TNPSC GROUP 4 & Tamilnadu, Indian Government Details in Tamil

  • Home
  • India
  • Chennai
  • TNPSC GROUP 4 & Tamilnadu, Indian Government Details in Tamil

TNPSC GROUP 4 & Tamilnadu, Indian Government Details in Tamil TNPSC group 4,2,3,1 Exams, syllabus complete info on tnpsc groups, indian government jobs top compan

Tamilnadu Public Service Commission, TNPSC, Tnpsc, T.N.P.S.C Job Openings, Tamilnadu Puplic Service Commission Job openings

HELLO ALLSHARING OF NOTES AND EXAMS HAPPENING JOIN US NOW BELOW
05/10/2020

HELLO ALL

SHARING OF NOTES AND EXAMS HAPPENING

JOIN US NOW BELOW

WhatsApp Group Invite

வணக்கம், நாம் அனைவரும் எதிர் பார்த்திருந்த காவலர் சிறைத்துறை தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது, நாம் இந்த பக்...
19/09/2020

வணக்கம், நாம் அனைவரும் எதிர் பார்த்திருந்த காவலர் சிறைத்துறை தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது, நாம் இந்த பக்கத்தில் இனி மேல் திறம்பட செயல்பட்டு அந்த தேர்வில் வெற்றி பெற தயாராவோம்.

அதற்க்கான முதல் படியாக தேர்வு குறித்த அறிவிப்புகள் பற்றிய முதல் காணொளி உங்கள் பார்வைக்காக ,

நீங்கள் காவலர் தேர்வுக்கு தயாராகவில்லை என்றாலும் உங்கள் நட்பு மற்றும் உறவுகளின் வட்டத்தில் பகிர்ந்து உதவுங்கள்.

இந்த 2020ம் வருடத்திற்க்கான தமிழக சீருடை பணியாளர் தேர்வு, இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணை...

நினைவு கூர்வோம்:வீரம் என்பது என்ன தெரியுமா ? மோரில் விஷம் வைத்து ஒருவனை கொன்று விட்டு, பிணத்தின் மீது துப்பாக்கியால் சுட...
18/01/2014

நினைவு கூர்வோம்:

வீரம் என்பது என்ன தெரியுமா ? மோரில் விஷம் வைத்து ஒருவனை கொன்று விட்டு, பிணத்தின் மீது துப்பாக்கியால் சுட்டு, அந்தப் பிணத்தோடு போஸ் கொடுப்பதல்ல. .. 34 ஆண்டு காலம், இரண்டு மாநில காவல்துறைக்கும், மத்திய ரிசர்வ் காவல் படைக்கும், சிம்ம சொப்பனமாக விளங்கி மலைவாழ் மக்களின் கதாநாயகனாக வாழ்ந்தது தான் வீரம். கடற்கரையின் இருட்டில் உட்கார்ந்திருந்தவனை பேசப் போவது போல் சென்று, கொன்று விட்டு அயோத்திக் குப்பம் வீரமணியை நான்தான் கொன்றேன் என்று மார்தட்டிக் கொள்வது வீரமல்ல

நன்றி: Parthiban Viru

பகவானை ஆராதிப்பதை, ஒரு கடமையாக, சாஸ்திரங்கள் சொல்கின்றன. இறைவனை வழிபடாத நாளெல்லாம் வீணான நாள் என்பர். அதனால், காலையிலோ ...
05/01/2014

பகவானை ஆராதிப்பதை, ஒரு கடமையாக, சாஸ்திரங்கள் சொல்கின்றன. இறைவனை வழிபடாத நாளெல்லாம் வீணான நாள் என்பர். அதனால், காலையிலோ மாலையிலோ இதற்கென்று, சிறிது நேரம் ஒதுக்கி, இறைவனை வழிபட்டால், சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

