DMK - Dravida Munnetra Kazhagam

DMK - Dravida Munnetra Kazhagam DMK | Dravida Munnetra Kazhagam
Ins :- http://instagram.com/arivalayam
x :- https://x.com/arivalayam |
YT:- https://www.youtube.com/

To liberate the Dravidian race from the shackles of superstition and religious dogmas, to revive and restore the ancient heritage of Tamil and Tamilnadu, and to protect Tamil language from imperialism, Dravida Munnetra Kazhagam – (DMK) was founded by Dr. C.N. Annadurai – better known as Anna (Elder brother) on 17th September 1949. The History of DMK is the history of rational and reformist movement in Tamil Nadu. It is the history of Tamil renaissance it is the compilation of the continuous struggle and concrete efforts taken by a political organisation to preserve the identity of a civilisation par excellence.

தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ அறிக்கைகழகத் தலைவரின் சார்பில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்...
03/09/2026

தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ அறிக்கை

கழகத் தலைவரின் சார்பில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை விசாரணைக்கு வந்தன. இன்று மாண்புமிகு உயர்நீதிமன்றம் ஒரு ரிட் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பு குறித்த பல விமர்சனங்களை இணைய தளத்தில் பார்த்தேன். அதற்கான விளக்கமே இந்த அறிக்கை.

இந்த இரண்டு வழக்குகளுமே, கழக சட்டத்துறையின் சார்பில் தலைவரிடம் இதற்கான சாதக பாதகங்களை எடுத்துச் சொல்லி, நீதி மன்றம் என்ன தீர்ப்பு தந்தாலும், தேர்தல் ஆணையம் மற்றும் வாக்கு பதிவு இயந்திரங்களின் உள்ள குறைப்பாட்டை நாம் அனைவருக்கும் எடுத்துச் சொல்லவும், முறையாக பதிவு செய்யவும் இந்த முன்னெடுப்பை செய்யாமல் விடக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் , தலைவர் தந்த ஒப்புதலால் தாக்கல் செய்யப்பட்டவை.

WP 34884/2026- தேர்தல் ஆணையத்தின் EVM-களை சரி பார்ப்பதற்க்கான வழிகாட்டு நடைமுறை - SOP உச்ச நீதிமன்ற உத்திரவிற்க்கு எதிரானதாக உள்ளதால் அதனை நீக்கறவு செய்ய வேண்டும் என்பதற்காக தாக்கல் செய்யப்பட்டது. அது தனி நபருக்கான மனு அல்ல. இந்தியா முழுமைக்கும் பொருந்த கூடிய வழக்கு. 2024 வழிகாட்டு நடைமுறை - SOP யை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.ஆனால் 2025 வழிகாட்டு நடைமுறை - SOP வந்து விட்டதால் அதனை எதிர்த்து மனு செய்யும் உரிமையுடன் அந்த வழக்கு திரும்ப பெறப்பட்டது.

2024 ல் உச்ச நீதி மன்றம் EVM கருவிகளில் சந்தேகம் இருந்தால் 2 ஆம் அல்லது 3 ஆம் இடம் பெறும் வேட்பாளர்கள் 5% கருவிகளை தேர்ந்தெடுத்து அதற்கான கட்டணத்தை செலுத்தி EVM கருவிகளின் BURNT MEMORY ஐ சரி பார்க்கலாம் என உத்திரவிட்டது.

திராவிட முன்னேற்ற கழக சட்ட துறையின் சார்பில் நான் கழகத்தலைவரிடம் இந்த நிலையை சொல்லி, கொளத்தூர் தொகுதியில் EVM களை சரி பார்க்க வேண்டும் என வலியுறுத்தினேன். தலைவரும் ஒப்புதல் தந்தார்.

