Praveen Vinayan

Praveen Vinayan உலகின் தலைசிறந்த சொல் "செயல்"

1948 ஜனவரி 30-ஆம் தேதி இந்திய வரலாற்றின் கறுப்பு நாள். தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி, நாதுராம் கோட்ஸே என்பவரால் சுட்டுக...
30/01/2026

1948 ஜனவரி 30-ஆம் தேதி இந்திய வரலாற்றின் கறுப்பு நாள். தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி, நாதுராம் கோட்ஸே என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கோட்ஸே ஒரு தனிநபர் மட்டுமல்ல; அவர் RSS-இன் உறுப்பினர், இந்துத்துவ தீவிர சிந்தனையின் விளைவு. காந்தியின் மத நல்லிணக்கம், சிறுபான்மையினரின் பாதுகாப்பு, பாகுபாடு இல்லாத இந்தியா என்ற கொள்கைகள் கோட்ஸே போன்றவர்களுக்கு ஏற்றதாக இல்லை.

மகாத்மா காந்தி, இந்தியா அனைவருக்கும் சம உரிமை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பினார். பாகிஸ்தானுக்கு உரிய நிதியை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியதையும், முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டதையும் இந்துத்துவ சக்திகள் “தேச துரோகம்” என சித்தரித்தன. இதன் உச்சமாகவே காந்தியின் கொலை ஆர்.எஸ்.எஸ். நிகழ்த்தியது.

ஆனால் இன்று RSS–BJP அரசியல், அந்த வரலாற்றை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கோட்ஸேவை “தேசபக்தர்” என புகழும் போக்கு, காந்தியை “பலவீனமானவர்” என குறைத்து மதிப்பிடும் பிரச்சாரம், பாடப்புத்தகங்களில் வரலாற்றைத் திருத்தும் முயற்சிகள் இவை உண்மையை மறைக்கும் அரசியல் நடவடிக்கைகள். காந்தியின் படத்தை பயன்படுத்தி அரசியல் செய்யும் அதே நேரத்தில், அவரது அடிப்படை கொள்கைகளான அஹிம்சை, சமத்துவம், மத நல்லிணக்கம் ஆகியவற்றை அவர்கள் மறுக்கிறார்கள்.

வரலாறு மாற்றப்பட்டால் உண்மை மாறிவிடாது. மகாத்மா காந்தி யை கொலை செய்திருக்கலாம். ஆனால் காந்தியின் கொள்கைகளால் லட்சக்கணக்கான காந்திகள் உருவாக்கப்பட்டுள்ளது. அவரது சிந்தனையை அழிக்க முடியாது என்பதற்கு இதுவே சான்று. உண்மையான தேசபக்தி என்பது வெறுப்பை விதைப்பது அல்ல; காந்தி காட்டியபடி மனிதநேயத்தையும் ஜனநாயகத்தையும் காப்பதே.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று வரலாறு காணாத சரிவைச் சந்தித்து 91...
29/01/2026

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று வரலாறு காணாத சரிவைச் சந்தித்து 91.96 என்ற நிலையை எட்டியுள்ளது.

2026-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து மட்டும் இந்திய ரூபாய் தனது மதிப்பில் சுமார் 2 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியப் பொருட்கள் மீது விதித்துள்ள கடுமையான இறக்குமதி வரி காரணமாக, ரூபாய் மதிப்பு கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 5 சதவீதம் வரை குறைந்துள்ளது.

பாஜக ஆட்சியில் இந்தியாவின் கடன் ₹225 லட்சம் கோடி....
08/01/2026

பாஜக ஆட்சியில் இந்தியாவின் கடன் ₹225 லட்சம் கோடி....