ஆனால், பூஜை செய்வதற்கென்று, சில விதிமுறைகள் உண்டு.பூஜையின் போது சந்தனம், குங்குமம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் மற்றும் வெற்றிலை பாக்கும் வைக்க வேண்டும். கடைசியில், கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். இதில், உங்களுக்கு சவுகரிய குறை ஏற்பட்டு, சிலவற்றை பூஜையில் வைக்க முடியா விட்டால், ‘அட்சதாம் சமர்ப்பயாமி’ என்று சொல்லி விட்டால் போதும். ஒருவர், அப்படி பூஜை செய்த போது, இல்லாத பொருளுக்கெல்லாம், அதன் பெயரைச் சொல்லி, ‘அட்சதாம் சமர்ப்பயாமி’ என்று சொல்லிக் கொண்டே பூஜையை முடித்து விட்டார்.

பூஜை செய்பவர், சாஸ்திரிகளுக்கு தட்சணை கொடுக்க வேண்டும்.இவர்தான் எல்லாவற்றுக்கும் பதிலாக, ‘அட்சதை போதும்’ என்று சொல்லி இருக்கிறாரே… பூஜை முடிந்ததும், ‘தட்சினார்த்தம் அட்சதாம் சமர்ப்பயாமி’ என்று சொல்லி, தட்சணைக்கு பதிலாக, அட்சதையை நீட்டினாராம், பூஜை செய்தவர்.

‘என்ன இது? தட்சணை எங்கே…’ என்றார் சாஸ்திரிகள். ‘அதுதான் எல்லாவற்றுக்கும் பதிலாக, அட்சதையே போதும் என்றீர்களே… பிடியுங்கள் அட்சதையை…’ என்றார்.

பூஜையின் போது, தூபம், தீபம், விபூதி, கண்ணாடி, குடை, சாமரம், விசிறி இவைகளை சமர்ப்பணம் செய்வது வழக்கம். தூபத்தில் அக்னி தேவன், தீபத்தில் சிவன், விபூதியில் மகேஸ்வரன், கண்ணாடியில் சூரியன், குடையில் சந்திரன், சாமரத்தில் மகாலட்சுமி, விசிறியில் வாயுதேவன் உள்ளனர். அதனால், இந்த உபசாரங்களோடு பூஜை செய்ய வேண்டும்.

நைவேத்யத்தின் போது முத்திரை காட்டுவது, துர்தேவதைகளை விரட்டி விடும். எல்லாருமே, மகாலட்சுமி நம் வீட்டுக்கு வர வேண்டும், என்று தான் விரும்புவர். சிலர், மகாலட்சுமி படம் பேட்ட காலண்டரை வாங்கி வந்து, பூஜை அறை அல்லது ஹாலில் மாட்டி திருப்திப்படுவர். விடியற்காலையில் எழுந்ததும் மகாலட்சுமியை தரிசனம் செய்தால் நல்லது என்பதற்காக, சிலர், படுக்கை அறையிலும் மாட்டி வைப்பர்.

இல்லத்தரசியானவள், காலையில் எழுந்து பல் விளக்கி, குளித்து, நெற்றிக்கிட்டு, தலையை கோதி, வாசல் பெருக்கி, கோலமிட்டு, வீட்டுக்குள் வந்து சுவாமி படத்துக்கு முன் விளக்கேற்றி, நமஸ்காரம் செய்து, முடிந்தால் இரண்டு பூவை போட்டு, அதற்கு பின் தான், காபி விஷயத்தை கவனிக்க வேண்டும்.

அத்துடன், வீட்டில், வேத கோஷம், துதிப் பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். வீட்டில் மூலைக்கு மூலை குப்பையை சேர்த்து வைக்கக் கூடாது. அரிசி, பருப்பு போன்ற தானியங்கள் சிதறக் கூடாது.

காலையில், முடிந்தால், பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுப்பது புண்ணியம். வெள்ளிக்கிழமைகளில் பசுவுக்கும், கன்றுக்கும் மஞ்சள் பூசி, குங்குமமிட்டு வலம் வருவது பெரிய புண்ணியம். வீட்டில் ஆச்சார அனுஷ்டானங்கள் இருந்தாலே, மகாலட்சுமி வாசம் செய்வாள். மனசு வைத்தால், இதையெல்லாம் செய்யலாம்.