29.07.2026-லிருந்து 05.08.2026 வரை Checking and Verification நடைபெற்றது. 14 தேர்ந்தெடுக்கப்பட்ட கருவிகளில் சோதனையில் 5 கருவிகள் செயல்படவில்லை அல்லது தலைவரின் பெயர் இருந்த வாக்கு செலுத்தும் கருவி(Ballot Unit)-ஐ வாக்கு பதிவு இயந்திரத்தால் (Control Unit) அடையாளம் காண இயலவில்லை. ஒரு வாக்கு இயந்திரத்தில் பாதுகாப்பு சீல்கள் புதியவையாக , நிரப்பபடாமல் இருந்தது.

தேர்தல் ஆணையம் இந்த பழுதுகளை குறித்து உச்ச நீதிமன்றத்தின் ஆணையின் படி விளக்கங்களை தரவில்லை.

1. 1951 மக்கள் பிரதிநிதி சட்டத்தின் படி தேர்தல் முடிவுகளுக்கு பின் 45 நாட்களில் தேர்தல் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

2. அதுவும் பிரிவு 100ல் கூறப்பட்டுள்ள காரணங்களுக்கு மட்டுமே தேர்தல் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்.

3. யூகங்களின் அடிப்படையில் தேர்தல் மனுவை தாக்கல் செய்ய முடியாது.

4. வாக்கு இயந்திரங்களை ஏறக்குறைய 3 மாதங்களுக்கு பிறகே சரிபார்க்க ,தேர்தல் ஆணையம் , உச்ச நீதிமன்ற உத்தரவை நீர்த்து போகச்செய்யும் வகையில் நடத்தியது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை குறித்து உயர் நீதி மன்றத்தில் முறையிட வேண்டும் என கழக சட்டத்துறை, தலைவரிடம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டது. தலைவர் அவர்கள் முதலில் வேண்டாமென்று நினைத்தார். பின் இது குறித்து விளக்கங்களை கேட்டறிந்து ஒப்புதல் தந்தார்.

கொளத்தூர் தொகுதியின் அனைத்து வாக்கு இயந்திரங்களையும் சரி பார்க்க வேண்டும் மற்றும் VVPAT ல் உள்ள வாக்கு சீட்டுகளை சரி பார்க்க வேண்டும். இதனின் முடிவு அனைவருக்கும் தெரிந்ததே.வாக்கு இயந்திரங்களினால் மட்டுமே கொளத்தூரின் தேர்தல் முடிவு மாறியது.

Article 329(b)ன் படி தேர்தல் வழக்கின் மூலமாக மட்டுமே தேர்தலை செல்லாது என்றும் வேறொரு வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவிக்க முடியும். ஆனால் அரசியலமைப்பு சட்டத்தையும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையும், ஏன் EVM இயந்திரங்களை அறிமுகப்படுத்தியபோதும் இது போன்ற நிகழ்வுகளை சட்டமியற்றுபவர்கள் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

2024 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படியே வாக்கு பதிவு இயந்திரங்களை சரிபார்க்க உரிமை தரப்பட்டது. வாக்கு பதிவு இயந்திரங்கள் முறையாக இல்லையென்றால் என்னவாகும் என்பதற்கு நீதிமன்றங்களே தீர்ப்பளிக்க வேண்டும்.எனவே ஏற்கனவே நடந்த பரிசோதனையில் 30% சதவிகித இயந்திரங்கள் பழுதானவை என்றால் அனைத்து இயந்திரங்களையும் சோதித்தால் கழக தலைவர் அவர்களே வெற்றி பெறுவார் என்பதில் அய்யமில்லை. சட்டத்தில் இடமில்லை என்கிறது தேர்தல் ஆணையம், இதற்க்கான சட்டம் உருவாக்கப்படவில்லை அதனை ஆய்ந்து, நீதியை வழங்கிடத்தான் நீதிமன்றம் என்கிறோம் நாம்.

