவைச் சார்ந்தவரை, தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்?
தமிழ்நாடு அரசே! நியமனத்தை இரத்து செய்!

ஜனநாயகன்' திரைப்படத் தயாரிப்பாளர் திரு. கே. வெங்கட் நாராயணா அவர்கள், டெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பது, தமிழக மக்களிடையே பெரும் ஐயத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர், கர்நாடக முதலமைச்சர் திரு. டி.கே. சிவகுமார் மற்றும் அங்கிருக்கும் அரசியல், தொழில் வட்டாரங்களுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டவர் என்று கூறப்படும் நிலையில், இந்த நியமனம் சனநாயக நம்பிக்கையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி என்பது வெறும் அலுவல் சார்ந்த பதவி மட்டுமல்ல, அது இந்தியாவின் அதிகார மையத்தில் ஒட்டுமொத்தத் தமிழர்களின் குரலைத் தடையின்றி ஒலிக்கச் செய்யும் மிக முக்கியப் பொறுப்பாகும்.

தற்போதைய சூழலில், காவிரி நீர்ப் பகிர்வு, மேகதாது அணைப் பிரச்சினை மற்றும் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் போன்ற நீர் உரிமைகளும், மொழி உரிமை, முறையான நிதிப் பகிர்வு, மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாத்தல் போன்ற மாநில உரிமைகளும் எனத் தமிழகத்தின் வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் பல்வேறு சவால்கள் நமக்கு முன்னால் உள்ளன.

இத்தகைய இக்கட்டான காலகட்டத்தில், தமிழகத்தின் சார்பில் டெல்லியில் பேசும் ஆளுமையின் மீது சிறிதளவும் சந்தேகம் எழக் கூடாது.
"மேகதாது அணையை எந்தச் சூழ்நிலையிலும் கட்டியே தீருவோம்" என்று கர்நாடக அரசுத் தொடர்ந்து ஒற்றைக்காலில் நிற்கும் வேளையில், அந்த மாநில அதிகார மையங்களுடன் நெருங்கியத் தொடர்பில் உள்ள ஒருவரைத் தமிழகத்தின் முகமாக டெல்லிக்கு அனுப்புவது, நம் அரசின் உறுதியான நிலைப்பாட்டின் மீதே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இப்பதவியில் இருப்பவர் எந்தவொரு வெளிமாநிலத் தாக்கத்திற்கும் ஆட்படாதவராகவும், முரண்பாடுகளுக்கு இடம் தராமல் தமிழ்நாட்டின் நலனை மட்டுமே தனது ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்படுபவராகவும் இருக்க வேண்டியது இன்றியமையாதது ஆகும்.

எனவே, தமிழக மக்களின் நியாயமான அச்சங்களையும், அரசியல் ரீதியான சந்தேகங்களையும் அலட்சியப்படுத்தாமல், இந்தச் சர்ச்சைக்குரிய நியமனத்தை, தமிழ்நாடு அரசு உடனடியாக இரத்து செய்து திரும்பப் பெற வேண்டும்.

பிற மாநில அரசியல் அல்லது தொழில் வட்டாரங்களுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாத, தமிழ்நாட்டின் உரிமைகளில் சமரசமற்றப் பற்றுக்கொண்ட, தமிழகத்தைச் சேர்ந்த நேர்மையான ஒருவரை இப்பொறுப்பில் அமர்த்த வேண்டும். காவிரி, மேகதாது உள்ளிட்ட அனைத்து மாநில உரிமைப் போராட்டங்களிலும் தமிழக நலனை மட்டுமே முன்னிறுத்தி, அசைக்க முடியாத மனஉறுதியுடன் டெல்லியில் செயல்படக்கூடிய ஆளுமைக்கே இந்த உயரிய பொறுப்பு வழங்கப்பட வேண்டும். தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான தருணத்தில், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது அரசின் கடமையாகும்.

