Ganesh Kumar

Ganesh Kumar identification and development with formation services for personal and business activity

21/12/2024

*பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் மற்றும் விதிகள்.*

கிராமப் பஞ்சாயத்துக்கான பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவாளராக கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிறப்பு / இறப்புக்கானப் பதிவுகள் – மேற்கொள்ள கிராம நிர்வாக அலுவலர் அதற்கான சட்டம் மற்றும் விதிகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

பிறப்பு:

ஒரு குழந்தையின் முதல் உரிமை, பிறப்பு பதிவுதான்.

பிறப்பு / இறப்புக்கான சட்டம் :
1969-ஆம் ஆண்டின் பிறப்புகள் மற்றும் இறப்புகள் சட்டம்(மத்தியச் சட்டம் 18/1969)
தமிழ்நாட்டில் 2000-ஆம் ஆண்டில் பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது,
தமிழ்நாட்டில் திருத்தியமைக்கப்பட்ட புதிய செயல்திட்டம் (Revamped system). தமிழ்நாட்டில் 01-01-2000 முதல் செயல்பட்டு வருகிறது.

2000-ஆம் ஆண்டில் பிறப்பு / இறப்பு பற்றி புதிய திட்டத்தின் நோக்கங்கள்:
பதிவேடுகள், அறிக்கை செய்யும் படிவங்கள் மற்றும் மாதாந்திர அறிக்கை படிவங்களை ஒன்ரு படுத்துதல்.
பிறப்பு, இறப்பு பதிவேடுகளை எளிதில் பராமரித்தல்.
அடிப்படை பதிவாளர்களின் (Primary Registrars)வேலைப்பளுவினைக் குறைத்தல்.
மாதாந்திர அறிக்கைகளை எளிதில் தொகுப்பதற்கும் மற்றும் அனுப்புவதற்கும் 2000-ஆம் ஆண்டு பிறப்பு, இறப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.

பிறப்பு இறப்பு பதிவு செய்ய அதிகாரம் பெற்ற துறைகள்:
1969-ஆம் ஆண்டில் பிறப்பு, இறப்பு பதிவுச்சட்டம் செயல்படுத்தும் துறை, பொதுச் சுகாதாரத்துறையாக இருந்தது.
பொதுச் சுகாதாரம் மற்றும் காப்பு மருந்து இயக்குநர், தமிழகத்தின் பிறப்பு, இறப்பு, பதி முதன்மைப் பதிவாளர் ஆவார்.

தற்போது பிறப்பு, இறப்பு பதியும் துறைகள்:
கிராமப் பஞ்சாயத்து – வருவாய்த் துறை (கிராம நிர்வாக அலுவலர்).
சிறப்பு ஊராட்சி – சிறப்பு ஊராட்சித் துறை.
நகராட்சி / மாநகராட்சி – நகராட்சி நிர்வாகத் துறை / மாநகராட்சி ஆணையர்

பிறப்பு / இறப்பு பதிவு செய்யும் இதர துறைகள் : (Supporting Role)
மருத்துவப் பணிகள்
மருத்துவக் கல்வி
பதிவுத் துறை
காவல்துறை
நீதித்துறை

பிறப்பு / இறப்பு பதிவுத்திட்டத்தின் சிறப்பு இயல்புகள்:
பிறப்பு – இறப்பு நிகழ்வு நடந்த இடத்தில் பிறப்பு / இறப்பு நிகழ்வினைப் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிறப்பு / இறப்பு, இயக்க ஊர்திகளில் நடந்தால் ஊர்தி செல்லும் வழியில் தங்குவதற்கு முதன்முதலாக நிற்கும் இடமே – பிறப்பு / இறப்பு நிகழ்ந்த இடமாகக் கருத வேண்டும்.
நாட்காட்டி ஆண்டுப்படி பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
ஊராட்சி, சிறப்பு ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதி / மண்டலம் வாரியாக தனித்தனி பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.
பிறப்பு – இறப்பு பதிவுகளுக்கான தகவல் தரும் படிவம் இர் பிரிவுகளைக் கொண்டது.
i) சட்டப் பகுதி
ii) புள்ளி விவரப்பகுதி
பிறப்பு – இறப்பு தகவல் தரும் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் விடுபடாமல், தகவலாளர் படிவத்தில் நிரப்பி பதிவாளரிடம் கையொப்பமிட்டுத் தரவேண்டும்.
பதிவாளர் அதனைப் பெற்று, பதிவின் வரிசை எண், பதிவு செய்த நாள், பதிவாளரின் கையொப்பமிட்டபின் வரிசைக்கிரமமாக பூர்த்தி செய்து தரப்பட்ட படிவத்தை பராமரித்து, ஒவ்வொரு மாதம் முடிந்தவுடன் அடுத்த மாதம் முதல் 5-தேதிக்குள் வட்டாட்சியருக்கு தவறாது அனுப்ப வேண்டும்.
சட்டப்பகுதி – பதிவேடாக பராமரித்தல் வேண்டும்.

பிறப்பு / இறப்பு என்பதன் விளக்கம் : (சட்டம்-பிரிவு-2)-இன் படி
பிறப்பு என்பது உயிருள்ள பிறப்பு அல்லது உயிரற்ற பிறப்பு என்று பொருள்படும்.
இறப்பு என்பது உயிருள்ள பிறப்பு நிகழப்பெற்ற பின்பு எப்போதாயினும் உயிரியக்கத்தின் அறிகுறி அனைத்தும் நிலையாக மறைதல் இறப்பு ஆகும்.
கர்ப்ப முதிர் கரு இறப்பு : (Foetal death) என்பது கர்ப்பத்தின் அளவை பொருட்படுத்தாமல் தாயிடமிருந்து கருவில் உண்டானதை முழுமையாக வெளியேற்றுவதற்கு அல்லது பிரித்தெடுப்பதற்கு முன்பாக உயிரியக்கத்தின் அறிகுறி அனைத்தும் இல்லாதிருத்தல் என்று பொருள்படும்.
உயிருள்ள பிறப்பு (Live Birth) என்பது கர்ப்பத்தின் கால அளவைப் பொருட்படுத்தாமல் தாயிடமிருந்து கருவில் உண்டானதை முழுமையாக வெளியேற்றுவது அல்லது பிரித்தெடுப்பது என்று பொருள்படும். ஆனால் அது அவ்வாறு வெளியேற்றப்பட்ட அல்லது பிரித்தெடுக்கப்பட்ட பின்பு மூச்சு விடுதல் அல்லது உயிரியக்கத்தின் பிற அறிகுறி எதனையும் காட்டுதல் வேண்டும். மற்றும் அத்தகைய பிறப்பில் உண்டான ஒவ்வொன்றும் உயிருடன் பிறந்ததாக கருதப்படும்.
உயிரற்ற பிறப்பு (Still Birth) என்பது கருவில் உண்டாவது. குறைந்தபட்சமாக வகுத்துரைக்கப்பட்டுள்ள கர்ப்ப கால அளவை நிறைவேற்றியுள்ளவிடத்து கர்ப்ப முதிர்கரு இறப்பு ‘உயிரற்ற இறப்பு’ என்று பொருள்படும்.
‘கர்ப்பகால அளவு’ (விதி-3)(பிரிவு-2)இன் படி 28 வாரங்கள் எனக் குறிக்கப்பட்டுள்ளது.

