தொழில் விவசாய முன்னேற்ற கட்சி - Tvmk

  • Home
  • India
  • Chennai
  • தொழில் விவசாய முன்னேற்ற கட்சி - Tvmk

தொழில் விவசாய முன்னேற்ற கட்சி - Tvmk இந்த கட்சியின் பிரதான நோக்கம் தொழில் (செல்: 9345228184)

தொழில் விவசாய முன்னேற்ற கட்சி (TVMK)

தொழில் முன்னேற்றமடைந்தால் தொழில்முனைவோரும், தொழிலாளர்களும் பயன்பெறுவர்,
விவசாயம் செழிப்படைந்தால் விவசாயிகள் வாழ்வும் ஒட்டுமொத்த நாடும் வளம் பெரும்.

*நோக்கம்: தொழில், விவசாயம், தமிழ், தமிழர், தமிழக நலன் மற்றும் முன்னேற்றம்.*

*கொள்கைகள் & நோக்கங்கள்:*
1) எதிலும் ஜாதி மத பேதமற்ற அணுகுமுறைகளை கடைபிடித்தல்..
2) சுற்றுச்சூழல், இயற்கை வளம் மற்றும் ஜீவராசிகளுக்கு ப

ாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களிலிருந்து காத்தல்.
3) பொது அலுவலக பரிவர்த்தனைகள், வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவை தமிழ் மொழியில் நடைபெறுவதை உறுதிசெய்தல் மற்றும் ஊக்குவித்தல்.
4) தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை பாதிக்கும் அம்சங்களிலிருந்து காத்தல்.
5) தற்சார்பு மற்றும் அருகாமை பொருளாதாரத்தை ஊக்குவித்தல்.
6) இளைஞர்களை ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவும் செயலாற்றவும் வழிநடத்துதல்.
7) தொழில்முனைவை ஊக்குவித்து வேலையில்லா நிலையை போக்குதல்.
8) பல்வேறு தொழில்துறை சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு களம் ஏற்படுத்தி ஊக்குவித்தல்.
9) அறிவுசார் அம்சங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, அறிவுசார் சொத்துக்களை பெருக்குதல்.
10) தொழில், வணிகம் மற்றும் விவசாயம் டிஜிட்டல் தொழிநுட்பம் மூலம் பயனடைய ஆவண செய்தல்.
11) இணையத்தில் தமிழை வளர்க்கவும், தமிழர்களிடத்தில் இணையத்தை வளர்க்கவும் வழிவகை செய்தல்.
12) கொள்கைகள் மற்றும் நோக்கங்களில் உடன்பாடு உள்ளவர்களுடன் இணைந்து செயல்படுதல் அல்லது ஆதரவளித்தல்.

கொள்கைகளும், நோக்கங்களும் தொடர்ந்து சேர்க்கப்படும் / மேம்படுத்தப்படும்.

ஜே.கே.முத்து - நிறுவனர்.

31/01/2026

தொழில் விவசாய முன்னேற்றக் கட்சியின் முக்கிய நோக்கங்கள்:

அடுத்தடுத்த தொடர் தகவல்களை பெற *TVMK குழு* வில் இணையவும்: 👇
https://chat.whatsapp.com/FUl49jKNCaR4fxbBytbl9w
நன்றி !
ஜே.கே.முத்து, நிறுவன தலைவர்.

04/06/2022
21/12/2020

"100 நாள் வேலை திட்டம்" இது ஒரு தொழில் விவசாய ஒழிப்பு திட்டம், வேலைவாய்ப்பு இல்லாத பகுதிகளில் உத்திரவாதமான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வருமானத்தையும் ஏற்படுத்த எடுத்த திட்டம் உண்மையில் பல தொழில்களையும் குறிப்பாக விவசாயத்தையும் ஒழிக்கிறது. இதன்மூலம் அதிகபட்சம் செயற்கையான பணிகளே நடைபெறுகிறது, கமிஷன் ஏஜெண்டுகளுக்கே பலன். பயனாளர் எனப்படுவோர் நோகாமல் பேருக்கு வேலை போல் செய்து கையெழுத்திட்டு பணம் பெறுவதால் மற்ற தொழிற்சாலை மற்றும் விவசாய பணிகளுக்கும் செல்வதில்லை. இதனால் தொழிலும் விவசாயமும் பெரிதும் பாதிப்படைகிறது. இதை விடுத்து பயனாளர்களுக்கு மேலும் பயனளிக்கும் விதத்தில் அந்தந்த தொழிற்சாலைகளுக்கு பணி சம்பளம் போக ஊக்கத் தொகையை அரசு வழங்கலாம். தொழிலும் விவசாயமும் ஆள் பற்றாக்குறையில் முடங்காமல் செயல்படும், உண்மையாக உழைப்பவர்களுக்கு பணி ஊதியம் போக அரசின் ஊக்கத்தொகையும் கிடைக்கும் இதை அரசுகள் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

Address

Tamilnadu
Chennai
600000

Telephone

+919345228184

Alerts

Be the first to know and let us send you an email when தொழில் விவசாய முன்னேற்ற கட்சி - Tvmk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தொழில் விவசாய முன்னேற்ற கட்சி - Tvmk:

Share