திராவிடர் கழகம் - Dravidar Kazhagam

  • Home
  • India
  • Chennai
  • திராவிடர் கழகம் - Dravidar Kazhagam

திராவிடர் கழகம் - Dravidar Kazhagam வாக்குகளை எதிர்பார்க்க அவசியம் இல்லாத இயக்கம்! Join our WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Va9MHto4NViemyDgvv1C

Dravidar Kazhagam is a socio cultural movement that aims at establishing an egalitarian society by eradicating the system of Varna Jathi (Casteism) and by creating conditions where different sections of people, including women, have equal status, rights and opportunities in all walks of life. Till different castes and communities attain equality, special arrangements, including reservation in educational institutions and jobs, should be made to enable the disadvantaged sections be represented in proportion to their numbers in different bodies - political, educational, administrative and cultural. Measures to ensure social justice should continue till the domination of the privileged communities or upper castes over others come to an end. This is nothing but an Affirmative Action or Compensatory Justice.

இன்று1970 - சென்னையில் ' பகுத்தறிவாளர் கழகத்தைப் ' பெரியார் தொடங்கிய நாள் #பெரியார்_நாள்காட்டி
05/09/2026

இன்று

1970 - சென்னையில் ' பகுத்தறிவாளர் கழகத்தைப் ' பெரியார் தொடங்கிய நாள்

#பெரியார்_நாள்காட்டி

🔹ஆபத்து! ஆபத்து!! அரும்பாடுபட்டுக் கொண்டு வரப்பட்ட சமூகநீதியை ஒழிக்க ஒன்றிய பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனிய அரசு சூழ்ச...
05/09/2026

🔹ஆபத்து! ஆபத்து!! அரும்பாடுபட்டுக் கொண்டு வரப்பட்ட சமூகநீதியை ஒழிக்க ஒன்றிய பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனிய அரசு சூழ்ச்சி!

🔹‘பேக்வேர்டு கிளாஸ்’ என்பதில், ‘கிளாஸ்’ என்றால் ‘வகுப்பு’ என்று பொருள் – ஜாதியில்லை என்று குறுக்குசால் ஓட்டுகின்றனர்!

🔹மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ‘‘ஜாதி வாரி கணக்கெடுப்பை’’ நீக்கிட சூழ்ச்சி!

🔹செப்.11 இல் நாடெங்கும் நடக்கட்டும் ஆர்ப்பாட்டங்கள்!

இந்திய வரலாற்றில் சமூகநீதியை ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தென்னாடு குறிப்பாக பழைய சென்னை மாகாண நீதிக்கட்சி என்ற திராவிடர்களின் அரசு, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கல்வி, உத்தியோகப் பணிகளில், அதற்குமுன் பல நூற்றாண்டுகளாகத் திறக்கப்படாத மனுதர்ம இரும்புக் கதவை அசைத்து, மெல்ல திறந்தது! அதனால், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோரும் நுழைந்து, படித்து, பணித் தகுதி பெற்றனர்.

🔸சமூகநீதி கிடைத்த வரலாறு!

காலங்காலமாக இந்த நாட்டின் குடிமக்களான அவர்க ளுக்கு, வந்தேறிய ஆரியத்தால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதை மாற்றிட, சமூகநீதி இயக்கங்களான ஜஸ்டிஸ் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம் என்ற பல பெயர்களில் மக்களிடையே உரிமைக் குரல் எழுப்பி, ‘‘100–க்கு 3 சதவிகிதமாக உள்ள உயர்ஜாதிப் பார்ப்பனர்களுக்கே அவற்றையும் ஏகபோகமாக்கிக் கொண்டு, அதற்குரிய பல வகை பாதுகாப்பு, ‘தகுதி – திறமை’ என்ற வடிகட்டல் முறை என்றெல்லாம் வைத்து, அரும்பாடுபட்டுப் பெற்ற சமூகநீதி – இட ஒதுக்கீடான ‘Compensatory Justice’ ஏற்கெனவே இழைக்கப்பட்ட ‘பல்லாண்டு சமூக அநீதிக்கானப் பரிகார நீதியாக’, ‘பள்ளத்தில் வீழ்ந்திருந்த மனிதரெலாம் விழி பெற்றுக் கொள்ளத்’ தொடங்கிய உரிமைப் போர், இன்றளவும் நீடிக்கும் ஆரிய – திராவிடப் போராகவே – பல முகமூடிகள் அணிந்த நிலையிலும், தொடர்ந்த வண்ணமே உள்ளது!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அம்பேத்கரின் அரிய முயற்சியால், முகப்புரை என்ற கொள்கைத் தத்துவ அறிமுக உரையான ‘Preamble’ என்பதில், 1.சமூகநீதி 2.பொருளாதார நீதி 3.அரசியல் நீதி என்பது பறிக்கப்பட முடியாத பாதிக்கப்பட்ட மக்களின் உரிமை என்பது பாதுகாக்கப்பட்ட சட்ட நிலையாக இருந்தாலும்,

🔸அரசியலமைப்புக் கட்டுமானத்தை உடைப்பதா?

பிரதமர் மோடி தலைமையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஒன்றிய ஆட்சியில் தொடர்ந்து, ‘சாண் ஏறினால் முழம் சறுக்குதல்’ என்பதைப்போல, ‘சாண் தந்தால்‘ ‘முழம் பறித்தல்’ என்ற புதுவகை சூழ்ச்சிமூலம், அரசிய லமைப்புச் சட்ட அடிப்படைக் கட்டுமானத்தைத் தகர்க்கும் வகையில் சட்ட விரோத, நியாய விரோத முறைகளின்மூலம் ஒடுக்கப்பட்டோரது உரிமைகள் பறிக்கப்படுவது தொடர்ந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடைபெற்று வருவது கொடுமையிலும் கொடுமை!