பிறப்பு / இறப்பு பதிவாளர்கள் : (பிறப்பு-இறப்பு சட்டப்பிரிவு 3, 6, 7-இன் படி) கூறப்பட்டவை.
இந்திய அளவில் இந்திய தலைமைப் பதிவாளர் – இவர் மத்திய அரசால் நியமனம் செய்யப்படுகிறார்.
மாநில அளவில் மாநில முதன்மைப் பதிவாளர் – மாநில அரசு இவரை நியமனம் செய்கிறது

தமிழகத்தின் முதன்மைப் பதிவாளர் :
தமிழகத்தின் பொதுச் சுகாதாரம் மற்றும் காப்பு மருந்து இயக்குநர் அவர்களே முதன்மைப் பதிவாளர் ஆவார். இணை இயக்குநர் (State Bureau of Health Intelligence) பிறப்புகள் மற்றும் இறப்புகள் துணை முதன்மைப் பதிவாளராக உள்ளார்.

மாவட்ட அளவில்:
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட வருவாய் அலுவலரே மாவட்டப் பதிவாளராகவும்,
சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கூடுதல் மாவட்டப் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நகராட்சி மற்றும் மாநகராட்சி அளவில்:
i) பிறப்பு – இறப்பு பதிவாளர்கள் நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் ஆவர்.

ஊராட்சி அளவில் :
i) கிராம ஊராட்சி அளவில் பிறப்பு-இறப்பினை கிராம நிர்வாக அலுவலர் மேற்கொள்கின்றார்.

பிறப்பு – இறப்பு பற்றி அறிக்கைகளை மேற்கொள்ளும் படிவங்கள்
படிவம் – 1: பிறப்பு அறிக்கை செய்யும் படிவம் (Birth Reporting Forms)
படிவம் – 2: இறப்பு அறிக்கை செய்யும் படிவங்கள் (Death Reporting Form)
படிவம் – 3: உயிரற்ற பிறப்பு அறிக்கை செய்யும் படிவங்கள் (Still Birth Reporting Forms)
படிவம் – 4: மருத்துவமனையில் நேரிட்ட இறப்புக்கான காரணத்திற்குரிய மருத்துவச்சான்று. (Medical Certification of cause of death for institutions)
படிவம் – 4 A: வீட்டில் நேரிட்ட இறப்புக்கான காரத்திற்குரிய மருத்துவச் சான்று. (Medical Certification of cause of death for domiciliary events)
படிவம் – 5: பிறப்புச் சான்று (Birth Certificate)
படிவம் – 6: இறப்புச் சான்று (Death Certificate)
படிவம் – 7: பிறப்புப் பதிவேடு (Birth Register)
படிவம் – 8: இறப்புப் பதிவேடு (Death Register)
படிவம் – 9: உயிரற்ற இறப்புப் பதிவேடு (Still Birth Register)
படிவம் – 10: கிடைக்கப்பெறாமை சான்று (Non availability Certificate)
படிவம் – 11: பிறப்புகள் பற்றிய மாதாந்திர அறிக்கை சுருக்கம் (Summary of monthly report on birth)
படிவம் – 12: இறப்புகள் பற்றிய மாதாந்திர அறிக்கை சுருக்கம் (Summary of monthly report on birth)
படிவம் – 13: உயிரற்றப் பிறப்புகள் பற்றிய மாதாந்திர அறிக்கை சுருக்கம் (Summary of monthly report on still birth)
படிவம் – 14A: அறிக்கைகள் பெறும் கட்டுப்பாடுப் பதிவெடு (Control Register for receipts)
படிவம் – 14B: ஆண்டு புள்ளி விவர அறிக்கை (Statistical Report for the year)

பிறப்பு / இறப்பு பதிவாளர்கள் அலகு: (Units)
கிராம் நிர்வாக அலுவலர் கிராம பஞ்சாயத்திற்கான பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் அலுவலகத்தின் முன்பாக “பிறப்புகள் மற்றும் இறப்புகள்-பதிவாளர்” என்ற வாசகங்களடங்கிய வழிகாட்டிப் பலகையை வைக்க வேண்டும்.
இந்தப் பலகையில் கிராம நிர்வாக அலுவலரின் பெயர் மற்றும் அலுவலக நேரம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

பிறப்பு/இறப்பு சான்றுகளுக்கு தகவலாளர் தரவேண்டிய விபரங்கள் அடங்கிய படிவங்கள் (விதி-5)
படிவம்-1 பிறப்புப் பதிவிற்கான படிவம்.
படிவம்-2 இறப்புப் பதிவிற்கான படிவம்.
படிவம்-3 உயிரற்றப் பிறப்பிற்கான படிவம்.

தகவலாளர்கள் (பிரிவு-8)
பிறப்பு அல்லது இறப்பு பதிவுக்காக பதிவாளரிடம் வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ தகவல் தருவதற்குரிய தகவலாளர்கள் பற்றிய முறைகள் பிரிவு 8-ல் குறிப்பிடப்பட்டுள்ளன.

பிறப்பின் நிகழ்வுகளை அறிவிப்பவர் யார்?
வீடு ஒன்றில் நிகழும் பிறப்பு அல்லது இறப்பைப் பொறுத்தவரை, வீட்டின் தலைவர், கூட்டுக் குடும்பமாக இருந்தால் கூட்டுக்குடும்பத்தின் தலைவர், நிகழ்வு நடைபெற்ற போது அவர் வீட்டில் இல்லாமலிருந்தால், வீட்டுத் தலைவரின் நெருங்கிய உறவினர் அத்தகைய ஆள் எவரும் இல்லாதிருந்தால் வீட்டில் இருக்கும் மூத்த வயது வந்த ஆள்.
மருத்துவமனை, நலவாழ்வு மையம், மகப்பேறு அல்லது மருத்துவ இல்லத்தைப் பொருத்தவரை மருத்துவ அலுவலர் அல்லது அவரால் அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்.
சிறைச்சாலைகளில் ஏற்படும் நிகழ்வுகளை பொருத்தவரை பொறுப்புடைய சிறை அலுவலர்.
வழித்தங்கல் மனை, சத்திரம், விடுதி, அறச்சாலை உணவு விடுதி, தங்கும் விடுதி, மருந்தகம், பொதுமக்கள் புழங்கும் இடம் இவற்றில் ஏற்படும் பிறப்பு அல்லது இறப்பு நிகழ்வைப் பொருத்தவரை அதன் தலைமை நிர்வாகியே பொறுப்புடையவர் ஆவார்.
பொதுவிடம் ஒன்றில் கைவிடப்பட்டு காணப்படும் பிறந்த குழந்தை அல்லது இறந்த குழந்தை உடலை பொருத்தவரை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அல்லது அவரையொத்த பிற அலுவலர் அல்லது காவல்நிலைய அதிகாரி பொறுப்புடையவர் ஆவார்.