தமிழ் பத்திரிக்கை தர்மம்
05/01/2014

தமிழ் பத்திரிக்கை தர்மம்

Starting this Day with a Special Dosa. Do we need a AAM AATHMI Style Party Here to correct this ? Good Morning Fellas.Sh...
26/12/2013

Starting this Day with a Special Dosa. Do we need a AAM AATHMI Style Party Here to correct this ?

Good Morning Fellas.

Share as much as you Can and Bring this to the attention of All, Our CM or Senior Officials can't be cursed or blamed for this . So tell me your Comments.

17/12/2013
10/12/2013

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்து என்டீவர் விண்கலம் மூலம் அமெரிக்காவின் "நாசா’ மையம் ஆய்வு நடத்தி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தி மார்ஸ் ஒன் பிராஜக்ட் என்ற பதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

அதன்படி, செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாகத் தங்குபவர்கள் அங்கு குடியேறப்படுவார்கள். அவர்கள் பூமிக்குத் திரும்ப முடியாது என் ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளது. இத்திட்டம் வருகிற 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுளளது.
அமெரிக்கர்களிடம் அதற்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ2500 வசூலிக்கப்படுகிறது.

இந்த அறிவிப்பையொட்டி 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் செவ்வாய் கிரகத்தில் தங்க விண்ணப்பித்துள்ளனர்.

ஆனால் முதன்முறையாக 4 பேர் மட்டுமே அனுப்பப்பட உள்ளனர். அவர்களில் 2 பேர் ஆண்கள் 2 பேர் பெண்கள் 2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து புறப்படும் இவர்கள் 2023ஆம் ஆண்டு ஏப்ரலில் அதாவது 7 மாதங்களில் செவ்வாய் கிரகத்தைச் சென்றடைவர்.

செவ்வாய் கிரகத்தில் குடியேற விரும்பும் நபர்களிடம் கட்டணமாக ரூ.36 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட உள்ளது.

இந்தத் தகவலை தி மார்ஸ் ஒன் பிராஜக்ட் தலைமை அதிகாரி பால் லேனஸ் டிரப் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது பூமியில் இருந்து செல்பவர்கள் தலா 5.511 பவுண்ட் எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே பூமியில் இருந்து செல்லும் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் செல்ல மிகவும் கடினம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மனிதர்கள் வரும்போதும் அதிக தூரம் பயணம் செய்ய முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொருள் படைத்த பலருக்கு, கொடுக்கிற மனம் இருப்பதில்லை. கொடுக்கும் மனம் படைத்த சிலருக்கு, பொருள் இருப்பதில்லை. இது, இந்தக் ...
26/11/2013

பொருள் படைத்த பலருக்கு, கொடுக்கிற மனம் இருப்பதில்லை. கொடுக்கும் மனம் படைத்த சிலருக்கு, பொருள் இருப்பதில்லை. இது, இந்தக் காலம். ஆனால், அந்த காலத்தில், மன்னர்கள், தங்களிடமுள்ள பொருளை, வறியவர், இரவலர், புலவர்கள் மற்றும் ஆன்மிக காரியங்களுக்கு வாரி வழங்கினர். இதோ… ஒரு திருடனுக்கு உதவிய, மன்னரின் வரலாற்றைக் கேளுங்கள்.

சேர நாட்டின் சிற்றரசு பகுதியான, கோனாட்டிலுள்ள கொடும்பாளூரைத் தலைநகராக கொண்டு, ஆட்சி செய்தவர் இடங்கழியார். தீவிரமான சிவபக்தர். இவரது நாட்டில், ஏராளமான சிவனடியார்கள் இருந்தனர். அவர்களில் ஒரு அடியார், தனக்கு கிடைக்கும் பொருளை எல்லாம் சக அடியார்களின் பசி போக்க செலவழித்து விடுவார். அவர் வீட்டில், எப்போதும் அடுப்பு புகைந்து கொண்டே இருக்கும். எந்த நேரம், சிவனடியார்கள் வந்தாலும், அவர்களது பசி போக்க தயாராயிருப்பார்.

