04/09/2026
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 19-வது ஜி.எஸ்.எல்.வி திட்டமான GSLV-F17 ராக்கெட்டை இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியதும், புவி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியதும் பாராட்டுக்குரியது.
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan அவர்கள் வாழ்த்து
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 19-வது ஜி.எஸ்.எல்.வி திட்டமான GSLV-F17 ராக்கெட்டை இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியதும், புவி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியதும் பாராட்டுக்குரியது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து GSLV-F17 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 2,367 கிலோகிராம் எடை கொண்ட EOS-05 (Earth Observation Satellite-05) என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் புவிசார் சுற்றுப்பாதையில் மிகத் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது.
குறிப்பாக ஜி.எஸ்.எல்.வி-யைப் பயன்படுத்தி உலகின் மிக கனமான செயற்கைக்கோளை செலுத்திய இந்திய விஞ்ஞானிகளின் முயற்சி வெற்றி அடைந்திருக்கிறது.
இந்த செயற்கைக்கோள் செயல்பாட்டுக்கு வந்தவுடன், புவி சுற்றுப்பாதையில் இருந்து செயல்படும் இந்தியாவின் முதல் பிரத்யேக படமெடுக்கும் செயற்கைக்கோளாக விளங்கி, நாட்டிற்கு முக்கியமான மூலோபாயத் தரவுகளை வழங்கும்.
இயற்கை பேரிடர்கள், புயல், மேகவெடிப்பு போன்றவற்றை முன்கூட்டியே கண்டறியவும், விவசாயம், வனம், எல்லைப்பகுதி மற்றும் நீர்நிலைகளைக் கண்காணிக்கவும் இது பெரிதும் உதவும்.
மேலும் பூமியின் சுழற்சி வேகத்திலேயே சுழலும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கைகோளானது இந்தியாவின் நிலப்பரப்பை 24 மணிநேரமும் கண்காணிக்கும்.
புவிசார் சுற்றுப்பாதையில் (Geosynchronous Orbit) நிலைநிறுத்தப்பட்ட இந்தியாவின் முதல் 'இமேஜிங்' செயற்கைக்கோள் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இந்திய விஞ்ஞானிகள் விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளை வியக்கவைக்கும் அளவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு தாய்நாட்டிற்கு பேரும் புகழும் பெற்றுத்தருவது தொடர்கிறது.
கடின உழைப்பால், அர்ப்பணிப்பால், தொடர் முயற்சியால் விண்ணில் GSLV-F17 ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தி, புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.
இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி பெறவும், புகழ் பெறவும் வாழ்த்துகிறேன்.
#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்
#இஸ்ரோ #விண்வெளி_வெற்றி”