நாம் தமிழர் கட்சி, தொழிற்சங்கப்பேரவை, வடசென்னை மாவட்டம்

  • Home
  • India
  • Chennai
  • நாம் தமிழர் கட்சி, தொழிற்சங்கப்பேரவை, வடசென்னை மாவட்டம்

நாம் தமிழர் கட்சி, தொழிற்சங்கப்பேரவை, வடசென்னை மாவட்டம் NTK,வடசென்னை மாவட்டம் தொழிற்சங்கம்.

வணிகர் சங்கங்களின் மாநில தலைவர்த.வெள்ளையன் இயற்கை எய்தினார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி தொழிற்சங்கப் பேரவை மாநில பொறுப...
11/09/2024

வணிகர் சங்கங்களின் மாநில தலைவர்
த.வெள்ளையன் இயற்கை எய்தினார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி தொழிற்சங்கப் பேரவை மாநில பொறுப்பாளர்கள் மற்றும் வட சென்னை மாவட்ட பொறுப்பாளர்களும்
இறுதி மரியாதை செலுத்தப்பட்டது அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும்😭🙏

10/09/2024
08/09/2024

அன்பிற்கினிய தம்பிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்💐

என்றும் எனக்கு தோளுக்கு துணையாக இருக்கும்...

கருத்தியல் தளத்தில் ஆற்றல் செறிவுமிக்க ஆளுமையாய் திகழ்ந்து ஆரியப் புரட்டுகளையும் திராவிட திரிபுகளையும் அம்பலப்படுத்தி தன்னலமற்று தமிழர் உரிமை காக்க அயராது பாடுபட்டு,தமிழினத்திற்கும், நிலத்திற்கும்,மொழிக்கும் பெரும் தொண்டாற்றி தமிழ் தேசிய அரசியல்
களத்திற்கு வலுசேர்க்கும் எனது ஆருயிர் தம்பி வழக்கறிஞர்.மணிசெந்தில் (மாநிலஒருங்கிணைப்பாளர்)
அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 💐

தமிழ் போல் தலைவர் பிரபாகரன் போல் மங்காத புகழோடு வாழ்க 💐🇰🇬

06/09/2024

"தமிழ்நாட்டில் என் இராமநாதபுரம் தொகுதியில் உள்ள கட்சத்தீவை எங்கள் அனுமதி இல்லாமல் இலங்கைக்கு தாரைவார்க்க நீங்கள் யார்?
பல்லாயிரம் மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. பலநூறு மீன்பிடி படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நீங்கள் சனநாயகம் பேசிக் கொண்டு சர்வாதிகாரி போல் நடக்கிறீர்கள்" என்று இந்திராகாந்தி அரசைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றத்தில் முழங்கியபோது, இடைமறித்த காங்கிரசாரை நோக்கி, 'நீங்கள் எங்களின் துரோகிகள்' என்று அன்றே அடையாளப்படுத்தி வெளிநடப்பு செய்த உறங்காப்புலி..!

களம் கண்ட அனைத்து தேர்தல்களிலும் தொகுதி மாறாது வென்று சரித்திர சாதனை படைத்த ஒப்பற்ற தலைவர்..!

உசிலம்பட்டி, நீலித்தநல்லூர், கமுதி ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் கல்லூரிகளை நிறுவி சாதி, மதம் பாராது ஏழை குழந்தைகளுக்கு இலவச தங்குமிடமும், உணவும், கல்வியும் தந்த வள்ளல்..!

வட இந்தியாவில் குடியேறும் அகதிகளைவிட தமிழ்நாட்டு மக்களுக்கு குறைவான நிதி ஒதுக்குவதாக அன்றே இந்திய அரசை கண்டித்து தமிழர் உரிமைக்கு குரல் கொடுத்த பெருந்தகை..!

இந்தியக் கட்சியில் தலைமையேற்று இருந்தபோதிலும், இருமொழி கொள்கையை ஏற்காமல் இந்தியைத் திணித்தால் இந்த நாட்டின் ஒருமைப்பாடு உடைபடும் என்று இந்திய அரசைத் துணிவுடன் எச்சரித்த தீரர்..!

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தி தென்மாவட்ட வறட்சியைப் போக்க வேண்டும்(1965), கிருஷ்ணா நதிநீரைக் கொண்டுவந்து சென்னையின் குடிநீர்த் தேவை தீர்க்க வேண்டும் (1969), தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் (1975), நதிநீர் பிரச்சனைகளைத் தீர்க்க நதிகளை நாட்டுடைமையாக்க வேண்டும் (1969) என்று தமிழ்நாட்டின் தீர்க்க முடியா சிக்கல்களுக்கு தீர்க்க தரிசனத்தோடு தீர்வு சொன்ன தேவர் தந்த தேவர்!

ஐயா மூக்கையாத்தேவரின் நினைவைப் போற்றுகின்ற இந்நாளில் அவரைப்போலவே உண்மையும், நேர்மையுமாக நின்று மண்ணுக்கும், மக்களுக்கும் பாடுபடுவோம் என்று உறுதியேற்போம்!

'தேவர் தந்த தேவர்' உறங்காப்புலி ஐயா மூக்கையாத்தேவர் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் புகழ்வணக்கத்தைச் செலுத்துவோம்!

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when நாம் தமிழர் கட்சி, தொழிற்சங்கப்பேரவை, வடசென்னை மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share