Anbu Chitrarasu - அன்பு சிற்றரசு

Anbu Chitrarasu - அன்பு சிற்றரசு நீ என்னை போற்றுவதற்கு நான் பிரபலமும் இல்லை தேவையில்லாமல் தூற்றுவதற்கு ஆளாக என்னிடம் பலம் இல்லாமலுமில்லை..
(1)

07/09/2026

வாழ்க்கையில மாற்றம் வரணும்னா நாம தான் துணிஞ்சு நிற்கணும்!

#தமிழக_வேலை_தமிழருக்கே

07/09/2026

சந்தைக்கடையா? சட்டப்பேரவையா?
மண்ணுக்கும் மக்களுக்கும் பேச வேண்டிய பேரவையில், மல்லுக்கட்டும் மோதல்கள் ஏன்?

சட்டம் ஒழுங்கு குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதங்கள், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆட்சியின் பொறுப்பு என்ன? என்ற அடிப்படைக் கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளன.

மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறதா? பெண்கள் அச்சமின்றி நடமாடும் சூழல் இருக்கிறதா? குற்றங்களைத் தடுக்க காவல்துறை போதிய அளவில் செயல்படுகிறதா? இத்தகைய கேள்விகளுக்குத் தெளிவான பதில்களும் செயல்பாடுகளும் வெளிப்பட வேண்டிய இடமே சட்டப்பேரவைதான்.

மண்ணையும் மக்களையும் காப்பதற்கான செயல்பாடுகளைத் தீர்மானிக்க வேண்டிய அவையில், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் அரசியல் மோதலில் ஈடுபடுவதால் மக்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது?

சட்டப்பேரவை என்பது வெறும் அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்தும் மேடை அல்ல. ஆட்சியின் செயல்பாடுகளைப் பரிசீலிப்பதும், தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும், தீர்வுகளை உருவாக்குவதும்தான் சட்டப்பேரவையின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும்.

எதிர்க்கட்சிக்குக் கேள்வி எழுப்பும் உரிமை உண்டு. அதே நேரத்தில், மக்களின் சார்பில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பொறுப்புடன் விளக்கம் அளிப்பது ஆட்சியாளர்களின் கடமை.

இரு தரப்பும் தங்கள் அரசியல் நிலைப்பாட்டைத் தாண்டி மக்களின் நலனை முன்னிறுத்த வேண்டிய பொறுப்பு கொண்டவர்கள்.
வார்த்தை மோதல்கள் மக்களின் அச்சத்தைப் போக்காது.
அரசியல் சச்சரவுகள் குற்றங்களைத் தடுக்காது.
குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கும் அரசியல், தமிழ்நாட்டில் உள்ள ஒரேயொரு குடும்பத்தின் பாதுகாப்பைக்கூட உறுதி செய்யாது.

மக்களுக்குத் தேவைப்படுவது அரசியல் வெற்றி தோல்விகள் அல்ல. அவர்கள் வாழும் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதற்கான உறுதி.

அரசின் பொறுப்பு சட்டம் ஒழுங்குடன் முடிவடைவதில்லை. இந்த மண்ணில் வாழும் மக்களின் வாழ்க்கையைத் தாங்கி நிற்கும் நிலம், நீர், காற்று, காடு, கடல் மற்றும் மலை வளம் உள்ளிட்ட இயற்கைச் செல்வங்களை, பிற மாநிலங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் கொள்ளை அடிப்பதிலிருந்து பாதுகாப்பதும் ஆட்சியின் வரலாற்றுப் பொறுப்பு.

வளர்ச்சி என்ற பெயரில் நிலம் பறிக்கப்படும்போது, நீர்நிலைகள் அழிக்கப்படும்போது, கடற்கரை மற்றும் இயற்கை வளங்கள் சுரண்டப்படும்போது, அதன் துயரங்களை மக்கள்தான் அனுபவிக்கிறார்கள். நாளை பிறக்கப்போகும் தலைமுறைகளும் அந்தத் துயரங்களை அனுபவிக்க வேண்டுமா? என்கிற கேள்விக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்?

மக்களின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும்.
மக்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்.
மக்களின் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும்.
வாழும் பூமியின் இயற்கைச் செல்வம், அடுத்த தலைமுறைக்கும் பாதுகாப்பானதாக விட்டுச் செல்லப்பட வேண்டும்.
இதுவே ஓர் ஆட்சியின் உண்மையான அளவுகோல்.

ஆகவே, அரசியல் மோதல்களைத் தாண்டி மண்ணையும் மக்களையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பதே ஆட்சியின் முதன்மைக் கடமை என்பதை உணர்ந்து, அதற்கான உறுதியான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.