பொய் வழக்கு ஒன்றின் தீர்ப்பின் காரணமாக, ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட சமூகநீதி, தந்தை பெரியாரின் போராட்டத்தால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம்மூலம் மீட்கப்பட்டது.

அதனை அறவே திரித்து, அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கே தவறான விளக்கம் தந்து, உச்சநீதிமன்றத்தின் உயர்ஜாதி ஆதிக்க அதிகார வாய்ப்பினைப் பயன்படுத்தி, பொருளாதார அளவுகோலை நுழைத்தனர்.

‘பொருளாதார அடிப்படை செல்லாது’ என்ற பழைய உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் புறந்தள்ளி, பொருளாதாரத்தில் நலிந்த அரிய உயர்ஜாதியினருக்கு, குறிப்பாகப் பார்ப்பனர்க ளுக்கு, 10 சதவிகித இட துக்கீடு என்று திணித்து உள்ளே கொண்டு வந்து, ‘50 சதவிகிதத்திற்கு மேலா?’ என்று முன்பு கேட்ட அதே ஆரிய அதிகார வர்க்கம், நீதித்துறை களிலும் கூடுதல் 10 சதவிகிதம் உயர்ஜாதி ஏழைகள் (EWS) மூலம் என்றவுடன், தலையசைத்து சட்ட சம்மதம் தந்து, ஒரே வாரத்தில் நிதி ஒதுக்கீடு உள்பட தரப்பட்ட அதிசயம் நடந்தது. (அரசியலமைப்புச் சட்டத் திருத்த நிறை வேற்றமும் அதில் அடக்கம்!).
மண்டல் அறிக்கை அமலாக்கம் தொடர்பான ‘இந்திரா சகானி’ வழக்கில், ஒன்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு வழங்கிய தீர்ப்பை, உயர்ஜாதியினருக்கான பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு (அதுவும்கூட 3:2 என்ற நிலையில்) மாற்ற இயலுமா? அதிலும் மூன்று நீதிபதிகள் தானே உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க ஒப்புக் கொண்டனர். இரு நீதிபதிகள் உயர்ஜாதியினருக்கான இடஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்தின் படியும், முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையிலும் முரணானது என்று தீர்ப்பளித்தனர்.
ஆக, ஒரே ஒரு நீதிபதி மாற்றி வழங்கிய தீர்ப்பு தானே, இந்தியாவின் 140 கோடி மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
தற்போது, மக்கள் தொகையில் 100–க்கு 65 விழுக்காட்டிற்குமேல் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட ஒரு பெரும் சூழ்ச்சி திட்டத்தை மக்கள் தொகைக் கணக்கெ டுப்பின்மூலம் ‘‘சட்ட ரீதியாகச்’’(!) செய்ய முனைப்புக் காட்டி வருகின்றனர்.

🔸சமூகநீதியை ஒழிக்க புதிய சூழ்ச்சி!

ஜாதிவாரி கணக்கெடுப்பை முன்பு எதிர்த்த பா.ஜ.க. கடந்த பீகார் மாநிலத் தேர்தலின்போது, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதாக ஒப்புக்கொண்டுவிட்ட நிலையில், இப்போது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசும், ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அதிகார வர்க்கமும் ஒரு புதிய சூழ்ச்சியை, தந்திரத்தை நுழைத்து, அதனை அறவே மறுக்க முடிவு செய்துள்ளன –

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (OBC) என்று இருப்பதால், ‘வகுப்பு என்று தான் இருக்கிறது. ‘ஜாதி’ என்று இல்லை (அரசியலமைப்புச் சட்டத்தில் Class – Not Caste என்ற) ஒரு குயுக்தியான வாதத்தைக் காரணம் காட்டி, ஏற்கெனவே நாட்டிலுள்ள சமூகநீதி, இட ஒதுக்கீட்டையே ஒழித்துக்கட்டத் தொடங்கிவிட்டனர்.
ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட மக்களும், கிரீமிலேயர் திணிக்க முன்வந்தபோது, ஒடுக்கப்பட்ட (எஸ்.சி., எஸ்.டி.,) மக்களும் ஒருங்கிணைந்து அறவழியில் போராட்டக் களம் அமைக்கவேண்டிய அரிய தருணம் வந்துவிட்டது!

🔸வகுப்பு – கிளாஸ் என்பதற்கு அண்ணல் அம்பேத்கரும் – மண்டல் குழுவும் கூறியுள்ளதென்ன?

அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள வகுப்பு – Class என்பதற்கு, அதனை எழுதிய மூலகர்த்தா டாக்டர் அம்பேத்கர் அவர்களே, அரசியலமைப்புச் சட்ட முதல் திருத்தத்தை, சட்ட அமைச்சர் என்ற கூடுதல் தகுதியுடன் கொண்டு வந்தபோது, நாடாளுமன்றத்திலேயே சிறப்பாக விளக்கியுள்ளார்.

இதனை மண்டல் கமிஷன் அறிக்கையிலும், பிறகு வெளிவந்த உச்சநீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல தீர்ப்புகளிலும் எடுத்துக் காட்டியுள்ளது.
இந்திரா சஹானி வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.ஜீவன் ரெட்டி அவர்கள் தனக்காகவும், அப்போதைய தலைமை நீதிபதி எம்.ஹெச்.கனியா, மற்ற நீதிபதிகள் எம்.என்.வெங்கடாச்சல்யா, எ.எம்.அகமதி ஆகியோருக்காக எழுதிய தீர்ப்பில்,
அப்பகுதியை அப்படியே தருகிறோம்.