தமது தீர்ப்பில் உயர் நீதி மன்றம் இறுதியாக “ஏற்புடைமை (Maintanability) குறித்த மேற்கண்ட முடிவைக் கருதி, சரிபார்ப்பு நடைமுறைக்கு எதிராக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளின் தகுதி குறித்தோ, 05.08.2026 தேதியிட்ட எதிர்க்கப்பட்ட உத்தரவின் சரியான தன்மை குறித்தோ ஆராய வேண்டிய அவசியம் இல்லை என இந்த நீதிமன்றம் கருதுகிறது; எனவே அது குறித்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. விதி 49-T மீறப்பட்டதாகக் கூறப்படுவது, VVPAT கருவிகளின் செயலிழப்பு, மற்றும் வாக்குச்சாவடி எண்.208-இல் வாக்குப் பதிவு அலகு கண்டறியப்படாதது ஆகியவை உள்ளிட்ட, தகுதி சார்ந்த அனைத்து வாதங்களும், தேவைப்பட்டால் உரிய மன்றத்தின் முன் எடுத்துரைக்கப்படுவதற்காக அனுமதி தரப்படுகிறது. அதன்படி, ரிட் மனு ஏற்புடையதன்று எனத் தள்ளுபடி செய்யப்படுகிறது; சட்டப்படி தனக்குக் கிடைக்கக்கூடிய தீர்வை நாடுவதற்கு மனுதாரருக்கு உரிமை வழங்கப்படுகிறது. என்று குறிப்பிட்டுள்ளது.

நீதிக் கட்சி கொண்டு வந்த இட ஒதுக்கீட்டை உயர் நீதி மன்றமும் உச்ச நீதிமன்றமும் ஒப்புக் கொள்ளவில்லை. தொடர் சட்டப்போரட்டமும் , போரட்டங்களுமே , இட ஒதுக்கீட்டை , அரசியல் அமைப்பு திருத்தமாக கொண்டு வந்தன. வாக்கு பதிவு இயந்திரங்களும் அப்படித்தான், நீதிமன்றம், இது எங்கள் எல்லைக்கு உட்பட்டதில்லை என்று சொன்னாலும்கூட வாக்கு பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள், தேர்தல் முடிவுக்குப்பின் அதனை சோதனை செய்யும் நடைமுறை, அந்த சோதனையில் இயந்திரங்கள் தவறாக இருந்தால் அதற்க்கான தீர்வு ஆகியவற்றிக்கான விடை கிடைக்க வேண்டும்.

இந்தியாவில் இது போன்ற நிலை ஏற்பட்டதும், வழக்கு தாக்கல் செய்யப்பட்டதும் இதுவே முதல் முறை. சட்டமும், நீதியும் நல்ல விடையினைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை உண்டு.

ஆங்கில கருத்தொன்றுதான் நினைவுக்கு வருகிறது.

“I MAY BE WRONG, BUT I AM CLEAR”

கொளத்தூரின் தேர்தல் முடிவுகள் , வாக்கு பதிவு இயந்திரங்களினால் வந்ததே என்பதே , அந்த தெளிவு.

03/09/2026

இதுவரை நீதியும் கிடைக்கவில்லை முதலமைச்சரிடம் இருந்து Sorry-யும் வரவில்லை

மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்

02/09/2026

கழக மறுசீரமைப்புக்கான தலைமைக் கழகப் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்ற நீங்கள், என்னுடைய கண்களாகவும் – காதுகளாகவும் மாவட்டங்களுக்குச் சென்று, எந்தவித பாகுபாடுகளும் பார்க்காமல் – எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், கொடுக்கப்பட்டிருக்கின்ற பணிகளைச் சரியாகச் செய்துவிட்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கழகத் தலைவர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள்

“சுதந்திரமான – நேர்மையான தேர்தல் மூலமாகப் புதிய நிர்வாகிகள், இளைஞர்கள் பொறுப்புகளுக்கு வருவார்கள். அதற்கு அனைவரும் ஒத்து...
02/09/2026

“சுதந்திரமான – நேர்மையான தேர்தல் மூலமாகப் புதிய நிர்வாகிகள், இளைஞர்கள் பொறுப்புகளுக்கு வருவார்கள். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்”

“செயற்குழு தீர்மானங்களின் அடிப்படையில், வயது வரம்பு காரணமாகவும் – ஒருவர் எத்தனை முறை பதவியில் இருக்கலாம் என்ற வரம்பு காரணமாகவும் பொறுப்புகளை இழப்பவர்கள் யாரையும் தலைவர் கைவிடப் போவதில்லை; அவர்கள் அனைவருக்கும் அவர்கள் தகுதிக்கேற்ற வேறு பொறுப்புகளை வழங்கும் வகையில் தலைவர் முடிவெடுப்பார்” என்பதை மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் முன்னிலை வகித்துச் சொல்லுங்கள்.

- கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உரை.

இன்று (02-09-2026) மாலை, கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், கழக மறுசீரமைப்பு தலைமைக் கழக பிரதிநிதிகள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“அனைவருக்கும் வணக்கம்!

நாட்டிலேயே முதன்முதலில் ஆட்சியைக் பிடித்த மாநிலக் கட்சி – சாதனைகள் பல படைத்த கட்சி என்ற பெருமை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கிறது. அதற்குக் காரணம், அப்படியே தேங்கி நின்றுவிடாமல், காலத்திற்கு ஏற்ற மாதிரி நாம் அப்டேட் ஆகி – அப்கிரேட் ஆவதுதான்.

"மாற்றங்கள் நம்மிலிருந்துதான் தொடங்க வேண்டும்" என்று சொல்லி, DMK 2.0-விற்கான பயணத்தை இப்போது நாம் தொடங்கியிருக்கிறோம்.

நடந்து முடிந்த தேர்தலில் நமக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்து, வெற்றிப் பாதைக்கு நாம் திரும்ப வேண்டும் என்று பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம்.

முதலில், கள ஆய்வுக் குழுவை அனுப்பி, நிர்வாகிகளிடம் கருத்து கேட்டோம். ஆன்லைனில் தொண்டர்களிடம் கருத்து கேட்டோம். அதில் வந்த அறிக்கையையெல்லாம் நான் முழுமையாகப் படித்தேன்.

அதில் வந்த கருத்துகளின் அடிப்படையில், கழகத்தின் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்புகளைப் பரிந்துரை செய்ய, கழக மறுசீரமைப்புக் குழுவை அமைத்தோம்.

அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், செயற்குழுவில் பல்வேறு தீர்மானங்களைக் கொண்டு வந்தோம்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 28-ஆம் தேதி 110 மாவட்டங்களை அறிவித்தோம். இந்தச் செயல்பாட்டின் அடுத்த கட்டப் பணியைச் சிறப்பாகச் செய்ய நேற்று முன்தினம், தலைமைக் கழகப் பிரதிநிதிகளாக உங்கள் அனைவரையும் அறிவித்திருக்கிறோம்.

கழக மறுசீரமைப்புக்கான தலைமைக் கழகப் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்ற நீங்கள், என்னுடைய கண்களாகவும் – காதுகளாகவும் மாவட்டங்களுக்குச் சென்று, எந்தவித பாகுபாடுகளும் பார்க்காமல் – எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், கொடுக்கப்பட்டிருக்கின்ற பணிகளைச் சரியாகச் செய்துவிட்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் அனைவரும் உங்களுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்ற மாவட்டங்களுக்குச் சென்று, மாவட்டச் செயற்குழுக் கூட்டத்திற்கு முன்னிலை வகித்து, அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு, மறுசீரமைப்புக் குழு வகுத்துத் தந்துள்ள வழிமுறைகளின்படி கழக அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

முக்கியமாக நீங்கள் சென்று முதலில் சொல்ல வேண்டியது என்னவென்றால், "கிளை முதல் தலைமை வரைக்குமான பொறுப்புகளுக்குத் தேர்தல்தான் நடக்கப்போகிறது என்று தலைவர் சொல்லிவிட்டார். அது அனைத்துமே சுதந்திரமான – நேர்மையான தேர்தலாகத்தான் நடைபெறும். அப்போதுதான் புதிய நிர்வாகிகள், இளைஞர்கள் பொறுப்புகளுக்கு வருவார்கள். அதற்கு நீங்கள் தான் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் நாம் அனைவரும் சேர்ந்து பாடுபட்டு வளர்த்த கட்சியை, அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கொண்டு செல்ல முடியும்" – என்று சொல்ல வேண்டும்.

