24/08/2026
பரந்தூர் விமான நிலையம் இரத்து!
மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் அறிவித்திருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வரவேற்கிறேன்.
ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களின் நீண்டகால போராட்டம் இன்று வெற்றியைப் பெற்றுள்ளது. மண்ணையும் வாழ்வாதாரத்தையும் காக்க போராடிய மக்களின் உறுதியே இந்த வெற்றிக்கு அடித்தளம்.
ஆனால், அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ளக் கூடாது. விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வேறு எந்தத் திட்டத்திற்கும் பயன்படுத்தாமல், உரிய விவசாயிகளிடம் உடனடியாகத் திருப்பி ஒப்படைக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும்.
— தி. வேல்முருகன்
தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
பரந்தூர் | ஏகனாபுரம் | 13 கிராமங்கள் | நிலம் திருப்பி ஒப்படைப்பு | Parandur Airport | Ekanapuram | Land Acquisition | Farmers Protest
#பரந்தூர் #ஏகனாபுரம் #விவசாயிகள்