Para. 662. Chapter - VII deals with ‘Social Justice, Constitution and the law'. It referes to the relvant provisions of the Constitution, to the decision in M.R.Balaji & Ors v. State of Mysore (1963 Suppl.(1) S.C.R.439) and various subsequent decisions of this Court and discusses the principles flowing from the said decisions. It notes that the subsequent decisions of this Court in C.A.Rajendran v. Union of India (1968 (1) S.C.R.721), State of Andhra Pradesh & Ors. v. P.Sagar (1968 (3) S.C.R.595) and State of Andhra Pradesh & Ors. v. U.S.V.Balram (1972 (3) S.C.R.247) etc. show a marked shift from the original position taken in Balaji on several important points. In particular, it refers to the observations in Rajendran to the effect that ‘‘caste is also a class of citizens and if the class as a whole is socially and educationally backward, reservation can be made in favour of such a caste on the ground that it was socially and educationally backward class of citizens within the meaning of Article 15(4)’’. It refers to the statement in A.Peeriakaruppan etc. v. State of Tamil Nadu (1971 (2) S.C.R.430) to the effect that ‘‘a caste has always been recognised as a class.’’ It also commends the dissenting view of S***a Rao, J. in T.Devadasan v. Union of India (1964 (4) S.C.R.680).

இதன் தமிழாக்கம் வருமாறு:

662. ஏழாவது அத்தியாயம் ‘சமூக நீதி, அரசியலமைப்பு மற்றும் சட்டம்' குறித்து விவாதிக்கிறது. இது தொடர்பு டைய அரசியலமைப்பின் விதிகள், “‘எம்.ஆர். பாலாஜி மற்றும் பிறர்’ எதிர் ‘மைசூர் மாநிலம் (1963 Suppl.(1) S.C.R.439) வழக்கின் தீர்ப்பு மற்றும் இம்மன்றத்தின் பல்வேறு பிந்தைய தீர்ப்புகளைக் குறிப்பிடுவதுடன், அத்தீர்ப்புகளிலிருந்து பெறப்படும் கோட்பாடுகளையும் விவாதிக்கிறது. சி.ஏ. ராஜேந்திரன் எதிர் இந்திய ஒன்றியம் (1968 (1) S.C.R.721), ஆந்திரப் பிரதேச மாநிலம் மற்றும் பிறர் எதிர் பி.சாகர் (1968 (3) S.C.R.595) மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலம் மற்றும் பிறர் எதிர் யு.எஸ்.வி. பலராம் (1972 (3) S.C.R.247) போன்ற வழக்குகளில் இம்மன்றம் வழங்கிய பிந்தைய தீர்ப்புகள், ‘பாலாஜி' வழக்கில் எடுக்கப்பட்ட அசல் நிலைப்பாட்டிலிருந்து பல முக்கிய அம்சங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காட்டுவதை இது சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக, ‘‘ஜாதி என்பதும் குடிமக்களின் ஒரு வகுப்பே (class) ஆகும்; ஒரு வகுப்பு ஒட்டுமொத்தமாகச் சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய நிலையில் இருந்தால், அரசியலமைப்பின் 15(4)-ஆவது பிரிவின் பொருளில் அது சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய குடிமக்கள் வகுப்பாகக் கருதப்பட்டு, அந்த ஜாதிக்கு இடஒதுக்கீடு வழங்கப்படலாம்’’ என்ற ராஜேந்திரன் வழக்கின் கருத்துகளை இது குறிப்பிடுகிறது.

‘‘ஒரு ‘ஜாதி’ எப்போதும் ஒரு ‘வகுப்பாகவே’ (class) அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளது’’ என்ற ஏ.பெரியகருப்பன் மற்றும் பிறர் எதிர் தமிழ்நாடு மாநிலம் (1971 (2) S.C.R.430) வழக்கின் கூற்றையும் இது குறிப்பிடுகிறது. மேலும், டி.தேவதாசன் எதிர் இந்திய ஒன்றியம் (1964 (4) S.C.R.680) வழக்கில் நீதிபதி சுப்பா ராவ் தெரிவித்த மாறுபட்ட கருத்தையும் இது பாராட்டுகிறது.

Para. 698. It is worthy of notice that the Parliament, which enacted the first Amendment to the Constitution, was in fact the very same Constituent Assembly which had framed the Constitution. The speech of Dr. Ambedkar on the occasion is again instructive. He said:-
Then with regard to article 16, clause (4), my submission is this that it is really impossible to make any reservation which would not result in excluding somebody who has a caste. I think it has to be borne in mind and it is one of the fundamental principles which I believe is stated in Mulla's edition on the very first page that there is no Hindu who has not a caste. Every Hindu has a caste-he is either a Brahmin or a Mahratta or a Kundby or a Kumbhar or a carpenter. There is no Hindu-that is the fundamental proposition-who has not a caste. Consequently, if you make a reservation in favour of what are called backward classes which are nothing else but a collection of certain castes, those who are excluded are persons who belong to certain castes. Therefore, in the circum stances of this country, it is impossible to avoid reservation without excluding some people who have got a caste.’’