எனவே, தமிழ்நாடு அரசு இந்தச் சர்ச்சைக்குரிய நியமனத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், நேர்மையும் நம்பகத்தன்மையும் மிக்க, தமிழ்நாட்டின் நலனுக்காக மட்டுமே அசைக்க முடியாத உறுதியுடன் செயல்படும் ஒருவரை டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைச் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

Velmurugan.T
26/06/2026

Velmurugan.T

எல் நினோ காலநிலை மாற்றத்தால் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் வறட்சி ஏற்படலாம் - வேளாண்மைத் துறை விவசாயிகளுக்கு குறுகிய கால மாற்றுப் பயிர் சாகுபடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

எல் நினோ காலநிலை மாற்றத்தால் தமிழக வேளாண்மைத் துறை, 12 மாவட்ட மக்களுக்கு குறைந்த மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் பயிரிட ஏற்ற மாற்றுப் பயிர்களை வழங்குதல், பயிர் பன்முகத்தன்மை உத்திகள் மற்றும் 100 நாள் மேலே திட்டத்தின் கீழ் நீர் சேகரிப்பு மற்றும் குளங்களைத் தூர்வாரும் பணிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். குறிப்பாக காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை கிராமம் தோறும் நடத்த வேண்டும்.

மத்திய, கிழக்கு பசிபிக் பெருங்கடல் மேற்பரப்பு வழக்கத்தை விட அதிக வெப்பம் அடையும் இயற்கையான கால நிகழ்வை ‘எல் நினோ’ என்கின்றனர். இது மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை முறைகளை மாற்றியமைக்கிறது. அத்துடன், குறிப்பிடத்தக்க பகுதிகளில் கடும் வறட்சியையும், பிற பகுதிகளில் பெருமழையையும் தரும் என வானிலை அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த எல் நினோ வரவால் இந்த ஆண்டு இந்தியாவில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட குறைவாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

எல் நினோவை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஒன்றிய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அண்மையில் உயர்மட்டக் குழுவைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். அப்போது, எல் நினோ பாதிப்பால் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 27 மாநிலங்களில் 226 மாவட்டங்களில் மழை குறைந்து வறட்சி ஏற்படலாம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரியலூர், திருச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், திருப்பத்தூர், வேலூர், விருதுநகர் மாவட்டங்களில் குறுகிய கால சாகுபடிக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இங்கு மேற்கொள்ளப்படும் சிறப்பு நடவடிக்கைகளின் மூலம் முழுமையான பயிர்க் காப்பீடு, எளிதான கடன் வசதி, மறுசாகுபடிக்குத் தேவையான விதைகள், நீர் வளங்களை முழுமையாகப் பயன்படுத்துதல் மற்றும் உரங்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

மழைப்பொழிவில் பற்றாக்குறை நிலவுவதால், விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர்களை வேளாண்மைத் துறை பரிந்துரை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

வானம்பார்த்த பூமியாக இருக்கும் மானாவாரிப் பகுதிகளில் உள்ள காரிப் பயிர்களின் விளைச்சலை நேரடியாகப் பாதிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பருவமழை இயல்பை விடக் குறைவாக இருக்கும். நாட்டின் 12 மாநிலங்களில் பரவியுள்ள 111 மாவட்டங்கள் முற்றிலும் மழையையே நம்பிய மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 12 மாவட்டங்கள் தமிழகத்தில் உள்ளன.

இதற்காக இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) தயாரித்துள்ள மாவட்ட வாரியான அவசரகால வேளாண் திட்டங்களை உடனடியாகக் கள அளவில் செயல்படுத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, தமிழக வேளாண்மைத் துறை 12 மாவட்ட மக்களுக்கு குறைந்த மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் பயிரிட ஏற்ற மாற்றுப் பயிர்களை வழங்குதல், பயிர் பன்முகத்தன்மை உத்திகள் மற்றும் 100 நாள் மேலே திட்டத்தின் கீழ் நீர் சேகரிப்பு மற்றும் குளங்களைத் தூர்வாரும் பணிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். குறிப்பாக காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை கிராமம் தோறும் நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

09/06/2026

சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் கைது!
உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சன் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதோடு எழுத்தாளரும் கவிஞருமான தீபச்செல்வன் பிரதீபன் அவர்களுடைய ஐந்து புத்தகங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். ஒரு கலைஞர் தனது இன மக்களின் வரலாற்று அனுபவங்கள், உணர்வுகள் மற்றும் நினைவுகளைப் பாடல்களின் வழியாகவும், படைப்புகளின் வழியாகவும் வெளிப்படுத்தியதற்காகக் கைது செய்யப்படுவது கருத்துரிமை மற்றும் கலைச் சுதந்திரம் தொடர்பாக கடுமையானக் கேள்விகளை எழுப்புகிறது.