At Vaitheeswaran Koil, Sirkazhi
13/10/2025

At Vaitheeswaran Koil, Sirkazhi

🤣🤣🤣🤣🤣
10/10/2025

🤣🤣🤣🤣🤣

“இந்தியாவின் கடன் ₹181.74 லட்சம் கோடியாக உயர்வு":2014 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது, இந்தியாவின...
08/10/2025

“இந்தியாவின் கடன் ₹181.74 லட்சம் கோடியாக உயர்வு":

2014 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு கடன் தொகை சுமார் ₹55.87 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் 2025ஆம் இது ₹181.74 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் பொருள், கடந்த 11 ஆண்டுகளில் மொத்த கடன் மூன்றுமடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகள் திட்டமிடப்பட்டவையாகவும் நீண்டநாள் நோக்கத்துடனும் அமையவில்லை. ஆரம்ப கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தவறான ஜி.எஸ்.டி. கொள்கை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை பெரிதும் பாதித்தது. வருவாயின்மையை சமாளிக்க முடியாமல் அரசு கடன் வாங்கி திட்டங்களை அமுல்படுத்தியது. மேலும், தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, நிதி ஒழுங்கை மீறி, செலவுகளை அதிகரிக்க செய்தனர்.

ஒரு அரசு தனது கடனைக் கட்டுப்படுத்த முடியாமல் போவது பொருளாதாரக் கொள்கையில் தோல்வியை மட்டுமின்றி, மக்களின் எதிர்காலத்தையும் ஆபத்தில் ஆழ்த்தும் செயல் ஆகும். இந்தியா போன்ற பெரிய நாட்டில் கடன் நிலையை நிலைநிறுத்துவது அரசின் முக்கிய பொறுப்பு. அந்த பொறுப்பை செய்ய மோடி அரசு தவறி விட்டது.

பெண்கள் கல்வி, வேலை, அரசியல், சமூக மற்றும் பொருளாதார துறைகளில் உயர்ந்த நிலையை எட்டிக் கொண்டிருந்தாலும், அவர்கள் மீதான அத...
06/10/2025

பெண்கள் கல்வி, வேலை, அரசியல், சமூக மற்றும் பொருளாதார துறைகளில் உயர்ந்த நிலையை எட்டிக் கொண்டிருந்தாலும், அவர்கள் மீதான அத்துமீறல்கள் இந்தியாவில் இன்னும் ஒரு மிகப்பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. பெண்கள் தங்கள் உரிமைகளை வலியுறுத்தி முன்னேறிக்கொண்டிருக்கும் காலகட்டத்திலும் அவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், தாக்குதல்கள், கொலைகள், மற்றும் சமூக அவமதிப்புகள் நாள்தோறும் நிகழ்கின்றன.

இந்திய தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய அறிக்கைகளின்படி, பெண்கள் மீதான அத்துமீறல்கள் அதிகமாக நடைபெறும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதிலும் பாலியல் பலாத்காரம், திருமணத் தகராறு, ரணவக் கொலை போன்ற குற்றங்கள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

“பெட்டீ பச்சாவ், பெட்டீ பதாவ்” (Beti Bachao Beti Padhao) போன்ற திட்டங்கள் மூலம் பெண்களின் கல்வி மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் என்ன பலன்?

பெண்கள் மீதான அத்துமீறல்கள் என்பது ஒரு சட்ட பிரச்சினை மட்டுமல்ல. ஒவ்வொருவரும் பெண்களை மதிக்கும் மனப்போக்குடன் செயல்பட்டாலே இந்தியா உண்மையான சமத்துவ நாட்டாக மாறும்.

பெண்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழும் சமூகம் உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.

பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் 14 கிராமங்களையும், 3,68,217 மரங்களையும் அழித்து அதானிக்கு நிலக்கரிச் சுரங்கம்:”அதானி ப...
04/10/2025

பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் 14 கிராமங்களையும், 3,68,217 மரங்களையும் அழித்து அதானிக்கு நிலக்கரிச் சுரங்கம்:

”அதானி பவர்” (Adani Power) நிலக்கரி சுரங்கத்தை அமைத்து இயக்குவதற்காக சத்தீஸ்கர் மாநிலம், ரைகார் மாவட்டத்தில் உள்ள முடாகான் மற்றும் சரைடோலா கிராமத்தில் அதானிக்கு நிலக்கரிச் சுரங்கம் அமைக்க 2,000 போலீஸ் குவிக்கப்பட்டு 5000 மரங்கள் வெட்டப்பட்டது.