இதன் தமிழாக்கம் வருமாறு:

698. அரசியலமைப்பிற்கான முதல் திருத்தத்தை இயற்றிய நாடாளுமன்றம் என்பது, உண்மையில் அதே அரசியலமைப்பு நிர்ணய சபையே என்பது குறிப்பி டத்தக்கது. அந்தச் சூழலில் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய உரை மீண்டும் ஒருமுறை கவனிக்கத்தக்கது. அவர் கூறியதாவது:-

‘‘அடுத்து, கூறு 16 (4) குறித்து நான் முன்வைக்கும் கருத்து இதுதான்: ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவரை விலக்கி வைக்காத வகையில் இடஒதுக்கீட்டை உருவாக்குவது என்பது உண்மையில் சாத்தியமற்றது. இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்; ‘முல்லா'வின் (Mulla) நூலின் முதல் பக்கத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாக நான் நம்பும் அடிப்படைத் தத்துவங்களில் இதுவும் ஒன்று: அதாவது, ஜாதி இல்லாத இந்து என்று எவரும் இல்லை. ஒவ்வொரு இந்துவுக்கும் ஒரு ஜாதி உண்டு - அவர் பார்ப்பனராகவோ, மராத்தாவாகவோ, குன்பியாகவோ (Kundby), கும்பாராகவோ (Kumbhar) அல்லது தச்சராகவோ இருக்கலாம். ஜாதி இல்லாத இந்து என்று யாரும் இல்லை - அதுவே அடிப்படை உண்மை. எனவே, 'பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்' என்று அழைக்கப்படுபவர்களுக்கு - இவர்கள் உண்மையில் சில ஜாதிகளின் தொகுப்பே ஆவர் - நீங்கள் இடஒதுக்கீடு அளித்தால், அதனால் விலக்கி வைக்கப்படுபவர்களும் ஏதோ ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். ஆகையால், இந்நாட்டின் சூழலில், ஜாதி அடையாளத்தைக் கொண்ட சிலரை விலக்கி வைக்காமல் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது என்பது சாத்தியமற்றது.’’
இவ்வளவு தெளிவாக ‘வகுப்பு’ (Class) என்பது ஜாதிகளின் தொகுப்பே (Builde of Castes) என்று விளக்கப்பட்டதற்குப் பிறகு, இப்போது வந்து தவறான வியாக்கியானங்களுடன் நமக்கு ‘கிளாஸ்’ எடுக்க முற்படுகிறது ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. அரசு.

🔹தி.மு.க. அரசு எடுத்த நிலைப்பாட்டிற்குக்
காரணம் என்ன?

ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்றுதானே பிரதமர் மோடி வெளிப்படையாக அறிவித்தார் அதற்கும் பின்னரும், இப்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கும் இடையில் என்ன நடந்தது?
இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் வரும்போ தெல்லாம் அளவிடற்குரிய தரவு (Quantifiable Data) இருக்கிறதா என்றுதானே உச்சநீதிமன்றம் கேட்கிறது? அதை ஒன்றிய அரசுதானே ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் (Caste-wise Census) மூலம் எடுக்க முடியும். மாநில அரசுகளால் சமூகநீதி சர்வே மட்டும்தானே எடுக்க முடியும் அந்த சர்வேயும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு போதுமானதில்லை என்பது பீகாரிலும், கருநாடகத்திலும் கிடைத்துள்ள அனுபவங்கள் அல்லவா? அதனால்தான், தமிழநாட்டில் கடந்த முறை ஆட்சியில் இருந்த தி.மு.க. ஜாதி வாரி கணக்கெடுப்பு (சென்சஸ்) வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி வந்தது. அதற்கு மாறாக, ஒன்றிய அரசு, சென்சஸ் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தாமல் சர்வே ஏன் எடுக்கவில்லை என்று மாநில அரசுகளைக் கேட்பதால், அரசியல் உள்நோக்கங்களைத் தவிர வேறு என்ன பயன்? அந்த கணக்கெடுப்பிலும் ஒன்றிய அரசு குழப்பத்தை ஏற்படுத்த முனையுமானால் அதை முறியடித்த முந்தைய அரசை நோக்கித்தானே குரல் எழுப்ப வேண்டும்.

பல்வேறு முறையீடுகள் வைத்து, போராட்டங்களும் நடத்தி, வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டும், 95 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்படும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பில், பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான கணக்கெடுப்பில் மட்டும் குழப்பங்களை ஏற்படுத்துவதும், குழப்பமான முடிவுகள் கிடைக்கும் வகையிலேயே முழுமையற்ற விவரங்களைச் சேகரிப்பதும் இந்நாட்டின் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி இழைப்பதாகும். 1931 சென்சஸ்சை மாடலாகக் கொள்ளவேண்டும்!

🔹செப்.11 இல் தமிழ்நாடு – புதுச்சேரியில் ஆர்ப்பாட்டங்கள்!

சமூக நீதிக்காக போராடும் இயக்கங்களும், அமைப்பு களும் இதை எதிர்த்து போராட்டக் களம் காண வேண்டிய தவிர்க்கவியலாத சூழலை ஒன்றிய அரசு ஏற்படுத்தியுள்ளது. பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை களுக்காக எப்போதும் களம் காணும் திராவிடர் கழகம் இந்தக் களத்தை மீண்டும் இப்போது தொடங்கி வைக்கிறது. வரும் செப்டம்பர் 11 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனைத்து கழக மாவட்டங்களிலும், முக்கிய நகரங்களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில், “ஜாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி இழைக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், சமூகநீதிக்காக நீதிமன்றங்கள் கேட்கும் முழுமையான விவரங்களைத் திரட்ட வலியுறுத்தியும்” அறவழி ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

🔹சென்னையில் நான் பங்கேற்கிறேன்!

சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் (கி.வீரமணி) பங்கேற்கிறேன். ஒத்த கருத்துடையோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து சமூக நீதிக்கான குரலை வலுப்படுத்த வரலாம்; வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

திராவிட இயக்கத்தின் அடிநாதமான சமூகநீதிக்காக தந்தை பெரியார் பிறந்த இந்த மாதத்தில் நமது போராட்டம் தொடங்கட்டும்! கருஞ்சட்டைத் தோழர்களே தயாராவீர்!

பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு இந்த போராட்டத்தை விட பொருத்தமான தொடக்கம் வேறு உண்டோ?

- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
5.9.2026

இன்று ஆசிரியர் நாள் 1872 - வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் #பெரியார்_நாள்காட்டி
05/09/2026

இன்று

ஆசிரியர் நாள்

1872 - வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள்

#பெரியார்_நாள்காட்டி

04/09/2026
தமிழர் இல்லமெல்லாம் இனமான விழாவாகப் பூத்துக் குலுங்கட்டும்!பட ஊர்வலம் – குடும்ப விருந்து – பேச்சுப் போட்டி – விளையாட்டு...
04/09/2026

தமிழர் இல்லமெல்லாம் இனமான விழாவாகப் பூத்துக் குலுங்கட்டும்!
பட ஊர்வலம் – குடும்ப விருந்து – பேச்சுப் போட்டி – விளையாட்டுப் போட்டிகள் – ஓட்டம்/நடை (Run/walk) – நூல்கள் பரப்புதல் நடக்கட்டும்!
திட்டமிட்டுச் செயல்படுவீர் கழகத் தோழர்களே, இனவுணர்வாளர்களே!
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் உற்சாகமூட்டும் தீர்மானம்!

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில், 3.9.2026 முற்பகல் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தீர்மானம் 1:
இரங்கல் தீர்மானம்
கீழ்க்கண்ட பெருமக்களின், கழகத் தோழர்களின் மறைவிற்குத் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இவர்களின் மறைவால் பெருந்துயரத்திற்கு ஆளாகி யிருக்கும் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் இச்செயற்குழு தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

Font Resizer
Aa
Viduthalai Daily Newspaper
திராவிடர் கழகம் > ‘தந்தை பெரியார் பிறந்த நாள்’ ஒரு மாதம் முழுவதும் ஒட்டுமொத்தமான தமிழினத்தின் பண்பாட்டுத் திருவிழா!
திராவிடர் கழகம்
‘தந்தை பெரியார் பிறந்த நாள்’ ஒரு மாதம் முழுவதும் ஒட்டுமொத்தமான தமிழினத்தின் பண்பாட்டுத் திருவிழா!
Last updated: September 3, 2026 2:39 pm
viduthalai
திராவிடர் கழகம்
இணையவழி கையெழுத்து இயக்கம்

தமிழர் இல்லமெல்லாம் இனமான விழாவாகப் பூத்துக் குலுங்கட்டும்!
பட ஊர்வலம் – குடும்ப விருந்து – பேச்சுப் போட்டி – விளையாட்டுப் போட்டிகள் – ஓட்டம்/நடை (Run/walk) – நூல்கள் பரப்புதல் நடக்கட்டும்!
திட்டமிட்டுச் செயல்படுவீர் கழகத் தோழர்களே, இனவுணர்வாளர்களே!
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் உற்சாகமூட்டும் தீர்மானம்!
திராவிடர் கழகம்

Contents
தமிழர் இல்லமெல்லாம் இனமான விழாவாகப் பூத்துக் குலுங்கட்டும்! பட ஊர்வலம் – குடும்ப விருந்து – பேச்சுப் போட்டி – விளையாட்டுப் போட்டிகள் – ஓட்டம்/நடை (Run/walk) – நூல்கள் பரப்புதல் நடக்கட்டும்! திட்டமிட்டுச் செயல்படுவீர் கழகத் தோழர்களே, இனவுணர்வாளர்களே! திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் உற்சாகமூட்டும் தீர்மானம்!
தீர்மானம் 1:
இரங்கல் தீர்மானம்
தீர்மானம் 2:
தந்தை பெரியாரின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாளை எழுச்சியூட்டும் நாளாக, நன்றியை வெளிப்படுத்தும் திருவிழாவாக நாடெங்கும் கொண்டாடுவது!
சென்னை, செப்.3 தந்தை பெரியாரின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாளான வரும் செப்டம்பர் 17 அன்று, தமிழர் இல்லமெல்லாம் உணர்ச்சியூட்டும் உற்சாக விழாவாக நடத்துவது என்றும், பட ஊர்வலம், குடும்ப விருந்து உள்பட பல்வேறு சிறப்புகளோடு ஒரு மாதம் முழுவதும் நடைபெற கழகத் தோழர்களும், பொறுப்பாளர்களும், இன உணர்வாளர்களும் திட்டமிட்ட வகையில் காலக்கதிரவன் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவது என்றும் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவ்விவரம் வருமாறு:

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில், 3.9.2026 முற்பகல் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தீர்மானம் 1:
இரங்கல் தீர்மானம்
கீழ்க்கண்ட பெருமக்களின், கழகத் தோழர்களின் மறைவிற்குத் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இவர்களின் மறைவால் பெருந்துயரத்திற்கு ஆளாகி யிருக்கும் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் இச்செயற்குழு தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

Read More
தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவில் கோபி கழக மாவட்டத்தின் சார்பில் உடற்கொடை வழங்க கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆகியவற்றுக்கு தலா 5 ஆண்டு சந்தாக்களாக
நேபாளத்தில் இயற்கைப் பேரிடர் பெருவெள்ளத்தால் பரிதாபமாக மறைவுற்றவர்களுக்கு இச்செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