இலங்கை அரசு தொடர்ச்சியாக ஈழத் தமிழர்களை அடக்கியாளக் கையாளும் நடைமுறைகளில் ஒன்றாகவே இது விளங்குகிறது. செம்மணி மனிதப் புதைகுடிகளில் தற்போது வரை 296 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கிடைத்துள்ள நிலையில், இவ்வாறான கருத்து சுதந்திரத்திற்கும், கலை படைப்புகளுக்கும் எதிரான கைது விவகாரங்கள், ஈழத் தமிழர்களிடையே மேலும் அச்சத்தியே உருவாக்கி இருக்கிறது.

இனப்படுகொலை, சித்திரவதை, கட்டாயக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட கொடுமைகளால் ஆழமாகக் காயமடைந்து, அதன் வேதனைகளிலிருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில் வாழ்ந்து வரும் தமிழர்கள் மீது, தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகளைக் கடந்தகால அடக்குமுறைகளின் நீட்சியாகவே பார்க்கிறோம்.

சனநாயக நாடென்று தன்னைத்தானே சொல்லிக் கொள்ளும் இலங்கை அரசாங்கம், கருத்து வேறுபாடுகள் அல்லது கலைப் படைப்புகளைச் சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் கீழ் அணுகுவது மக்களிடையே அச்சத்தையும் நம்பிக்கையின்மையையும் உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக தங்களை முன்னேற்றவாத, சனநாயக மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் இடதுசாரி அரசாக அடையாளப்படுத்திக் கொள்ளும் ஆட்சியின் காலத்தில் இத்தகைய நடவடிக்கை இடம்பெற்றிருப்பது ஏமாற்றமளிக்கிறது.

கலைஞர் சங்கீத்சன் மீதான நடவடிக்கையை, இலங்கை அரசு மறுபரிசீலனை செய்து, கருத்துச் சுதந்திரம் மற்றும் உரிமைகளின் அடிப்படையில், அவரது விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும். அதோடு எழுத்தாளரும் கவிஞருமான தீபச்செல்வன் பிரதீபன் அவர்களுடைய பறிமுதல் செய்யப்பட்ட ஐந்து புத்தகங்களையும் திரும்ப அளிக்க வேண்டும்.

இலங்கை சனாதிபதி அனுரகுமார திசநாயக்காவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாகத் தலையீடு செய்து, இந்த விவகாரத்தில் சரியானத் தீர்வை வழங்க வேண்டும். விரைவான விடுதலை தவறும் பட்சத்தில், தமிழ்நாட்டின் இளையோரையும் மக்களையும் ஒன்று திரட்டி, இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவோம் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் எச்சரிக்கிறேன்.

தி. வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

🔥 மக்களின் நேர்மையான தேர்வு! 🔥📸 கேமரா சின்னம்👉 உங்கள் ஓட்டு… உங்கள் எதிர்காலம்!🗳️ வரும் தேர்தல் – ஏப்ரல் 23நம் உரிமைக்கா...
14/04/2026

🔥 மக்களின் நேர்மையான தேர்வு! 🔥

📸 கேமரா சின்னம்
👉 உங்கள் ஓட்டு… உங்கள் எதிர்காலம்!

🗳️ வரும் தேர்தல் – ஏப்ரல் 23
நம் உரிமைக்காக, நம் வளர்ச்சிக்காக,
நம்பிக்கையுடன் வாக்களிக்கவும்!

💪 நேர்மை
💪 சேவை
💪 மக்கள் நலன்

👉 ஆல்பர்ட் பிரான்சிஸ் சேவியர் அவர்களுக்கு
📸 கேமரா சின்னத்தில் வாக்களித்து
வெற்றி பெறச் செய்யுங்கள்!

✨ “உங்கள் வாக்கு – நம் புதிய ஆரம்பம்!”

11/04/2026

தமிழக வாழ்வுரிமைக் கட்சி பர்கூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஆல்பர்ட் பிரான்சிஸ் சேவியர்

நம் உரிமை மீட்க, வாக்களிப்பீர் கேமரா சின்னம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி பர்கூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் முனைவர். ஆல்பர்ட் பிரான்சிஸ் சேவியர்
11/04/2026

தமிழக வாழ்வுரிமைக் கட்சி பர்கூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் முனைவர். ஆல்பர்ட் பிரான்சிஸ் சேவியர்

Address

72, 1st Main Road, Sri Ayyappa Nagar, Chinmaya Nagar Virugambakkam, Koyambedu
Chennai
600092

Website

Alerts

Be the first to know and let us send you an email when சுற்றுச்சூழல் அணி - தமிழக வாழ்வுரிமைக் கட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share