Tamil Nadu Advisory Council for Child Rights

Tamil Nadu Advisory Council for Child Rights Aims to highlight/address issues faced by children to the Govt along with the stakeholders

Attention to Social welfare Ministry Chief Minister of Tamil Nadu
29/10/2025

Attention to
Social welfare Ministry
Chief Minister of Tamil Nadu

கரூர் பேரிடரில் குழந்தைகள் பலர் மரணமடைந்ததையொட்டி  இனி வருங்காலங்களில் குழந்தைகள் பேரிடர் அழிவிலிருந்து தப்பிக்கவும் பாத...
16/10/2025

கரூர் பேரிடரில் குழந்தைகள் பலர் மரணமடைந்ததையொட்டி
இனி வருங்காலங்களில் குழந்தைகள் பேரிடர் அழிவிலிருந்து தப்பிக்கவும் பாதுகாக்கப்படவும் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கழகத்தின் சில ஆலோசனைளை கருத்துருவாக தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கிறோம்.




Chief Minister of Tamil Nadu

04/10/2025

கரூர் பேரிடரில் தொலைந்த குழந்தைகள்
Chief Minister of Tamil Nadu

04/10/2025
இலட்சக்கணக்கான மாணவர்கள் எழுதிய பள்ளி பொது தேர்வில் ஒரே ஒரு மாணவர் மட்டும் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுப்பது என்பது...
08/05/2025

இலட்சக்கணக்கான மாணவர்கள் எழுதிய பள்ளி பொது தேர்வில் ஒரே ஒரு மாணவர் மட்டும் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுப்பது என்பது எப்படி சாத்தியம்?

அறிவியல் பூர்வமற்ற மதிப்பீடாக அல்லவா இது உள்ளது

சென்னை அசோக் நகர் அரசு பள்ளி மற்றும் சென்னை சைதாப்பேட்டை அரசு மாடல் பள்ளியில் நடந்த ஆன்மீக சொற்பொழிவிற்கு பின்பு அப்பள்ள...
07/09/2024

சென்னை அசோக் நகர் அரசு பள்ளி மற்றும் சென்னை சைதாப்பேட்டை அரசு மாடல் பள்ளியில் நடந்த ஆன்மீக சொற்பொழிவிற்கு பின்பு அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் ஆலோசனை கழகம் சார்பில் நடைபெற்ற தென் சென்னை பள்ளி குழந்தைகளுக்கான குழந்தை உரிமைகள் மீதான பயிற்சிப்பட்டறை, சைதாப்பேட்டை அரசு மாடல் பள்ளி மைதானத்திலேயே ஒருங்கிணைக்கப்பட்டது.

தலைமை கல்வி இயக்குனர் தந்த கடிதத்தின் ஒரே காரணத்தினால் மட்டுமே, மிகுந்த மனகசப்புடன், தலைமைஆசிரியர் அந்த பயிற்சி பட்டறையை சைதாப்பேட்டை மாடல் பள்ளியில் நடைபெற அனுமதித்தார். ஆனால் சைதாப்பேட்டை பள்ளி குழந்தைகளே தங்கள் பள்ளியில் நடைபெறும் பயிற்சி பட்டறையில் பங்குபெற அனுமதிக்கப்படவில்லை.

ஜனநாயக தன்மை இல்லாத, குழந்தை நலன் சார்ந்து இயங்காத, தங்கள் சித்தாந்தங்களை மட்டுமே குழந்தைகள் மீது திணிக்கும் நபர்கள், ஆசிரியர், தலைமை ஆசிரியர் போன்ற வருங்கால தலைமுறையினரை வழி நடத்தக்கூடிய பொறுப்புகள் வகிக்க தகுதி இல்லாதவர்கள் ஆகிறார்கள்.

திராவிட சித்தாந்தம் செழிதோங்கும் தமிழ்நாட்டில், சங்கிகள் அனைத்திடங்களிலும் கரப்பான்களை போல பல துறைகளில் ஒளிந்துள்ளனர். பள்ளி கல்வி துறையில் ஆசிரியர், தலைமை ஆசிரியர், தலைமை கல்வி இயக்குனர் போன்ற முக்கிய, வருங்கால தலைமுறையினரை வழி நடத்தக்கூடிய பொறுப்புகள் 'in the best interest of the child' 'குழந்தைகளின் சிறந்த நலனுக்காக' மிக கவனமாக நிறுவப்படவேண்டும்.

டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவ நாளாக நம் தமிழ்நாடு முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட...
15/04/2024

டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவ நாளாக நம் தமிழ்நாடு முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

சாதியம் என்னும் சமூக அமைப்பு தனி மனித சுதந்திரத்தை அபகரித்து ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சுரண்டப்பட்டு வந்தபோது சமூக அடுக்குகள், பாலின வேற்றுமைகள், மத வேற்றுமைகள் ஆகியவற்றைத் தாண்டி தற்போது அவை பிரிந்து மனித உரிமைகள, பெண்கள் உரிமைகள், குழந்தை உரிமைகள், அவரவர் சமத்துவத்திற்கு ஏற்ப உரிமைகளையும், சட்டங்களையும் அமைத்து வருகின்றன.
இதில் குழந்தை உரிமைகள் எடுத்துக் கொண்டால், கோணிப்பையைத் தூக்கிக்கொண்டு பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்ற சிறுவர்களுடன் சேரக் கூடாது, தண்ணீர் குடிக்கக் கூடாது, பள்ளி அறையில் தாழ்ந்த ஜாதியினர் கீழே அமர்வது, மேல் ஜாதியினர் மேஜை மீது அமர்வது, மேல் ஜாதி மாணவர் கீழ் ஜாதி மாணவரின் வீட்டிற்கு சென்று குடும்பத்தோடு வெட்டி கொலை செய்வது, போன்ற சம்பவங்கள் தற்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் மேற்கு குறிப்பிட்டுள்ள சம்பவங்களில் நாம் எங்கே சமத்துவத்தை கண்டோம்...!

சாதி, மதம், பாலின வேறுபாடு போன்ற பிரிவினைகளில் இருந்து எப்போது வெளியே வந்து சமத்துவத்தை நிலை நாட்டுவோமோ, அன்றைக்கே நமக்கு சமத்துவ நாள். இவற்றை நம் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்🙏🏻

பள்ளிவாழ்வின்  பயணத்தில் இலக்கை எட்டவிருக்கும் கண்மணிகளே..தேர்வென்பது போருக்கான பயணமல்ல,பயங்கொளாது நிதானியுங்கள்!!!!!தேர...
26/03/2024

பள்ளிவாழ்வின் பயணத்தில் இலக்கை எட்டவிருக்கும் கண்மணிகளே..
தேர்வென்பது போருக்கான பயணமல்ல,
பயங்கொளாது நிதானியுங்கள்!!!!!
தேர்வை பிறரின் லட்சியத்திற்காகவோ கனவுகளுக்காகவோ எழுதாதீர்.
உங்கள் மனங்காட்டும் வெற்றிப்பாதையில் செல்லுங்கள்..
எதிர்காலத்தின் ஒலிகளான, பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவக் கண்மணிகளுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்💐💐💐!!!!!

புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அந்த சிறுமியை கொன்ற 19 வயது இளைஞன் கஞ்சா பழக்கம் கொ...
07/03/2024

புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அந்த சிறுமியை கொன்ற 19 வயது இளைஞன் கஞ்சா பழக்கம் கொண்டவன் என தெரியவந்தது.
போதைக்கு அடிமையாகி, பெயர் போன இந்த உலகில் பெண்ணையும், பெண் குழந்தைகளையும் போதையின் உச்சமாகவே பார்த்த அந்த இரு காமக் கொடூரர்கள் சிறுமியை அடித்து கை, கால்களை கட்டி, வெள்ளை வேட்டியில் சுருட்டி சாக்கு மூட்டையில் கட்டி கால்வாயில் வீசி விட்டார்கள்.

அக்குழந்தயின் நிலையை வேடிக்கை மட்டும் பார்க்கும் மனிதர்களாக இருப்பதற்கு நம் சமூகம் வருந்தவேண்டும்.

நம் நாட்டில் நடக்கும் குழந்தை பாலியல் வன்கொடுமைகளால் அவதிப்படும் சிறுவர் சிறுமிகளையும் குடும்பங்களின் வேதனைகளையும், இரத்த துளி மணிகளாக கருதி, புதுச்சேரி அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ள குழந்தைகள் எந்தவித பயமோ தயக்கமோ இன்றி தெளிவாக தேர்வு எதிர்கொள்ள, தமிழ்நாடு குழந்தை...
29/02/2024

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ள குழந்தைகள் எந்தவித பயமோ தயக்கமோ இன்றி தெளிவாக தேர்வு எதிர்கொள்ள, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் ஆலோசனை கழகத்தின் வாழ்த்துக்கள்.

மாணவர்கள் இது தங்கள் வாழ்வில் சந்திக்கும் ஒரு சிறிய தேர்வே ஒழிய அவர்களது திறமையை எடை போடும் ஒரே அளவுகோல் இத்தேர்வு அல்ல என்பதை உணர வேண்டும்.

அதேபோல் பெற்றோரும் ஆசிரியர்களும் இதை உணர்ந்து மாணவர்கள் எந்த ஒரு அச்சமும் மன அழுத்தமும் இன்றி நல்ல வழியில் தேர்வு எதிர்கொள்ள உறுதுணையாக உடன் நிற்க வேண்டும்.

தமிழ் நாடு சட்டப்பேரவையில்  2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்  தாக்கல் செய்ததில், சமூக பாதுகாப்புத் துறையை "குழந்த...
22/02/2024

தமிழ் நாடு சட்டப்பேரவையில் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்ததில்,

சமூக பாதுகாப்புத் துறையை "குழந்தைகள் நலன் மற்றும் உரிமைகள் துறை" என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு தமிழ் நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். 🙏🏻🙏🏻🙏🏻

Chief Minister of Tamil Nadu M. K. Stalin

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Nadu Advisory Council for Child Rights posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tamil Nadu Advisory Council for Child Rights:

Share