SDPI Voice Of People

SDPI Voice Of People Political Party
(1)

நெல்லையில் காவல்துறை அலட்சியத்தால், வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்ட ஜாகீர் உசேன் பிஜிலி குடும்பத்...
20/03/2025

நெல்லையில் காவல்துறை அலட்சியத்தால், வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்ட ஜாகீர் உசேன் பிஜிலி குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். இந்த விவகாரத்தில் நீதிக்காக எஸ்டிபிஐ கட்சி துணை நிற்கும் என உறுதியளித்தேன்.

தொடர்ந்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்த வழக்கில் பிஜிலி அவர்களால் குற்றம்சாட்டப்பட்ட தவ்ஃபீக் என்கிற கிருஷ்ண மூர்த்தி, அருணன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் செந்தில், கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்திட வேண்டும், காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை என்பதோடு மட்டுமல்லாமல், இந்த வழக்கில் அவர்களையும் சேர்த்திட வேண்டும் என வலியுறுத்தினேன்.

மேலும், பிஜிலி அவர்களின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், தனிப்பட்ட சொத்திற்காக அல்லாமல், வக்ஃப் சொத்தை பாதுகாப்பதற்காக சட்டரீதியாக போராடியதாலேயே அவர் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆகவே, உயிரிழந்த ஜாகீர் உசேன் பிஜிலி குடும்பத்தினருக்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.

இதன்போது கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, பொதுச் செயலாளர்கள் ஆரிப் பாஷா, அன்வர்ஷா, மாவட்டச் செயலாளர் பேட்டை முஸ்தபா, நெல்லை தொகுதி தலைவர் ஷேக் இஸ்மாயில், பொருளாளர் முபாரக் அலி, பாளைதொகுதி இணைச்செயலாளர் ஒ.எம்.எஸ்.மீரான் உள்ளிட்ட தொகுதி, கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

-நெல்லை முபாரக்

Mohamed Mubarak | SDPI-சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா,தமிழ்நாடு | | | |

நெல்லையில் காவல்துறை அலட்சியத்தால், வக்ஃப் இட ஆக்கிரமிப்பாளர்களால் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாஹீர் ஹூசைன் படுகொலை செய்யப...
19/03/2025

நெல்லையில் காவல்துறை அலட்சியத்தால், வக்ஃப் இட ஆக்கிரமிப்பாளர்களால் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாஹீர் ஹூசைன் படுகொலை செய்யப்பட்டது குறித்து, சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து, அந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் உயர்திரு எடப்பாடி கே பழனிசாமி Edappadi K. Palaniswami அவர்களுக்கும், காங்கிரஸ், விசிக உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

-நெல்லை முபாரக்
மாநில தலைவர், SDPI கட்சி

#எடப்பாடி | Mohamed Mubarak

24/02/2025

அடங்கி வாழ்தல் முடியாது.
அடங்குபவர்கள் நாங்கள் கிடையாது..!

வக்ஃப் சொத்துகளை மீட்கும் வரை எங்களின் போராட்டங்கள் ஓயாது..!


#தென்காசி_வக்ஃபு_மாநாடு
#வக்ஃப்_உரிமை_மீட்பு_மாநாடு

Address

Chennai
600106

Telephone

+919884856914

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI Voice Of People posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDPI Voice Of People:

Share