Podhuvudamai Iyakkam - பொதுவுடைமை இயக்கம்

  • Home
  • India
  • Chennai
  • Podhuvudamai Iyakkam - பொதுவுடைமை இயக்கம்

Podhuvudamai Iyakkam - பொதுவுடைமை இயக்கம் முதலாளித்துவத்திற்கு மாற்றாக பொதுவ?

09/09/2026

Australian trade unionist and refugee advocate and Podhuvudamai Iyakkam comrade Lavanya Thavaraja has addressed the United Nations Human Rights Council in Geneva, calling for international action and accountability for crimes committed against Eelam Tamils.

In her intervention, Lavanya highlighted continuing military occupation and land seizures in the Tamil homeland, the struggle of families of the forcibly disappeared, and the discovery of hundreds of skeletal remains, including those of children, at the Chemmani–Siththupaththi mass grave site.

She called on the UN Human Rights Council to pursue international accountability, including referral to the International Criminal Court, and to ensure international forensic oversight of mass grave investigations.

Lavanya is in Geneva as part of an advocacy mission that is also highlighting the plight of Eelam Tamil refugees who have lived in camps in India for generations. The delegation is calling for citizenship rights and a permanent future that enables refugees to live with equality and dignity.

Join us for an important online discussion!The Youth Revolt in India: A Marxist PerspectiveHear B. Youvraj share his ins...
24/07/2026

Join us for an important online discussion!
The Youth Revolt in India: A Marxist Perspective
Hear B. Youvraj share his insights and ideas.
📅 24th July | 8:00 PM
Be there and be part of the discussion!

Six years have passed since you left us, Comrade. Yet the void you created has not diminished with time; it has only bec...
09/06/2026

Six years have passed since you left us, Comrade. Yet the void you created has not diminished with time; it has only become more visible in every struggle, every gathering, and every moment when your voice should have been there. We miss you!!!

Years without you, but not a day without your memory. Your life remains a reminder that commitment to justice outlives death itself. Red Salute, Comrade

 #நடிகர்_விஜய் தமிழக அரசியலில் நடிகர்கள் வருவது புதிதல்ல! ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் அரசியலுக்குள் வரும்போது, அது ஒர...
26/04/2026

#நடிகர்_விஜய்

தமிழக அரசியலில் நடிகர்கள் வருவது புதிதல்ல! ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் அரசியலுக்குள் வரும்போது, அது ஒரு தனிநபரின் முடிவாக மட்டும் நிகழ்வதில்லை; ஒரு சமூகத்தின் அரசியல் நிலைமையைப் பிரதிபலிக்கும் நிகழ்வாக மாறுகிறது. இன்று விஜயின் அரசியல் வருகையும் அப்படித்தான் பார்க்கப்பட வேண்டும்.

அவரை ஆதரிக்கும் கூட்டத்தை வெறும் ரசிகர் வெறி / தற்குறிகள் என்று சொல்லி, அந்த நிகழ்வின் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல் வைக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் விமர்சனம் மிகவும் தவறானது . அதே நேரத்தில், அதை ஒரு புதிய அரசியல் புரட்சி என்று கொண்டாடுவதும் தவறு. உண்மையில் இது, தமிழக அரசியலில் நீண்டகாலமாக உருவாகிக் கொண்டிருந்த ஒரு வெற்றிடத்தின் வெளிப்பாடு.

இந்த வெற்றிடம் வெறும் தலைமை பற்றாக்குறையால் உருவானது அல்ல. மாற்று அரசியலுக்கான எந்த வித பார்வைகளும் இல்லாத / உருவாக்காத எதார்த்தத்தால் வந்தது. இன்றைக்கு விஜயின் வருகை ... அதற்கு மக்கள்
மத்தியில் இருக்கும் ஆதரவு பற்றிய விவாதத்தின் மையத்தில் இருக்க வேண்டியது விஜய் என்ற தனி நபர் / அவரின் சினிமா பிம்பம் மட்டுமல்ல *அவரை சாத்தியமாக்கிய அரசியல் சூழல் பற்றியது* தான் !!!

