TMMK Tambaram

TMMK Tambaram ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிமிகு ப?

https://www.youtube.com/channel/UC10kxy3EC5l3iZeboaVfaiA…தொடர்ந்து பாருங்கள்.. சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.புதிய வீடியோக்களு...
14/05/2020

https://www.youtube.com/channel/UC10kxy3EC5l3iZeboaVfaiA…
தொடர்ந்து பாருங்கள்.. சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
புதிய வீடியோக்களுடன் விரைவில்.... Subscribe this Channel.

Fight for Right

10/05/2018

மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர். யாக்கூப் அவர்களுக்கு வாழ்த்துகள்

சகோதரர் தாம்பரம் யாக்கூப் அவர்கள் 1995 ல் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை ஒரு முழுநேர ஊழியர் போல் இயங்கி வருகின்றார். அல்ஹம்துலில்லாஹ்.
2009 ல் மனிதநேய மக்கள் கட்சியின் துவக்க விழா மாநாடு சிறப்பாக நடைபெற இவரது ஒருங்கிணைப்பில் தொண்டர்கள் பணியாற்றியதை ஊடகமும், காவல்துறையும் கூட பாராட்டியதை நினைத்துப் பார்க்கின்றேன். போக்குவரத்து நமது தொண்டர் அணியினால் அவ்வளவு துல்லியமாக இடையூறு இல்லாமல் ஒழுங்குபடுத்தப்பட்டது. தமிழக வரலாற்றில் ஒரு கட்சி துவக்கப்பட்டு அல்லது மாநாடு நடைபெற்று இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட போதும் போக்குவரத்து இவ்வளவு கட்டுக்கோப்பாக ஒழுங்குபடுத்தியதை பலரும் மறக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகச்சரியாக திட்டமிட்டு தொண்டர்களை இயக்கினார் சகோ யாக்கூப்.
அதே போல் 2004 சுனாமி முதல் கடந்த மாதம் தாம்பரம் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீவிபத்து உட்பட அனைத்திலும் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்களை களமிறக்கி சிறப்பாக பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை ஒருங்கிணைத்தவர் சகோ யாக்கூப். இயக்கத்திற்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர்களில் மிக முக்கியமானவர் மக்கள் போராளி தோழர் யாக்கூப். எண்ணற்ற சோதனைகளை, கடும் சவாலான பணிகளை, துரோகங்களை, தனது மக்கள் சேவையின் மூலம் சாதனைகளாக மாற்றியவர் தோழர் யாக்கூப்.

மாவட்ட தொண்டரணி செயலாளர் முதல் மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர், மாநில அமைப்புச் செயலாளர் என படிப்படியாக பதவிகள் வகித்து தற்போது மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.
அவருக்கு இறைவன் நல்ல உடல்நலத்தையும், வளத்தையும் வழங்குவானாக என்று பிரார்த்திக்கின்றேன்.
அன்பான வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றேன்.

வாழ்த்துகளுடன்,

ஆ. ஆசாத் காமில்
மாவட்ட ஊடகச் செயலாளர்

10/05/2018

தமுமுக மாநில துணை நிர்வாகிகள்,
மாநிலச் செயலாளர்கள்,தலைமை நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆக நியமணம் செய்யப்பட்டுள்ள அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
ஆ. ஆசாத் காமில்
மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர்

10/05/2018

மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை நிர்வாகிகள்,மாநில அமைப்பு செயலாளர்கள்,தலைமை நிலைய செயலாளர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ள அனைவரின் பணி சிறக்க வாழ்த்துகள்.

- ஆ. ஆசாத் காமில்
ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர்
காஞ்சிவடக்கு

08/03/2018

திருச்சியில் இலஞ்ச வெறியில் கர்ப்பிணிப் பெண்ணை கொலை செய்த காவல்துறை

திருச்சியில் தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜா, அவரது மனைவி கர்ப்பிணிப் பெண் உஷா மீது போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் கொடூரமாக தாக்கியுள்ளார்.. கர்ப்பிணிப் பெண்ணும், வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்துள்ளனர். அவரது கணவர் ராஜா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார்.

ஆய்வாளர் காமராஜ் மீது கொலை வழக்குப் பதிவு செய்துக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும். மேலும் இதைக் கண்டித்து தன்னெழுச்சியாக சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 3000 பேர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். தொடர்ந்து நீதிக்காக போராடும் மக்கள் மீது காவல்துறை அதிகார ஆணவத்தை பயன்படுத்தி பெண்கள், குழந்தைகள் மற்றும் பொது மக்கள் மீது கொடூரத் தாக்குதல்களை தொடுத்து வருவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

நேற்றைய மக்கள் போராட்டத்தை பேச்சு வார்த்தை நடத்தி அமைதிப் படுத்தாமல் காவல்துறை துணை ஆணையாளர் திரு. சக்தி கணேஷ் தடியாடி நடத்த உத்தரவிட்டு ஏதேச்சதிகாரப் போக்கை கடைபிடித்துள்ளார். தமிழக அரசு அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும். நீதிக்கான மக்கள் போராட்டத்தை மதிக்கும் அரசாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

03/03/2018

02.03.2018 தாம்பரத்தில் நடைபெற்ற காஞ்சி வடக்கு மாவட்ட பொதுக்குழுவில் தேர்தல் அதிகாரி சகோ. ஹாரூண் ரஷீத் அவர்கள் கண்காணிப்பில் நடைபெற்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட காஞ்சி வடக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் / மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பட்டியல்:

தலைவர்.J.சலீம்கான்.