பெரியார் பெருந்தொண்டர் பருத்தியூர் இராமலிங்கம் (வயது 83, மறைவு 5.7.2026), பெரியார் கொள்கையாளர் பட்டாபிராம் து.ஜெயபிரகாஷ் நாராயண் (வயது 81, மறைவு 26.6.2026), பெரியார் பெருந்தொண்டர் நாமக்கல் வை.நடராசன் (வயது 92), மண்ணச்சநல்லூர் ஒன்றிய கழக மகளிரணித் தலைவர் மேகலா (வயது 52, மறைவு 21.7.2026), அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழகத் தலைவர் எஸ்.குமாரதாஸ் (வயது 67, மறைவு 28.7.2026), பெரியார் பெருந்தொண்டர் செம்பனூர் நடராஜன் (வயது 96, மறைவு 28.8.2026), பதிப்பாளர் கவிஞர் வைகறை வாணன் (வயது 77, மறைவு 1.8.2026), பேராசிரியர் முனைவர் நளினிதேவி அம்மையார் (வயது 82, மறைவு 29.8.2026), புஞ்சைப் புளியம்பட்டி மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுயமரியாதை வீரர் மறைந்த சாமிநாதன் அவர்களின் வாழ்விணையர் சம்பூர்ணம் அம்மையார் (வயது 87, மறைவு 1.9.2026), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற மேனாள் செயலாளர் குடியரசி அவர்களுடைய தந்தையாருமாகிய தோழர் கிட்டப்பா (மறைவு 2.9.2026) ஆகியோரின் மறைவிற்கு இச்செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2:
தந்தை பெரியாரின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாளை எழுச்சியூட்டும் நாளாக, நன்றியை வெளிப்படுத்தும் திருவிழாவாக நாடெங்கும் கொண்டாடுவது!
ஒப்பாரும், மிக்காரும் இல்லாதவர் உலகத் தலைவர் தந்தை பெரியார் ஆவார்! தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அரசியல், ஜாதி, மத, பாலின வேற்றுமைகளைக் கடந்து, அனைவருக்கும் அனைத்தும் என்ற சம உரிமை, சமூகநீதிக்காகப் பாடுபட்டு, தன் வாழ்நாளிலேயே தனது போராட்டத்துக்கான வெற்றியைக் கண்டு களித்த காலக் கதிரவன் தந்தை பெரியாரின் பிறந்த நாள் என்பது தமிழ் இனத்தின் ஒட்டுமொத்தமான பண்பாட்டுத் திருவிழா நாளாகும். உலகம் முழுவதும் உள்ள பகுத்தறிவாளர்களுக்கும் அந்நாள் மகிழ்வூட்டும் பொன்னாளே!

அந்த வகையில் வரும் செப்டம்பர் 17, தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்த நாளை நமது இனத் திருவிழாவாகக் கொண்டாட வேண்டியது – நன்றி காட்டும் திருநாளாக மட்டுமல்ல, இனி நாம் பெறவேண்டிய உரிமைகளுக்காக உறுதி எடுத்து உழைக்கும் உற்சாகத் திருவிழாவும் ஆகும்.

‘‘பெரியார் உலகம்’’ என்ற அழியா வரலாற்று மய்யத்தை உருவாக்க நம்மை நாமே செயல் வேகப்படுத்திக் கொள்ள உறுதிப்படுத்திக் கொள்ளும் நாளுமாகும்.

அய்யாவின் இந்த 148 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிலும் வெகு சிறப்பாக, மிகுந்த எழுச்சியாக, ஆக்கப்பூர்வமான வகையில் கொண்டாடுவது என்று இச்செயற்குழு புது உற்சாகத்தோடு தீர்மானிக்கிறது.

கழகத் தோழர்கள் புத்தாடை அணிந்து, கழகக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, விழாவைக் கோலா கலமாகக் கொண்டாடவும்,

கீழ்க்கண்ட வகையில் கொள்கை விழாவாக அதனை திட்டமிட்டு நடத்திடவும் கழகத் தோழர்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

4 செப்.17 காலை சென்னை, பெரியார் திடலில் பிறந்த நாள் விழா – மலர் வெளியீடு.

4 மாலை – சென்னையில் தமிழர் தலைவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம்.

4 தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் வீடுதோறும் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடுதல்.

4 செப்.17 அல்லது அவ்வாரத்தில் வாய்ப்பான நாள்க ளில் பெரியார் பட ஊர்வலம் – தமிழ்நாடெங்கும்.

4 கழகக் கொடியேற்றுதல், தந்தை பெரியார் சிலை, படங்களுக்கு மாலை அணிவித்து, பொதுமக்கள் மத்தியில் விழா நடத்துதல், தெருமுனைக் கூட்டங்கள் நடத்துதல்.

4 செப்.12 – பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகள்

4 செப்.20 – தமிழ்நாடு முழுவதும் ஓட்டம்/நடை (Run/walk for Periyar).

4 செப்.27 – குடும்ப விருந்து – பிள்ளைகளுக்கு விளையாட்டுப் போட்டி (சென்னையில், தமிழர் தலைவர் பங்கேற்பு)

4 அக்டோபர் முதல் வாரத்தில் ஆங்கிலம், பிற மொழி களில் பன்னாட்டு அளவிலும், பிற மாநிலங்களிலும் இருந்து பங்கேற்கும் வகையில் காணொலிக் கூட்டம் நடத்துதல்.

4 ‘பெரியார் கேட்கும் கேள்விகள்?’ புத்தகத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ஒரே நாளில், தமிழ்நாடு முழுவதும் பரப்புரை இயக்கம்.