தமிழகத்தில் பல தசாப்தங்களாக ஆட்சியின் மையத்தில் இருந்தவை திமுகவும் அதிமுகவும். இந்த இரு கட்சிகளும் வெவ்வேறு வரலாற்றுப் பின்னணியில் தோன்றியிருந்தாலும், காலப்போக்கில் ஆட்சியின் நடைமுறையில் பெரிதாக வேறுபடாத கட்டமைப்புகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன !!! மக்கள் முன்னேற்றம், சமூகநீதி, நலத்திட்டங்கள் போன்ற மொழிகள் தொடர்ந்தாலும், அரசியலின் அடிப்படை வடிவம் அதிகார மையப்படுத்தல்/ சுரண்டல்/ முதலாளித்துவ இலாப நோக்கு / தொழிலாளர் ஒடுக்குமுறை போன்றவற்றையே மையப்படுத்தும் பாதையே இவர்களது அடிப்படை!

50 க்கும் மேலான ஆண்டுகள் ஆட்சியில் மாறி மாறி வந்த இந்த இரு பெரும் கட்சிகளின் அரசியல் கற்பனையின் கட்டமைப்புக்குள் சிக்கிக் கொண்டது தமிழகம் ! இதனால் மக்கள் மாற்றத்தை தேடும்போது கூட, அதே அரசியல் மொழியின் வேறு வடிவங்களை மட்டுமே பார்க்கும் சூழலுக்குள் தள்ளப்பட்டு உள்ளனர் . தமிழகத்தில் இந்த இரு கட்சிகளின் ஆதிக்கம் வெற்றிடத்தை உருவாக்கி நீண்ட காலம் ஆகி விட்டது .

இருப்பினும் மாற்றத்திற்கான தேவையை / அதிருப்தியை மக்கள் பல விதங்களில் கடந்த ஆண்டுகளில் வெளிப்படுத்தியும் அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய பணிகள் ஒரு துளியும் செய்யப்படவில்லை என்பதே எதர்தம் .... முக்கியமாக இடதுசாரி இயக்கங்கள் அந்த வரலாற்றுப் பொறுப்பை ஏற்கவில்லை!!???????

இடதுசாரிகள் தமிழகத்தில் வலுவான சிந்தனை மரபைக் கொண்டவர்கள். ஆனால் அந்த சிந்தனையை மக்கள் அரசியலாக மாற்றுவதில் அவர்கள் தொடர்ந்து தடுமாறினர்.தனித்த அடித்தளத்தை உருவாக்க வேண்டும், தங்களின் சொந்த அரசியல் பலத்தை வளர்க்க வேண்டும் என்ற நீண்டகால நோக்கத்தை விட, ஒவ்வொரு தேர்தலிலும் திமுக அல்லது அதிமுக கூட்டணியில் இணைவதே பாரம்பரியமாகிப்போனது இடதுசாரிகளுக்கு ! பாழாய்ப்போன "Lesser Evil Concept" நிரந்தரத் தந்திரமாக்கி இடதுசாரிகள் தங்களது சுய அரசியல் இடத்தை/ பாதையை இழந்துவிட்டனர். ஆம் மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற வேண்டிய சக்திகள், எப்போதும் பெரிய கட்சிகளின் துணை வீரர்களாக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்!!!! மக்களும் இடதுசாரிகளை ஆட்சிக்கான மாற்றாகக் காண்பதில்லை அதிக பட்சம் விமர்சனக் குரலாக மட்டுமே பார்க்கின்றனர் . இடதுசாரிகள் , கம்யூனிஸ்டுகள் போராடுவர்கள் , கொடி பிடிப்பார்கள் , விமர்சிப்பார்கள் என்பதை தாண்டி வேறு பார்வை மக்களுக்கு இல்லை .....