Gare Palma Sector II என்று அழைக்கப்படும் நிலக்கரி பிராந்தியத்தில் 65.5 கோடி மெட்ரிக் டன் அளவுக்கு நிலக்கரி எடுக்க 14 கிராமங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அங்குள்ள 6,000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தட்டு, அந்த நிலங்களில் உள்ள மொத்த மரங்களும் வெட்டப்பட உள்ளன. அந்த 6,000 ஏக்கர் நிலத்தில் 500 ஏக்கர் அரசுக்குச் சொந்தமான அடர்ந்த வனப்பகுதி நிலம். மீதமுள்ளவை அந்தந்த கிராமங்களுக்குச் சொந்தமான சமூக நலக் காடுகள்.

இந்த கரே பால்மா சிடார் – செக்டார் ll எனும் நிலக்கரி பிராந்தியத்தில் ஏற்கெனவே ஆறு நிலக்கரி சுரங்கங்கள் செயல்பாட்டில் உள்ளன. இன்னும் நான்கு சுரங்கங்கள் தற்பொழுது கட்டுமானத்தில் இருக்கின்றன. மகாராஷ்டிரா மாநில அரசின் மின் உற்பத்தி நிறுவனத்தின் (Maharashtra State Power Generation Company Limited – MAHAGENCO) அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரித் தேவைக்காகவே சத்தீஸ்கரின் ரைகார் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படுகின்றது. சுரங்கம் அமைப்பதின் முதற்கட்டப் பணியாகவே இந்த இரு கிராமங்களிலும் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. இப்பகுதியிலுள்ள 14 கிராமங்களில் மொத்தம் 1,700 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

மேலும் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கக் கூடிய திறந்த வெளி சுரங்கம் மற்றும் பெரும் விபத்துகளுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் நிறைந்த நிலத்தடி சுரங்கம் என்று இரண்டு வகையான சுரங்கங்களும் அமைக்கப்பட உள்ளன. இந்த சுரங்கத் திட்டம் ₹7,642 கோடி செலவு பிடிக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிரா அரசின் மின் உற்பத்தி நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தில் சுரங்கம் அமைத்து நிலக்கரி எடுத்துத் தரும் பொறுப்பைத்தான் அதானிக்குச் சொந்தமான அதானி பவர் நிறுவனம் ஏற்றிருக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் மின் உற்பத்தித் துறை, இதற்கான நிலங்களை அரசு நிர்ணயித்த விலைக்கு கொள்முதல் செய்ய மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளது. இந்தக் காட்டினை வளர்த்து பாதுகாத்து அதனை நம்பி வாழ்ந்து வரும் மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் அழியும் நிலையில் மாற்று வாழ்வாதாரத்துக்கென்று எந்த நிதியும் ஒதுக்க வில்லை.

2017 ஆம் ஆண்டிலிருந்தே இத்திட்டத்திற்கான எதிர்ப்பை ஜனநாயக பூர்வமான முறையில் பல வழிகளில் மக்கள் வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். 2024 ஜனவரி 15 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த திட்டத்திற்கு வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஜூலை 2022-இல் கொடுத்திருந்த அனுமதியை சமூக மற்றும் சூழலியல் கேடு நிறைந்தது என்று கூறி ரத்து செய்து தீர்ப்பளித்தது.

ஆனால் ஒன்றிய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் 2024 ஆகஸ்ட் மாதத்தில், அதாவது அடுத்த ஆறே மாதத்தில், மீண்டும் புதிய அனுமதியை வழங்கி இருக்கிறது என்பது சட்டத்தை மதிக்காத பாசிசப் போக்குக்கு முழுமையான சான்றாகும்.

நாட்டு மக்கள் அனைவரும் தங்களது அம்மா பெயரில் ஒரு மரக்கன்றை கட்டாயம் நடவேண்டும் என்று கூச்சலிடும் பிரதமர் நரேந்திர மோடி எந்த ஊரில் என்ன _____ கொண்டிருக்கிறார் என்றே தெரியவில்லை. தாயின் பெயரில் 3,68,217 மரங்களை நடலாம் என்று அறிக்கை விடுவாரா??

