08/10/2024
உள் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க வேண்டும்
***
''1931-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தாமல், எப்படி இட ஒதுக்கீட்டை துல்லியமாக செயல்படுத்த முடியும்?
பட்டியலின மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. ஏற்கெனவே வழங்கப்பட்ட 18 சதவீதத்தின் அளவுக்கு ஏற்றவாறு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை.
கடந்த 50 ஆண்டுகளாக 10 லட்சத்துக்கும் அதிகமான காலி பணி இடங்களை நிரப்பாமலே ஏமாற்றி வருகிறார்கள்.
ஏற்கெனவே வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ஒழுங்காக அமல்படுத்தாத தமிழக அரசு, உள் இட ஒதுக்கீடு என்ற பெயரில் அருந்ததியரை ஏமாற்றுகிறது. இதனை வைத்து ஆதிதிராவிடர் உள்ளிட்ட பிற பிரிவினரை வஞ்சிக்கிறது.
இன்னொரு பக்கம், பட்டியல் பிரிவினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. இதுதொடர்பான முந்தைய வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, ''பட்டியல் பிரிவில் உள் ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது'' எனக்கூறி,அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
அதன் மீதான மேல்முறையீடு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. அந்த அமர்வில் 1 நீதிபதி கூடுதலாக, அதாவது 6 நீதிபதிகள், ''உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது'' கூறியுள்ளனர். அதிலும் ஒரு நீதிபதி, அவர்களின் தீர்ப்பை மறுத்துள்ளார். எனவே இந்த தீர்ப்பை இறுதியானதாக ஏற்றுகொள்ள முடியாது.
எனவே மத்திய அரசு தானாக முன்வந்து 11 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும். அதுவரை உள் இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க வேண்டும்''.
-செ.கு.தமிழரசன்
தலைவர், இந்திய குடியரசு கட்சி