இன்னோரன்ன வகையில், எந்த ஆண்டும் இல்லாத வகையில், ஏற்றமுடன், எழுச்சியுடன் முன்கூட்டியே திட்டமிட்டு, தமிழ்நாடு முழுவதும் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

#திராவிடர்கழகம் #பெரியார்148

இன்று செயற்கை நுண்ணறிவு என்ற சொல்லாக்கம் தந்த ஜான் மெக்காபி பிறந்த நாள் #பெரியார்_நாள்காட்டி
04/09/2026

இன்று

செயற்கை நுண்ணறிவு என்ற சொல்லாக்கம் தந்த ஜான் மெக்காபி பிறந்த நாள்

#பெரியார்_நாள்காட்டி

   #பெரியார்148  #திராவிடர்கழகம்
03/09/2026

#பெரியார்148 #திராவிடர்கழகம்

   #பெரியார்148    #திராவிடர்கழகம்
03/09/2026

#பெரியார்148 #திராவிடர்கழகம்

இன்று 1973 - பேராசிரியர் சி.இலக்குவனார் மறைந்த நாள் #பெரியார்_நாள்காட்டி
03/09/2026

இன்று

1973 - பேராசிரியர் சி.இலக்குவனார் மறைந்த நாள்

#பெரியார்_நாள்காட்டி

🔘 மலேசியாவில் மருத்துவ ஆய்வுப் படிப்பு மேற்கொண்டுவரும் மாணவர் பாரதிதாசனுக்கு உடனடியாக உதவித்தொகை அனுப்பிடுக!🔘 இங்கிலாந்த...
02/09/2026

🔘 மலேசியாவில் மருத்துவ ஆய்வுப் படிப்பு மேற்கொண்டுவரும் மாணவர் பாரதிதாசனுக்கு உடனடியாக உதவித்தொகை அனுப்பிடுக!

🔘 இங்கிலாந்தில் படிக்க விண்ணப்பித்து தமிழ்நாடு அரசின் உதவித்தொகைக்கு தேர்வாகியுள்ள 316 மாணவர்களுக்கு விசா கிடைக்க ஒன்றிய அரசு மூலம் அந்நாட்டு தூதரை வலியுறுத்துக!

- திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை

👇👇👇👇👇

தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் நிதி பெற்று, மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில், திசுப் பொறியியல் மற்றும் மீள் உருவாக்க மருத்துவத் துறையில், முனைவர் பட்ட ஆய்வு மாணவராக இரண்டாம் ஆண்டு படித்து வரும் மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசன் அண்மையில் தமது நடப்பு ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை என்று சமூக ஊடகங்கள் வழியாகத் தெரிவித்து இருந்தார்.

ரூ.21 லட்சம் அளவிலான தொகையை இன்னமும் தமிழ்நாடு அரசு அவருக்கு அனுப்பவில்லை!
கடந்த ஆண்டு செலவுகளுக்குரிய கணக்குகளையும், அவற்றுக்கான ரசீதுகளையும் கடந்த ஜூன் 8 அன்றே சமர்ப்பித்துவிட்டார். அவரது ஆராய்ச்சிப் படிப்பு குறித்த பல்கலைக்கழகத்தின் தரநிலை அறிக்கையும் அங்கிருந்து பல்கலைக்கழகத்தால் அனுப்பப்பட்டுவிட்டது. இந்நிலையில், இவ்வாண்டுக்கான ரூ.36 லட்சம் மதிப்புள்ள உதவித் தொகையில், ரூ.5 லட்சத்துக்கான கல்வித் தொகையும், ரூ. 6 லட்சத்துக்கான வாழ்வாதாரச் செலவுகளுக்கான தொகையும் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், இவ் வாண்டின் ஆய்வைத் தொடர்வதற்காக வழங்கப்பட வேண்டிய ரூ.21 லட்சம் அளவிலான தொகையை இன்னமும் தமிழ்நாடு அரசு அவருக்கு அனுப்பவில்லை.

கேள்விகள் தொக்கி நிற்கின்றன!
இது தொடர்பாக, ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பிய நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்திலும் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றன. அவர் ஏன் ஷூ வாங்கினார்? கோட் வாங்கினார் என்றெல்லாம் சமூக ஊடகங்களில் சிலர் எழுப்பிய கேள்விகளுக்கு, அவர் படிக்கும் திசுக்கள் தொடர்பான ஆய்வுத் துறையில் இவற்றின் அவசியத்தை அனைவரும் எடுத்துரைத்து விட்டனர். ஆனால், இன்னமும் அத் தொகையை அவருக்கு அனுப்பாமல், கடந்த இரு மாதங்களுக்கு முன் அனுப்பப்பட்டுவிட்ட ரசீதுகளுக்கு, அப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அலுவலகத்தில் சீல் வைத்து அனுப்ப வேண்டும் என்று புதிதாக இப்போது தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. அப்படியான எந்த நடைமுறையும் இதுவரை சொல்லப்படாத நிலையில், இப் பிரச்சினையில் மேலும் காலதாமதம் ஏற்படுத்தும் வகையில்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இத்தகைய விதி, உதவித் தொகை பெறும் அனைத்து மாணவர்களுக்குமா? எப்போது இத்தகைய விதி அறிமுகப்படுத்தப்பட்டது? என்ற கேள்விகள் தொக்கி நிற்கின்றன.

தற்போதைய நிலவரப்படி, உதவித் தொகை தமிழ்நாடு அரசிடமிருந்து வராததாலும், அரசியல் பிரச்சினையாக இது சட்டமன்றத்திலேயே விவாதிக்கப்பட்டு இருப்பதாலும், பல்கலைக்கழகத்திலிருந்து அம் மாணவருக்குப் படிப்பை இடைநிறுத்த வேண்டிய அளவுக்கு நெருக்கடியான சூழல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.