பிறந்த குழந்தை அல்லது இறந்த உடலை எவர் காண்கின்றனரோ அல்லது உடல் எவருடைய பொறுப்பில் வைக்கப்படலாகுமோ. அவர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
தோட்டம் (Plantation) ஒன்றில் பிறப்பு / இறப்பு ஏற்படின், தோட்டத்தின் கண்காணிப்பாளர் (மேலாளர், கண்காணிப்பாளர் அல்லது பிற பெயர்களில் அழைக்கப்பட்டாலும்) அவரே பதிவுக்கான தகவலை அளிக்க வேண்டும்.

பிறப்பு – இறப்பு பதிவுகள் (விதி-5 பிரிவு-8);
பிறப்பு-இறப்பு தகவல் படிவங்கள் இரு கூறுகளாக பிரிக்கப்படுகின்றன.
1. சட்டப்பகுதி (Legal part)
2. புள்ளி விவரப் பகுதி (Statistical part)
பதிவாளர் என்ற பொறுப்பிலுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் பதிவுக்காக பிறப்பு/இறப்பு படிவங்களில் அனைத்து விவரங்களையும் விடுபடாமல் பெறவேண்டும். தகவல் அளிப்பவரின் கையொப்பம் அல்லது கல்வி பயிலாதவராக இருப்பின் “இடது கை பெருவிரல்” பதிவு படிவத்தில் பதியப்பட வேண்டும்.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள், சென்று கொண்டிருக்கின்ற வாகனங்களில் பிறப்பு ஏற்பட்டால், (எவ்வகை வாகனமாக இருந்தாலும், நிலத்திலோ, காற்றிலோ, தண்ணீரிலோ சென்றால்) அவ்வாகனம் நிற்கும் முதல் இடமே பிறப்பு (அ) இறப்பு நிகழ்ந்த இடமெனக் கருத வேண்டும்(விதி-6).
பிறப்பு அல்லது இறப்பு தகவல்களை பதிவாளரிடம் நிகழ்வு நடந்த நாளிருந்து 21-நாள்களுக்குள் தர வேண்டும் (பிரிவு-8, விதி-5(3)).

பிறப்பு-இறப்பு காலதாமத பதிவுகள் : (விதி-9, பிரிவு-13)
பிறப்பு – இறப்பு நிகழ்வு நடந்த 21-நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
இவை தமிழ்நாடு பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவு விதி 5-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
21 நாள்களுக்கு அதிகமானால் அதாவது நிகழ்வு நடந்த நாளிருந்து 30 நாள்களுக்குள் பதிவு செய்தால் பதிவாளர் விதி 9-இல் கண்டுள்ளவாறு காலதாமதக் கட்டணம் ரூ.2-னைச் செலுத்திய பின் பதிவு செய்யலாம்.
பிறப்பு அல்லது இறப்பு நடந்து 30 நாள்களுக்கு மேல் ஆனால் ஓராண்டு முடிவதற்கு முன்பாக தகவல் தரும் பட்சத்தில் ஊராட்சித் தலைவரின் எழுத்து மூலமான அனுமதி பெற்றும் காலதாமதக் கட்டணம் ரூ.5 செலுத்தப்பட்ட பின்பு பதிவாளர் பதிவு செய்ய வேண்டும் என விதி(9(2)) கூறுகிறது.
ஓராண்டுக்குள் பதிய அனுமதி மறுக்கப்பட்டால் ஊராட்சித் தலைவரின் ஆணையை எதிர்த்து, வருவாய் கோட்டாட்சியருக்கு 30 நாள்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என விதி (9(4)) கூறுகிறது.
கோட்டாட்சியர் பதியாத பட்சத்தில் கோட்டாட்சியரின் ஆணைக்கு எதிராக மாவட்ட ஆட்சியருக்கு மேல் முறையீடு செய்யலாம்.

நீதிமன்ற ஆணையின் பேரில் பதிவு செய்தல்: விதி 9(3), பிரிவு-13-இன் படி:
பிறப்பு அல்லது இறப்பு ஏற்பட்ட ஓராண்டுக்குள் பதிவு செய்யப்படவில்லை எனில், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆணை பெற்ற பின்பே பதிவை மேற்கொள்ள முடியும்.
சென்னையைப் பொறுத்தவரை மாநகரக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றவியல் அசல் மனு (COP) அல்லது குற்றவியல் பல்வகை மனு (CMP) ஒன்றினை பிறப்பு அல்லது இறப்பு குறித்த ஆதாரச் சான்றுடன் தாக்கல் செய்து நீதிமன்ற ஆணை பெற்ற பிறகே பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
நீதிபதி பிறப்பு அல்லது இறப்பு குறித்த விசாரணை செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டபின், அவ்வாணையின்படி பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் அவ்வாணையுடன் ரூ. 10-ஐ செலுத்தி பிறப்பு இறப்பு அலுவலரிடம் பதிவு செய்தல் வேண்டும்.

தகவல் தருபவர் – பதிவேட்டில் – கையொப்பம் இடுதல்: (பிரிவு 11 மற்றும் 12-இன் படி):
பிறப்பு / இறப்பு பதிவாளருக்கு தகவல் அளிப்பவரின் பெயர், குடியிருக்கும் இடம் மற்றும் முகவரி ஆகியவற்றைப் பதிவேட்டில் பதிவு செய்து தகவல் அளிப்பவரின் கையொப்பம் அல்லது படிக்காதவராயின் இடது கை பெருவிரல் பதிவினையும் பதிவேட்டில் பெற வேண்டும்.
தகவல் தருவோருக்கு கட்டணமின்றி பிறப்பு அல்லது இறப்பு பதிவேட்டிலிருந்து பதியப்பட்ட விவரங்களடங்கிய பதிவேட்டின் நகல் ஒன்றை பதிவாளர் கையொப்பம் இட்டுக் கொடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பிறப்பு / இறப்பு குறித்த பதிவுகள் விதி 8 மற்றும் 9-இன் படி பதிவேட்டு குறிப்பு படிவம் 5-இல் தர வேண்டும்.
இறப்பு குறித்த பதிவுகளை நகல் படிவம் – 6லும் வழங்க வேண்டும்.
பிறப்பு / இறப்புச் சான்று தகவல் அளித்த 30 நாள்களுக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் காலக்கெடு முடிந்த 15-நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