நேற்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 100வது ஆண்டு நிறைவு நாள். பாஜகவினர் எப்படியும் "பாரத் மாதா கி ஜெய்", "ஆர்.எஸ்.எஸ். சிந்தாப...
03/10/2025

நேற்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 100வது ஆண்டு நிறைவு நாள். பாஜகவினர் எப்படியும் "பாரத் மாதா கி ஜெய்", "ஆர்.எஸ்.எஸ். சிந்தாபாத்" பரப்பும்போது, நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்த இந்த தகவலை பகிரலாம் என்று கருதுகிறேன்.

ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் 27 செப்டம்பர் 1925 ஆம் ஆண்டு, அதாவது இந்தியா சுதந்தரம் பெறுவதற்கு 22 வருடங்களுக்கு முன்பு, சுதந்திர போராட்டம் ஆரம்பித்து பல வருடங்களுக்கு பின்பு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. ஆனால் 27 செப்டம்பர் அன்று கொண்டாடாமல் நேற்று ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 100வது ஆண்டு நிறைவு நாளை கொண்டாடுகிறார்களே!!! ஏன்?. ஏனென்றால் நேற்று அக்டோபர் 2 மகாத்மா காந்தியின் பிறந்தநாள். 'நினைவிருக்கட்டும்.... மகாத்மா காந்தி காந்தியடிகளை கொன்ற நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்.'

சர்தார் வல்லபபாய் படேல் அவர்களால் தடை செய்யப்பட்ட அதே ஆர்.எஸ்.எஸ்.. நீண்ட காலமாக படேல் அவர்களுக்கு காவி வண்ணம் பூச முயற்சித்து வருபதையும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் "உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம் ஆர்.எஸ்.எஸ்." என்றார். ஆனால் 'இதே ஆர்.எஸ்.எஸ். தான் காந்தியை கொன்றனர்; இதே ஆர்.எஸ்.எஸ். தான் காமராஜர் வீட்டை தீ வைத்து அவரை கொல்ல சதித் திட்டம் தீட்டினர்' என்ற உண்மையை சொல்ல மாட்டார்.

இந்தியா சுதந்தரம் பெறுவதற்கு 22 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். ஏன் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்திய விடுதலைக்காக போராடியவர்கள் அனைத்து ஜாதி, மத, மொழியினருக்காகவுமான, சமத்துவத்தை, ஜனநாயகத்தை முன்வைத்து இந்தியாவை கட்டியெழுப்ப நினைத்தனர். இந்த கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், வீரம் மற்றும் தியாகத்தையும் (காவி நிறம்), அமைதி மற்றும் உண்மையையும் (வெள்ளை நிறம்), வளத்தையும், வளர்ச்சியையும் (பச்சை நிறம்), காந்தியின் கொள்கைகளையும் (அசோகச் சக்கரம்) உள்ளடக்கி உருவாக்கப்பட்ட இந்தியக் கொடியை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர். அவர்கள் எப்படி சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பார்கள்?.

1948 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தேசியத் தலைவர் எம்.எஸ். கோல்வால்கர் அவர்கள் அன்றைய துணைப் பிரதமரும் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேல் அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் "ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டும். அப்படி செய்து எங்களுக்கு உதவினால் இடது சாரி சிந்தனை கொண்டவர்களை, கம்யூனிஸ்ட் இயக்கத்தினரை ஒழிப்பதற்கு அரசுக்கு உதவுகிறோம்." என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலாக சர்தார் வல்லபாய் படேல் கோல்வால்கர்க்கு எழுதிய கடிதத்தில் "ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாத விஷத்தைப் பரப்புகிறது." என்று எழுதினார். ஆனால் இன்று அதே சர்தார் வல்லபாய் படேலுக்கு பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் சொந்தம் கொண்டாடுகிறது.