உரிமையுடன் இதனை நாம் வலியுறுத்த விரும்புகிறோம்!
தமிழ்நாடு அரசு தரவேண்டிய உதவித் தொகையை நம்பி, தமது படிப்பை அயல்நாடு ஒன்றில் மேற்கொண்டுவரும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவரை இப்படி அலைக்கழிப்பது ஓர் அரசுக்கு அழகல்ல. சமூகநீதித் துறை என்று பெயர் மாற்றப்பட்டுள்ள ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்திற்கான துறை, தனது கடமையிலிருந்து வழுவக் கூடாது; தனிப்பட்ட முறையில் இப் பிரச்சினையை அணுகக் கூடாது. அத்துறைக்குப் பொறுப்பேற்று அமைச்சராக உள்ள தோழர் வன்னிஅரசு அவர்கள் சமூகநீதிச் சிந்தனையிலிருந்து வந்தவர் என்ற உரிமையுடன் இதனை நாம் வலியுறுத்த விரும்புகிறோம்.

உடனடியாக, அம் மாணவருக்கு உரிய உதவித் தொகையினைக் காலதாமதம் இன்றி அனுப்பிட அரசு ஆவன செய்ய வேண்டும் என்று அவசரம் கருதி வலியுறுத்த விரும்புகிறோம்.

மேலும், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித் தொகைக்காக இவ்வாண்டு விண்ணப்பித்து, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 316 ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், அய்க்கிய ராஜ்ஜியத்தின் (UK) பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கு, ஒன்றிய அரசின் உதவித் தொகை உத்தரவாதத்தைத் தான் ஏற்கமுடியும்; தமிழ்நாடு அரசின் உதவித்தொகையைக் கருத்தில் கொள்ள முடியாது என்று அந்நாடு நிராகரித்திருப்பதால், மாணவர்கள் அனைவரும் தவித்து வருகின்றனர். தனியார் வங்கிகள் தரும் உத்தரவாதங்களை ஏற்று, கல்வி கற்க அனுமதிக்கும் அய்க்கிய ராஜ்ஜியம், ஒரு மாநில அரசின் உதவித் தொகைத் திட்டத்தை நம்ப மறுப்பது ஏன்? இது தொடர்பாக ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை மூலம் அந் நாட்டுடன் பேச்சு நடத்தி நமது மாணவர்கள் உரிய நேரத்தில் தங்கள் கல்வியைத் தொடங்க ஆவன செய்யவேண்டாமா? தமிழ்நாடு அரசிடமிருந்து இங்கிலாந்து தூதரக உயர் ஆணையரைத் தொடர்பு கொள்ள, அல்லது தொடர்பு கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

*தமிழ்நாடு அரசின் கடமை அல்லவா?*
உள்நாட்டில், வேறொரு மாநிலத்தில் சென்று கல்வி பயில்வதே, பல்வேறு தடைகளைத் தாண்ட வேண்டிய ஓட்டம் என்றால், கண்டம் தாண்டிச் சென்று முதல் தலைமுறையாகப் படிக்க முயலும் மாணவர்களைத் தொடக்கத்திலேயே மன உளைச்சலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாக்காமல் காக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை அல்லவா?

டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், டாக்டர் பல்பு போன்று அயல்நாடுகளில் சென்று படித்து வந்தவர்கள் நிகழ்த்திய சமூகப் புரட்சிதான், இன்று நாம் எட்டியிருக்கும் சமூகநீதிக்கான கதவுகளைத் திறந்துவிட்டது. இந்த மாணவர்களில் எத்தனையோ பேர், நம் இனத்தின் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்கான உந்து சக்தியாக இருக்கக் கூடும். அவர்களைத் தடையின்றி கல்வி பயிலச் செய்வது நம் கடமை.

*மாணவர்களுக்கு முன்னுரிமை தந்து, தடைகளை ஒதுக்கி உதவிடுவது அவசியம், அவசரம்!*
2017 ஆம் ஆண்டு இதே நாளில் நீட் என்னும் கொடுந் தேர்வு காரணமாகத் தன்னை மாய்த்துக் கொண்ட, அருமைச் செல்வம் அனிதா கூட, அப்போது மருத்துவப் படிப்பில் இணைந்திருந்தால், இப்படியொரு மேற்படிப்புக்கான முயற்சியில் இறங்கியிருக்கக் கூடும். நாம் நிறைவேற்ற முனைவது அனிதாக்களின் கனவை, அம்பேத்கரின் முன்னெடுப்பை, தந்தை பெரியாரின் போராட்டத்தை! கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு செய்ய வேண்டிய பணியை அரசின் – அதிகார வர்க்கத்தின் சில சட்ட சிக்கல்களையும், ஆணைகளையும் மனிதாபிமானத்துடன் அணுகி, கல்வி நீரோடை அனைவருக்கும், குறிப்பாக காலங்காலமாக மறுக்கப்பட்ட மக்களுக்கு – மாணவர்களுக்கு முன்னுரிமை தந்து, தடைகளை ஒதுக்கி உதவிடுவது அவசியம், அவசரம்!

- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
2.9.2026
www.viduthalai.in

Address

Periyar Thidal, 84/1 (50), EVK Sampath Road, Vepery
Chennai
600007

Alerts

Be the first to know and let us send you an email when திராவிடர் கழகம் - Dravidar Kazhagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to திராவிடர் கழகம் - Dravidar Kazhagam:

Shortcuts

Share