பிறந்த குழந்தையின் பெயரை பதிவு செய்தல் (விதி-10) (பிரிவு-14):
குழந்தை பிறந்த விவரங்களைப் பதிவு செய்யும் போது குழந்தையின் பெயர் குறிப்பிடப்படாமல் பதிவு செய்யப்பட்டிருந்தால், 12-மாதங்களுக்குள் குழந்தையின் பெயரை கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும்.
12-மாதங்கள் கழித்து ஆனால் 15-ஆண்டுகளுக்குள் பெயர் பற்றிய விவரம் தெரிவிக்கும்பட்சத்தில் ரூபாய் 5 காலதாமதக் கட்டணம் செலுத்தப்பட்ட பின் பெயர் பதிவாளர் பதிவு செய்யலாம்.
இவ்வாறு பதிவு செய்யும்போது கிராம நிர்வாக அலுவலர் விதி 10-இன் கீழ் உள்ள வரம்புக்கு உட்பட்டு செயல்படுத்தி பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
பிறப்பு-இறப்பு கையேடு பதிவாளர் (VAO)கையில் இருந்தால் காலதாமதக் கட்டணம் ரூபாய் 5 செலுத்தி உடனடியாக உரிய காலத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பதிவேடு பதிவாளர் (VAO) கையில் இல்லாத போது வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ, கிராமப் பஞ்சாயத்துத் தலைவருக்கு அனுப்பி பெறப்பட்ட தகவல்களை காலதாமதக் கட்டணம் ரூ.5 செலுத்தி பதிவுகளை மேற்கொள்ளலாம்.

பெயர் பதிவின் வரம்பு காலம் :
01-01-2000-த்திற்குப் பிறகு நிகழ்ந்த பிறப்புக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட நாளிருந்து 15 ஆண்டுகள்.
01-01-2000-த்திற்கு முன்பு நிகழ்ந்த பிறப்புக்கு திருத்தியமைக்கப்பட்ட விதிகள் செயலாக்கத்திற்கு வந்த நாளிலிருந்து (01-01-2000) 15-ஆண்டுகள்.
நிர்ணயிக்கப்பட்ட 15 ஆண்டுகள் காலக்கெடு முடிவுற்ற பின்னர் குழந்தையின் பெயரை பதிவு செய்ய விதிகளில் இடமில்லை.
ஓராண்டுக்குப் பின் மற்றும் 15-ஆண்டுகளுக்குள் பெயர் பதிவை மேற்கொண்டால் தாமதக் கட்டணம் ரூ.5 வசூலித்து, பதிவு மேற்கொண்டு அதிகாரம் பெற்ற அலுவலருக்கு தகவல் அனுப்ப வேண்டும்.
ஒரு முறை பெயர் பதிவு மேற்கொள்ளப்பட்ட பின்பு பெயர் பதிவுகளை முழுவதும் எந்தச் சூழ்நிலையிலும் மாற்றலாகாது. ஆனால் எழுத்துப் பிழைகளை சரி செய்ய (Spelling Corrections) அதிகாரம் பெற்ற அலுவலர் அனுமதிக்கலாம்.
சாதிப்பெயர், குடும்ப பெயர் அல்லது வேறு அடையாளங்களைப் (Any other identification) பெயருடன் சேர்க்கவோ, நீக்கவோ முடியும் ஆனால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பெயரில் எந்த மாற்றமும் செய்யாமல் பெற்றோர் அல்லது காப்பாளரின் உறுதிமொழி அடிப்படையில் செய்யலாம்.
பெயர் பதிவு மேற்கொள்ளக் கோருபவரின் உண்மைத்தன்மையை தொடக்கத்திலும் அல்லது பதிவு செய்யும்போதும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். பதிவாளர் மேற்கண்டபடி நிகழ்வின் உண்மைத் தன்மையை தன் மனநிறைவுப்படி உறுதி செய்து கொள்வது மிகவும் முக்கியம்.
தமிழ்நாடு பிறப்புகள் மற்றும் இறப்புகள்(பிரிவு-15, விதி-11)-இன் படி வரையறுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பதிவாளர் பின்பற்றி, அதிகாரம் பெற்ற அலுவலரின் முன் அனுமதி பெற்று சரிசெய்தல் மற்றும் நீக்கம் செய்யலாம்.
அதிகாரம் பெற்ற அலுவலரின் முன் அனுமதி பெற்று, மூலப்பதிவில் மாற்றம் ஏதும் செய்யாமல், பக்க ஓரத்தில் தகுந்த பதிவைச் சரிசெய்யலாம் அல்லது நீக்கம் செய்யலாம். பக்க ஓரப்பகுதியில் கையொப்பமிட்டு சரிசெய்த (அ) நீக்கம் செய்த தேதியை அதில் சேர்க்க வேண்டும்.

பிறப்பு-இறப்பு-பதிவேட்டில் திருத்தம் செய்யும் முன்பு கவனிக்க வேண்டியவை (Before Correction):
நம்பத்தகுந்த இரு நபரிடம் சான்றுகளைக் கண்டிப்பாக பெற வேண்டும்.
பிரிவு – 21-இன் படி திருத்தங்களை உறுதி செய்வதற்குத் தேவையான வேறு ஏதாவது சான்று ஆவணங்கள் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தலாம்.
திருத்தங்கள் செய்வதற்காக வரும் நபர் உண்மையில் நிகழ்வுக்கு சம்பந்தப்பட்டவரா என்பதனையும், தரப்படும் விவரங்களை முற்றிலுமாக விசாரிக்க வேண்டும்.
திருத்த நேர்வின் விவரங்களை உறுதிப்படுத்திக் கொண்டு அதிகாரம் பெற்ற அலுவலரின் எழுத்து மூலமான அனுமதி விதிகள் 11(1), 11(2) மற்றும் 11(3)-இன் படி பெற வேண்டும்.

பிறப்பு-இறப்பு திருத்தங்கள் மேற்கொள்ளும் போது கவனிக்க வேண்டியவைகள் (Effecting Corrections) :
பதியப்பட்ட பதிவினை அழித்துவிடுவதோ அல்லது அழித்துவிட்டு திருத்தங்கள் மேற்கொள்வதோ கூடாது, ஆனால் முதலாம் பதிவுகளை மையினால் சுழித்துவிட்டு(Rounded by ink) சரியான விவரங்களை பதிவின் ஓரமாக எழுத வேண்டும்.
செய்யப்பட்ட திருத்தங்களுக்குப் பதிவாளர் தன் கையொப்பம் மற்றும் திருத்தம் செய்யப்பட்ட தேதியிட்ட மேற்குறிப்பு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பதிவேட்டின் முதல் பக்கத்தில் ஆண்டு எண் விவரங்கள் மற்றும் செய்யப்பட்ட திருத்தங்களின் விவரங்களை வரிசைப்படி காண்பிக்கப்பட வேண்டும் அவ்வப்போது செயலாட்சி அதிகாரம் (Executive authority) கொண்ட அலுவலரின் கையொப்பத்தை பெற வேண்டும்.
சான்றுகள் வழங்கப்பட்ட பின் திருத்தங்கள் ஏதேனும் மேற்கொண்டால் அதனின் விவரம் பதிவேட்டிலும் அதே போன்று சான்றிலும் திருத்தங்களுக்குப் பின் பதியப்பட வேண்டும்.
திருத்தங்கல் தேவையான ஆவணச் சான்றுகள் முழுமையான விசாரணையின் அடிப்படையில் செயல்படுத்தல் வேண்டும். மேற்கொண்டு அதே இனத்தில் திருத்தங்களை அனுமதித்தல் ஆகாது. ஏனெனில் மேற்கொண்ட விசாரணை மற்றும் பரிசீலிக்கப்பட்ட சான்றாவணங்களின் செல்லத்தக்க (Validity) நிலைக்கு எதிராகக் கொண்டுசெல்ல இயலும்.