மிகவும் முக்கியமாக, இளம் தலைமுறையுடன் அந்நியப்பட்டு நிற்கின்றனர் . Gen Z அரசியலுக்கு அப்பாற்பட்ட தலைமுறை அல்ல. அவர்கள் ஆர்வமற்றவர்கள், தற்குறிகளும் அல்ல. ஆனால் அவர்கள் அணுகும் வழிகள் வேறு. அவர்கள் வாழும் உலகம் டிஜிட்டல். அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் வேறு வடிவம் எடுத்துள்ளன. வேலை, வாழ்வாதாரம், மனநலம், அடையாளம், எதிர்காலம் இவை அனைத்தும் அவர்களின் அரசியல் அனுபவமாக இருக்கின்றன. முற்போக்கு சக்திகள் , இடது சாரி அமைப்புகள் இந்த தலைமுறையினரை மிக முக்கியமான அரசியல் பங்கேற்பாளர்கள் என்ற பார்வையில் அணுகாமல் இவர்களிடம் இருந்து அந்நியப்பட்டு நிற்கின்றனர் . அதன் விளைவு gen z தங்களை பிரதிபலிக்கும் முகங்களை வேறு இடங்களில் தேடினார்கள்.

அந்த இடத்தை சினிமா நிரப்பியது. விஜய் நிரப்புகிறார்

இது ரசிக மனப்பான்மை / சினிமா மோகம் மட்டுமல்ல.இது அரசியல் வெற்றிடத்தின் விளைவு.ஒரு தலைமுறைக்கு மாற்று சிந்தனை வழங்கப்படாவிட்டால், அவர்கள் மாற்று முகங்களைத் தேர்ந்தெடுப்பார்கள். விஜயின் எழுச்சி அதற்கான சான்று. ஒரு நடிகர் அரசியலுக்குள் வருவது பிரச்சினையின் தொடக்கம் அல்ல; அது ஏற்கனவே உள்ள அதிருப்தியின் வெளிப்பாடு.

அரசியல் வெற்றிடமாக மாறும்போது, அதை நிரப்ப சரியான கொள்கை/ கட்டமைப்பு இல்லாத போது இத்தகை பிரபலங்களின் முகங்கள் மாற்றாக நம்பப் படுகிறது . இப்போது விஜய் என்ற அந்த பிம்பம் மக்களை / இளையோரை ஈர்க்கலாம். ஆனால் அது சமூகத்தை மாற்றுமா என்பது வேறு கேள்வி.

அதற்கான பதில், நம் அரசியல் அமைப்புகள் தங்களது தோல்விகளை உணர்ந்து, உண்மையான மாற்று பாதைகளை உருவாக்கத் தயாரா என்பதில் தான் இருக்கிறது.
- பொதுவுடை இயக்கம்

 #அலெக்சாண்டர்_கொலொன்டேய்_பிறந்த_தினம்_இன்றுரஷ்யாவில் பாரம்பரிய சமூக பழக்கவழக்கங்கள், ஒடுக்குமுறைகள் பிற்போக்கு வாதங்கள்...
31/03/2026

#அலெக்சாண்டர்_கொலொன்டேய்_பிறந்த_தினம்_இன்று

ரஷ்யாவில் பாரம்பரிய சமூக பழக்கவழக்கங்கள், ஒடுக்குமுறைகள் பிற்போக்கு வாதங்கள் போன்றவற்றிற்கு எதிராக தீவிர வாழ்நாள் பணிகளை மேற்கொண்ட ரஷ்ய புரட்சியாளர்; சோவியத் நாட்டின் அங்கீகாரம் பெற்ற அமைச்சராக பணியாற்றிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார் #அலெக்சாண்டர் கொலொன்டேய்.

1872 ஆம் ஆண்டு வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்த அலெக்ஸாண்டர் கொலொன்டாய் சிறுவயதிலிருந்தே புரட்சிகர பார்வை கொண்ட சமூக சூழ்நிலையில் வளர்ந்தார். புரட்சிகர அரசியல் மீதான ஈர்ப்பு எழுத்தை நோக்கியும் ரஷ்யாவை நோக்கியும் அவரை நகர்த்தியது. பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை எதிர்த்து தனது உறவினரான விளாடிமிர் கொலொன்டாயய் திருமணம் செய்து கொண்டார். 2 ஆண்டு கால குடும்ப வாழ்க்கைக்கு பிறகு சமூகத்தின்பால் இருந்த ஈர்ப்பு குடும்ப வாழ்வை விட்டு விலகி அவரை புரட்சிப் பாதை நோக்கி பயணம் செய்ய வைத்தது. திருமணம் , பெற்றோரின் எதிர்ப்புகளை கடந்து 26 ஆவது அகவையில் முழுமையாக அரசியல் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார்.

