IUML IT- WING Chennai south

IUML IT- WING Chennai south Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IUML IT- WING Chennai south, Political Party, Chennai.

🌙✨ மீலாது நபி நாயகம் – நல்வாழ்த்துக்கள்! ✨🌙அண்ணல் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் அருள்மிகு வாழ்க்கை நமக்கு அன்பு, அமைதி, ஒற்ற...
25/08/2026

🌙✨ மீலாது நபி நாயகம் – நல்வாழ்த்துக்கள்! ✨🌙

அண்ணல் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் அருள்மிகு வாழ்க்கை நமக்கு அன்பு, அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் மனிதநேயத்தின் வழியை காட்டுகிறது. 🤍💚

“நபிகளாரின் வாழ்க்கையை நமக்கு வழிகாட்டி, அவரின் போதனைகள் நம் வாழ்வின் வழி காட்டும்.”

அனைவருக்கும் இனிய மீலாது நபி நாயகம் நல்வாழ்த்துக்கள்! 🌙💚

அன்பும் அமைதியும் மனிதநேயமும் நிறைந்த சமூகத்தை உருவாக்குவோம். 🤝

#மீலாது_நபி #மீலாது_நபி_நல்வாழ்த்துக்கள் ﷺ #தமிழகம்

24/08/2026
15/08/2026

சுதந்திர தின வாழ்த்துகள்!
அனைவருக்கும் இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
பாருக்குள்ளே சிறந்த நாடு நம் பாரத திருநாடு!
இந்தியர்களின் ஒற்றுமையால் பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாப்போம்!
வேற்றுமையில் ஒற்றுமையே நம் முழக்கம்!
மூவர்ண கொடியின் லட்சியத்தை நிலை நிறுத்திடுவோம்!

02/08/2026

வஃபாத் அறிவிப்பு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர்
கே.எம்.காதர் மொகிதீன் அவருடைய மூத்த மகனார்
மருத்துவர் கே.எம்.கே. கலீலூர் ரஹ்மான்
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுடைய மூத்த மகளார். கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான். கே.எம்.கே.பைஜீர் ராஜ்மான் ஆகியோரின் மூத்த சகோதரர், மருத்துவர் கே.எம். கே.கலீலுர் ரஹ்மான் அவர்கள் (01.08.2026 ) சனிக்கிழமையன்று உடல் நலக் குறைவு காரணமாக இறைவனடி சேர்ந்தார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரது ஜனாஸா இன்று
02.08.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சி, காஜாநகர், அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியில் அஸ்ர் தொழுகைக்கு பின் ஜனாஸா தொழுகையும் அதனை தொடர்ந்து காஜாமலை அடிவாரம் அருகில் உள்ள கபர்ஸ்தானில் நல்லடக்கம் நடைபெறும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மௌத் இருப்பிடம் :
நெ.16, காயிதே மில்லத் தெரு, காஜா நகர், திருச்சி -20.

https://www.facebook.com/share/p/1C4TNiCzCe/
21/07/2026

https://www.facebook.com/share/p/1C4TNiCzCe/

டெல்லியில் ஜனநாயக வழியில் போராடிய மாணவர்கள் மீது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையை ஏவி கண்ணீர்புகை குண்டு வீசி, தடியடி நடத்திய பாஜக அரசின் அடக்குமுறை கடும் கண்டனத்துக்குரியது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் முறைகேடுகள் மற்றும் தோல்விகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சார்பாக முன்னெடுத்த போராட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை இத்தகைய கொடும் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.
தவறிழைத்தவர்கள் ஒருவர் கூட இன்றுவரை தண்டிக்கப்படாத நிலையில், அதை எதிர்த்து குரல் கொடுத்த, அதற்கு எதிராக ஜனநாயக வழியில் போராடிய மாணவர்கள் கொடும் அடக்குமுறைகளால் தண்டிக்கப்படுவது நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரானது.
ஜனநாயகத்தின் குரல்வலையை நசுக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசின் அதிகாரப் போக்கு கடும் கண்டனத்துக்குரியது.
மாணவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்ட வேண்டும்.
நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட கல்வித்துறையில் தொடர்ச்சியாக நடைபெறும் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் அனைவரும் தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டும் என்றார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் - கே.நவாஸ்கனி MP.

19/07/2026

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் | சென்னை மண்டல மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் Ex. MP அவர்களின் தலைமையில் நடைபெற்ற சென்னை மண்டல மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தென் சென்னை மற்றும் பிற மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, அமைப்பு வளர்ச்சி, மக்கள் நலன் மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் தொடர்பான பல்வேறு கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டனர். ஒற்றுமையுடனும் அர்ப்பணிப்புடனும் மக்கள் பணியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல உறுதியேற்கப்பட்டது.



#இந்தியன்யூனியன்முஸ்லிம்லீக் #முஸ்லிம்லீக் #கேஎம்காதர்மொய்தீன் #சென்னைமண்டலம் #தென்சென்னை #தமிழ்நாடு #மாவட்டநிர்வாகிகள் #ஆலோசனைகூட்டம் #சமூகநீதி #மக்கள்சேவை #ஒற்றுமை #முன்னேற்றம் #மக்கள்நலம் #பொதுசேவை #சமுதாயஒற்றுமை #சேவையேநோக்கம் #ஒற்றுமையேபலம்

20/06/2026
 #மாநில_பொதுக்குழு_கூட்டம்  ைபெறுகிறது         #மாநில_பொதுக்குழு_கூட்டம்  #தென்_சென்னை_மாவட்டம்
18/06/2026

#மாநில_பொதுக்குழு_கூட்டம்

ைபெறுகிறது

#மாநில_பொதுக்குழு_கூட்டம்

#தென்_சென்னை_மாவட்டம்

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when IUML IT- WING Chennai south posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share