அயல்நாட்டிலுள்ள இந்திய குடிமக்களின் பிறப்புகள் மற்றும் இறப்புகளின் பதிவு(பிரிவு 20):
இந்திய தலைமைப் பதிவாளர் விதிக்கு உட்பட்டு அயல்நாட்டிலுள்ள இந்திய தூதரகங்களில் இந்தியாவுக்கு வெளியே வாழ்கின்ற இந்தியக் குடிமக்களைப் பதிவு செய்ய வேண்டும்.
குடிமைச்சட்டம் 1955-இன் படி பிறப்பு – இறப்புகளை பதிவு செய்ய வேண்டும் என பிரிவு 20 கூறுகிறது.
வெளிநாட்டில் “பிறந்து” பிறப்பு பதியப்படாமல் இந்தியாவில் நிலையாக தங்கியிருக்கும் நோக்குடன் வந்து இந்தியாவில் தங்கிய நாளிருந்து 60 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
இந்தியாவில் வந்து தங்கிய 60 நாள்களுக்கு மேல் பிறப்பினை பதிவு செய்யும் போது பிரிவு-13-இன் ஷரத்தின் படி பின்பற்ற வேண்டும்.

விபத்தினால் நிகழும் இறப்பின் பதிவுகள் :
இறப்புகள் இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. தற்கொலை, கொலை, விபத்துகள் அல்லது வன்முறை போன்றவற்றால் மருத்துவமனைகளில் சேர்த்த பின்பு ஏற்படும் இறப்புகள்.
2. பொது இடங்களில், சிறைச்சாலைகளில் ஏற்படும் இறப்புகள். தற்கொலை, கொலை, விபத்துகள் அல்லது வன்முறை போன்றவை மூலம் ஏற்படும் இறப்பை மருத்துவமனை பொறுப்பாளர்கள் பிரிவு 8(1) (b)-இன் படி பதிவாளருக்கு பதிவு செய்ய தகவல் அளிக்க வேண்டும்.
விசாரணை, அல்லது பிரேத விசாரணை மேற்கொள்ளும் நிலையில் விசாரணை அதிகாரி அல்லது காவல்துறை பதிவாளருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
பொது இடங்களில், சிறைச்சாலையில் இருக்கும் போது ஏற்படும் இறப்புகள் பற்றி விசாரணை செய்யும் அலுவலர் குறிப்பிட்ட காலத்துக்குள் பதிவாளருக்கு இறப்பு அறிக்கை அனுப்ப வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர் பிறப்பு/இறப்பு காலமுறை அறிக்கை அனுப்புதல் : (விதி-14-இன் படி).
கிராம நிர்வாக அலுவலர் ஒவ்வொரு மாதமும் பதிவுகளை முடித்த பின் புள்ளி விவரங்களடங்கிய புள்ளி விவரத் தகவல்களை(Statistical parts of the reporting terms) மாதாந்திர சுருக்க அறிக்கைகள் (படிவம் 11, 12 மற்றும் 13) ஆகியவற்றை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பிறப்பு, இறப்பு முடிந்த அடுத்த மாதம் 5-ஆம் தேதிக்குள் அனுப்புதல் வேண்டும்.
வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பிறப்பு / இறப்பு அறிக்கை சுருக்கத்தை பிரதிமாதம் 10-ஆம் தேதிக்குள் மாவட்ட தலைமையிடத்தில் உள்ள சுகாதாரப் பணி இணை இயக்குநருக்கு காலமுறை அறிக்கைகளை (Report) அனுப்ப வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர் பிறப்பு – இறப்பு பதிவேடுகளைப் பராமரித்தல் (விதி-17):
கிராம நிர்வாக அலுவலர் பாதுகாக்கும் இப்பதிவேடுகளை (மூன்று) பிரிவாக பாதுகாப்பர்.
i) பிறப்புப் பதிவேடுகள்
ii) இறப்புப் பதிவேடுகள்
iii) உயிரற்ற பிறப்புப் பதிவேடுகள்

கிராம நிர்வாக அலுவலரின் முக்கியக் கடமைகள்:
தனது அலுவலகத்தில் பிறப்பு – இறப்பு பதிவாளர் என்ற ”விளம்பரப் பலகை” வைத்து நேரம் மற்றும் VAOவின் பெயர் குறிப்பிடப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
பிறப்பு / இறப்பு பதிவுகள் மேற்கொள்ள போதிய படிவம் வைத்திருக்க வேண்டும்.
பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்.
பிறப்பு / இறப்பு உரிய காலத்துக்குள் பதிவை செய்ய வலியுறுத்த வேண்டும்.
பிறப்பு / இறப்பை நாட்காட்டி மாதத்தில் முன், பின்னாக மாறாமல் நாள் வரிசைப்படி பதிவை மேற்கொள்ள வேண்டும்.
பிறப்பு / இறப்பை பதிய தவறியவர்களுக்கு குறிப்பாணை வழங்கி இப்பதிவை மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
மருத்துவமனையில் இறப்பு நிகழ்ந்தால் மருத்துவ அலுவலரிடம் படிவம் 4 (இறப்புக்கான காரணம்) சான்று பெற்றுப் பதிய வேண்டும்.
பிரதிமாதம் 5-ஆம் தேதிக்குள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பிறப்பு/இறப்பு பதிவினை அனுப்ப வேண்டும்.
பிறப்பு / இறப்பு மேற்கொண்டவுடன் பிரிவு – 12-இன் படி பதிவு நகல் தகவல் அளிக்கும் நபருக்கு வழங்க வேண்டும்.
பிறப்பு / இறப்பு பதிவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவை, கீழ்க்கண்டவாறு அமைய வேண்டும்.
பிறப்பு பதிவு – குழதையின் முதல் உரிமையாகும்.
வீட்டில் நிகழும் பிறப்பு/இறப்பை 21 நாள்களுக்குள் VAOவிடம் பதிவு செய்ய வேண்டும்.
பிறப்பினை பதிந்தவுடன் குழந்தையின் பெயரையும் பதிய வேண்டும்.
குழந்தையின் பெயரை பதிவு செய்வது பெற்றோரின் கடமையாகும்.
ஒருமுறை பதிவுசெய்த பெயரை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது.
பிறப்பு/இறப்பு பதிவு முடித்தவுடன் இலவசச் சான்று பெற வேண்டும்.