ரஷ்யாவில் பின்லாந்து சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த அக்கறை செலுத்தத் தொடங்கினார். பின்லாந்தில் உள்ள தொழிலாளர்கள் தங்களை தொழிற்சங்கங்களாக ஒழுங்கமைக்க உதவியதுடன், பின்னிஷ் மக்களுக்கும் ரஷ்ய எதேச்சதிகாரத்திற்கும் இடையிலான போராட்டம் பற்றி கட்டுரைகளை எழுதினார். அவரது புத்தகமான "பின்லாந்தில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் நிலை" 1903 இல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொலன்டேய் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து
ரோசா லக்சம்பர்க், பிளக்கனோவ் போன்றோருடன் இணைந்து கருத்தியல் தளத்தில் தன்னை வளர்த்துக்கொண்டவர் ,திறமை மிக்க ஒரு எழுத்தாளராகவும் தலைசிறந்த பேச்சாளராகவும் மெருகேற்றிக் கொண்டார்.1906 இல்,
பிளெக்கானோவ் மீதான அபிமானத்தால் #மென்ஷிவிக்குகளில் சேர்ந்தார். பின்பு மென்ஷ்விக் கட்சிக்குள் நடந்த சந்தர்ப்பவாத போக்குகள், விவாதங்கள் முக்கியமாக #முதலாம்_உலகப் போருக்கு ஆதரவான நிலைப்பாடுகள் அவரை போல்ஷ்விக் நோக்கி நகர்த்தியது.முதலாம் உலகப் போரில் ரஷ்யா பங்கு பெறக் கூடாது என்ற கருத்தில் தீர்க்கமாக நின்ற லெனினின் நிலைப்பாட்டை அலெக்சாண்டர் கொலொண்டேயும் தீவிரமாக ஆதரித்தார். இந்நாட்களில் ரஷ்யாவின் சோஷியல் டெமாக்ரடிக் தொழிலாளர்கள் கட்சியின் புரட்சிகர கருத்துகளை தொழிலாளர்கள் மத்தியில் கொண்டு செல்பவர் ஆகவும் முதலாம் உலகப்போரை தீவிரமாக எதிர்ப்பதாகவும் அவரது பயணங்கள் தீவிரமடையத் தொடங்கியது.

அதேபோன்று பெண்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கும் கேள்விகளுக்கு தீவிரமாக இயங்க கூடிய ;நல்ல புரிதல் இருக்க கூடிய சூழ்நிலை இல்லாத காலகட்டத்தில் அலெக்சாண்டர் கொலெண்டாய் போன்றோர் வீரியமாக "பெண்கள் கேள்விகள்" சார்ந்து (Women question) தொடர்ந்து இயங்கினர்.