அதேபோல், செயற்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களின் அடிப்படையில், வயது வரம்பு காரணமாகவும் – ஒருவர் எத்தனை முறை பதவியில் இருக்கலாம் என்ற வரம்பு காரணமாகவும் பலருக்கும் இப்போது இருக்கும்பொறுப்புகள் பறிபோகும்.

"அவர்கள் யாரையும் தலைவர் கைவிடப் போவதில்லை. அவர்கள் அனைவருக்கும் அவர்கள் தகுதிக்கேற்ற வேறு பொறுப்புகளை வழங்கும் வகையில் தலைவர் முடிவெடுப்பார்" என்பதையும் மாவட்டச் செயற்குழுக் கூட்டங்களில் எடுத்துச் சொல்லுங்கள்.

வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கழக அமைப்புகள் பிரிக்கப்படுவதை உறுதி செய்து, அனைவரின் ஒப்புதலையும் பெற்று தலைமைக் கழகத்தில் ஒப்படைக்கும் பணியை அடுத்த 15 நாட்களில் விரைந்து முடித்துத் தர வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இதையெல்லாம் நீங்கள் செய்து முடித்த பிறகுதான் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்க முடியும்.

அடித்தளம் வலிமையாக இருந்தால்தான் கட்டிடம் உறுதியாக இருக்கும். வேர்கள் வலிமையாக இருந்தால்தான் ஆலமரம் உறுதியாக நிற்கும். அதுபோல நம்முடைய கழகக் கட்டமைப்புதான் நம்மைத் தாங்கி நிற்கும். அந்த ஆணிவேரைப் பலப்படுத்தும் பெரும்பொறுப்பு உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

இன்றைக்கு காலையில் மறுசீரமைப்புக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகள் தலைமைக் கழகத்தின் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும். அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் தங்கம் தென்னரசு அவர்களிடம் கேளுங்கள்.

கொள்கை அற்ற, கட்டமைப்பு அற்ற கட்சிகள் வரும் – போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம்! நிலைத்து நிற்கும்!

கட்டமைப்பைப் பலப்படுத்தி, கொள்கைப் பயணத்தைத் தொடர்வோம்!

இன்று நாம் செய்யும் பணிகள் நாளை வரலாறாய் நிலைத்து நிற்கும்!

கழகத்தை மறுசீரமைப்போம்!

மீண்டு வருவோம்! மீண்டும் வெல்வோம்!

நன்றி! வணக்கம்!”

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

மேட்டூர் அணை தாமதத் திறப்பால் ஏற்படும் முக்கிய பாதிப்புகள்! முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கைகடந்த தி....
02/09/2026

மேட்டூர் அணை தாமதத் திறப்பால் ஏற்படும் முக்கிய பாதிப்புகள்! முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை

கடந்த தி.மு.க. ஆட்சியின் சாதனைகளுள் ஒன்றாக, வழக்கமாகத் திறக்கப்படும் ஜூன் 12-ஆம் தேதிக்குப் பதிலாக, இந்த நிர்வாகத் திறனற்ற த.வெ.க. ஆட்சியில் அணைகள் தாமதமாகத் திறக்கப்பட்டதால், ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள் அறுவடை செய்யப்படும் குறுவைப் பருவ நெல் சாகுபடி முற்றிலுமாகக் குறைந்துள்ளது.

எந்தவிதத் திட்டமும் இன்றி தற்போது தாமதமாகத் திறக்கப்பட்டுள்ள மேட்டூர் அணையினால் தங்களுக்கு என்ன பயன் என்று டெல்டா விவசாயிகள் விரக்தியோடு கேள்வி எழுப்புகின்றனர். விவசாயிகளும் விவசாயச் சங்கங்களும் முன்வைக்கும் நியாயமான கருத்துகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது இப்போது அவசியமாகிறது.