பிறப்பு/இறப்பு பதிவு செய்வதின் நன்மைகள்:
பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்திற்கான அத்தாட்சி இதுவே ஆகும்.
குடியுரிமைக்கான அத்தாட்சியும் ஆகும்.
வாரிசுரிமைக்கான அத்தாட்சியும் ஆகும்.
கடவுச்சீட்டு விண்ணப்பிக்க ஆதாரம் இதுவேயாகும்.
வயதை நிரூபிக்க இறுதிச்சான்று இதுவே ஆகும்.
ஓட்டுநர் உரிமம் பெற மற்றும் இதர நன்மைகளுக்காகவும் இச்சான்று முக்கியத் தேவையாகும்.

கொள்ளை நோய்கள் மற்றும் இதர தொற்றுநோய்கள்
1939-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட நோய்கள் கொள்ளை நோய்களாகவும் தொற்றுநோய்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. 1. மூளைப்போர்வை (ஜன்னி)
2. சின்ன அம்மை
3. பெரிய அம்மை
4. காலரா
5. தொண்டைக்கட்டு நோய்
6. தொழுநோய்
7. தட்டம்மை
8. வெறிநாய்க்கடி
9. பிளேக்கு நோய்
10. செந்நச்சுக் காய்ச்சல் (இந்தியாவில் இல்லை)
11. குடற்புண் காய்ச்சல் (டைபாய்டு)
12. மஞ்சள் காமாலை
13. கக்குவான்

27/03/2024
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அரசிடம் வைக்க பட்ட கோரிக்கை நிறைவடைந்ததில்மகிழ்ச்சி!பல லட்ச கணக்கான ஏழை எளிய மக்கள் பயனடைய என...
05/03/2024

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அரசிடம் வைக்க பட்ட கோரிக்கை நிறைவடைந்ததில்
மகிழ்ச்சி!
பல லட்ச கணக்கான ஏழை எளிய மக்கள் பயனடைய என்னால் முடிந்த தூண்டு கொள் முயற்சி. அரசு செவி சாய்த்து கொள்கை முடிவை பரிசிலனை செய்து திட்டம் நிறைவேற்றியதற்கு நன்றி

24/01/2024

விழிப்புணர்வு பதிவு....

*லஞ்ச ஒழிப்புத்துறை எவ்வாறு செயல்படுகிறது.....*

*ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது*.

லஞ்ச ஒழிப்பு துறை அமைப்பானது, முற்றிலும், சென்னையில் தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் CHIEF SECRETARY அந்தஸ்த்தில் உள்ள VIGILANCE COMMISSIONER- அவர்களின் கட்டுப்பாட்டிலும்,

சென்னை ஆலந்தூரில் உள்ள DGP அல்லது ADDL.DGP அந்தஸ்த்தில் உள்ள ஒரு மூத்த IPS அதிகாரியின் தலைமையில் இயங்கிவரும் DVAC என்றழைக்கப்படும் "Directorate of Vigilance and Anti-Corruption" என்ற இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டிலும் மட்டும்தான் செயல்படுகின்றன.

இன்னும் சொல்லப்போனால், மேற்சொன்ன மாவட்ட அதிகாரிகளின் செயல் பாடுகளையே கண்காணித்து, தவறு இருப்பின் நடவடிக்கை எடுக்க கடமைப்பட்டவர்கள்.

லஞ்ச ஒழிப்புச்சட்டம்-என்று அழைக்கப்படும் PREVENTION OF CORRUPTION ACT 1988- பிரிவு-2 பிரகாரம், அரசுப்பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, மக்களால் பொதுப்பணிக்கென தேர்ந்தெடுக்கப்படும
பஞ்சாயத்து போர்டு தலைவர், வார்டு உறுப்பினர்கள், நகரம், மாவட்டம் மற்றும் முனிசிபல் கவுன்சிலர்கள், சேர்மேன் மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளும்( "PUBLIC SERVANTS" )என்ற வரையரறைக்குட்பட்டதால், கடைநிலையில் உள்ள ஒரு வி.எ.ஓ.-வை எப்படி நூறுக்கும், இருநூறுக்கும், அந்தச்சட்டத்தின் கீழ், எளிதில் பொறி வைத்துப் பிடிக்கிறார்களோ, அதேபோல் பொறிவைப்பு நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள்தான்.

சமீபத்தில், திருச்சி, நாகப்பட்டினம் மற்றும் பல மாவட்டங்களில், பஞ்சாயத்துபோர்டு தலைவர்களைக்கூட லஞ்சஒழிப்பு போலீஸார் பொறிவைத்து பிடித்துள்ளார்கள்.

அரசு அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், சட்டப்படியாக அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்....

பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனை பணமே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

முன்பெல்லாம், லஞ்சம் வாங்குவோர், அரசுத்துறைகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்தனர்.

இவர்கள், நேர்மையான ஊழியர்களை கண்டு பயந்தனர். மக்களிடம் லஞ்சம் கேட்கவே கூச்சப்பட்டனர்; கைநீட்டி காசு வாங்க அச்சப்பட்டனர். இன்றோ, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

அரசுத்துறைகளில் லஞ்சம் வாங்குவோர் எண்ணிக்கை பெருகிவிட்டது.

நேர்மையாக பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.

லஞ்சம் வாங்குவோரை பார்த்து, லஞ்சம் வாங்காத ஊழியர்கள் அச்சப்படும் நிலையும் வந்துவிட்டது.

இதற்குகாரணம், லஞ்சம் வாங்குவோரே, 'மெஜாரிட்டி'யாக உள்ளனர். 'லஞ்சம் வாங்குவது ஒன்றும் தப்பில்லை; அரசாங்க வேலை பெறவும், விரும்பிய இடத்துக்கு, 'டிரான்ஸ்பர்' பெறவும் பல லட்சங்களை செலவழிக்கிறோம்.

முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற வேண்டாமா' ? என, லஞ்சம் வாங்குவதை, நியாயப்படுத்தவும் துணிந்துவிட்டனர்.

அரசுத்துறையில் பணியாற்றும் ஒரு அதிகாரி அல்லது ஊழியர் லஞ்சம் வாங்காமல் பணியாற்றினால், தற்போது அது, அதிசயத்துக்குரிய செய்தியாக வெளியாகிறது.

இந்த அவலத்தை என்னவென்று சொல்வது? ஒருவர் லஞ்சம் வாங்காமல், நேர்மையாக பணியாற்றுவது என்பது, வாழ்வில் அவர் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்க நெறி கோட்பாடுகளில் ஒன்று.

ஆனால், அவ்வாறான ஒழுக்க நெறி கோட்பாட்டை ஒருவர் பின்பற்றுவதே ஆச்சரியத்துக்கும், பாராட்டுக்கும் உரியதாக மாறிவிட்டது.

