MMK

MMK Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MMK, Social service, DR. Ambedkhar Nagar, MANAPAKKKAM, Chennai.

https://youtu.be/XALzDaJXAdQ
21/01/2020

https://youtu.be/XALzDaJXAdQ

அஜீரண கோளாறு,மூட்டுவாதம் குணமாக்கும் பிரித்வி முத்திரை -Prophet.Gopaal.sj

13/01/2020

தமிழரே உணர்க! உணர்ந்தால்.. போகித்திருநாளே!

வெட்கத்தில் மக்களாட்சி முறை. அரசர்களின் பரம்பரை ஆளுவதை வெறுத்த மக்களுக்கு பதில் சொல்ல வந்த மக்களாட்சி எல்லா இயக்கங்களையும் கெடுத்துவிட்டு அதுவே தொழில் ஆனது நாட்டு மக்கள் அனைவருக்கும். அதுவே எதையும் படித்தறியாதவருக்கும் பதவி தருகிறது.

வேலையே இல்லாதவருக்கும் வேலை தருகிறது. சிந்தித்தறியாதவருக்கும் சிறப்பை புகழைத் தருகிறது. இலவயமாக காசும் பணமும் மதிப்பும் மகிழ்வையும் தருகிறது. இதனால் மக்களிடம் இருந்த உழைத்துப் பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் போனது. உழைப்பும் போனது. ஒரு முதலீடும் இல்லாத தொழிலானது. வெற்று வணக்கம் மட்டுமே வாழ்வானது.

அதனால் அரசியலே எல்லோர் கண்களிலும் பளிச் எனப்படுகிறது. அதனை பிடித்தவர்களின் வளர்ச்சியையும் வாழ்வையும் சார்ந்தவர்களை அவர் போல் ஆகவே ஆசைப் படுகிறது. எதையும் பணம் கொடுத்து வாங்கியவர்கள் இதையும் வாங்கி விடும் நிலைமை இப்போது உருவாகி அதுவே ஊருக்குள்ளும் விலை வைத்து அரசியல் ஆனது.

வேலியே இப்பொழுது பயிரை மேய்கிறது. தேர்தல் எல்லாம் தேவையா? என எண்ணத் தோன்றும் அளவிற்கு தேவையற்றதானது.

இதனால் வழிப்போக்கர்கள் கூட தமிழ் நாட்டில் அரசியல் பேசும் பொதுவுடமையானது தமிழர் நாடு. பிழைக்க வந்தவர் எல்லாம் தமிழ்நாட்டை வாழ வைக்கும் தேர்தல் தலைவர்கள் ஆனார்கள். குற்றம் புரிந்தவர்களுக்கு இங்கே பெயர் வைப்புகள் வாழ்த்துரைகள் தான் எத்தனை எத்தனையோ..

கல்லூரி வாசலில் நுழையாதவர்களுக்கு எல்லாம் அவர்கள் தலைவர்களான பின்னால் அவர்களின் முன்னால் டாக்டர் என் பட்டம் இருக்கிறது. நடிக்கவே தெரியாதவர்கள் கூட தமிழக அரசியல் மேடையில் சிறப்பாக நடிக்கின்றனர்.

தமிழ் நாட்டு அரசியலே நாடக மேடையாகிப் போனது. அரிதாரம் பூசிய அரசியல்காரர்களின் ஒப்பனைகள் கூடம் ஆனது தமிழ்நாடு. யாரையும் நம்மவர் என சொல்ல பழகிப் போயினர் தமிழர்கள். இவர்களால் தமிழ்நாடு தன் பொலிவிழந்து நிற்கிறது.

இதுவெல்லாம் நம்ம ரசிக மன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாது. ஒரு பக்கம் திராவிடக் கூத்தாடிகளின் தமிழ் வேடம். இன்னொருபக்கம் வந்து கொண்டே இருக்கும் நடிப்புப் பேராசை கோமாளிகளின் தலைமைக்கு அலையும் போக்கு. தமிழ் நாட்டு இளைஞர்களும் திராவிட குப்பையை விட்டு எழாமல் இருக்கும் பெரியோர்களும் உணர வேண்டும். உணர்ந்தால் தமிழர் நாம் பொங்கல் வைக்க வழிவிடும் மார்..கழி கடைநாளில் வரும் போ(க்)கித் திருநாளாகும்.

வாழ்க தமிழ்! வாழ்க தமிழர்! வாழ்க எம் செந்தமிழ் நாடு!

வணக்கம்.

Address

DR. Ambedkhar Nagar, MANAPAKKKAM
Chennai
600116

Alerts

Be the first to know and let us send you an email when MMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to MMK:

Share

Category