இப்படி, அள்ளி அள்ளி கொடுத்தே, அவரது தானியக்களஞ்சியமும், கையிலிருந்த பொருளும் காலியாகி விட்டது. இந்நிலையில், அடியார்கள் வந்தால், அவர்கள் உணவுக்கு என்ன செய்வதென, கலங்கினார்.

இன்று, சுயநலம் கருதி கொள்ளையடிப்போரை பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த சிவனடியார், அடியார்களுக்கு உணவிட வேண்டி, அரண்மனை தானியக்களஞ்சியத்தில், தானியங்களை கொள்ளையடிக்க முடிவு செய்தார். அதன்படி, தைரியத்தை வரவழைத்து, அரண்மனைக்குள் புகுந்து, களஞ்சியத்தை திறந்து நெல்லை அள்ளிக் கொண்டிருந்தார்.

சிவனடியாருக்கு ஏது திருட்டு அனுபவம்! காவலர்கள் வந்து விட, அகப்பட்டுக் கொண்டார். அவரைக் கைது செய்து, அரசர் இடங்கழியார் முன், நிறுத்தினர் காவலர்கள். அடியாரின் தோற்றத்தை கண்டு, சிவபக்தரான இடங்கழியார் மிகவும் வருந்தி, "அன்பரே…நெற்றியிலும், உடலிலும் திருநீறு அணிந்து, சிவப்பழமாக காட்சி தரும் நீங்கள் ஏன் இப்படிப்பட்ட ஈனச் செயலை செய்தீர்கள்… காரணம் கூறுங்கள்…’ என்று கேட்டார்.

"மன்னா… நான், சிவனடியார்களுக்கு, தினமும் அன்னதானம் செய்து வந்தேன். இப்போது, என் தானியக்களஞ்சியத்தில், தானியங்கள் சிறிது கூட இல்லை. அடியார்களுக்கு, தானம் செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில், இவ்வாறு செய்து விட்டேன்…’என, கண்ணீர் மல்க கூறினார்.

நெகிழ்ந்து போன இடங்கழியார், "அடியவரே உங்களுக்கு இருக்கும் தொண்டு மனப்பான்மை, எனக்கு இல்லாமல் போனதே என்று வருந்துகிறேன். நான் மன்னனாயிருந்தும், தங்களைப் போல், அடியார்களுக்கு உதவாமல், நாட்களைக் கடத்தியதை நினைத்து வருந்துகிறேன். இனி, அரண்மனையில் உள்ள நெல், அடியார்களுக்கு உரியதே. தானம் செய்ய விரும்பும், எந்த அடியாராயினும், அவரவர் பகுதி களஞ்சியங்களிலுள்ள நெல்லை எடுத்துச் செல்லலாம்’ என, உத்தரவு போட்டார்.

மன்னரின் ஈகை குணத்தைப் பாராட்டி, சிவன், அவருக்கு காட்சியளித்து, அருள்புரிந்தார். நீண்ட காலம் நல்லாட்சி புரிந்த இடங்கழியார், சிவனின் திருவடி நிழலை அடைந்து, பிறவாநிலை பெற்று, நாயன்மார்களில் ஒருவராகும் தகுதியும் பெற்றார்.

இவரது குருபூஜை, ஐப்பசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில், நடை பெறும்.
நாமும் நம்மால் முடிந்த பொருளைக் கோவில்களுக்கும், நல்லவர்களுக்கும் கொடுத்து, இறையருளுக்கு பாத்திரமாவோம்.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when TNPSC GROUP 4 & Tamilnadu, Indian Government Details in Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share