இது, நாம் சார்ந்திருக்கும் சமூகம் எப்படிப்பட்ட சீரழிவுப்பாதையில், பேராபத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

முன்பெல்லாம், சட்டத்தை மீறி காரியங்களை செய்ய மட்டுமே அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் கேட்டார்கள்.

இப்போது, சட்டப்படியான ஒரு காரியத்தை செய்யக்கூட லஞ்சம் கேட்கிறார்கள்; அதுவும் மிரட்டிக் கேட்கிறார்கள். 'இந்த நடவடிக்கைக்கு, 'இன்ன ரேட்' என்று விலையையும் நிர்ணயம் செய்துவிட்டார்கள்.

'கரன்சி'யை காட்டாதவர்களின் மனுக்கள், கசங்கிய காகிதமாக குப்பைக் கூடைக்கு போகின்றன.

நம் நாட்டில் லஞ்சமும்- ஊழலும் கக்கூஸ் முதல் சட்டமியற்றும் பார்லிமென்ட் வரை நாறடித்துக்கொண்டிருக்கிறது. எல்லா துறைகளிலும், கல்லாப்பெட்டிகள் நிரம்பி வழிகின்றன.

லஞ்சம் கொடுப்போர் இருக்கும்வரை, வாங்குவோரும் இருக்கத்தான் செய்வர்.
வாங்குவது குற்றமெனில்; கொடுப்பதும் குற்றமே.

அந்த குற்றத்தை இனி, செய்ய வேண்டாம். அரசு அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், சட்டப்படியாக அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது எப்படி?

கேட்டால் ஆத்திரப்படாதீர்கள்.....

அரசின் நலத்திட்ட உதவி பெற, உங்களுக்கு வருமானச் சான்று தேவைப்படுகிறது என, வைத்துக்கொள்வோம்.

வருவாய்த்துறை அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பம் அளிக்கிறீர்கள். அங்குள்ள அதிகாரியோ, '2000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் சான்று வழங்குவேன்' என்கிறார்.

அவரிடம் கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள். 'பணத்துடன் வருகிறேன்' என, பவ்யமாக கூறிவிட்டு வெளியேறிவிடுங்கள்.

லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் எழுத்து பூர்வமான புகார் அளியுங்கள். புகாரை பெற்றதும், லஞ்ச ஒழிப்புத்துறையின், ஆரம்பகட்ட விசாரணை இரு விதமாக நடக்கும்.

புகார்தாரரின் கூற்றில் உண்மை உள்ளதா ? லஞ்சம் கேட்ட அதிகாரி எப்படிப்பட்டவர் ?

அதிகாரி மீது லஞ்ச புகார் அளிப்பவர், நேர்மையானவராக இருக்க வேண்டும். மனுதாரரின் கோரிக்கை (வருமானச் சான்று கோரி, வருவாய்த்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்த விவரங்கள்) சட்டப்படி நியாயமானதாக இருக்க வேண்டும்.

இது குறித்துதான், லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆரம்ப கட்ட விசாரணை மேற்கொள்வர்.

புகாரில் கூறிய விவரங்கள் உண்மை என்பதை உறுதிப்படுத்தியபின், லஞ்சம் கேட்ட அதிகாரி குறித்த விசாரணை ரகசியமாக நடக்கும்.

அவர் எப்படிப்பட்டவர், ஏற்கனவே புகார் உள்ளதா என, தகவல் திரட்டுவர். ஏனெனில், குற்றஞ்சாட்டப்படும் அதிகாரி, நேர்மையானவராகவும், கண்டிப்பானவராகவும் கூட இருக்கக்கூடும்.

அவரது பெயரைக்கூறி, புரோக்கர்கள் முறைகேட்டில் ஈடுபடவும் வாய்ப்புண்டு.

எதிரிகள், பொய் புகார் அளித்து பழிவாங்கவும்கூடும். எனவே, ரகசிய விசாரணை நடத்தி, புகார் உண்மை என்பதை உறுதி செய்த பிறகே, அடுத்தகட்ட கைது நடவடிக்கையை லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொள்ளும்.

மன உறுதி பரிசோதிப்பு....

புகார்தாரர் மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்கள் உண்மை' என, உறுதி செய்யப்பட்டதும், அவரது மன உறுதி பரிசோதிக்கப்படும்.

புகார்தாரர் தாமாக புகார் அளிக்க வந்துள்ளாரா? வேறு யாரேனும் தூண்டிவிட்டதன் காரணமாக புகார் அளிக்க வந்துள்ளாரா? லஞ்சம் கேட்ட அதிகாரியை கைது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாரா? என, பரிசோதிப்பர்.

ஏனெனில், லஞ்சம் கேட்ட அதிகாரியை, 'பொறி' வைத்து கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள மனுதாரரின் மன உறுதி மிக முக்கியமானது.

காரணம், வழக்குப்பதிவு செய்து, லஞ்ச அதிகாரியை கைது செய்வதற்கான நடவடிக்கையை துவக்கியபின், பாதிக்கட்டத்தில், புகார்தாரர் ஒத்துழைக்காமல் அச்சமடைந்து ஓடிவிடுவதும் உண்டு.

இவ்வாறு பின்வாங்கிவிட்டால், லஞ்சம் கேட்ட அதிகாரியை கைது செய்வதற்கான நடவடிக்கை தோற்றுவிடும்.

கைது நடவடிக்கையை துவக்கிய போலீஸ் அதிகாரி, துறைசார்ந்த நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும்.

எனவே, புகார்தாரர் மனஉறுதியுடன் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு ஒத்துழைக்க ஆலோசனைகள் வழங்கப்படும்.

அதன்பிறகே, லஞ்ச பேர்வழியை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கும்.

ஒத்திகை கைது....

அரசு தரப்பு சாட்சிகள் அழைப்பு:

லஞ்சம் கேட்ட அரசு ஊழியரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளும்போது, அரசு தரப்பு சாட்சிகள் இருவர் கட்டாயம் இருக்க வேண்டும், என்கிறது சட்டம்.

அதனால், அரசு தரப்பு சாட்சிகள் இருவர் தயார் செய்யப்படுவர்.

லஞ்ச வழக்கில் கைது செய்யப்படவுள்ள அதிகாரி எந்த பதவியில், என்ன பணி நிலையில் உள்ளாரோ, அதற்கு நிகரான பதவியில் இருக்கும் அதிகாரிகள் இருவர், அரசு தரப்பு சாட்சிகளாக அழைக்கப்படுவர்.

உதாரணமாக, 'குரூப் -1' பதவி நிலை அதிகாரியை கைது செய்யும் திட்டமிட்டிருந்தால், அதே பதவி நிலையில் இருக்கும் அதிகாரிகள் இருவரை, வேறு துறைகளில் இருந்து அழைப்பர்.

கைது செய்யப்படப் போகும் நபர் சாதாரண ஊழியராக இருப்பின், அதற்கு நிகரான பணி நிலையில் இருக்கும் ஊழியரை அழைப்பர்.