நிலத்தடி நீர்மட்டம் குறைவு:

கால்வாய்ப் பாசனத்திற்குத் தண்ணீர் வராததால், நிலத்தடி நீரை நம்பி ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும் நீரின்றிப் பயிர்களைக் காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் பெரும் கடன் சுமைக்கு ஆளாக நேரிடுவதுடன், ஏற்கனவே கடன் தள்ளுபடியில் இந்த அரசின் குழப்பங்களால் விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்பில் இருக்கின்றனர். லட்சக்கணக்கான டன் நெல் உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியிருக்கிறது.

சம்பா சாகுபடியில் நிலவும் சிக்கல்களும் சவால்களும்

பருவகால மழை மற்றும் அணையின் நீர்வரத்தைப் பொறுத்தே அடுத்தடுத்த சாகுபடிப் பணிகளைத் தொடங்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், விவசாயிகளுக்குப் பயிர் சாகுபடி குறித்த நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும் ஒட்டுமொத்த விவசாயச் சுழற்சிக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஒரு போக சம்பா மற்றும் தாளடி சாகுபடிப் பயிர்கள் முழுமையாக வளர்ந்து அறுவடைக்கு வர 120 முதல் 140 நாட்கள் வரை தண்ணீர் தேவைப்படும். ஆனால், தற்போதைய அணை நீர் இருப்பைக் கொண்டு (சுமார் 54 டி.எம்.சி.) அரசு முதற்கட்டமாக 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கத் திட்டமிட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களின் ஒட்டுமொத்த சம்பா, தாளடி சாகுபடிக்கு சுமார் 205 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும் நிலையில், அணையில் தற்போது பாதி அளவு மட்டுமே நீர் இருப்பது விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பருவகால மாறுதல் ஆபத்து:

வழக்கமாக சம்பா பயிர்கள் அக்டோபர் மாத வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் ஓரளவிற்கு வளர்ந்து, மழையைத் தாங்கும் நிலையை எட்டியிருக்கும். ஆனால், தற்போது செப்டம்பர் மாதத்தில் சாகுபடி தாமதமாகத் தொடங்குவதால், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பெய்யும் கனமழையினாலும் வெள்ளத்தினாலும் இளம் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் அதிகரித்துள்ளது.

பொருளாதார மற்றும் உற்பத்தி இழப்புகள்

நெல் உற்பத்தி குறைதல்:

மேட்டூர் அணை தாமதமாகத் திறக்கப்பட்டதன் காரணமாக, தமிழக டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் 12 லட்சம் டன் நெல் உற்பத்தி இழப்பு ஏற்படலாம் என வேளாண் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கடைமடைப் பகுதிகளுக்கு நீர் சேர்வதில் தாமதம் - காய்ந்து கிடக்கும் ஆறுகள்:

நீண்ட நாட்களாக ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்கள் காய்ந்து கிடப்பதால், அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் நிலத்தில் உறிஞ்சப்பட்டு, டெல்டாவின் கடைமடைப் பகுதிகளுக்குச் (நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களின் இறுதிப் பகுதிகள்) சென்றடையக் கூடுதல் நாட்களாகும். இதனால், அங்குள்ள விவசாயிகளுக்குப் பாசன நீர் கிடைப்பதில் மேலும் தாமதம் ஏற்படும்.

வடகிழக்குப் பருவமழை மற்றும் கர்நாடகாவிலிருந்து வர வேண்டிய காவிரி உபரி நீர் ஆகியவற்றை மட்டுமே நம்பி இனி சம்பா சாகுபடியின் தலைவிதி உள்ளது. இவை இரண்டுமே இந்த ஆட்சியில் கானல் நீரான நிலையில், விவசாயம் மிகப்பெரிய கேள்விக்குறியாகியிருக்கிறது.

கடந்த தி.மு.கழக ஆட்சியில் குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் முறையாகத் தூர்வாரப்பட்டு, நிலத்தடி நீரை உயர்த்தத் தொலைநோக்குத் திட்டத்தோடு செயல்படுத்தப்பட்டதால், நீர்நிலைகள் அதிகமான தண்ணீரைச் சேமிக்கத் தயாராக இருக்கும் நிலையில், தற்போது திறக்கப்படும் தண்ணீர் அந்த நீர் சேமிப்பு ஆதாரங்களை நிறைக்குமா என்பதும் சந்தேகமே.