அதேவேளையில், பிற கட்சிகளைச் சேர்ந்த அனைத்துச் சட்டப்பேரவை உறுப்பினர்களும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, சட்டப்பேரவையின் மாண்பையும் சனநாயக நெறிகளையும் காத்து, மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் குரல் கொடுத்துச் செயல்பட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

தி. வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

#மண்ணுக்காக_மக்களுக்காக
#சட்டப்பேரவை_மாண்பு

07/09/2026

தமிழ்நாட்டுல இத்தனை லட்சம் பேரா?

Velmurugan.T

#தமிழக_வேலை_தமிழருக்கே

06/09/2026

மண்ணின் மக்களுக்கு 100% வேலை வாய்ப்பை உடனடியாக அரசு உறுதி செய்ய வேண்டும்..

Velmurugan.T

#தமிழக_வேலை_தமிழருக்கே

06/09/2026

காவலனாக இருந்தாலும் விடமாட்டேன்!

Velmurugan.T

#தமிழக_வேலை_தமிழருக்கே

ஏற்காட்டில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டபோது..Velmurugan.T          ...
05/09/2026

ஏற்காட்டில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டபோது..

Velmurugan.T

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில நிர்வாகிகள் முக்கிய ஆலோசனைக் கூட்டம்.! தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில நிர்வாகிகளு...
05/09/2026

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில நிர்வாகிகள் முக்கிய ஆலோசனைக் கூட்டம்.!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில நிர்வாகிகளுக்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம், ஏற்காடு கிரீன்ஸ் வில்லா ரெசார்ட்டில், கட்சியின் நிறுவனத் தலைவர் அண்ணன் முத்தமிழன் Velmurugan.T அவர்களின் தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது..

கட்சியின் அமைப்பு வளர்ச்சி, களப்பணி, அணி செயல்பாடுகள், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விவகாரங்கள் குறித்து நிர்வாகிகளுடன் தலைவர் அவர்கள் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்..

04/09/2026

ஆட்சி அதிகாரம் எங்கள் கைகளில் இல்லை..

Velmurugan.T

04/09/2026

வாக்குறுதிகள் அனைத்தும் வெற்று அறிவிப்புகளா?
நடுரோட்டில் விவசாயிகளை விட்டது யார்?

தூத்துக்குடி திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள், டிராக்டர்களைக் கொண்டு சாலையை மறித்தும், காய்ந்து கருகிய வாழை மரங்களைச் சாலையில் வீசியும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

அணைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது கடைமடை விவசாய நிலங்களுக்கு உரிய காலத்தில் பாசன நீர் சென்று சேராதது முழுக்க முழுக்க நிர்வாகத்தின் அலட்சியமும் பொறுப்பின்மையுமே ஆகும். வாய்க்கால்கள் முறையாகத் தூர்வாரப்படாததும், நீர் பங்கீட்டு அட்டவணை முறையாகப் பின்பற்றப்படாததுமே பல நூறு ஏக்கர் பரப்பளவிலான வாழைப் பயிர்கள் கண்முன்னே கருகிக் கருகிப் போனதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

கடன் வாங்கி, வியர்வை சிந்தி வளர்த்த பயிர்கள் கருகிப் போனதால், விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்கள் வேடிக்கை பார்த்ததன் விளைவாகவே உழவர்கள் இன்று நடுரோட்டில் இறங்கிப் போராடும் துயர நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் வெறுமனே வெற்று வாக்குறுதிகளோடு கடந்து போகாமல், ஒவ்வொரு விவசாய நிலத்தையும் வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறையினர் உடனடியாகக் கள ஆய்வு செய்து, கருகிய வாழைப் பயிர்களுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் இரண்டு இலட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்.

நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பயிர்க் காப்பீட்டுத் தொகையை எவ்வித இழுத்தடிப்பும் இன்றி உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.
கூட்டுறவு வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வாங்கியுள்ள விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும்.
பாசன நீர் முறைப்படுத்தப்படாததற்கும், கடைமடை வரை தண்ணீர் திறந்து விடப்படாததற்கும் காரணமான பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் மீது உரிய துறைசார் விசாரணை நடத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

உழவர்களின் நியாயமான கண்ணீருக்கும் கொந்தளிப்பிற்கும் மதிப்பளித்து, பாதிக்கப்பட்ட விவசாயத் தோழர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.




#விவசாயிகள்போராட்டம்
#பயிர்இழப்பீடுவழங்கு

04/09/2026

நீதிமன்றம் இல்லப்பா இது சூப்பர் மார்க்கெட் ஆளுக்கு ஒரு தீர்ப்பு ஆஃபர்ல கிடைக்குது போல.!

Velmurugan.T

#தமிழக_வேலை_தமிழருக்கே

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anbu Chitrarasu - அன்பு சிற்றரசு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share