17/08/2025
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் அண்ணாநகர் பகுதியில் சென்னை அரசு பள்ளியில் நடத்தப்பட்டது. அதில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அங்கு வழங்கப்பட்ட இரத்தம் KMC அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. மற்றும் கண் பரிசோதனை செய்து கொண்ட பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தோழர்கள் திமுக பகுதி செயலாளர் பரமசிவம் 101 வார்டு கவுன்சிலர் மெட்டில்டா கோவிந்தராஜ் 98 வார்டு கவுன்சிலர் பிரியதர்ஷினி உயர்நீதி மன்ற வழக்கறிஞர் தோழர் திருமூர்த்தி மற்றும் மாநில குழு உறுப்பினர் கே மணிகண்டன் மாவட்ட தலைவர் அருண் மாவட்ட செயலாளர் பார்த்திபன் மாவட்ட பொருளாளர் விக்னேஷ் பகுதி செயலாளர் கார்த்திக் பகுதி தலைவர் எஸ் மணிகண்டன் பொருளாளர் தீபக் முன்னாள் தலைவர்கள் ராஜன், சுகுமார், சீனிவாசன் ,மகேஷ் ,ஆனந்த் ,வெங்கடேஷ் ,மங்கா , விழா குழு உறுப்பினர்:-
P. வெங்கடேஷ், B.தர்ஷன், S நரேன் சஞ்சய், G.நிவாஷ், R யுவராஜ், R.செல்வா அஸ்வின், N. பிரகாஷ்.கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து தோழர்களுக்கும், பொது மக்களுக்கும், தோழமை அமைப்பதற்கும் DYFI அண்ணா நகர் பகுதியில் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.