02/09/2026

இந்த ஆட்சியில் இனிமே காவல்துறையை விட்டு வழக்கு போடமாட்டீங்க, இனிமே சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பற்றி கவலைப்பட மாட்டீங்க, இனிமே எந்த இடத்திலும் நடவடிக்கை எடுக்கமாட்டீங்களா.?

மாண்புமிகு எதிர்க்கட்சி கொறடா திரு எ.வ வேலு அவர்கள்

முரசொலி அறக்கட்டளை சார்பில் முரசொலி செல்வம் விருது தலைமைக் கழகம் அறிவிப்பு
02/09/2026

முரசொலி அறக்கட்டளை சார்பில் முரசொலி செல்வம் விருது தலைமைக் கழகம் அறிவிப்பு

தலைமைக் கழகம் அறிவிப்புதி.மு.க. முப்பெரும் விழா 2026 – விருது பெறுவோர் பட்டியல்
02/09/2026

தலைமைக் கழகம் அறிவிப்பு

தி.மு.க. முப்பெரும் விழா 2026 – விருது பெறுவோர் பட்டியல்

கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கழகத் தலைவர் அவர்கள் 110 கழக மாவட்டங்களை அறிவித்துள்ளார்...
31/08/2026

கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கழகத் தலைவர் அவர்கள் 110 கழக மாவட்டங்களை அறிவித்துள்ளார்.

கழக சீரமைப்புக்குழு வகுத்துத் தந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பகுதி – நகரம் – ஒன்றியம் – பேரூர் – வட்ட – கிளைக் கழகங்களை மறுசீரமைத்து, தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கும் பணியை நேரடியாக மேற்பார்வையிடுவதற்காக ஒரு வருவாய் மாவட்டத்திற்கு இருவர் வீதம் 76 தலைமைக் கழகப் பிரதிநிதிகள் நியமனம் செய்யப்படுகின்றனர்.

மாவட்டக் கழகச் செயலாளர்கள் நடத்தும் மாவட்டச் செயற்குழு கூட்டங்கள் அனைத்தும் தலைமைக் கழகப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும். பகுதி – நகரம் – ஒன்றியம் – பேரூர் – வட்ட – கிளைக் கழகங்கள் மறுசீரமைப்பில் ஏதேனும் கருத்துகள், மாறுபாடுகள் இருப்பின் கழகத்தினர் தமது மாவட்டத்திற்குரிய தலைமைக் கழகப் பிரதிநிதிகளிடம் தெரிவிக்கலாம்.

தலைமைக் கழகப் பிரதிநிதிகளுடன், வரும் புதன்கிழமை (செப்டம்பர் 02, 2026) அன்று கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் மாலை 5 மணியளவில் காணொலிக் கூட்டம் நடைபெறும். மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சட்டப்பேரவை நடைபெறாத நாட்களில் நடத்தும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (30-08-2026) சென்னை, ஐ.டி.சி. கிராண்ட் சோழாவில் நடைபெற்ற தே.மு.தி.க. பொர...
31/08/2026

கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (30-08-2026) சென்னை, ஐ.டி.சி. கிராண்ட் சோழாவில் நடைபெற்ற தே.மு.தி.க. பொருளாளர் திரு. எல்.கே. சுதீஷ் M.P. அவர்களது மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்துகொண்டு டாக்டர் ஜானுஸ்ரீ சுதீஷ் மற்றும் அகில் ரவிகுமார் ஆகியோரை வாழ்த்தினார்.

அதுபோது, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.ஜி. ராஜேந்திரன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Address

Anna Arivalayam, Anna Salai
Chennai
600018

Telephone

+914424320270

Website

Alerts

Be the first to know and let us send you an email when DMK - Dravida Munnetra Kazhagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DMK - Dravida Munnetra Kazhagam:

Shortcuts

Share