பெண்கள் சார்ந்த கேள்விகளுக்கு சோஷலிஸ்ட்களுக்கிடையே வேறுபட்ட பார்வைகள் இருந்தது.போல்ஷ்விக் கட்சிக்குள்ளேயே வெவ்வேறு பார்வைகள் மாற்றுக்கருத்துக்கள் இருந்தன. ஆனால் பெண்ணிய போராட்டங்கள் வலுப்பெற்ற காலகட்டங்களில் அதற்கான ஆதாரவுகளும் கட்சிகளிலும் தொடங்கியது. பிப்ரவரி புரட்சிக்கு வித்திட்ட ஆடை தொழிற்சாலை பெண் தொழிலாளர்களின் மாபெரும் புரட்சிகரப் போராட்டம் பல்வேறு புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தியது. முதலாளித்துவ பெண்ணிய கருத்தாக்கங்களையும் வெறும் பெண் விடுதலையை மட்டும் பேசும் சித்தாந்தங்களையும் முழுமையாக எதிர்த்து அலெக்சாண்டர் கொலொன்டாய் ஆண்-பெண் பேதங்களற்று உழைக்கும் மக்களாக ஒருங்கிணைந்து இந்த ஒடுக்குமுறை சுரண்டல் அமைப்பை தூக்கி எறிய முயல வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதேபோன்று பெண்கள் மீதான ஒடுக்குமுறை பொருளாதார கட்டத்திலிருந்து உளவியல் ரீதியாக கட்டமைக்கப்படுகிறது என்ற பார்வையோடு பயணித்தவர்களில் கொலொன்டேயும் ஒருவர்.குடும்பம், திருமணம், தனியுடைமை போன்றவை சுரண்டல் பொருளாதார அமைப்பு முறையின் வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ளும் ஸ்தாபனங்கள் என்பதும் பெண்ணை கருத்தியல் தளத்தில் சமூகத்தளத்தில் பொருளாதாரத்தில் சுரண்டுவதற்கான காரணிகளை அவை வழங்குகின்றன என்றும் தொடர் பிரச்சாரங்கள் ஊடாக எழுத்துக்கள் ஊடாக எடுத்துரைத்தார்.
திருமணம் மற்றும் குடும்பம் குறித்த சமூகத்தின் மனநிலை மாறும்போதுதான் பெண்களின் விடுதலையை அடைய முடியும் என்று கொலோன்டாய் நம்பினார்.

பிறகு பெண்ணியம் சார்ந்த நிலைப்பாடுகள் (குடும்பம், ஆண் பெண் உறவு திருமணபந்தம்) அவருக்கு இருந்த கருத்தாக்கங்கள் மற்றும் கட்சியின் அமைப்பு முறை இருந்த மாற்றுக்கருத்துக்கள் போல்ஷ்விக் கட்சியை விட்டு விலகி opposition என்னும் அமைப்பை தொடங்குவதற்கு வழிவகுத்தது.ஸ்டாலின் அதிகாரத்திற்கு வந்த பிறகு கொலண்டாயை இராஜதந்திரியாக வெளிநாடுகளுக்கு அனுப்பினார். இதில் நோர்வே (1923-25), மெக்ஸிகோ (1925-27), நோர்வே (1927-30) மற்றும் சுவீடன் (1930-45) ஆகிய நாடுகள் அடங்கும்.1945 இல் ஓய்வு பெற்ற கொலண்டாய் 1952 மார்ச் 9 ஆம் தேதி இறக்கும் வரை மாஸ்கோவில் வாழ்ந்தார்.

-தோழமையுடன்
பொதுவுடைமை இயக்கம்

தமிழ்நாடு தேர்தல் – மார்க்சியர் எடுக்கவேண்டிய நிலைப்பாடு என்ன?பொதுவுடைமை இயக்கத்தின் அறிக்கை – சென்னைதொடர்புகளுக்கு : po...
25/03/2026

தமிழ்நாடு தேர்தல் – மார்க்சியர் எடுக்கவேண்டிய நிலைப்பாடு என்ன?

பொதுவுடைமை இயக்கத்தின் அறிக்கை – சென்னை

தொடர்புகளுக்கு : [email protected]

பொதுவுடைமை இயக்கத்தின் அறிக்கை - சென்னை (புதிய சோஷலிச மாற்று) தொடர்புகளுக்கு : [email protected] வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ....

மனித வரலாற்றில் தங்களுக்கும் சரிபாதி பங்குண்டு என்று தங்களை அடக்கி ஒடுக்கி சுரண்டிக் கொழுத்த ஆதிக்க வர்க்கத்தை எதிர்த்து...
08/03/2026

மனித வரலாற்றில் தங்களுக்கும் சரிபாதி பங்குண்டு என்று தங்களை அடக்கி ஒடுக்கி சுரண்டிக் கொழுத்த ஆதிக்க வர்க்கத்தை எதிர்த்துப் புரட்சி செய்து போராட்ட வரலாற்றை எழுதிய பெண்களின் நினைவில் உதித்ததே #சர்வதேசிய_உழைக்கும்_மகளிர்_தினம்.

அனைத்துப் பெண்களுக்கும் சர்வதேசிய மகளிர் தின வாழ்த்துகள்.