அரசு தரப்பு சாட்சிகளாக செயல்படுமாறு, இவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அழைக்க மாட்டார்கள்.

அழைக்கப்படும் சாட்சிகள், எந்த துறையில் பணியாற்றுகிறார்களோ, அந்த துறையின் தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரிக்கு கடிதம் அளிப்பர்.

அவர்தான், சாட்சியை தேர்வு செய்து அனுப்பி வைப்பார்.

இரு சாட்சிகள், வெவ்வேறு துறையை சார்ந்தவர்களாகவும் இருக்கக்கூடும்.

இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். எந்த துறையில் பணியாற்றும் அதிகாரியை, லஞ்ச வழக்கில் கைது செய்ய திட்டமிட்டிருக்கிறார்களோ, அந்த துறையில் இருந்து, அரசு தரப்பு சாட்சிகளை அழைக்கமாட்டார்கள்.

அவ்வாறு அழைத்தால், கைது நடவடிக்கை திட்டம் கசிந்து தோல்வியடைந்துவிடும் வாய்ப்புள்ளது.

ஒத்திகை:

லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு வருகை தரும் இரு அரசு தரப்பு சாட்சிகளிடம், புகார்தாரரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அறிமுகம் செய்து வைப்பர்.

அப்போதுதான், எந்த துறையில் பணியாற்றும் அதிகாரியை கைது செய்ய, தாம் சாட்சிகளாக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதே, அந்த சாட்சிகளுக்கு தெரியும்.

அதன்பின், லஞ்ச அதிகாரியை கைது செய்வது தொடர்பான ஒத்திகை, லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் நடத்தப்படும்.

லஞ்ச அதிகாரியை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளும்போது, புகார்தாரரும், அரசு தரப்பு சாட்சிகளும் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும் என, காட்சி அமைப்புடன் கூடிய செயல் விளக்கம் அளிக்கப்படும்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரில் ஒருவர், லஞ்சம் கேட்ட அதிகாரியாக நடிப்பார். அரசு தரப்பு சாட்சிகள் தயார் நிலையில் இருப்பர்.

கைது செய்யப்போகும், போலீஸ் அதிகாரிகளும் இந்த ஒத்திகையில் நடிப்பர். ஒத்திகை வெற்றிகரமாக முடிந்ததும், அடுத்ததாக, உண்மையான கைது நடவடிக்கைகள் துவங்கும்.

லஞ்ச பணம் தயாராகும்:....

அதிகாரிக்கு தரப்பட வேண்டிய லஞ்சப்பணம் தயாராகும்.

இத்தொகையை, புகார்தாரரே கொண்டுவர வேண்டும். ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றிருக்கும் 'சீரியல் எண்கள்' குறிப்பெடுக்கப்படும்.

அதன்பின், அவற்றின் மீது பினாப்தலின் எனும் ரசாயனம் தடவப்படும்.

நேரம் குறிக்கப்படும்:....

புகார்தாரர், தன்னிடம் லஞ்சம் கேட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு, 'நான் உங்களை சந்திக்க எப்போது வரலாம்' என, கேட்டு, நேரம் குறிப்பார்.

லஞ்ச பணத்தை வாங்கி பையில் போடும் ஆவலில், அந்த அதிகாரியும் ஓர் நேரத்தை சொல்வார்.

ஆம், அந்த நேரமே, அவர் அந்த அலுவலகத்தில் கடைசியாக பணியாற்றப்போகும், கைதாகப்போகும் நேரம் என்பதை அவர் அறிந்திருக்க மாட்டார்.

காசு தான் கண்களை மறைக்கிறதே...!? இப்போது, புகார்தாரர், அதிகாரியை சந்திக்கப்போவது உறுதியாகிவிட்டது.

லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை, புகார்தாரரின் சட்டை பாக்கெட்டில் வைத்து அனுப்பி வைப்பர்.

சாட்சி உடன் செல்வார்:....

அரசு தரப்பு சாட்சிகளில் ஒருவர், புகார்தாரருடன் செல்வார். மற்றொரு சாட்சி, லஞ்ச ஒழிப்பு போலீசாருடன் செல்வார்.

லஞ்ச பணத்தை எடுத்துச் செல்லும் புகார்தாரர், தப்பித்தவறிக்கூட ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தொடமாட்டார்; தொடவும் கூடாது.

குறிப்பிட்ட அரசு அலுவலகத்துக்குச் சென்று, தன்னிடமுள்ள லஞ்சப் பணத்தை அதிகாரியிடம் அளிப்பார்.

ஒருவேளை அந்த அதிகாரி உஷாராக இருந்து, 'உங்களுடன் வந்திருப்பது யார்' எனக் கேட்டால், 'இவரா சார், என் சித்தப்பா, மாமா...' என, ஏதாவது ஒரு உறவுமுறையை கூறி நம்ப வைப்பார்.

கைமாறியதும் சிக்னல்:

புகார்தாரர் அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பதை, உடன் வந்த அரசு தரப்பு சாட்சி நேரில் காண்பார். அதன்பின் இருவரும் வெளியே வருவர்.

தனக்கு ஏற்கனவே அறிவுறுத்தியபடி, புகார்தாரர் வெளியே வந்ததும், சாதாரண உடையில், சாமானியரைப் போன்று சற்று தொலைவில் மறைந்து நின்றிருக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு 'சிக்னல்' தருவார்.

(தலைமுடியை மூன்று முறை தன்னிடம் உள்ள சீப்பால் வாருவார் அல்லது கைக்குட்டையை பாக்கெட்டில் இருந்து எடுத்து முகத்தை துடைப்பார் அல்லது, தனக்கு அளிக்கப்பட்ட வேறு ஏதாவது சமிக்ஞையை காண்பிப்பார்).

அதிரடியாக கைது:...

'இதற்காகத்தானே இத்தனை நாட்களாய் காத்திருந்தோம்' என்பதைப் போன்று, அவர்கள் அதிரடியாக உள்ளே புகுந்து லஞ்ச அதிகாரியை கைது செய்வர்.

விஜிலன்ஸ் கமிஷனர் மற்றும் DVAC- முகவரிகள் பொதுமக்கள் பயன் பாட்டுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

1) Vigilance Commissioner
Personnel and Administrative Reforms Department Secretariat, Chennai 600 009
PBX No. 044-25665566
Email: [email protected]

(2)The Director,
Vigilance and Anti-Corruption,
293,MKN Road, Collectors Nagar, Alandur,Chennai,Tamil Nadu-600016.
Chennai – 600 028.
Phone-044-22321090/22321085/22310989/
22342142
E-mail: [email protected]

CHENNAI ZONE

Joint Director and Head of Zone,
III Floor, E.V.K., Sampath Building, College Road, Chennai 600006.
044-28232756 (Direct),
044-28272358(General),
044-28232755 (FAX) 09444446240

Address

Chennai
600116

Alerts

Be the first to know and let us send you an email when Ganesh Kumar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ganesh Kumar:

Share

Category