1998 ஆம் ஆண்டு பாஜகவை சேர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாய் இந்திய பிரதமர் ஆனார். அன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி அவர்களுக்கு HRD துறை ஒதுக்கப்பட்டு, அந்த துறையின் கீழ் இருந்த கல்வித்துறையில் 1998 இல் இந்துத்துவா கொள்கைகளை முன்னிறுத்தும் வகையில் பாடங்களை திருத்தம் செய்து, இஸ்லாமிய வரலாறுகளை மாறுதல் செய்து, பாஜக மற்றும் சங்க பரிவார் அமைப்புகளுக்கு எதிராக இருந்த அனைத்தையும் பாடப் புத்தகங்களில் இருந்து நீக்கம் செய்து, தங்களது கொள்கைகளை குழந்தைகளில் இருந்து கல்லூரி மாணவர்கள் வரை திணிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். கல்வியை காவி மயமாக்கும் முதல் நடவடிக்கை (Safronization of Education). 2014 முதல் இன்று வரை பிரதமர் நரேந்திர மோடியும் இதை தான் செய்கிறார்.

தற்போது டெல்லியில் ஆளும் பாஜக 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து கற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது. அதேபோல இந்திய பிரதமர் நரேந்திர மோடி 100 ரூபாய் நாணயம் வெளியிட்டுள்ளார். ஒருபுறம் அசோக சின்னம். மறுபுறம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாரத மாதாவுக்கு சல்யூட் செய்யும் படம். போஸ்டல் ஸ்டாம்ப் அறிமுகம் செய்திருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் பிரதமரா? இந்திய மக்களின் பிரதமரா?

காலம் காலமாக பாஜக இப்படித்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விஷ ஊசி செலுத்தி ஒருவரை மெதுவாக சாவடிக்கும் விதத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்திய விடுதலை போராட்டத்தில் கடுகளவு கூட அங்கம் வகிக்காத ஒரே அமைப்பு; அகிம்சையை மட்டுமே உயிராக நினைத்த மகாத்மாவை கொலை செய்த அமைப்பு; ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்த அமைப்பு; நமது குழந்தைகளை ஹிம்சையின் வழியில் இழுத்துச் செல்ல முயற்சி செய்யும் அமைப்பு எப்போது தடை செய்யப்போகிறது. எப்போது அடியோடு அழியப்போகிறது?

புதிய ஜி.எஸ்.டி. கொள்கையால் 100 ரூபாய் பொருள், 45 ரூபாய்க்கு கிடைக்கும் என சொல்லும் பாஜகவினருக்கு இந்த கேள்வி. ரூ. 35 பா...
25/09/2025

புதிய ஜி.எஸ்.டி. கொள்கையால் 100 ரூபாய் பொருள், 45 ரூபாய்க்கு கிடைக்கும் என சொல்லும் பாஜகவினருக்கு இந்த கேள்வி. ரூ. 35 பால் பாக்கெட் என்ன விலைக்கு கிடைக்கும்?

ஆலந்தா சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. வாக்குத் திருட்டு..!!!!தலைவர் Rahul Gandhi அவர்கள் தோலுரித்து காட்டிய தேர்தல் ஆணையத்த...
24/09/2025

ஆலந்தா சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. வாக்குத் திருட்டு..!!!!

தலைவர் Rahul Gandhi அவர்கள் தோலுரித்து காட்டிய தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் மற்றும் பா.ஜ.க.வின் சூட்சிகள் விளக்கும் தரவுகளின் தமிழாக்கம்.

திருநெல்வேலியில் வாக்கு திருடர்களுக்கு எதிராக வாக்கு அதிகார மாநாடு... 🔥🔥🔥Vote Chor, Gaddi Chhod’ rally in Tirunelveli.
11/09/2025

திருநெல்வேலியில் வாக்கு திருடர்களுக்கு எதிராக வாக்கு அதிகார மாநாடு... 🔥🔥🔥

Vote Chor, Gaddi Chhod’ rally in Tirunelveli.

Address

Thiru Vi Ka Salai
Chennai
600002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Praveen Vinayan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category