CPIM Tamilnadu

CPIM Tamilnadu Official page of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee. It also leads the Left Front coalition of leftist parties.
(323)

The Communist Party of India (Marxist) (abbreviated CPI(M)) party emerged from a split from the Communist Party of India in 1964.

04/06/2026

நீட் ஊழல் டூ கிக் எக்கனாமி: வீதிக்கு வரும் டிஜிட்டல் கோபம்!
,
More: https://youtube.com/shorts/M5hojH9gmGo

04/06/2026

மேகதாதுவில் அணை கட்டுகிற முயற்சியை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்து பகுதி மக்களும் சேர்ந்து முறியடிக்க வேண்டும்! - தோழர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்,
More: https://youtube.com/shorts/pNN3iWL446I

04/06/2026

தெலுங்கானாவில் முறைகேடு செய்து, 23 மாணவர்களின் தற்கொலைக்குக் காரணமான ஒரு நிறுவனம், வேறொரு பெயரில் சிபிஎஸ்இ (CBSE) தேர்வுத் தாள்களை மதிப்பிடுவதற்கு எப்படி அனுமதிக்கப்பட்டது?

அந்த மோசடியான நிறுவனம் மதிப்பீடு செய்வது ஒரு பிரச்சனை என்றால், அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்க ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கை அதைவிடக் கொடுமையானது.

இந்த நிறுவனம் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காகவே ‘பிளாக் லிஸ்ட்’ (Blacklist) விதிகளும், மென்பொருள் விதிகளும் மாற்றப்பட்டுள்ளன. 17 லட்சம் மாணவர்களின் உழைப்பை அற்பர்கள் சூறையாடியுள்ளனர்.

இந்த அநீதிக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும். - தோழர் சு. வெங்கடேசன் எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர், More: https://youtube.com/shorts/9z-DfxauIO4

அமெரிக்கா இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிப்பு: ஒன்றிய அரசு கண்டிக்க வேண்டும்!அமெரிக்கா தனது பொருளாதார மேலாதிக்கத்தை ...
04/06/2026

அமெரிக்கா இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிப்பு: ஒன்றிய அரசு கண்டிக்க வேண்டும்!

அமெரிக்கா தனது பொருளாதார மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக எடுக்கும் இத்தகைய நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. இந்திய அரசு இதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்! - தோழர் ஜி.ராமகிருஷ்ணன், அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர், More: https://youtu.be/055kwbRG4QA

04/06/2026

இந்துத்துவ சனாதன கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, பாஜகவின் முகத்தை மாற்றி வேறு பெயரில் கட்சி ஆரம்பித்தாலும் தமிழ்நாட்டில் அது நிலைக்காது. இதன் மூலம் அண்ணாமலை மீண்டும் ஒரு முறை தோல்வியடையப் போகிறார் என்பதுதான் உண்மை! - தோழர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், More: https://youtube.com/shorts/GbTqjAo7VWc

04/06/2026

தென்காசி மாவட்டம், நெட்டூர் பட்டியலின மக்கள் மீது கொலைவெறித் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய பாதுகாப்பு, நிவாரணம், நீதி வழங்க வேண்டும் எனவும், அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய தினம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்துறை முறையீடு இயக்கம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், தென்காசி மாவட்ட செயலாளர் பி.உச்சிமாகாளி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

04/06/2026

இளைஞர்களின் கோபத்தை ஒடுக்க நினைக்கும் பாஜக. தங்களுக்கு எதிராக இளைஞர்கள் அணிதிரள்வதை அவர்களால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை! - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் More: youtube.com/shorts/sgj6m0n…

கட்டற்ற வர்த்தகம் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் பொருள்களை இறக்குமதி செய்ய அமெரிக்காவிற்கு இந்தியா அனுமதித்துள்ளது.நியூசிலா...
04/06/2026

கட்டற்ற வர்த்தகம் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் பொருள்களை இறக்குமதி செய்ய அமெரிக்காவிற்கு இந்தியா அனுமதித்துள்ளது.

நியூசிலாந்து நாடு அதன் பால் உற்பத்தியை இந்திய சந்தை மூலம் வணிகம் செய்ய அனுதித்துள்ளது. ஆனாலும் அமெரிக்காவுக்கு கொள்ளை லாப வெறி அடங்கவில்லை.

இந்திய விவசாயிகள், வணிகர்கள் நட்டப்படுவது மட்டும் போதாது. உயிருடன் இருப்பதும் அமெரிக்காவிற்கு பிரச்சனை தான்!

பிரதமர் மோடி எப்போதும் போல் வேடிக்கை பார்ப்பார்! - தோழர் எஸ்.கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்,

நெருங்கிய நண்பர்கள்!
04/06/2026

நெருங்கிய நண்பர்கள்!

Address

CPIM Head Quarters, Vaidhyaraman Street, T. Nagar
Chennai
600017

Telephone

04424326900

Alerts

Be the first to know and let us send you an email when CPIM Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CPIM Tamilnadu:

Share