தோழமையுடன்,
பொதுவுடைமை இயக்கம்

The Jeffrey Epstein files tear the mask off power. They show how the ruling elite live by a different moral code one whe...
03/02/2026

The Jeffrey Epstein files tear the mask off power. They show how the ruling elite live by a different moral code one where money buys silence, institutions protect abusers, and victims are disposable. This is not an accident or a few “bad individuals”; it is how power functions under capitalism. When wealth concentrates, accountability disappears. Courts, media, universities, and political systems bend to protect the powerful, while ordinary people are disciplined, shamed, and punished for far less. Epstein was not an anomaly but he was a node in a network where exploitation is normal and cruelty is hidden behind respectability.

What is most disturbing is how even figures admired by the public, including those from the so called left, become entangled through financial ties, elite institutions, or silence. This does not mean all are guilty of crimes, but it exposes a deeper truth: proximity to power corrodes principles. Under capitalism, even critical thinkers can be absorbed, neutralised, or compromised by elite systems.

30/01/2026


மூலதன அமைப்பு தன் அடக்குமுறையை நிரந்தரமாக்குவதற்காக பல சித்தாந்த முகமூடிகளை உபயோகிக்கிறது. அதில் ஒன்று, “செல்வந்தர்களும்...
12/10/2025

மூலதன அமைப்பு தன் அடக்குமுறையை நிரந்தரமாக்குவதற்காக பல சித்தாந்த முகமூடிகளை உபயோகிக்கிறது. அதில் ஒன்று, “செல்வந்தர்களும் சாதாரண மக்களைப் போல வாழ்கிறார்கள்” என்ற நம்பிக்கை.

ஆம் இந்த பெரும் பணக்காரர்களிடம் இருந்து வரும் “எளிமை” என்ற வெளிப்பாடு, உழைக்கும் மக்களிடம் ஒரு தவறான நம்பிக்கையை உருவாக்குகிறது. அவர்கள் பெரும் செல்வத்தையும் வைத்திருந்தாலும், எளிமையாக வாழ்கிறார்கள்; ஆகையால் செல்வம் தீமை அல்ல, இவர்கள் நேர்மையானவர்கள் போன்ற பிம்பங்களை நம்ப வைப்பது .

இவர்களிடம் இருந்து வரும் “எளிமை” ஒரு தனிநபர் பண்பு அல்ல; அது மூலதனத்தின் சித்தாந்தக் கருவி.
இதன் நோக்கம் மக்களை “வர்க்க உணர்விலிருந்து விலக்கி, நாமெல்லாம் மனிதர்கள் தான் என்ற மாயையை உருவாக்குவது. சமூகத்தில் வர்க்க எதிர்ப்பை குறைத்து, மூலதன வர்க்கத்தையும் உழைப்பாளர் வர்க்கத்தையும் ஒரே மனித அனுபவத்தின் கீழ் காட்ட பயன்பாடும் ஒருவகை சித்தாந்த உளவியல் ஆட்டம். மூலதனத்தின் கொடூரத்தை மறைத்து, “நாமெல்லாம் ஒரே மாதிரியான மனிதர்கள்” என்ற திசைதிருப்பல்.

உண்மையான எளிமை என்பது பொருளாதாரமாக தன்னிறைவு அடைந்த வர்க்கத்திலிருந்து வர முடியாது. அது உழைக்கும் மக்களின் வாழ்வியலின் இயல்பான விளைவு . அதாவது உற்பத்தியில் ஈடுபட்டவர்களின் சுயநம்பிக்கை, சமத்துவம் மற்றும் ஒருமை. எனவே, இத்தகைய பில்லியனர்களின் எளிமை என்பது சமூக வியாபாரத்தின் ஒரு பகுதி, வர்க்க முரண்பாட்டை மங்கச் செய்யும் முகமூடி.
- பொதுவுடைமை இயக்கம்

Address

No 9, Damodaran Street, Kilpauk
Chennai
600010

Telephone

+919094746003

Website

Alerts

Be the first to know and let us send you an email when Podhuvudamai Iyakkam - பொதுவுடைமை இயக்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Podhuvudamai Iyakkam - பொதுவுடைமை இயக்கம்:

Shortcuts

Share