செயலாளர். M.அப்துர்ரவூப், தமுமுக

செயலாளர். SK.ஜாஹிர் உசேன், மனிதநேய மக்கள் கட்சி

பொருளாளர். கெளஸ்பாஷா, தமுமுக, மமக.

துணைத் தலைவர்.SRA.இப்ராஹிம்

துணைச் செயலாளர்கள் தமுமுக:

Okn.அப்துல்காதர்
KS.தாஜூதீன்
R.குர்ஷித்அஹமது.

துணைச் செயலாளர்கள் மனிதநேய மக்கள் கட்சி:

சபியுல்லாஹ்
D.முஹம்மதுயூசுப்
U.பாரூக்அஹமது

உலமாஅணி

மெளலவி. சையதுஅஹமது அலி பாக்கவி.

மருத்துவச் சேவை அணி

செயலாளர் SS.அப்துல்ரஹ்மான், தமுமுக

சமூகநீதி மாணவர் இயக்கம் SMI:

செயலாளர். A.அப்துல்ரஹ்மான்
பொருளாளர்.S.அப்துல் ஹக்கீம்

SMI துணைச் செயலாளர்கள்

முஹம்மதுஅலி ஜின்னா
A.அசாருதீன்

மனிதவள மேம்பாட்டு அணி.(விழி)
செயலாளர் R.ஹபிபுல்லாஹ்

தொண்டரணி
செயலாளர் I.ஜமால்

இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை
செயலாளர் ஷேக்மைதீன்

ஊடகப்பிரிவு
செயலாளர் A.ஆசாத்காமில்
பொருளாளர்.பாலவாக்கம் R.காதர் பாட்ஷா

மனிதநேய வணிகர்அணி
செயலாளர் B.சாகுல்ஹமிது
பொருளாளர்.தமிம் அன்சாரி

வழக்குறைஞர்அணி
செயலாளர் M.முஜிபுர் ரஹ்மான்
பொருளாளர்.பாரூக்

இளைஞர்அணி
செயலாளர் A.ஆஷிக்ஹமித்
பொருளாளர்.அதிசயம். Sk.கறிம்

மனிதஉரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணி
செயலாளர் A.k. அஹமது உசேன்
பொருளாளர். சித்திக்
துணைச் செயலாளர். A.அபுபக்கர்

மனிதநேய தொழிற்சங்கம்
செயலாளர். அப்துல்சமது
பொருலாளர்.A.R. ஷாஜமான்

விளையாட்டு பிரிவு அணி
செயலாளர் N.மன்சூர்

மீனவரணி
செயலாளர். கோவளம் யாக்கூப்

#ஊடகப்பிரிவு_காஞ்சி_வடக்கு_மாவட்டம்

03/02/2018

மாநில அமைப்பு செயலாளர் அவர்களின் நன்றி அறிக்கை:
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே
உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அருள் பொழியபடட்டுமாக. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
நேற்று 02.02.2018 தாம்பரத்தில், முத்தலாக் தடைச்சட்டம் என்ற பெயரில் முஸ்லிம்களின ஷரியாவில் கைவைக்கத்துடிக்கும் பாசிச பாஜக அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தை ஒரு மாநாடாக மாற்றிய வல்ல இறைவன் அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரித்தாகட்டுமாக. அல்ஹம்துலில்லாஹ்.
இந்த மாநாட்டிற்கு எங்களின் அழைப்பை ஏற்று வந்து சிறப்பாக கண்டன உரையாற்றிய மாநிலத் தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ், மாநில துணைத் தலைவர் குணங்குடி ஹனிபா, திமுக மகளிரணிச் செயலாளர் கவிஞர். கனிமொழி எம்.பி. காங்கிரஸ் தலைவர் திரு. திருநாவுக்கரசர், இந்திய தவ்ஹித் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாக்கர், ஜமாத்துல் உலமா சபை துணைத் தலைவர் மௌலவி. தர்வேஷ் ரஷாதி, தமுமுக முன்னாள் மாநில செயலாளர் ஏஎஸ்எம்.ஜுனைத், பேரா. ஹாஜாகனி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தோழர். வன்னியரசு, மகளிரணி பேச்சாளர் சகோ. ஷான்ராணி, திமுக மாவட்ட செயலாளர் தாமோஇ அன்பரசன் உள்ளிட்ட சிறப்பு பேச்சாளர்களுக்கும், தமுமுக, மமக, திமுக, திக, காங்கிரஸ், விசிக, மற்றும் பள்ளிவாசல் ஜமாத் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த பொதுக்கூட்டத்திற்காக உழைத்த மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக்கழகத்தின் அத்துணை நிர்வாகிகளுக்கும் பொருளாதார உதவி செய்த நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக என்று துஆ செய்கின்றேன்.
இந்த கண்டன பொதுக்கூட்டத்தை ஷரியத் பாதுகாப்பு மற்றும் பாஜக எதிர்ப்பு மாநாடு ஆக்கிய பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவண்,
எம். யாக்கூப்
மாநில அமைப்பு செயலாளர்
தமுமுக, மமக.
தாம்பரம் பெருநகரம், காஞ்சி வடக்கு.

03/02/2018
03/02/2018

Address

2, 2nd Line, Market, Tambaram
Chennai
600003

Alerts

Be the first to know and let us send you an email when TMMK Tambaram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TMMK Tambaram:

Share

Service to People

மக்கள் சேவை... மக்களுக்கான அரசியல்... மக்களுக்கான போராட்டம்... என மக்களுக்காகவே இயங்கும் கருப்பு வெள்ளை சேவகர்களின் கூட்டம். நல்லதை ஏவுவோம்! தீயதைத் தடுப்போம்!!